சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜார்ஜ், சமீபத்தில் ராமநாதபுரம் சென்று, செப்டம்பர் மாதம் பரமக்குடியில் நடைபெற இருக்கும் இமானுவேல் சேகரனின் நினைவு நாளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தியிருக்கிறார். மதுரையைத் தாண்டி ராமநாதபுரம் சென்றவர், பரபரப்பாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் க்ரானைட் ஊழல் குறித்து மதுரையில் எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் தவிர்த்துள்ளார். வழக்கமாக பரபரப்பான வழக்குகளில் விசாரணை நடைபெறும்போது, காவல்துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடத்துவது வழக்கமே.
ஆனால், தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் க்ரானைட் ஊழல் விசாரணையை கண்டு கொள்ளாமல் ஜார்ஜ் ஐபிஎஸ், தவிர்த்தது தேவையற்ற சர்ச்சையில் சிக்காமல் தப்பிப்பதற்காகத்தான் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.