சென்னை உயர்நீதிமன்றத்தின் 150 வது ஆண்டு விழாவுக்காக சிறப்பான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழில் நீதிபதிகள், முதலமைச்சர் ஜெயலலிதா, உள்ளிட்டோரின் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளன. அனைவர் பெயரும் அச்சிடப்பட்டாலும், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பெயர் அழைப்பிதழில் இடம்பெறவில்லை. அழைப்பிதழ் விநியோகிக்கப்பட்ட உடனேயே இந்த சர்ச்சை எழுந்து நீதிபதிகளின் காதுகளுக்குப் போனாலும், புதிதாக அழைப்பிதழ் அச்சிட நேரமில்லை என்பதால், சட்ட அமைச்சரிடம் சாரி சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அழைப்பிதழில் பெயர் இல்லாததால் ரோஷப்பட்டுக் கொண்டு பதவியை ராஜினாமா செய்வதற்கு, அதிமுகவில் சுயமரியதை உள்ளவர்களா இருக்கிறார்கள்.. அடிமைகள் அல்லவா இருக்கிறார்கள் ?