ஸ்பெக்ட்ரம் வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு எதிராக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தொய்வடைந்த நிலையில் உள்ளது. இவ்வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு பெரிய அளவில் உதவி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்போல்லோ மருத்துவமனையின் முதலாளி டாக்டர் பி.சி.ரெட்டி, இவ்வழக்கிலிருந்து அப்போல்லோவை விடுவிக்க பகீரத முயற்சிகளை எடுத்து வருகிறார். அப்போல்லோவை சிபிஐ பிடியிலிருந்து தப்ப வைப்பதற்காக பிரதாப்.சி.ரெட்டியின் மனைவி சுசரித்தா ரெட்டி சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங்கின் மனைவி ஷப்னம் சிங் மூலமாக சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங்கை அணுகியிருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் முயற்சி வெற்றியடைத்தையடுத்து, மாறன் சகோதரர்களும், அதே வழியை பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்களாம்.