சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் சிங்கள அணியோடு கால்பந்து விளையாட அனுமதித்தற்காக ஸ்டேடிய அதிகாரியை பணி இடை நீக்கம் செய்ததையொட்டியும், சிங்கள கால்பந்து அணி வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டதையொட்டியும், போயஸ் தோட்டத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜெயலலிதா, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், சிவி.சண்முகம், ஐபிஎஸ் அதிகாரிகள் கமிஷனர் கட்டதுரை என்கிற திரிபாதி, டிஜிபி ராமானுஜம்.
ஜெயலலிதா : வாட் மிஸ்டர் ராமானுஜம் ? நேரு ஸ்டேடியம் பத்தி வாட் ஈஸ் தி இன்டெலிஜென்ஸ் ரிப்போர்ட்… ?
ராமானுஜம் : மேடம்.. ஆர் ரவுன்ட் அப்ளாஸ் பார் யு மேடம். பட், இந்த ஹிந்து அன்ட் தினமணி தப்புன்னு எழுதிருக்காங்க மேடம்..
ஜெயலலிதா : ஹிந்து மேல எத்தனை டெஃபமேஷன் கேஸ் இருக்கு ? தினமணி மேல எத்தனை இருக்கு ?
ராமானுஜம் : ஹிந்து மேல ரெண்டு இருக்கு மேடம். தினமணி மேல இன்னும் போடல…
ஜெயலலிதா : வாட் நான்சென்ஸ் ஈஸ் திஸ்…. என்ன அட்மினிஸ்ட்ரேஷன் பண்றீங்க.. எல்லா பத்திரிக்கை மேலயும் கேஸ் போடச் சொல்லித்தானே உங்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ?
ராமானுஜம் : டுடே இட் வில் பி டன் மேடம்.
திரிபாதி : மேடம்… டிஜிபி மூணு மாசத்துல ரிட்டயர் ஆகறாரு..
ஜெயலலிதா : சோ…
திரிபாதி : பொறுப்பை என்கிட்ட குடுங்க மேடம். கல்யாணப் பத்திரிக்கை கூட ஒரு பய அடிக்காத மாதிரி பாத்துக்கறேன்.
ஜெயலலிதா : அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். உருப்படியா யாராவது யோசனை சொல்லுங்க.
பன்னீர்செல்வம் : அம்மா கமலஹாசனை தடை பண்ணி உத்தரவு போட்டுடலாம்மா…
ஜெயலலிதா : வாட் பன்னீர்.. எதுக்கு கமலஹாசனை தடை பண்ணணும் ?
பன்னீர்செல்வம் : அம்மா.. அவரு புன்னகை மன்னன் படத்துல சிங்களத்துச் சின்னக்குயிலேன்னு பாட்டு பாடியிருக்கார்மா ? கமலஹாசனை தமிழின விரோதி அதனாலதான் சிங்களத்துச் சின்னக்குயில்னு பாடிருக்கார்னு தடை பண்ணிடலாம்மா.
ஜெயலலிதா : ஃபென்டாஸ்டிக்… பன்னீர்… பிரமாதம்.. இந்த கமலஹாசன் போன கவர்மென்டுல, கருணாநிதியை வாரத்துக்கு ஒருவாட்டி பாராட்டிப் பேசுவாரு. இப்படி தடை பண்ணாத்தான் மத்தவங்களுக்கும் ஒரு பயம் வரும். குட் ஐடியா. இந்த மாதிரிதான் யோசனையை நான் எதிர்ப்பாக்கறேன்..
கமலஹாசனை தடை பண்ணலாம்.. இந்த ரஜினியை தடை பண்றதுக்கு ஐடியா சொல்லுங்க.. எனக்கு முன்னாடியே கருணாநிதியை பாராட்டிப் பேசறார். ஹவ் டேர்
ராமானுஜம் : மேடம்…
ஜெயக்குமார் : ராமானுஜம் உட்காருங்கள்.. முதலமைச்சர் பேசும்போது குறுக்கே பேசாதீர்கள். அவைக்காவலர்களை விட்டு உங்களை வெளியெற்ற வேண்டி வரும்.
ஜெயலலிதா : ஜெயக்குமார்.. இதெல்லாம் சட்டசபையில பண்ணுங்க.. இது போயஸ் கார்டன்.. ஞாபகம் வெச்சுக்கங்க..
ஜெயக்குமார் : சாரி மேடம்.
ஜெயலலிதா : ராமானுஜம் நீங்க ஏதோ சொல்ல வந்தீங்களே..
ராமானுஜம் : ஒண்ணும் இல்ல மேடம்.
விஸ்வநாதன் : அம்மா… ரஜினிகாந்தை தடை பண்றதுக்கு நல்ல ஐடியா கிடைச்சுருக்கும்மா..
ஜெயலலிதா : மொதல்ல உங்க ஐடியாவை சொல்லுங்க.. அது நல்ல ஐடியாவா இல்லையான்னு நான் முடிவு பண்றேன்.
விஸ்வநாதன் : சிவாஜி படத்துல சிங்கம் சிங்கிளாத்தான் வரும்னு பேசுவாரும்மா. சிங்களவர்களை பாராட்டிப் பேசியிருக்காருன்னு அவரையும் தடை பண்ணிடலாம்மா.
ஜெயலலிதா : வெரி குட்.. வெரி குட். நத்தம் உங்களுக்கு மூளை சுத்தம்னு நெனச்சேன்… பட் நாட் பேட்.
ஜெயக்குமார் : அம்மா சில ஹோட்டல்கள்ல சிலோன் முட்டை பரோட்டா இன்னும் வித்துக்கிட்டிருக்காங்க. அந்த ஹோட்டலையெல்லாம் பேன் பண்ணிடலாம்மா..
ஜெயலலிதா : கருணாநிதிக்கு கெட்ட பேர் வர்ற மாதிரி ஒரு ஐடியா குடுங்க.
பன்னீர்செல்வம் : அம்மா.. கருணாநிதிக்கு பேங்க் ஆப் சிலோன்ல ரகசிய வங்கிக் கணக்கு இருக்குன்னு அறிவிச்சுடலாம்மா..
ஜெயலலிதா : ஈஸ் இட் பாசிபிள் ? வாட் திரிபாதி.. அப்படி பண்ண முடியுமா ?
திரிபாதி : ஐ வில் டூ இட் மேடம். தேவைப்பட்டா வேளச்சேரியில சுட்டுக் கொல்லப்பட்ட வங்கிக் கொள்ளையர்கள் கருணாநிதியோட தூண்டுதலின் பேர்ல, அவங்க பேங்க்ல கொள்ளையடிச்ச பணத்தை பேங்க் ஆப் சிலோன்லதான் போட்டாங்க. அவங்களுக்கு அந்த ஐடியா குடுத்ததே கருணாநிதிதான்னு ஒரு ரிப்போர்ட் பைல் பண்ணிட்றேன் மேடம்.
ஜெயலலிதா : இப்போ எப்படி பண்ண முடியும். அந்தக் கொள்ளையர்கள்தான் செத்துப்போயிட்டாங்களே..
திரிபாதி : தட் ஈஸ் ப்ரிசைஸ்லி தி பாயின்ட் மேடம். அவங்க சாகறதுக்கு முன்னாடி, அவங்களை சுட்ட போலீஸ் கிட்ட, ஒப்புதல் வாக்குமூலம் குடுத்துட்டு தங்களைத் தாங்களே சுட்டுக்கிட்டு செத்துட்டாங்கன்னு கேசை க்ளோஸ் பண்ணிடலாம் மேடம். இந்த ஹைகோர்ட்ல வேற சில ரோக் எலிமென்ட்ஸ் என்கவுன்டர் சம்பந்தமா கேஸ் போட்ருக்காங்க.. அந்தக் கேசும் க்ளோஸ் ஆயிடும்.
ஜெயலலிதா : குட் ஐடியா… பட் வில் இட் வொர்க்.. ?
திரிபாதி : டெஃபைனைட்லி இட் வில் வொர்க் மேடம். அப்படியே அந்த என்கவுன்டர்ல ஈடுபட்டவங்களுக்கு, பெசன்ட் நகர்ல மூணு க்ரவுன்ட் எடமும், எனக்கு டிஜிபி இன்சார்ஜ் போஸ்டும் குடுத்தீங்கன்னா, போலீஸ் ஃபோர்ஸ் வில் பி ஹேப்பி மேடம்.
ஜெயலலிதா : யு வில் பி ஹேப்பி.. நாட் போலீஸ் ஃபோர்ஸ்.
விஸ்வநாதன் : அம்மா கருணாநிதி தினமும் காலையில சிலோன் தேயிலையில தயாரிக்கப்பட்ட டீ குடிக்கிறார். அது தமிழர்கள் ரத்தத்துல விளைஞ்ச தேயிலைன்னு ஒரு அறிக்கை விட்டீங்கன்னா அத்தோட அவர் காலிம்மா.. டீ குடிக்கறவங்கள்ளாம் தமிழின விரோதிகள்னு அறிவிச்சுடலாம். அப்படியே டீ குடிக்கறவங்களுக்கு எதிரா ஒரு போராட்டம் அறிவிச்சுடலாம்மா. ஒரே கல்லுல பல மாங்காய் அடிக்கலாம்மா.
ஜெயலலிதா : எப்படி சொல்றீங்க… ?
விஸ்வநாதன் : பெரும்பாலும் டீக்கடை வச்சுருக்கறவங்க மலையாளிங்க.. நம்ம டீக்கு எதிரா போராட்டம் நடத்தினோம்னா அவங்கதான் பாதிக்கப்படுவாங்க. முல்லைப் பெரியாறில் அணைக் கட்டும் மலையாளிகளுக்கு எதிராக ஒரு போராட்டம் பண்ணதா ஆயிடும். பிறகு உலகத் தமிழர்களுக்கு ஒரே தலைவர் நீங்கதாம்மா.
ராமானுஜம் : மேடம்… தட் வில் பி அகெய்ன்ஸ்ட்…
ஜெயக்குமார் : மிஸ்டர் ராமானுஜம்…
ராமானுஜம் அமைதியாகிறார்.
ஜெயலலிதா : இந்தக் கருணாநிதி டெய்லியும் உடன்பிறப்புக்கு ஒரு கடிதம் எழுதி உயிரை எடுக்கறார்.. இதை எப்படி சரி பண்றது ?
பன்னீர்செல்வம் : அம்மா… தமிழ்நாட்டுல கடிதங்களுக்கெல்லாம் தடைன்னு ஒரு ஆர்டர் போட்டுடலாம். கடிதம் எழுதனும்னா அரசிடம் முன் அனுமதி வாங்கனும்னு உத்தரவு போட்டுடலாம். கருணாநிதியும் கடிதம் எழுத முடியாது. பத்திரிக்கைகளுக்கும் யாரும் லெட்டர்ஸ் டு தி எடிட்டர் எழுத முடியாது. கருணாநிதி உடன்பிறப்புக்கு கடிதம் எழுத அனுமதி கேட்டா, நம்ம கமிஷனர் மறுத்துடுவாரு.
திரிபாதி : எஸ் மேடம். கருணாநிதி எழுதும் கடிதத்தால் தமிழ்நாட்டில் தீவிரவாதம் வளருகிறது. அதனால் பேனா மற்றும் காகிதப் பற்றாக்குறை ஏற்படுகிறது. பொது அமைதியைக் காக்கவும், பொதுமக்களுக்கு எளிதாக பேனா மற்றும் பேப்பர் கிடைப்பதற்காகவும், கடிதம் எழுத அனுமதி மறுக்கப்படுகிறதுன்னு ஒரு ஆர்டர் போட்டுட்றேன் மேடம்.
ஜெயலலிதா : இதையும் எதுத்து கோர்டுக்குப் போவாங்களே..
பன்னீர்செல்வம் : மேடம்.. நம்ப எஃபிஷியன்ட் அட்வகேட் ஜெனரல் நவனீதகிருஷ்ணன் இருக்கார் மேடம்.. அவரை மீறி எந்த தீர்ப்பும் வாங்க முடியாது. அவர் பேசினா ஹைகோர்ட்டே அதிரும். அது இல்லாம, 150வது ஆண்டு விழாவுக்கு நீங்க வந்தே ஆகணும்னு எப்படி ஜட்ஜஸ் வரிசையா வந்து அழுதாங்க பாத்தீங்களா.. அதை மீறி நமக்கு எதிரா எந்தத் தீர்ப்பும் வராது மேடம்.
ஜெயலலிதா : திங்க் பண்ணலாம். சசி நீ என்ன நெனைக்கிற…
சசிகலா : அக்கா.. நான் என்னக்கா தனியா சொல்றது… உங்களுக்குத் தெரியாதது இல்லை. சிங்கள எதிர்ப்புப் பாசறைன்னு ஒன்று அறிவிச்சுட்டு அதுக்கு என் தம்பி திவாகரனை தலைவரா போட்டுட்டா பெரிய அளவுல பேர் கிடைக்கும்கா.
ஜெயலலிதா : உன் தம்பியைப் பத்தி பேசாதே..
சசிகலா : போங்கக்கா. உங்களுக்கு எப்போப் பாத்தாலும் என் குடும்பத்தைக் கண்டா பிடிக்கறதேயில்லை.. என்று அழத் தொடங்குகிறார்..
ஜெயலலிதா : ஓ.கே.. ஓ.கே.. கூல் டவுன். உன் தம்பியவே தலைவரா போட்டுட்றேன் ஓகேவா.. அழாத சசி.. நீ இப்படி அழுதா எனக்கு கஷ்டமா இருக்காதா ?
சசிகலா : போங்கக்கா.. உங்களுக்காகவே நான் என் வாழ்க்கையை தியாகம் பண்ணிருக்கேன்.. எனக்கு வேற யார் இருக்கா.. அந்தத் தியாகத்துக்கு பரிசா இது வரைக்கும் பத்தாயிரம் கோடிதான் சம்பாரிச்சுருக்கோம். நேத்து மந்திரியான ராசாவெல்லாம் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் ஊழல் பண்ணிருக்கார். நம்ப 1991லேர்ந்து ஆட்சியில இருக்கோம். அவரை விட ஒரு கோடியாவது அதிகமா ஊழல் பண்ண வேண்டாமா.. மன்னார்குடி மாஃபியாவுக்குன்னு ஒரு மரியதை வேணாமா ?
ஜெயலலிதா : பண்ணலாம் சசி.. இப்போல்லாம் முன்ன மாதிரியா நாடு இருக்கு.. ஒரு ஐஏஎஸ் ஆபீசர் மேல ஆசிட் வீச முடியலை… நமக்கு எதிரா கேஸ் போட்ற ஒரு வக்கீலை வெட்ட முடியலை.. ஒரு ஆடிட்டரை செருப்பால அடிக்க முடியலை. எதை எடுத்தாலும் பேப்பர்ல எழுதிடறாங்க.. இதே 91ஆ இருந்தா, நம்ம கவர்மென்டுக்கு எதிரா ஒரு பய கேஸ் போடுவானா ? இந்த புகழேந்தின்னு ஒரு வக்கீல் நமக்கு எதிரா நெறய்ய கேஸ் போட்றாரே… அந்த ஆளெல்லாம் நடமாட முடியுமா ? எனக்கு மட்டும் ஆசை இல்லையா சசி.. கொஞ்சம் வெயிட் பண்ணுப்பா…
சசிகலா : சரிக்கா.. நீங்க சொன்னா நான் தட்டவா போறேன்.
ஜெயலலிதா : இதான் உன்கிட்ட எனக்குப் பிடிச்சது.. சசின்னா சசிதான்..
திரிபாதி திடீரென்று எழுந்து ஈழத்தாய் ஜெயலலிதா வாழ்க என்று கத்திக் கொண்டே ஜெயலலிதா காலில் விழுகிறார். அவரைப் பார்த்துப் பயந்து போன மற்ற அனைவரும் காலில் விழுகிறார்கள். ராமானுஜம் மட்டும் காலில் விழாமல் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.
அவரை எரிக்கும் பார்வையோடு பார்த்த ஜெயலலிதா… ராமானுஜம் நீங்க இன்னையிலேர்ந்து, போக்குவரத்துக் கழகத்தோட விஜிலென்ஸ் ஆபீசர். திரிபாதி.. யு வில் ஹோல்ட் அடிஷனல் சார்ஜ் ஆப் டிஜிபி போஸ்ட் என்று கூறுகிறார்.
மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து, இன்று அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், சபாநாயகர் ஜெயக்குமார், சென்னை மாநகர கமிஷனர் திரிபாதி மற்றும் டிஜிபி ராமானுஜம் ஆகியோரோடு முக்கிய ஆலோசனை நடத்தினார் முதல்வர் என்று இன்று வெளியான அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
+add savuku sanker mind voice sir😂😂