கூடங்குளம் அணு உலை தொடர்பாக, மக்கள் குண்டடிபட்டும், தடியடி பட்டும் காவல்துறையின் கொடுமைக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்த துன்பத்திலும் ஒரு நன்மை நடந்திருக்கிறது.
அது மக்களுக்கான கட்சிகள் எவை, மக்கள் விரோதக் கட்சிகள் எவை என்பதை நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, இடது போலி கம்யூனிஸ்ட், வலது போலி கம்யூனிஸ்ட், ஆகியவை ஒரு புறமும், மனித நேய மக்கள் கட்சி, மதிமுக, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, போன்ற கட்சிகள் மறுபுறமும், இருக்கின்றன.
இன்று கூடங்குளம் மக்கள் மீது நடைபெற்றத் தாக்குதலைக் கண்டு வெகுண்டெழுந்து சாலை மறியலில் ஈடுபட்ட காட்சிகள்.
இன்று (11 September 2012) காலை 10.30 மணிக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேறக் கழகம், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, பெரியார் தி.க., தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி மற்றும் இதர அமைப்புக்களைச் சேர்ந்த தோழர்கள், சென்னை அண்ணா சாலையில், கூடங்குளத்தில் நேற்று நடந்த காவல்துறையின் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
இன்று நடந்த போராட்டக் காட்சிகள்
‘