திருநெல்வேலி சரக டிஐஜியாக இருப்பவர் வரதராஜு.. இவர் ஒரு “நேர்மையான” அதிகாரி. விபரங்களுக்கு இந்தக் கட்டுரையை படியுங்கள். நேற்று கூடங்குளத்தில் நடந்த மோதலின்போது, வரதராஜுவுக்கு காயம் ஏற்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. நேற்றைய இந்து நாளேட்டில் சுதாகர் என்ற பத்திரிக்கையாளர், கட்டையை எடுத்து வீசியதால், வரதராஜுவுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது என்று எழுதியிருக்கிறார். இன்றைய தினமலர் நாளேட்டில், ஐஜி ராஜேஷ் தாஸ், “வரதராஜுவின் காலில் வன்முறையாளர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு ஓடி விட்டார். நாள் முழுவதும் வரதராஜு காலில் ரத்தம் பீறிட்டு வெளியேறியது” என்று தெரிவித்துள்ளார். காலை 11 மணிக்கு இந்த மோதல் நடைபெற்றதாக வைத்துக் கொள்வோம். காலை முதல் ரத்தம் பீறிட்டு நாள் முழுவதும் ஓடினால் ஒரு மனிதன் என்ன ஆவான் ?
வரதராஜுவுக்கு அடியே படவில்லை என்று நாம் சொல்லவில்லை. எங்கோ அடி பட்டிருக்கிறது. அது “படக்கூடாத” இடத்தில் பட்டிருக்கிறது போல. மனிதர் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, இப்படி மாற்றி மாற்றி செய்திகளை வெளியிடுகிறார். ட்யூட்டியெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். மொதல்ல டாக்டரை பாருங்க சார்..