நக்கீரனைப் பற்றிக் கேவலமாக பல முறை கழுவி ஊற்றியாகி விட்டது. ஆனாலும், மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடமாட்டேன்கிறதே…
கடந்த வாரம் கூடங்குளத்தில் நேர்ந்த கலவரங்களை தினகரன் நாளேட்டின் புகைப்பட நிபுணர் பரமக்குமார் என்பவர் உயிரைப் பணயம் வைத்து எடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களை அவர் ராதாபுரம் தாலுகாவில் உள்ள ஒரு ப்ரவுசிங் சென்டரில் வைத்து தினகரன் அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கிறார். அப்போது அவருக்கு நக்கீரன் புகைப்படக் கலைஞர் ராம்குமார் என்பவர் போன் செய்து, எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். நான் ராதாபுரத்தில் ஒரு ப்ரவுசிங் சென்டரில் இருக்கிறேன் என்று சொன்னதும் அந்த இடத்துக்குப் போயிருக்கிறார். அவர் போவதற்குள் பரமக்குமார் கிளம்பி விட்டார். நக்கீரன் புகைப்படக் கலைஞர் ராம்குமார், பரமக்குமார் அமர்ந்திருந்த அதே கணினியில் அமர்ந்து, அவர் டெம்பரவரி போல்டர்களில் சேமித்து வைத்திருந்த கூடங்குளம் மோதல் தொடர்பான புகைப்படங்களை, அசோசியேட்டட் ப்ரஸ் என்ற வெளிநாட்டு புகைப்பட நிறுவனத்துக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்றிருக்கிறார். விற்ற பின்னால், நக்கீரன் அலுவலகத்துக்கும் அந்தப் படங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த விபரம் நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு புகாராகப் போய், தற்பாது ராம்குமாரை விசாரணைக்கு அழைத்தால் வர மாட்டேன்கிறாராம்… நல்லா நடத்துறீங்கய்யா பத்திரிக்கை..