கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தோழர் சதீஷ் தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரு சில மாதங்களுக்கு முன், தோழர் முகிலன், தோழர் சதீஷ் மற்றும் விடுலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு ஆகிய மூவரும், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடந்த பேரணியில் கலந்து கொண்டபோது, க்யூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சில மாதங்கள் சிறையிலிருந்த பிறகு, சமீபத்தில்தான் சதீஷ் மற்றும் முகிலன் ஜாமீனில் வெளி வந்தனர்.
நந்ததனம் கல்லூரி மாணவர்களை போராடத் தூண்டியதற்காக, சதீஷ் தற்போது 1932ம் ஆண்டின் குற்றவியல் அவசரச் சட்டப் பிரிவு 7 (1) (a) வின் படி கைது செய்யப்பட்டுள்ளார்.
1930ல் காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தினால், அரசு ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. பணிக்குச் செல்லும் அரசு ஊழியர்களையும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தடுத்தனர். இதைத் தடுப்பதற்காக பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த சட்டம்தான் கிரிமிலல் லா அமென்ட்மென்ட் 1932.
அதன் பிரிவுகள் மிக மிக விரிவான அளவீடுகளைக் கொண்டன. அந்தச் சட்டப் பிரிவுகளின்படி யாரை வேண்டுமானாலும், என்ன காரணத்தினாலும் கைது செய்யலாம். பிரிவு 7 (1) (a) என்ன கூறுகிறதென்றால்…
Molesting a person to prejudice of employment or business.
(1) Whoever-
(a) with intent to cause any person to abstain from doing or to do any act which such person has a right to do or to abstain from doing, obstructs or uses violence to or inti- midates such person or any member of his family or person in his employ, or loiters at or near a place where such person or member or employed person resides or works or carries on business or happens to be, or persistently follows him from place to place, or interferes with any property owned or used by him or deprives him of or hinders him in the use thereof, or
ஒரு நபர், மற்றொரு நபரை ஒரு வேலையை செய்ய விடாமல் தடுத்தாலோ, ஒரு வேலையை செய்யும்படி மிரட்டினாலோ, தடுப்பதற்கு வன்முறையை பயன்படுத்தினாலோ, அல்லது அவரையோ அவரது குடும்பத்தினரையோ மிரட்டினாலோ அல்லது சம்பந்தப்பட்ட நபர் பணியாற்றும் இடத்துக்கு அருகில் உலாவினாலோ, அந்த நபரின் பின்னே சென்றாலோ, அவர் சொத்து அனுபவிப்பதை தடுத்தாலோ, அந்த சொத்தைப் பறித்தாலோ குற்றமிழைத்தவராகிறார்.
ஏதாவது புரிகிறதா.. ? என்ன செய்தாலும் கைது செய்யலாம் என்பதுதான்இந்தச் சட்டப் பிரிவின் சாரம். பிரிட்டிஷார், ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடும் அத்தனை பேரையும் கைது செய்து சிறையில் அடைப்பதற்காக இயற்றப்பட்ட சட்டத்தை, பார்ப்பன ஜெயலலிதாவின் காவல்துறை எப்படிப் பயன்படுத்துகிறது பார்த்தீர்களா ?
இப்படி சதீஷை கைது செய்வதாலோ, வழக்கு போடுவதாலோ, கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கனவுதான் காண்கிறார் பார்ப்பன ஜெயலலிதா. ஒரு சதீஷை சிறையில் அடைப்பதால் இந்தப் போராட்டம் ஒடுக்கப்பட்டு விடப்போவதில்லை. தோழர் சதீஷுக்கும் சிறை ஒன்றும் புதிதல்ல. மாதக்கணக்கில் சிறையில் இருந்தவர் தோழர் சதீஷ். அவரையும் ஒடுக்கி விடலாம் என்று கனவு காணும் பார்ப்பன ஜெயலலிதாவின் கனவு நிறைவேறாது.
பிரிட்டிஷார் இயற்றிய காட்டுமிராண்டிச் சட்டத்தின் கீழ் சதீஷை கைது செய்திருப்பதன் மூலம், தான் ஒரு ஏகாதிபத்தியத்தின் எச்சம் என்பதை நிரூபித்திருக்கிறார் பார்ப்பன ஜெயலலிதா.
தற்போது நிலவி வருவது உண்மையான சுதந்திரம் அல்ல, போலி சுதந்திரம் என்பதை ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கை மீண்டும் ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது.