சென்னை புழல் சிறையின் கண்காணிப்பாளராக இருப்பவர் கருப்பண்ணன். 04.04.2004 அன்று சென்னை மத்திய சிறையில் சுப்ரமணியம் கைதி மர்மமான முறையில் இறந்து போகிறார். அவர் இறந்த போது கருப்பண்ணன் ஜெயிலராக இருந்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் நடத்திய விசாரணையில், சுப்ரமணியம் மரணத்துக்கு, ஜெயிலர் கருப்பண்ணன், உதவி ஜெயிலர் ராதன் மற்றும் ஓய்வு பெற்ற எஸ்.பி.மாணிக்கம் ஆகியோர் பொறுப்பு என்றும், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு மற்றும் துறை நடவடிக்கை ஆகியவற்றை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார். அரசு இது தொடர்பாக அரசாணை எண் 1821 பொது (சட்டம் (ம) ஒழுங்கு இ) துறை நாள் 28.11.2007ல் அரசாணை வெளியிட்டு, கருப்பண்ணன் மற்றும் மற்றவர்கள் மீது கிரிமினல் வழக்கும், துறை நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டது. 2007ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டாலும், கருப்பண்ணன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜெயிலராக இருந்த கருப்பண்ணன் அதன் பிறகு கூடுதல் கண்காணிப்பாளராகி, தற்போது கண்காணிப்பாளராக பணி புரிந்து வருகிறார். அடுத்து டிஐஜி பதவி உயர்வு வர இருக்கிறது.
இந்நிலையில், கருப்பண்ணன் மீது அரசணை1821ன் படி கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்து நாலு வாரத்தில் பதில் மனு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இவ்வழக்கில் எப்படியாவது தப்பிக்க வேண்டுமென்று கருப்பண்ணன் பகீரத முயற்சி எடுத்து வருகிறார். அதிமுக அரசு பதிவி ஏற்ற பிறகு, சிறை தொடர்பான வழக்குகளை கவனிப்பதற்கென்று துரை ஆனந்த் என்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த துரை ஆனந்த், அரசு தலைமை வழக்கறிஞர் நவனீதகிஷ்ணனின் நெருங்கிய உறவினர். கருப்பண்ணன் இந்த துரை ஆனந்தை அணுகி தன்னை இந்த வழக்கிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுள்ளார். இதையடுத்து தனது உறவினரான நவனீதகிருஷ்ணனை அணுகி அவருக்கு 20 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு வரும்போது, அரசாணை ரத்து செய்யப்பட்டது என்று அறிவித்து வழக்கிலிருந்து காப்பாற்றுவதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது… அப்படியா ?