அணுஉலைக்கெதிரான போராட்டம் தொடர்பான இலங்கைத்தமிழ் அரசியலாளர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மதப்பிரதிநிதிகளின் கூட்டறிக்கை
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கெதிராக கடந்த பல வருடங்களாகவே எதிர்ப்புணர்வுகள் இருந்து வரும் சூழலில், அணுமின் நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருவதைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடமாகவே இடிந்தகரையில் தன்னெழுச்சியாக உருவான அறவழிப் போராட்டங்கள் தற்பொழுது உச்சநிலையை அடைந்துள்ளன. அணுமின்நிலையத்திற்கெதிரான எதிர்ப்புணர்வு இடிந்தகரையையும் அதனையண்டிய பிரதேசங்களையும் கடந்து பெரும்பாலான தமிழகத் மக்களிடமிருப்பதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. தமது வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் அணுஉலை சிதைத்துவிடுமென்ற நியாயமான அச்சம், தன்னெழுச்சியிலான போராட்டமாக தினம்தினம் தீவிரம் பெற்றுவரும் சூழலில், அங்கிருந்துவரும் செய்திகளும் காட்சிகளும் மிகவும் மனச்சஞ்சலம் தருபவையாக உள்ளதுடன், துரதிஸ்டவசமாக அந்த மக்களது நியாயமான போராட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் சாதகமான அணுகுமுறையையும் கொண்டிருக்கவில்லையென்பது கவலையளிப்பதாக உள்ளது. ஜனநாயகத்தில் அடித்தளத்திலமைந்த அவர்களது போராட்டம் எல்லா முனைகளிலும் நிராகரிக்கப்படுவது அதிர்ச்சியளிப்பதுடன், தவறான முன்னுதாரணமாகவும் அமைந்துவிடக்கூடிய ஆபத்துமுள்ளது.
ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக வயது வேறுபாடின்றி ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கை வைத்து, அறவழியில் முன்னெடுக்கும் போராட்டங்களை அதிகாரத்திலிருப்பர்கள் எதிர்கொள்ளும் விதம் மிகுந்த அதிருப்தியளிப்பதாக உள்ளது. கடந்த 10ம் திகதி போராட்டம் நடத்திய மக்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மற்றும் தடியடிதாக்குதல்கள் நடந்ததும், ஒருவர் காவல்த்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதும் கண்டனத்திற்குரியதென்பதுடன், ஜனநாயக விழுமியங்களில் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சிதைப்பதுமாகும்.
தமிழகத்திலிருந்து வெகு தொலைவில், பல்வேறு நாடுகளில் வாழ்பவர்களாக இருந்த போதும், ஊடகங்களின் மூலமாக அங்கு நடப்பவற்றை தொடர்ந்து அவதானித்து வருபவர்களான நமக்கு, போராடும் மக்கள் குறித்த அச்சமும் அக்கறையும் இயல்பாகவே ஏற்படுகிறது.
இந்தியாவிற்கு எது தேவை எது தேவையற்றது என்பதை இந்தியாவே தீர்மானித்துக்கொள்ளும் தகுதியும் உரிமையும் உள்ளதனால் இந்த விடயம் குறித்த அறிவுரையெதனையும் முன்வைப்பது எமது நோக்கமல்ல. எமது அக்கறைகளிற்கான காரணம் தெளிவானது. கலை, பண்பாட்டு, வரலாற்று ரீதியிலான நெருங்கிய உறவுள்ள தமிழக மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தின் நியாயமான காரணங்களின் நிமித்தத்தினால் எமது ஆதரவை தெரிவிப்பது தவிர்க்கவியலாத கடமை.
சுற்றுச்சூழலிற்கும் அதன் விளைவுகளிற்கும் நில, தேச, இன எல்லைகள் கிடையாது. பூமிக்காக மனிதனே தவிர, மனிதனிற்காக பூமி கிடையாதென்பதை தீவிரமாக நம்புகிறோம். எல்லாவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடனுமான வளர்ச்;சிகளில் நிகழும் விதிவிலக்கான ஒரு அசம்பாவிதமே நிவர்த்தி செய்யவே முடியாத இழப்புகளை மனிதர்களிற்கும், பூமிக்கும் உண்டாக்கிவிடுகிறதென்ற எளிய உண்மையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அடிப்படைகளில் உருவான அணுஉலை எதிர்ப்புப்போராட்டத்தின் நியாயத் தன்மையை மத்திய மாநில அரசுகள் புரிந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதுடன், போராடும் மக்களுடன் கலந்தாலோசித்து, அவர்களிற்கு நீதி கிடைக்கத்தக்கதான தீர்வொன்றை எட்டுமாறு அரசுகளிடம் கோரிக்கை விடுக்கிறோம்.
அணுமின் நிலையங்களினால் பெற்றுக்கொள்ளவல்ல சாதகங்களை மட்டுமல்ல, ஏற்பட்ட பாதகங்களினால் வாழ்நாளில் நிவர்த்தியே செய்ய முடியாத துயரசாட்சிகளையும் இந்த உலகம் கொண்டிருக்கிறது. இதனால் அணுமின் நிலையங்கள் தொடர்பாக உலகம் சிந்திக்க ஆரம்பித்துள்ள நிலையில், அணுமின் நிலையத்திற்கெதிரான தமிழக எதிர்ப்புணர்வு நியாயமானதெனக் கருதுகிறோம். ஏதோ ஒரு காரணத்தினால் கூடங்குளத்தில் விபத்தொன்று ஏற்படும்பட்சத்தில் அதன் தாக்கத்திற்கு அயலகமக்களும் உட்பட வேண்டிய அபயமுள்ளதனையும் சுட்டிக்காட்டுகிறோம். வுhழ்வுரிமைக்காக போராடும் மக்கள் கூட்டமான நாம், வாழ்வுரிமைக்காக போராடும் இன்னொரு மக்கள் கூட்டத்தின் துயரைப் புரிந்து கொள்வதுடன், அவர்களிற்காக எங்கள் குரல் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்குமென்பதையும் பதிவு செய்கிறோம்.
சிவஞானம் சிறீதரன்- பாராளுமன்ற உறுப்பினர், தமிழ்தேசியக்கூட்டமைப்பு
அப்பாத்துரை விநாயகமூர்த்தி- பாராளுமன்ற உறுப்பினர், தமிழ்தேசியக்கூட்டமைப்பு
சிவாஜிலிங்கம் அரசியல்த்தலைவர், தமிழீழவிடுதலைஇயக்கம்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)
சீ.வி.கே. சிவஞானம் தலைவர், யாழ்மாவட்ட அரசசார்பற்ற அமைப்புகளின் இணையம்
க.கஜீவன் தலைவர், வலி வடக்கு பிரதேசசபை
பொ.வியாகேசு தலைவர், வடமராட்சி தெற்கு,மேற்கு பிரதேசசபை
த.சதீஸ் உறுப்பினர், வல்வெட்டித்துறை நகரசபை
க.விந்தன் உறுப்பினர், யாழ்மாநகரசபை
பத்மினி சிதம்பரநாதன்; தமிழ் தேசிய மக்கள் முன்னணி (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)
வேழமாலிகிதன் தமிழ்தேசியகூட்டமைப்பு
க.தவரட்ணம் வடமாகாண மீனவ சம்மேளனங்களின் தலைவர்
க.சூரியகுமாரன் பிரதிநிதி, யாழ்மாவட்ட மீனவர் அமைப்பு
சு.பார்த்தீபன் சட்டத்தரணி, யாழ்ப்பாணம்
கு.குருபரன் சட்டத்துறை விரிவுரையாளர், யாழ்பல்கலைகழகம்
அ.மணிவண்ணன் சட்டத்தரணி, யாழ்ப்பாணம்
கலாநிதி ந.ரவீந்திரன் கல்வியல்கல்லூரி
அருட்திரு. தமிழ்நேசன் அடிகள் இயக்குனர், கலையருவி சமூகதொடர்பு நிலையம், மன்னார் மறைமாவட்டம்
மொஹமட் மகீர் மௌலவி தாராபுரம் ஜூம்மா பள்ளிவாசல்
தர்மகுமார குருக்கள் மன்னார் மாவட்ட இந்துகுருமார் பேரவை
மனோ ஐங்கரசர்மா மன்னார்மாவட்ட இந்துகுருமார் பேரவை
பாபு சர்மா மன்னார் மாவட்ட இந்துகுருமார் பேரவை
ச.தேவதாஸ்(தேவா) மொழிபெயர்ப்பாளர், மன்னார்
பஸ்ரினா நாவண்ணன் கவிஞர், மன்னார்
த.அகிலன் எழுத்தாளர்,கனடா
கருணைரவி எழுத்தாளர்,யாழ்ப்பாணம்
யோ.கர்ணன் எழுத்தாளர்,யாழ்ப்பாணம்
நந்தினி சேவியர் எழுத்தாளர்,திருகோணமலை
கருணாகரன் கவிஞர்,கிளிநொச்சி
ஞானதாஸ் இயக்குனர்,கொழும்பு
அ.நிசாந்தன் குறும்பட இயக்குனர், மன்னார்
சோபாசக்தி எழுத்தாளர்,பிரான்ஸ்
இந்திரன் தேவஅபிரா கவிஞர், பிரித்தானியா
றியாஸ் குரானா கவிஞர், அக்கரைப்பற்று
தாட்சாயணி எழுத்தாளர், யாழ்ப்பாணம்
திசேரா எழுத்தாளர், மட்டக்களப்பு
கவியுவன் எழுத்தாளர், திருக்கோவில்
த.மலர்ச்செல்வன் எழுத்தாளர், ஆசிரியர்-மறுகா சஞ்சிகை, மட்டக்களப்பு
~pகார் எழுத்தாளர், மன்னார்
ஏஸ்.ஏ. உதயன் எழுத்தாளர், மன்னார்
துறையூரான் எம்.சிவானந்தன் எழுத்தாளர், மன்னார்
இராதேயன் ஊடகவியலாளர்
இ.தயாபரன் நிமலராஜன் ஞாபகர்த்த அமைப்பு
ஆ.சபேசன் உதவி ஆசிரியர், தினக்கரல்
ந.பொன்ராசா உதவி ஆசிரியர், தினக்குரல்
க.செல்வதீபன் ஊடகவியலாளர்
ந.பரமேஸ்வரன் ஊடகவியலாளர்
பு.வின்சலோ ஊடகவியலாளர்
க.நிதர்சன் ஊடகவியலாளர்
ந.குருபரன் ஊடகவியலாளர், இலண்டன்
சி.வினோஜித் ஊடகவியலாளர்
;சர்தார் ஜமீல் ஊடகவியலாளர்
பாரதி இராஜநாயகம் ஊடகவியலாளர், தினக்குரல்
மக்கள் காதர் ஊடகவியலாளர், மன்னார்
எஸ்.ஆர். லெம்பேட் ஊடகவியலாளர், மன்னார்
ஜேம்ஸ் ஜோஸ் பெர்னான்டோ ஊடகவியலாளர், வீரகேசரி
சி.சிவகரன் சமூக செயற்பாட்டாளர், மன்னார்
எம்.பௌசர் சமூக செயற்பாட்டாளர், இலண்டன்
கீரன் சமூக செயற்பாட்டாளர், இலண்டன்
சத்தியதேவன் சமூக செயற்பாட்டாளர், திருகோணமலை
க.மாணிக்கசோதி சமூக செயற்பாட்டாளர், யாழ்ப்பாணம்
அசுரா சமூகசெயற்பாட்டாளர், பிரான்ஸ்
தேவதாசன் சமூகசெயற்பாட்டாளர், பிரான்ஸ்
விஜி சமூகசெயற்பாட்டாளர், பிரான்ஸ்
எம்.ஆர்.ஸ்ராலின் சமூகசெயற்பாட்டாளர், பிரான்ஸ்
சுந்தரலிங்கம் சமூகசெயற்பாட்டாளர், பிரான்ஸ்
யோகரட்ணம் சமூகசெயற்பாட்டாளர், பிரான்ஸ்
கற்சுறா சமூகசெயற்பாட்டாளர், கனடா
அதீதா சமூகசெயற்பாட்டாளர், கனடா
ஜோர்ஜ் இ.குருசேவ் சமூகசெயற்பாட்டாளர், கனடா
நராயணமூர்த்தி சமூகசெயற்பாட்டாளர், கனடா
பேராதரன் சமூகசெயற்பாட்டாளர், கனடா
கே.நவம் சமூகசெயற்பாட்டாளர், கனடா
சேனவராயன் சமூகசெயற்பாட்டாளர், கனடா