சமீபத்தில், அமெரிக்கத் தூதரகம் முன்பாக முஸ்லீம் அமைப்பு ஒன்று ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, தூதரகத்தின் மீது கடும் தாக்குதல் நடைபெற்றது. அந்த முஸ்லீம் அமைப்புக்கு நல்ல செல்வாக்கு உண்டு என்பதாலும், ஆர்ப்பாட்டம் நடத்திய விவகாரம் உணர்ச்சிபூர்வமான விவகாரம் என்பதாலும், பெரிய அளவில் கூட்டம் கூடும் என்று உளவுத்துறை அறிக்கை அளித்திருந்தது. இந்த அறிக்கை வந்திருந்தும், சம்பந்தப்பட்ட சரகத்தின் இணை ஆணையர் சேஷசாயி, ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தபோது, தலைமைச் செயலகத்தில் உள்ள ஜப்பான் ஹவுசில், ஓய்வெடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். மேம்பாலத்திலிருந்து குதித்த ஒரு கும்பல் தூதரகத்தைத் தாக்கத் தொடங்கியதும் சேஷசாயிக்கு தகவல் போய், அவசர அவசரமாக ஓடிப் போயிருக்கிறார். சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு இருந்த நுங்கம்பாக்கம் உதவி ஆணையருக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று மெமோ கொடுத்து விட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று சஷசாயி திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கத் தூதரகத் தாக்குதலைத் தடுக்காமல் விட்டதற்காகவே திரிபாதி தன் பதவியை இழந்தார்… ஆனால், சம்பந்தப்பட்ட சரகத்தின் இணை ஆணையராக இருந்து கொண்டு எப்படித் தப்பித்தார் சேஷசாயி என்று வாயில் விரல் வைக்கிறார்கள் காவல்துறையில்… பலே கில்லாடிதான் சேஷசாயி…