சென்னை மாநகர காவல் ஆணையாளர் திரிபாதி மாற்றப்பட்டு, ஜார்ஜ் பதவியேற்றதும், மேலும் அதிரடி மாற்றங்களைச் செய்து அருள்மிகு அம்மாவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம். அதற்காக, உள்துறைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கூடுதல் காவல் ஆணையாளர் தாமரைக் கண்ணனை மாற்றி விட்டு, வடக்கு மண்டல ஐஜியாக உள்ள கண்ணப்பனை போட வேண்டும் என்றும், மேலும் பல துணை ஆணையர்களை மாற்ற வேண்டும் எனவும் கருத்துரு அனுப்பியுள்ளார்.
ஆனால், சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையாளராக நியமிக்கப்படுவதற்கு கண்ணப்பன் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தப் பதவிக்கு வருகிறீர்களா என்று உள்துறைச் செயலாளர் கேட்டதற்கு, எனக்கு முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு நியமியுங்கள். சென்னை மாநகர கூடுதல் ஆணையர் பதவி வேண்டாம் என்று கூறியுள்ளாராம்.
கண்ணப்பன் ஏன் இப்பதவி வேண்டாம் என்று விசாரித்தபோது, தற்போது சென்னை மாநகர உளவுத் துறையின் இணை ஆணையராக வந்துள்ள வரதராஜுவோடு பணியாற்ற முடியாது என்பதாலேயே என்கிறது காவல்துறை வட்டாரங்கள். ஜாங்கிட்டுக்கு மிகவும் நெருக்கமான வரதராஜு, உளவுத்துறை இணை ஆணையராக தனக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டார் என்று கண்ணப்பன் நம்புவதாக தகவல்கள் கூறுகின்றன. அப்படியா ?