தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி வளர்ச்சி பிரம்மாண்டமானதாக பெருகி வருகிறதாம். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹாடோஸ் க்ளப்பை விலைக்கு வாங்க வளர்மதி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்தக் கிளப்பை கைப்பற்றும் முயற்சியில் இருந்த ஒருவரை இந்தப் பணிக்கு வளர்மதி நியமித்திருப்பதாகவும், அந்த நபருக்கு காவல்துறை எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும் எனவும் வளர்மதி உத்தரவிட்டிருப்பதால், நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தலைமையில் வளர்மதியின் கட்டளையை நிறைவேற்ற காவல்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனராம்.
இது தவிரவும், தொழிற் துறையினர் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் விவகாரம், வளர்மதி, சென்னை அண்ணா சாலையில் கெயிட்டி தியேட்டர் இருந்த இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை விலைக்கு வாங்கி விட்டதாகவும் தலைமைச் செயலக தகவல்கள் கூறுகின்றன. அந்த காம்ப்ளெக்ஸில் சொர்ணாக்கா படம் திரையிடப்படுமா ?
அப்படியா ?