1994ம் ஆண்டு உலகப் புகழ் பெற்ற இயக்குநர் க்வென்டின் டாரன்டினோவால் இயக்கப்பட்டு வெளியான படம்தான் Pulp Fiction. திரைக்கதை வடிவமைப்பில் ஒரு பெரிய உத்தியை கொண்டு வந்த இப்படம் ஆஸ்கார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்தது.
நாம் பார்க்கப்போவது அந்தப் படத்தைப் பற்றி அல்ல. இது Pimp Fiction.
Fiction என்றால் என்ன என்று விக்கிப்பீடியா இப்படிக் குறிப்பிடுகிறது.
Fiction is the form of any narrative or informative work that deals, in part or in whole, with information or events that are not factual, but rather, imaginary and theoretical—that is, invented by the author. Although fiction describes a major branch ofliterary work, it may also refer to theatrical, cinematic or musical work.
புனைவு என்பது உண்மையல்லாத கற்பனையான விஷயங்களை உருவாக்குபவரின் கற்பனையில் உருவான விஷயங்களை வர்ணனையோடு தரும் விஷயம் புனைவு என்று கூறுகிறது.
Pimp பற்றி விக்கிப்பீடியா கூறுவது என்னவென்றால்
A pimp is an agent for prostitutes who collects part of their earnings. This act is called procuring. The pimp may receive this money in return for advertising services, physical protection, or for providing, and possibly monopolizing, a location where she may engage clients. A woman who runs a brothel is known as a madam rather than a pimp
விலை மகளிர்களுக்கு ஏஜென்டாக செயல்படுபட்டு, அந்த விலை மகளிரின் சம்பாத்தியத்திலிருந்து ஒரு பகுதியை பெற்றுக் கொள்பவன். அந்த விலை மகளிருக்கு பாதுகாப்பு அளித்தல், அவர்களுக்கு விளம்பரம் செய்தல், தோழிலை சிறப்பாக நடத்துதல் போன்றவற்றுக்காக பணம் பெற்றுக் கொள்பவன் என்று விக்கிபீடியா கூறுகிறது.
இந்த பிம்ப் ஒரு புனைவு எழுதினால் அது எப்படி இருக்கும்… ?
இப்படித்தான்.
நக்கீரன் கவர் ஸ்டோரியின் அட்டைப் படத்தில் சென்னை மாநகர ஆணையாளராக இருக்கும் ஜார்ஜ் மற்றும் அரியலூர் மாவட்ட எஸ்.பி ஜெயகௌரி. நடுவில் குட்டியூண்டாக யூஜின் சதீஷ் என்ற இன்ஸ்பெக்டர்.
தலைப்பு ஒரு பெண் எஸ்.பி…
ஒரு இன்ஸ்பெக்டர்…
ஒரு ஏ.டி.ஜி.பி
காவல்துறை வில்லங்கம்..
“இந்த விஷயத்தில் என்ன முடிவெடுப்பது என்றே கடந்த நான்கைந்து நாட்களாக கையை பிசைந்து கொண்டிருக்கிறார் மாநில போலீஸ் டி.ஜி.பி.ராமானுஜம். அவர் டேபிளில் இருக்கும் ரிப்போர்ட்டின் தன்மை அப்படிப்பட்டது. காதல், கசமுசாக்கள் அதிகபட்சமாய் ஆயுதப்படை லெவல் வரை பார்த்து, விசாரித்து வந்தவரின் டேபிளில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு பெண் எஸ்.பி, ஒரு கூடுதல் டி.ஜி.பி லெவலுக்கு இப்படிப்பட்ட புகார்கள் இருந்தால் என்ன செய்வது.. இதுதான் கை பிசைவுக்கு காரணம்” என்று தொடங்குகிறது அந்தக் கட்டுரை.
“சரி, விஷயத்துக்குள் போவோம். வில்லங்க சிக்கலில் மாட்டியிருக்கும் பெண் எஸ்.பி. ஜெயகவுரி. அரியலூர் மாவட்டத்தில் தற்போது பணி. இவர் கண்காணிப்பில் வரும் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் யூஜின் சதீஷ். அப்போதைய சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யும் தற்போதைய சென்னை கமிஷனருமான ஜார்ஜ்.
இந்த மூவரைப் பின்னியே அந்த ரிப்போர்ட் இருக்கிறது. காவல் உயர்மட்டத்தில் குசுகுசுவென ரகசியப் பேச்சாகி இருக்கும் இந்த மூவர் விவகாரம் ஜெ. பார்வைக்கு போகப்பட வேண்டுமா வேண்டாமா என்பது குறித்தும் ஒரு பலப் பரீட்சை நடந்து வருவதாக தெரிய வரவே நாம் தீவிர விசாரணையில் இறங்கினோம்.
அரியலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யாக கடந்த 6 மாதம் முன்பு பொறுப்பேற்றவர் எம்.வி.ஜெயகவுரி. குரூப்-1 அதிகாரி யான இவர் சென் னையில் பல் வேறு பகுதியில் உதவி கமிஷனராக, கூடுதல் துணை கமிஷனராக, துணை கமிஷன ராக பணியாற்றி இருக்கிறார். இவர் தற்சமயம் பணியாற்றும் காவல் மாவட்டத்தில்தான் “மீன்சுருட்டி’ காவல் நிலையம் வருகிறது. அந்த நிலையத்தின் இன்ஸ்பெக்டர் யூஜின்சதீஷ். சில-பல கசமுசாக்களில் சிக்கிக் கொண்ட வகையில் இவர் பெயர் ஏரியாவில் டோட்டல் ரிப்பேர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் எஸ்.பி. அலுவலகத்தில் “மீட்டிங்’ நடந்திருக்கிறது. அந்த மீட்டிங்கில் பல கேள்விகளை எஸ்.பி. ஜெயகவுரி எழுப்ப… அதில் அதிகளவில் பதில் சொல்லி அசத்தியிருக்கிறார் இன்ஸ்பெக்டர் “மீன்சுருட்டி’ யூஜின் சதீஷ். “முன்னரே அறிமுகமானது போன்ற ஒரு நட்புணர்வுடன் ஏதோ ஒரு புரிதலுடன் இரு வரும் பேசிக் கொண்டதாகவே’ ஸ்பாட்டில் இருந்த காக்கி கள் வெளியே வந்து கிசுகிசுத்திருக்கிறார்கள். இதன் பின்னர் வந்த நாட்களில் அடிக்கடி எஸ்.பி.அலுவலகத் தில் தெரியும் “தலை’யாக யூஜின் சதீஷ் “தலை’ இருந் திருக்கிறது. நாளுக்கு நாள் இந்த சந்திப்புகள் அதிக மாக எஸ்.பி. அலுவலகப் பணிகளும், மீன்சுருட்டி காவல்நிலைய பணிகளும் சுணக்க நிலைக்குப் போய் ஃபைல்கள் தேங்க ஆரம்பித்துள்ளன.
நாட்கணக்கில், வாரக்கணக்கில் என்பது போய் மாதக்கணக்கில் என்று ஃபைல்கள் விட்ட குறட்டை அதிகமாகி மாவட்ட எஸ்.பி. இன்ஸ்பெக்டர் மூலமாக “மேலே’ ரிப் போர்ட் ஆகியிருக்கிறது. டி.ஜி.பி. பொறுப் போடு “இன்ட்’ எனப்படும் உளவுக்கும் சேர்த்து பொறுப்பாளியாக இருப்பதால் இதுபற்றி “டீடெய்ல்’ ரிப்போர்ட் கேட்டு தன்னுடைய ஸ்பெஷலிஸ்ட் ஒருவரை அரியலூருக்கு வண்டி ஏற்றி விட்டிருக்கிறார் ராமானுஜம்.
அந்த ஸ்பெஷலிஸ்ட் கடந்த ஒருமாத காலமாக இதுபற்றி விசாரித்து “யெஸ்’ என்று ரிப்போர்ட் கொடுக்க கடந்த 23-ந்தேதி இரவு இன்ஸ்பெக்டர் யூஜின் சதீஸுக்கு வி.ஆர். (காத்திருப் போர் பட்டியல்) கொடுத்து உத்தரவு போட்டிருக்கிறார் டி.ஜி.பி.
ஆனால் அதை ஏற்கா மல் “எம்.எல். (மெடிகல் லீவ்) வில் போகிறேன்’ என்று “ரிப் ளை’ கொடுத்துள்ளார் இன்ஸ் பெக்டர் யூஜின் சதீஷ். “ஒரு டி.ஜி.பி. கொடுத்த வி.ஆரை ஏற்காமல் மெடிக்கலில் போய்விட்டு திரும்பினால் வி.ஆர். கேன்சல் ஆகி விடுமா?’ என்று டென்ஷனான டி.ஜி.பி.ராமானுஜம் மறுநாளே இன்ஸ்பெக்டருக்கு சஸ்பெண்ட் ஆர்டரை இஷ்யூ செய்தார். அண்மையில் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக புதிதாய் நியமிக்கப்பட்டுள்ள டி.கே .ராஜேந்திரனை அழைத்து இதுபற்றி மேலும் “கவனித்து’ ரிப்போர்ட் தருமாறு டி.ஜி.பி. சொல்ல… வேலை மும்முரமாகியிருக்கிறது.
மாநில உளவுப்பிரிவு ஐ.ஜி.அம்ரேஷ் பூஜாரிக்கும் இதேபோன்ற ஒரு உத்தரவை “ஓரலாக’ டி.ஜி.பி. சொல்ல இருவருமே அரிய லூரை அலசியிருக்கிறார்கள்.
எஸ்.பி. அலு வலக ஊழியர்கள், எஸ்.பி.யின் “வெய்ட்டிங்’ காவலர்கள், டிரைவர்கள், “ஆர் டர்லிகள்’ என ஒவ் வொருவரிடமும் தனித்தனியே வாக்கு மூலத்தை வாங்கியிருக்கிறார்கள்.
டி.ஜி.பி.யிடம் பூஜாரி கொடுத்த ரிப் போர்ட்டில் “இன்ஸ்பெக்டர் யூஜின் சதீஷ் மட்டுமல்ல… ஒரு ஏ.டி.ஜி.பி.யும் அடிக்கடி வந்து போவார் என ஆர்டர்லிகள் தெரிவிக்கிறார்கள்’ என…
அந்த ஸ்பெஷலிஸ்ட் கடந்த ஒருமாத காலமாக இதுபற்றி விசாரித்து “யெஸ்’ என்று ரிப்போர்ட் கொடுக்க கடந்த 23-ந்தேதி இரவு இன்ஸ்பெக்டர் யூஜின் சதீஸுக்கு வி.ஆர். (காத்திருப் போர் பட்டியல்) கொடுத்து உத்தரவு போட்டிருக்கிறார் டி.ஜி.பி.
ஆனால் அதை ஏற்கா மல் “எம்.எல். (மெடிகல் லீவ்) வில் போகிறேன்’ என்று “ரிப் ளை’ கொடுத்துள்ளார் இன்ஸ் பெக்டர் யூஜின் சதீஷ். “ஒரு டி.ஜி.பி. கொடுத்த வி.ஆரை ஏற்காமல் மெடிக்கலில் போய்விட்டு திரும்பினால் வி.ஆர். கேன்சல் ஆகி விடுமா?’ என்று டென்ஷனான டி.ஜி.பி.ராமானுஜம் மறுநாளே இன்ஸ்பெக்டருக்கு சஸ்பெண்ட் ஆர்டரை இஷ்யூ செய்தார். அண்மையில் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக புதிதாய் நியமிக்கப்பட்டுள்ள டி.கே .ராஜேந்திரனை அழைத்து இதுபற்றி மேலும் “கவனித்து’ ரிப்போர்ட் தருமாறு டி.ஜி.பி. சொல்ல… வேலை மும்முரமாகியிருக்கிறது.
மாநில உளவுப்பிரிவு ஐ.ஜி.அம்ரேஷ் பூஜாரிக்கும் இதேபோன்ற ஒரு உத்தரவை “ஓரலாக’ டி.ஜி.பி. சொல்ல இருவருமே அரியலூரை அலசியிருக் கிறார்கள்.
எஸ்.பி. அலு வலக ஊழியர்கள், எஸ்.பி.யின் “வெய்ட்டிங்’ காவலர்கள், டிரைவர்கள், “ஆர் டர்லிகள்’ என ஒவ் வொருவரிடமும் தனித்தனியே வாக்கு மூலத்தை வாங்கியிருக்கிறார்கள்.
டி.ஜி.பி.யிடம் பூஜாரி கொடுத்த ரிப் போர்ட்டில் “இன்ஸ்பெக்டர் யூஜின் சதீஷ் மட்டுமல்ல… ஒரு ஏ.டி.ஜி.பி.யும் அடிக்கடி வந்து போவார் என ஆர்டர்லிகள் தெரிவிக்கிறார்கள்’ என அவரும் ஓரலாக பதில் கொடுத்திருக்கிறார்.
அடுத்தது டி.கே.ஆர் எனப்படும் டி.கே.ராஜேந்திரனின் பிரத்யேக ரிப்போர்ட். அதில் ஆர்டர்லி ஒருவர் கூறுவதாக இப்படி சொல்லப்பட்டுள்ளது. “ஏடிஜிபி ஜார்ஜ் அய்யாவும் இங்க அடிக்கடி வருவாங்க. அ ஃபிஷியல் மீட்டிங் சம்பந்தமாத்தான் வர்றேன்னு எங்ககிட்ட (ஆர்டர்லீஸ்) தேவையில்லாம சொல்வாங்க.
‘கான்ஃபிடென்ஷியல் மீட்டிங்றதால இது பத்தி வெளியே ஏதும் பேசிடக்கூடாது தெரியுதா ? எஸ்.பி ஜெயகௌரி அம்மாவும் சொல்வாங்க.
உங்களுக்கு எல்லா இன்க்ரிமென்டும் புரமோஷன்சும் நாங்க பாத்துக்கறோம்னு சொன்னாங்க. மற்றபடி உள்ளே என்ன நடக்குதுன்னு எங்களுக்கு தெரியல்லே. இவ்வாறு ஒரு ஆர்டர்லியின் வாக்குமூலம் அமைந்துள்ளது. எஞ்சிய நான்கு ஆர்டர்லியும் அதிகம் பேசாமல் ஏடிஜிபி ஜார்ஜ் அங்கு வந்து சென்றதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இவைகள் டி.கே.ராஜேந்திரனின் ரிப்போர்ட்ஸ்.
டிசிப்ளின் ஃபோர்ஸ் எனப்படும் காக்கிச்சட்டை காவல் பணியில் இது போன்ற விஷயங்கள் சட்டத்துக்குப் புறம்பான ஒன்றாகவே கருதப்படுகிறது. தனிமனித ஒழுக்கத்தை மக்களுக்கு வலியுறுத்தியும் மக்களிடம் எதிர்ப்பார்த்தும் செயல்படுகிற இத்துறையில் இப்படியான விவகாரங்களுக்கு ஒரு போதும் இடமில்லை என்கிறது காவல் சட்டம்.
செய்தியின் துவக்கத்தில் டிஜிபி ராமானுஜம் ஏன் கையைப் பிசைந்து கொண்டு உட்கார்ந்திருந்தார் என்பது இப்போது வாசகர்களுக்கு விளங்கியிருக்கும் என்று கருதுகிறோம். முறைப்படி, டி.ஜி.பியானவர் இது பற்றிய ரிப்போர்டடை ஜெ பார்வைக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் கொஞ்சம் ‘டிலே’ காட்டவே டி.கே.ஆர் விவகாரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
போலீசில் கொஞ்சம் ‘ரப்’ டைப் என்று பெயரெடுத்துள்ள டி.கே.ஆர் எதையும் செய்வார் என்ற நிலையில் கடைசித் தகவலாக ஜெ.பார்வைக்கு விவகார ஃபைலை அனுப்பி வைத்திருக்கிறார் டி.ஜி.பி.ராமானுஜம். இந்த மூவ் பற்றி ஒன்றும் தெரியாமல் அல்லது எதைப்பற்றியும் கவலைப்படாமல் சென்னை மத்திய குற்றப்பிரிவான சிசிபிக்கு ஜெயகவுரியை டி.சியாகப் போட பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். யார் பரிந்துரைத்திருப்பார்கள் ? ஊகிக்க முடிந்தால் நீங்கள் திறமையான வாசகர்.
இதுதான் நக்கீரன் ஸ்டோரி.
முதலில் சவுக்கு நடத்திய விசாரணையில், நக்கீரனில் குறிப்பிட்டுள்ளது போல எந்த விசாரணையும் டிஜிபி ராமானுஜத்தால் நடத்தப்படவில்லை. அரியலூர் மாவட்ட எஸ்.பி ஜெயகௌரி மீது ஒரு ரகசிய விசாரணை நடைபெறுவது உண்மை. ஆனால் ஜார்ஜுக்கும் அந்த விசாரணைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயகௌரிக்கும் அந்த இன்ஸ்பெக்டருக்கும் இருக்கும் தொடர்பு குறித்து சவுக்கு விசாரிக்கவில்லை. விசாரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. நக்கீரனின் இந்த ஸ்டோரி முழுக்க முழுக்க ஜார்ஜை கமிஷனர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்டது.
டி.கே.ராஜேந்திரனையும், உளவுத்துறை ஐஜி அம்ரேஷ் பூஜாரியையும் தனித்தனியாக விசாரிக்க சொல்லி உத்தரவிட்டாராம் ராமானுஜம். அம்ரேஷ் பூஜாரியிடம் ராமானுஜம் ஓரலாக விசாரிக்கச் சொன்னாராம்.
“டி.ஜி.பி.யிடம் பூஜாரி கொடுத்த ரிப்போர்ட்டில் “இன்ஸ்பெக்டர் யூஜின் சதீஷ் மட்டுமல்ல… ஒரு ஏ.டி.ஜி.பி.யும் அடிக்கடி வந்து போவார் என ஆர்டர்லிகள் தெரிவிக்கிறார்கள்’ என அவரும் ஓரலாக பதில் கொடுத்திருக்கிறார்.“ என்று எழுதப்பட்டுள்ளது. ஓரலாக பதில் சொன்னார் பூஜாரி என்று போட்டுவிட்டு, அந்த வாக்கியத்தின் தொடக்கத்திலேயே “டி.ஜி.பி.யிடம் பூஜாரி கொடுத்த ரிப்போர்ட்டில்“ என்று போடப்பட்டுள்ளது. ஓரலாக பதில் சொன்னார் என்றால் எதற்காக ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் ?
அடுத்ததாக டி.கே.ராஜேந்திரன் ரிப்போர்ட் என்று சொல்லப்படுவதுதான் பெரிய நகைச்சுவை. “ஏடிஜிபி ஜார்ஜ் அய்யாவும் இங்க அடிக்கடி வருவாங்க. அஃபிஷியல் மீட்டிங் சம்பந்தமாத்தான் வர்றேன்னு எங்ககிட்ட (ஆர்டர்லீஸ்) தேவையில்லாம சொல்வாங்க.” ஜார்ஜுக்கும், ஜெயகௌரிக்கும் நக்கீரனில் சொல்லியிருப்பது போல ஒரு வேளை தொடர்பு இருந்தால் கூட, வாசலில் இருக்கும் கான்ஸ்டபிளிடம் விளக்கம் சொல்லியிருப்பார்கள் என்று எழுதியிருப்பதே மிகப்பெரிய நகைச்சுவை. அந்த கான்ஸ்டபிளுக்கு தெரிந்தே ஏதாவது நடந்தாலும் அந்த கான்ஸ்டபிள் என்ன செய்து விட முடியும் ? காவல்துறையின் அடிமட்டத்தில் இருக்கும் ஒரு கான்ஸ்டபிளிடம் ஜார்ஜும் ஜெயகௌரியும் விளக்கம் கொடுத்தார்கள் என்ற அம்புலிமாமா கதையை போலீஸ் க்வார்ட்ர்ஸில் விளையாடும் குழந்தை கூட நம்பாது.
அடுத்ததாக இதை விட பெரிய நகைச்சுவை. “உங்களுக்கு எல்லா இன்க்ரிமென்டும் புரமோஷன்சும் நாங்க பாத்துக்கறோம்னு சொன்னாங்க. மற்றபடி உள்ளே என்ன நடக்குதுன்னு எங்களுக்கு தெரியல்லே. இவ்வாறு ஒரு ஆர்டர்லியின் வாக்குமூலம் அமைந்துள்ளது. “
இந்த வரியைப் படித்தால் ஜார்ஜும், ஜெயகெளிரியும் ஒன்றாகச் சேர்ந்து அந்த கான்ஸ்டபிளிடம் இன்க்ரிமென்டும் ப்ரொமோஷனும் நாங்க பாத்துக்கறோம் என்று சொன்னார்களாம். நாங்க என்ற வார்த்தையை கவனிக்கவும். இங்கே நடந்ததை வெளியில் சொல்லாதே என்று ரெண்டாயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்கள் என்று சொன்னலாவது பரவாயில்லை. ஒரு கான்ஸ்டபிளுக்கு இன்க்ரிமென்டும், பதவி உயர்வும் அவர் உரிமை இல்லையா… ஜார்ஜ் தராவிட்டால் நின்று விடுமா என்ன ? நக்கீரன் தோழர்களே… அடுத்த முறை இன்னும் சிறப்பாக, “உனக்கு மாசா மாசம் சம்பளம் குடுத்துட்றோம்“ என்று சொன்னாங்க என்று போடுங்கள். மசாலா தூக்கலாக இருக்கும்.
“மற்றபடி உள்ளே என்ன நடக்குதுன்னு எங்களுக்கு தெரியல்லே…“ என்று அந்த கான்ஸ்டபிள் சொன்னாராம். இதன் பொருள் என்னவென்றால், உள்ளே தகாத விவகாரம் நடக்கிறது என்பதே. இது பைத்தியக்காரத்தனமாக இல்லையா ? ஜெயகௌரி ஒரு மாவட்டத்தின் எஸ்.பி. ஜார்ஜ் ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி. இவர்கள் நினைத்தால் தமிழகத்தில் எந்த மூலையில் வேண்டுமானாலும் ரகசியமாக தங்க முடியுமே… எத்தனையோ தொழிலதிபர்கள் கெஸ்ட் ஹவுஸ்களை கட்டி வைத்துக் கொண்டு அதிகாரிகளின் கண்பார்வை கெஸ்ட் ஹவுஸின் மேல் படாதா என்று தவமாய் தவமிருக்கிறார்களே… என்ன ஒரு முட்டாள்த்தனமான கூற்று இது… ?
டி.கே.ராஜேந்திரன் உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் உறக்கச் சொல்லுவோம் என்று தைரியமாக டிஜிபியிடம் ரிப்போர்ட் கொடுத்தாராம். டி.கே.ராஜேந்திரன் யாரென்று நக்கீரனுக்கு முழுமையாக தெரியாது… இவர் சவுக்கு மீதான வழக்கில் பொய் சாட்சி சொல்வதற்காக வர இருக்கிறார். அப்போது இவரிடம் குறுக்கு விசாரணை செய்வதற்காக அவர் சொந்த மாவட்டம் திருவண்ணமாலையில் தொடங்கி, அவர் சம்பந்தம் செய்த சேலம் மாவட்டம், அவர் மாமியார் டி.கே.ஆர் வீட்டில் வேலை செய்யும் காவலர்களுக்கு விடும் வேலைகள், அவர் மகளுக்கு ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் எப்படி சீட் வாங்கினார், அந்தப் பெண் கல்லூரிக்குச் செல்வதற்காக டிரைவர்களாக இருந்த லஞ்ச ஒழிப்புத் துறையின் காவலர்கள் எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டார்கள், அதையும் மீறி டிரைவர்களாக இருந்த காவலர்கள் அளித்துள்ள “பிரத்யேக” தகவல்கள், டி.கே.ஆர் ஒரு நாளக்கு 18 செய்தித்தாள்கள் படித்த அதிசயம், அவர் மைத்துனர் பெயரில் வாங்கிப் போட்டுள்ள சொத்து என்று பல்வேறு விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்டு வருகின்றன. குறுக்கு விசாரணை முடிந்ததும் இவரைப் பற்றி விரிவாக எழுதப்படும். அதனால் இப்போது வேண்டாம்.
டி.கே.ஆர் ரிப்போர்ட் கொடுத்தவுடன் இந்த ரிப்போர்ட்டை இத்தனை நாளாக கட்டி வைத்து நடவடிக்கை எடுக்காமல் இருந்த ராமானுஜம் “ரப்“ டைப் அதிகாரியான டி.கே.ஆர் ரிப்போர்டை ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்தாராம். நக்கீரனின் நகைச்சுவைக்கு ஒரு அளவே இல்லை போங்கள். கூடுதலாக சொல்லப்படும் தகவல், ராமானுஜம் இந்த அறிக்கையை ஜெயலலிதாவுக்கு அனுப்பாமல் தவிர்த்ததன் காரணம், ராமானுஜமும் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர், ஜெயகௌரியும் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவராம். இது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். நக்கீரனின் கட்டுரைப்படியே ராமானுஜம் உளவுத்துறை ஐஜி அம்ரேஷ் பூஜாரியை இந்த விவகாரம் குறித்து விசாரிக்கச் சொல்லி விட்டு, டி.கே.ராஜேந்திரனைப் பற்றியும் விசாரிக்கச் சொல்லியிருக்கிறாராம். ஜெயகௌரியை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தால் ராமானுஜம், போலி என்கவுன்டர்கள் மற்றும் லாக்கப் மரணங்கள் தொடர்பாக அவரிடம் வரும் புகார்களைப் போல, ஆவணக்காப்பகத்தில் புதைத்திருக்க மாட்டாரா…. எதற்காக அவர் இரண்டு அதிகாரிகளை வைத்து விசாரணை நடத்தச் சொல்ல வேண்டும்.
திருட்டுத்தனமாக போலி சான்றிதழ் கொடுத்து ஹவுசிங் போர்டில் வீட்டுமனை வாங்கத் தெரிந்த காமராஜுக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் போனது எப்படி என்பதுதான் தெரியவில்லை.
ஜார்ஜ். இவர் ஐஐடியில் படித்தவர். பொதுவாகவே ஐஐடியில் படித்தவர்கள் மற்றவர்களை எருமை மாடுகளாகவே பார்ப்பார்கள். அதுவும் ஐஐடி முடித்து விட்டு ஐபிஎஸ் ஆகி விட்டால் மற்றவர்களை பன்றிகளைப் போலவே பார்ப்பார்கள். ஐஐடியில் படித்து ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, அமெரிக்காவில் உள்ள மாசச்சூசெட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் படித்தால் … … மற்றவர்களை புழுக்களைப் போலத்தான் பார்ப்பார்கள். ஜார்ஜ் அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டியில் எம்.டெக் படித்தவர். இதையும் படித்து விட்டு, எம்.பி.ஏ மற்றும் எம்.பில் படித்தவர். கேட்க வேண்டுமா… சவுக்குக்கு ஜார்ஜை 1993ல் தெரியும். அப்போது ஜார்ஜ் லஞ்ச ஒழிப்புத் துறையின் மேற்கு சரகத்தில் எஸ்.பியாக பணியாற்றினார். அப்போது இவரோடு தெற்கு சரக எஸ்.பியாக பணியாற்றியவர் திரிபாதி என்பது குறிப்பிடத்தக்கது. திரிபாதி அப்போது ஊழியர்களோடு எளிமையாக பழகுவார். ஆனால் ஜார்ஜ் அப்போதே கித்தாப்புதான். அப்பாடக்கர் போலவே பேசுவார். அதன் பிறகுதான் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.
அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த பிறகுதான் சென்னை மாநகர இணை ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் இணை ஆணையராக இருந்தபோதுதான் கருணாநிதி கைது செய்யப்பட்டார். அப்போது தகராறு செய்த முரசொலி மாறனை அடித்துத் தூக்கிப் போட்டவர் இந்த ஜார்ஜ்தான்.
பெண்கள் விஷயத்தில் ஜார்ஜ் ஒரு ஊர் போற்றும் உத்தமர் என்று சான்றளிக்க இயலாதுதான். ஆனால், தன் பதவிக்காலத்தில் ஜார்ஜ் தனக்குக் கீழே பணியாற்றும் ஊழியர்களோடோ, பெண் அதிகாரிகளோடோ “தொடர்பில்” இருந்தார் என்பதற்கு துளி கூட சான்று கிடையாது.
2001ல் லஞ்ச ஒழிப்புத் துறையில் ஜார்ஜ் இணை இயக்குநராக பணியாற்றிய போது, தனக்குக் கீழ் பணியாற்றும் பெண் ஊழியர்களை அலுவல் ரீதியில் விவாதிக்கக் கூட அறைக்கு அழைக்க மாட்டார் ஜார்ஜ். அவர் அப்போது ஐஜி என்பதால், எஸ்.பி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளோடு விவாதத்தை முடித்துக் கொள்வார். தனக்குக் கீழ் பணியாற்றும் பெண் ஊழியர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளும் அதிகாரி, மரியாதையை இழந்தே ஆக வேண்டும். அது தவிர்க்க இயலாதது. ஜார்ஜ் இந்த வகையைச் சேர்ந்தவர் அல்ல. அவருக்கு சிற்றின்பத்தை விட, பதவியும் மரியாதையுமே மிக முக்கியம். ஆகையால் அவர் க்ரூப் 1 தேர்வெழுதி எஸ்.பியாக உள்ள ஒரு பெண் அதிகாரியோடு தொடர்பில் இருப்பார் என்று சொல்வது துளியும் நம்பும்படி இல்லை. சைலேந்திர பாபுவைச் சொல்கிறீர்களா… அவர் கதை வேறு. நேற்று பணியில் சேர்ந்து பயிற்சி முடித்த பெண் காவலரைக் கூட விடமாட்டார். ஆனால் ஜார்ஜ் இந்த வகையைச் சேர்ந்தவர் அல்ல.
ஒரு பேச்சுக்காக ஜார்ஜ் மற்றும் ஜெயகௌரி விவகாரம் உண்மை என்றே எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் நினைத்தால் திண்டிவனத்திலோ, செங்கல்பட்டிலோ, மகாபலிபுரத்திலோ, ஏன் சென்னையிலோ கூட ரகசியமாகத் தங்க முடியாதா… ? இதற்காக எந்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாவது அரியலூர் செல்லுவார்களா.. எல்லோருக்கும் தெரிந்தே இது நடந்தாலும் யார் என்ன செய்துவிட முடியும் ?
ஒரு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஒரு மாவட்டத்துக்குச் செல்கிறார் என்றால் அந்த மாவட்டமே அதிரும். ஒட்டு மொத்த மாவட்டமும் கூடுதல் டிஜிபிக்கு சேவகம் செய்வதற்காக காத்திருக்கும். இந்த நக்கீரன் நாதாரிகள் கூறுவது போல ஒரு கூடுதல் டிஜிபியும் அடிக்கடி வந்து செல்வார் என்ற கதையெல்லாம் சாத்தியமேயில்லை.
சரி… இந்தக் கட்டுரை பொய் என்று ஆகி விட்டது. எதற்காக இந்த கட்டுரை இந்த நேரத்தில் வரவேண்டும் ? அதுவும் ஜார்ஜை குறிவைத்துத் தாக்கி, அதுவும் ஜார்ஜ் சென்னை மாநகர கமிஷனராக ஆன ஒரு வாரத்தில் ஒரு நாலு வரிச் செய்தியை அட்டைப்படக் கட்டுரையாக வைத்து, அதற்கு தமிழ்நாடு முழுக்க 20 ஆயிரம் போஸ்டர்கள் அடித்து எதற்காக ஒட்ட வேண்டும்… ?
மற்ற விவகாரங்களை ஜெயலலிதா பொறுத்துக் கொள்வார். ஆனால் பெண் விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா பொறுத்துக் கொள்ளவே மாட்டார், ஜார்ஜ் உடனடியாக மாற்றப்படுவார் என்பதே.
ஜார்ஜ் மாற்றப்பட்டால் இந்த இடத்துக்கு யார் வர முடியும்.. மற்றொரு ஏ.டி.ஜி.பி அல்லவா ? அத்தனை ஏ.டி.ஜி.பிக்களுக்கும் சென்னை மாநகர ஆணையளராக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், நக்கீரனில் வந்தது போன்ற கவர் ஸ்டோரி வரவழைக்கும் திறமை அனைவருக்கும் வர வாய்ப்பில்லை. ஒவ்வொருவராகப் பார்ப்போம்.
முத்துக்கருப்பன், ட்டி.ராதாகிருஷ்ணன், ஆகியோருக்கு இவ்வளவு விபரம் பத்தாது. சேகர் திமுக அனுதாபியாக அறியப்படுபவர். அவர் ஆசைப்படமாட்டார். மெகபூப் ஆலம் அயல்பணியில் இருக்கிறார். அவர் கிடையாது. அஷோக் குமார் தற்போதுதான் மாநில அரசுப் பணிக்குத் திரும்பியுள்ளார். அவருக்கு கமிஷனர் பதவியை விட லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பதவியையே விரும்புவார். அவர் கிடையாது.
எஸ்.கே.டோக்ராவுக்கு இந்த அரசியல்களெல்லாம் தெரியாது. கே.பி.மகேந்திரன் இந்த வேலையைச் செய்யும் அளவுக்கு தொடர்புகள் கிடையாது. சி.வி.ராவ், லல்லாம் சங்கா, ஸ்ரீலக்ஷ்மி பிரசாத், அசுதோஷ் சுக்லா, எம்.கே.ஜா, தமிழ் செல்வன், ஆஷிஷ் பேங்க்ரா, கரண் சின்ஹா, பிரதீப் பிலிப், ஆர்.சி.குடாவ்லா மற்றும் விஜயக்குமார் ஆகியோருக்கும் இச்செய்தியை வெளி வரச் செய்ய உரிய தொடர்புகள் கிடையாது. எஸ்.ராஜேந்திரன் மீது ஆறாவது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் தலைகீழாக நின்றால் கூட கமிஷனர் பதவி கிடைக்காது. சைலேந்திர பாபு எனப்படும் ஸ்நேக் பாபுவுக்கு தமிழக காவல்துறையில் உள்ள அத்தனை பெண்களையும் பெண்டாள ஆசைகள் உண்டு. ஆனால் இந்த அளவுக்கு சிறப்பாக அரசியல் பண்ணத் தெரியாது. காந்திராஜன் கிட்டத்தட்ட சைலேந்திர பாபு போலத்தான். ஆனால் காமராஜ் காந்திராஜன் சொன்னால் சிங்கிள் காலத்தில் பெட்டிச் செய்தி கூட போடமாட்டார்.
அன்பு நண்பர் ஜாபர் சேட்.. … ….. அந்த கால படங்களில் வரும் சோக ரீ ரெக்கார்டிங்கான பப்பப்ப பய்ங்ங்ங்ங் என்ற இசையோடு சேர்த்து வாசிக்கவும். அவர் மீளாத் துயரத்தில் உள்ளார்… அவர் இந்தப் போட்டிக்கு வரமாட்டார். கமிஷனர் கட்டதுரை என்கிற திரிபாதி இதைச் செய்தாலும் மீண்டும் கமிஷனராக முடியாது.
எஞ்சியிருப்பது யார் ?
கே.ராதாகிருஷ்ணன்
டி.கே.ராஜேந்திரன்.
சங்காராம் ஜாங்கிட்
ஜாங்கிட் இந்த வேலையைச் செய்யக் கூடிய அளவுக்கு தொடர்புகளும் உள்ளவர். ஜார்ஜை பழிதீர்ப்பதற்கு அவருக்கு போதுமான காரணங்களும் உள்ளன. ஆனால் தற்போது கன்னியாக்குமரியில் போக்குவரத்துத் துறையில் விஜிலென்ஸ் அதிகாரியாக உள்ளார் ஜாங்கிட். அவர் சென்னையில் நியமிக்கப்படுவதே கேள்விக்குறியாக உள்ளது. அப்படியே நியமிக்கப்பட்டாலும் சென்னை மாநகர ஆணையாளராக ஆக்கப்படுவாரா என்பது சந்தேகமே. மேலும், அவர் இப்போது இருக்கும் நிலையில் ஜார்ஜோடு மோதுவதற்கு தயாராக இருப்பார் என்று எண்ணத் தோன்றவில்லை. டி.கே.ராஜேந்திரனை புகழ்ந்து எழுதியதன் மூலம், அவர் கமிஷனராகும் வாய்ப்பையும் இந்தக் கட்டுரை தந்திரமாக தடுத்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நக்கீரனில் காக்க காக்க சூர்யா ரேஞ்சுக்கு டி.கே.ராஜேந்திரனை எழுதிய பிறகு அவரை ஜெயலலிதா கமிஷனராக்குவாரா என்ன ?
மீதம் உள்ள இரண்டே இரண்டு பெயர்கள் கண்ணாயிரம் மற்றும் கே.ராதாகிருஷ்ணன் நாயுடு.
நக்கீரனின் இந்தக் கட்டுரை தீர யோசித்து, ஆராய்ந்து கவனமாக உருவாக்கப்பட்ட ஒரு ப்ளான்டட் கட்டுரை. ஸ்னூக்கர் கேமில் ஒரு பந்தை அடித்தால் அது இன்னொரு பந்தை அடித்து இன்னொரு பந்து குழியில் விழுமே. அது போன்ற நடவடிக்கை இது.
ராதாகிருஷ்ணன் நாயுடு மற்றும் கண்ணாயிரம் ஆகிய இருவருக்கும் போதுமான தொடர்புகள் உள்ளன. காமராஜை வளைக்கும் வழிவகைகள் அறிந்தவர்கள். காமராஜை வைத்து வியாபாரம் செய்யும் அளவுக்கு கை தேர்ந்தவர்கள். இருவருக்கும் ஜார்ஜை பழி தீர்க்க முன் பகையும் உண்டு. நோக்கமும் உண்டு. இருவருக்குமே கமிஷனர் ஆக வேண்டும் என்ற தளராத வெறியும் உண்டு. இருவருக்கும் நெருக்கமான நட்பும் உண்டு. இருவரில் யார் கமிஷனராக ஆனாலும் பணம், அதிகாரம் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்வதில் பெரிய சிக்கல்கள் எழாது. 2002ல் ஜார்ஜை ஒரு நடிகையோடு இணைத்து ஜுனியர் விகடனில் வந்த அட்டைப்படக் கட்டுரைக்கும் காரணம் ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.ன நோக்கங்கள் ஒன்றே. அவற்றில் பிரதான நோக்கம்…. அதிகார போதை. பணம் கொள்ளையடித்தல்…. பகட்டு.. நயவஞ்சகம், சூது, துரோகம், இவற்றின் மொத்த உருவம் ராதாகிருஷ்ணன் நாயுடு மற்றும் கண்ணாயிரம். ஜார்ஜைப் பற்றி இப்படி ஒரு கவர் ஸ்டோரியை நக்கீரனில் கொண்டு வந்தால் ஜெயலலிதா உடனடியாக கோபமடைந்து ஜார்ஜை மாற்றுவார் என்பதைத் தவிர இக்கட்டுரைக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. அவர்கள் முயற்சி வெற்றி பெற்றது போலத் தெரியவில்லை. பார்ப்போம். சசிகலாவின் ஆதிக்கம் மேலோங்கி வரும் நிலையில் கண்ணாயிரத்தின் இந்த கமிஷனர் கனவு ஒன்றும் பெரும் ஆச்சர்யம் இல்லை.
மற்றொரு காரணமும் காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. காமராஜின் மனைவி ஜெயசுதா பெயரில் வீட்டு வசதி வாரியத்தை ஏமாற்றி மோசடியாக வீட்டு மனை பெற்ற ஜெயசுதா மீது தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் 2010ல் ஒரு புகார் அனுப்பப் பட்டது. 2011ல் பத்திரிக்கையாளர் அன்பழகன் ஒரு புகாரை அனுப்பினார். இந்தப் புகாரையும் தூசி தட்டும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. இப்படி ஒரு ஸ்டோரி போட்டு விட்டால், இந்த ஸ்டோரி போட்டதற்காக நக்கீரனை பழி வாங்குகிறார்கள் என்று எளிதாகச் சொல்லி விடலாம் அல்லவா… இந்த அடிப்படையிலும் நக்கீரனில் இந்த ஸ்டோரியை வெளியிட்டதன் மூலம் காமராஜுக்கு பழம் நழுவி பாலில் விழுந்து அதன் பின்னர் வாயிலேயே விழுந்தது போல பல பயன்கள் உண்டு.
காமராஜ் பத்திரிக்கையாளர் என்ற பெயரில் அரங்கேற்றி வரும் அயோக்கியத்தனங்களை சவுக்கு பல முறை அம்பலப்படுத்தியுள்ளது. இப்போது வெளிவந்துள்ள கட்டுரையும் மிக மிக மோசமான ஒரு அயோக்கியத்தனமே. ஆனால் காமராஜை திட்டினால் கடல் கடந்து இருக்கும் காமராஜின் நண்பர்கள் கூட சவுக்கை கடிந்து கொள்கிறார்கள். அந்தக் கட்டுரையில் தவறாக இருக்கும் ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு இப்படியெல்லாம் எழுதலாமா…. ஆயிரம்தான் இருந்தாலும் காமராஜ் ஒரு ஜர்னலிஸ்ட் என்று திட்டுகிறார்கள். காமராஜ் அந்தக் காலத்தில் வரும் சரோஜாதேவி புத்தகங்களுக்கு ஆசிரியராக இருக்க மட்டுமே தகுதியானவர். சரோஜாதேவி புத்தகங்களை எழுதுபவர், நடத்துபவர் ஜர்னலிஸ்டா என்றால், காமராஜும் ஜர்னலிஸ்ட்தான். (வேசி என்ற வார்த்தையை பயன்படுத்தினால் பெண்ணியவாதிகள் போனில் தொடர்பு கொண்டு காது கிழியும் வரை திட்டுகிறார்கள். அதனால் பத்திரிக்கையாளர் என்ற பெயரில் வேசி என்று எழுதவில்லை)
அந்தக் கட்டுரையில் வரும் ஒரு பத்தி முக்கியமானது.
“டிசிப்ளின் ஃபோர்ஸ் எனப்படும் காக்கிச்சட்டை காவல் பணியில் இது போன்ற விஷயங்கள் சட்டத்துக்குப் புறம்பான ஒன்றாகவே கருதப்படுகிறது. தனிமனித ஒழுக்கத்தை மக்களுக்கு வலியுறுத்தியும் மக்களிடம் எதிர்ப்பார்த்தும் செயல்படுகிற இத்துறையில் இப்படியான விவகாரங்களுக்கு ஒரு போதும் இடமில்லை என்கிறது காவல் சட்டம்.”
படித்தால் அப்படியே புல்லரிக்கிறதா… ? நக்கீரன் குழுவினரைப் போன்ற உத்தமர்களையும் ஒழுக்க சீலர்களையும் பார்க்க முடியுமா என்று அப்படியே புல்லரிக்குமே….
காமராஜ் ஐந்திரம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற பெயரில் கான்ட்ராக்ட் வேலை செய்து வந்தது குறித்தும் பத்தி விற்கும் காமராஜ் ச்சே… சாரி… பத்திரிக்கையாளர் காமராஜ் எப்படி காண்ட்ராக்டர் காமராஜானார் என்று சவுக்கில் விரிவாக ஆதாரங்களோடு சரிபாதி பெற்றாரா திரிபாதி என்ற கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது.
அய்ந்திரம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தின் அதிபர் கான்ட்ராக்டர் கம்பெனிகள் ரிஜிஸ்ட்ராரிடம் சமர்ப்பித்த ஆவணங்களில் 18 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி எவ்வளவு தெரியுமா ? அந்த 18 கோடியில் 2 சதவிகிதம். 36 லட்சம். இது வரை பத்து பைசா கூட செலுத்தவில்லை. வரி ஏய்ப்பு செய்ததற்கு அபராதமாக 150% சதவிகிதம் மற்றும் வட்டியோடு சேர்த்து 90 லட்சம் செலுத்த வேண்டும் காண்ட்ராக்டர் காமராஜ்.
தன்னைப் பற்றி தொடர்ந்து அவதூறாக எழுதி வரும் நக்கீரன் காமராஜின் இந்த மோசடிகளுக்கு அவர் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்தாலே போதுமே… காமராஜ் மீது புகார்களா இல்லை… ? ஆனால் ஜெயலலிதா வண்டு முருகன் போன்ற நபர்களை தலைமை வழக்கறிஞராக வைத்திருந்தால் வௌங்குமா…..
ஒழுக்கத்தைப் பற்றி நக்கீரன் எப்படி விலாவாரியாக எழுதியிருந்தது என்று பார்த்தீர்கள். நக்கீரனின் இந்த இதழில் மொத்தம் ஏழு விளம்பரங்கள். அட்டை விளம்பரங்களையும் சேர்த்து. இதில் ஐந்து விளம்பரங்கள் என்ன விளம்பரங்கள் தெரியுமா ? ஆண்மைக் குறைவு தொடர்பான விளம்பரங்கள். அந்த விளம்பரங்களைப் படிக்கும் ஆண்கள், ஸ்விட்ச் போட்டால் வேலை செய்யும்… வேலை மட்டும் செய்யாது தெரு விளக்கு எரியும் கம்பம் போலவே இருக்கும் என்று நம்ப வைக்கும் விளம்பரங்கள். இந்த விளம்பரங்களைச் செய்யும் ஒரு மருத்துவர் கூட, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் படிப்பை படித்த மருத்துவர் கிடையாது.
நம்மில் பலர் சாலை ஓரத்தில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் அருகிலோ ஜங்ஷன் பாக்ஸ் அருகிலோ சிறுநீர் கழித்திருப்போம். எல்லா ஜங்ஷன் பாக்ஸ் மீதும் கட்டாயம் தவறாமல் “உங்கள் ஆண் குறி சிறியதாக இருக்கிறதா ?” என்று கோபால் பல்பொடி நிறத்தில் போஸ்டர் ஒட்டியிருப்பார்கள். அந்தப் போஸ்டரைப் படித்து விட்டு குனிந்து பார்த்தால் பகீரென்று இருக்கும். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அந்த முகவரியை மனப்பாடம் செய்து கொண்டு சிகிச்சைக்கு செல்பவர்கள் பல பேர். சுஜாதா தன்னுடைய “முழு வைத்தியன்” என்ற கதையில் இது போன்ற வைத்தியர்களைப் பற்றி அருமையாக எழுதியிருப்பார்.
நக்கீரனில் வந்துள்ள ஒரு விளம்பரம் மிக மிக சிறப்பு. ஒரு சிகிச்சையின் பெயர் ORGAN DEVELOPER. அதிக சுய இன்பத்தால் சுருங்கி, சிறியதாகிப் போன உறுப்பை நீளமாகவும், பருமனாகவும் மற்றும் உறுதியாகவும் மாற்றும் சிகிச்சையாம். என்னென்ன போடுகிறார்கள் பாருங்கள் நீளமாக, பருமனாக, மற்றும் உறுதியாகவாம்… எப்படிப்பட்ட அயோக்கியத்தனம் இது ?
ஒரு குழந்தை உருவாக, விந்தணுவும், கரு முட்டையும் சேரும் அந்த மைக்ரோ நொடியில் உங்கள் உயரம், உங்கள் நிறம், உங்கள் தலை முடியின் நிறம், உங்கள் கண்களின் நிறம், உங்கள் பல்லின் வகை, உங்கள் ஆண் குறியின் நீளம் உள்ளிட்டவை தீர்மானிக்கப்படுபவை. இந்த இயற்கை விதிக்கு முரணாக வெளியிடப்படும் விளம்பரங்களை பத்திரிக்கை முழுக்க வெளியிட்டு லாபம் சம்பாதிக்கும் அயோக்கியர்களே காமராஜ் மற்றும் கோபால். ஜெயலலிதாவைப் போன்ற முட்டாளைப் பார்க்கவே முடியாது. ரஜினிகாந்த் 1995 பாட்ஷா பட 100வது நாள் விழாவில் பேசியது இன்றைக்கும் பொருந்தும். உங்களைச் சுற்றி நல்ல ஆலோசகர்களை வைத்துக் கொள்ளுங்கள். அடிமைகளை வைத்துக் கொள்ளாதீர்கள் என்றார். 1991 முதல் இன்று வரை ஜெயலலிதாவைச் சுற்றி அடிமைகள் மட்டுமே இருக்கிறார்கள். 1954ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் ஒன்று இருக்கிறது. The Drugs and Magic Remedies (Objectionable Advertisements) Act, 1954. இந்தச் சட்டத்தின் படி, இது போன்ற விளம்பரங்கள் வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.. எல்லா விஷயங்களுக்கும் தமிழக மக்கள் உரிமைக் கழகமேவா புகார் கொடுத்து வழக்கு தொடர முடியும் ? மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு ஜெயலலிதா துதிபாடும் அடிமைகள் என்னதான் செய்கிறார்கள்… ?
இவர்கள் பேசலாமா ஒழுக்கத்தைப் பற்றி…. சரி… தலைப்புக்கு வருவோம். இப்போது சொல்லுங்கள் தோழர்களே… நக்கீரனில் வெளிவந்த ஜார்ஜ் குறித்த அட்டைப்படக் கட்டுரை PIMP FICTIONஆ இல்லையா என்று ?