க்ரானைட் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திரையுலகத்தைச் சேர்ந்த சில புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர். கவிப்பேரரசுவின் சென்னையில் உள்ள இரண்டு வீடுகளுக்கான க்ரானைட் கற்களை சப்ளை செய்தது பிஆர்பி க்ரானைட்ஸ் என்ற தகவல் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருப்பதால், எப்போது வேண்டுமானாலும் கவிப்பேரரசை கவி பாட அழைப்பதற்காக மதுரை மாநகர காவல்துறை காத்திருக்கிறது. தன் மகனின் திருமணத்தில் நன்றி தெரிவித்துப் பேசிய வைரமுத்து, பிஆர்பி தன் குடும்பத்தின் பெரியவர் என்றும் புரவலர் என்றும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்தார். இவரைப் போலவே பிஆர்பியிடம் க்ரானைட் வாங்கிய வகையில் கலக்கத்தில் இருக்கும் மற்றொரு திரையுலகப் பிரபலம் பாரதிராஜா. பாரதிராஜா, வைரமுத்து மற்றும் பி.ஆர்.பியை இணைத்தது பணம், புகழ், சினிமா என்ற மூன்றையும் தாண்டி சாதி என்பதும் குறிப்பிடத்தக்கது…