சமீபத்தில் நடந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தில் அனைவரின் புருவத்தையும் உயரச் செய்தது, மதிவாணன் ஐஏஎஸை தொழில் துறையின் இணைச் செயலாளராக நியமித்து பிறப்பித்த உத்தரவுதான். இந்த உத்தரவு விசித்திரமாக இருந்ததற்கான காரணம் க்ரானைட் ஊழலுக்கு துணை போனதாக மதிவாணன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், க்ரானைட் தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பான தொழில் துறையிலேயே மதிவாணனை நியமித்ததுதான். இது ஏதோ தவறுதலாக நேர்ந்திருக்கும் என்று பலரும் பேசி வருகையில், விஷயம் அறிந்தவர்கள் இது தெரியாமல் நடந்த தவறல்ல என்று அடித்துச் சொல்கிறார்கள். முதல்வரின் செயலாளராக இருக்கும் ஷீலா ப்ரியா கவர்னர் செயலாளராக பணியாற்றிய போது அவரோடு பணியாற்றிய மதிவாணனை காப்பாற்றுவதற்காகவே அவரை தொழில் துறையில் நியமிக்க ஷீலா ப்ரியா பரிந்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படியா ?