நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் மற்றும் கூடுதல் டிஜிபி துக்கையாண்டி மற்றும் அவர் மகள் யாமினி மற்றும் அவர் மனைவி மீது சென்னை மாநகர காவல்துறை நில அபகரிப்பு மோசடி மற்றும் ஆவண மோசடி வழக்கு பதிவு செய்திருந்தது. இவ்வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருக்க இவர்கள் மூவரும் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்கள்.
இம்மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி முன்பு விசாரணைக்கு வந்து தீர்ப்பளித்தார். அத்தீர்ப்பில், துக்கையாண்டி மற்றும் அவர் மகளுக்கு முன்ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி, துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இத்தீர்பையடுத்து, துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமியை சென்னை மாநகர காவல்துறை எந்நேரமும் கைது செய்யலாம் எனத் தெரிகிறது.