சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா மீது அர்விந்த் கேஜ்ரிவால் புகார் சொன்ன அடுத்த நிமிடமே, காங்கிரஸில் உள்ள அத்தனை செய்தித் தொடர்பாளர்களும், அந்தக் குற்றச்சாட்டை மறுத்து தொலைக்காட்சிகளில் பேட்டியளிக்க வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது டெல்லி தலைமை. இதையடுத்து கடந்த வெள்ளியன்று மாலை சென்னையில் இருந்த அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தனக்குத் தெரிந்த தேசிய ஊடக செய்தியாளர்களையெல்லாம் என்றும் இல்லாத அக்கறையோடு தொலைபேசியில் அழைத்து உடனே வாருங்கள் பேட்டியளிக்கிறேன். நேரடி ஒளிபரப்புக்கான ஏற்பாடுகளோடு வாருங்கள் என்று கெஞ்சாத குறையாக அழைத்திருக்கிறார். வீட்டுக்குச் சென்ற செய்தியாளர்களுக்கு தடபுடலான வரவேற்பு வேறு நடந்திருக்கிறது.
இதற்கு முன்பெல்லாம் ஜெயந்தி நடராஜனிடம் பேட்டி கேட்டால், “ஐ யம் வெரி பிசி… நவ் ஐ ஹேவ் ய மீட்டிங்… ஐ கேன்னாட் கம் நவ்” என்று இல்லாத பில்டப் குடுப்பாராம். சோனியாவின் மருமகனை காப்பாற்றுவதற்காக பத்திரிக்கையாளர்களுக்கு அவர் வீட்டில் நடந்த கவனிப்பு அனைத்துப் பத்திரிக்கையாளர்களையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறதாமே… அப்படியா ?