சமீபத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. வேறு ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில், தமிழ் மாநிலக் குழுவைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள், 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதை தீர்மானமாக இயற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இத்தீர்மானம் குறித்துப் பேசிய பிரகாஷ்காரத், இலங்கையிலிருந்து வந்தவர்கள் ஒரு போதும் இந்தியக் குடியுரிமை பெற முடியாது, அவர்கள் அகதிகளாகவே இருக்க வேண்டும் என்று உறுதியாக மறுத்துப் பேசியிள்ளார். ஏற்கனவே ஈழத் தமிழர் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை வறுத்து எடுக்கிறார்கள். இந்தத் தீர்மானத்தைப் போட்டாலாவது ஓரளவுக்கு கட்சிக்கு நல்ல பெயர் வரும். அதற்கும் வழியில்லாமல் செய்து விட்டாரே காரத் என்று கடும் வருத்தத்தில் உள்ளார்களாம் தோழர்கள்.. அப்படியா ?