அனைவருக்கும் வைத்தியம் பார்க்க வேண்டிய டாக்டருக்கே தலைவலி என்றால் என்ன செய்வது ? அப்படித்தான் ஆகியிருக்கிறது டாக்டர் ராமதாஸ் நிலைமை.
ஏற்கனவே ராமதாஸின் சொந்த தம்பியான சீனிக் கவுண்டர், பாட்டாளி மக்கள் கட்சியை விட்டு விலகி காங்கிரஸில் இணைந்துள்ள நிலையில், சீனிக் கவுண்டரைப் போன்ற ராமதாஸின் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து, வன்னியர் ஓட்டுக்களை பிரிக்கும் வகையில் சத்திரிய சேவா சங்கம் என்ற புதிய அமைப்பை வன்னியர் சங்கத்துக்குப் போட்டியாக தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். ராமதாஸ் மீது கடும் வருத்தத்தில் உள்ள ஏராளமானோர், இச்சங்கத்தில் சேர உள்ளனராம். ஆரணி பாராளுமன்றத் தொகுதியில் சின்ன அய்யா, அன்புமணி ராமதாஸை நிறுத்தி எம்.பியாக்கலாம் என்ற கனவில் ராமதாஸ் இருந்து வருகிறார். அதே தொகுதியில் சத்திரிய சேவா சங்கம் வேட்பாளரை நிறுத்தி வன்னியர் வாக்குகளை பிரிப்பது என்று திட்டமிட்டுள்ளார்களாம். இந்தச் செய்தியை அறிந்த டாக்டருக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளதாமே… அப்படியா ?