சென்னை மாநகர ஆணையாளராக திரிபாதி இருந்தவரை இணை ஆணையர் சண்முக ராஜேஸ்வரன் பெரும் அதிகாரத்தை செலுத்தி வந்திருக்கிறார். கமிஷனருக்கு நெருக்கம் என்பதால், மற்ற இணை ஆணையர்களை விட, சண்முக ராஜேஸ்வரனுக்கு செல்வாக்கு அதிகமே. ஆனால், புதிய ஆணையராக ஜார்ஜ் பொறுப்பேற்றவுடன், சண்முக ராஜேஸ்வரனின் சிறகுகளைத் துண்டித்திருப்பதாகத் தெரிகிறது.
சண்முக ராஜேஸ்வரனின் நடவடிக்கைகளில் திருப்தி அடையாத ஜார்ஜ், அவருக்குப் பதிலாக டிஐஜியாக இருக்கும் திருஞானத்தை தெற்கு இணை ஆணையராக நியமிப்பதற்கு பரிந்துரை செய்திருப்பதாக பரபரக்கின்றன காவல்துறை வட்டாரங்கள். அப்படியா ?