நம் அன்றாட வாழ்வில் பொய்யும், சூதும் வஞ்சகமும், துரோகமும் ஒருபகுதியாகவேமாறிப்போய், அது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்க தவறுகிறது. எந்தவிதமான அறச்சிக்கலும், இல்லாமல் சர்வசாதாரணமாக துரோகமிழைக்கும் அரசியல்வாதிகளையும், பல்வேறு சுயநலமிகளான மனிதர்களையும் பார்க்கையில் நமக்கு இந்த துரோகங்கள் பழகிப்போய் விடுகின்றன.
இருந்தாலும் சில நேரங்களில் நாம் சந்திக்கும் சூழ்ச்சிகளும் துரோகங்களும், தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தத்தான் செய்கின்றன. அந்த அதிர்ச்சிக்கான காரணம், நாம் சற்றும் எதிர்ப்பாராதவை நிகழும் போதுதான்.
பத்மாசேஷாத்ரிபள்ளியின் நீச்சல்குளத்தில், சிறுவன் ரஞ்சன் இறந்தது குறித்து, சவுக்கில் உயிர்ப்பேதம் என்ற கட்டுரையில் விரிவாக எழுதப்பட்டு இருந்தது. அச்சிறுவனின் மரணம் குறித்து காவல்துறை பதிவு செய்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் சேர்க்கப்படாமல் சம்பந்தமில்லாதவர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு, உண்மைக் குற்றவாளிகளைத் தப்புவிக்க எடுக்கப்பட்ட முயற்சி விரிவாக எழுதப்பட்டிருந்தது. இச்சிறுவன் மரணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரில் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 304 (2) போடுவதற்கு பதிலாக 304 (A) என்று சாதாரண சாலை விபத்துக்குப் போடப்படும் பிரிவுகள் பதிவு செய்யப்பட்டன. இந்தப் பிரிவில் வழக்கு பதிவு செய்ததும், பத்மா சேஷாத்ரி பள்ளியின் நீச்சல் குளத்தின் பயிற்சியாளர் ராஜசேகரன், காண்ட்ராக்டர் ரங்காரெட்டி, உதவிப்பயிற்சியாளர் அருண்குமார், நீச்சல்குளத்தை சுத்தம் செய்யும் ரவி மற்றும் உடற்கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கமாக 304 (A) வழக்குகளில் நேர்வது போலவே, கைது செய்யப்பட்டவர்கள் அன்று இரவே ஜாமீனில் வெளிவந்தனர். காவல்துறையின் பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு பொதுமக்களிடையே எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக, பத்மா சேஷாத்ரி பள்ளியின் துணைத் தலைவரும், அப்பள்ளியின் தாளாளர் ராஜலட்சுமி பார்த்தசாரதியின் நெருங்கிய உறவினருமான ஷீலா ராஜேந்திரா என்பவர் மூன்று நாட்கள் கழித்து கைது செய்யப்பட்டார். இதையடுத்து, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் சிறுவன் ரஞ்சன் மரணம் குறித்த வழக்கில் காவல் துறை பாரபட்சமாக செயல்படுகிறது என்றும், 304 (2) பிரிவுக்குப் பதில் 304 (A) பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளி திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இது தவிரவும், நியாயமான முறையிலும், சட்டத்தின்படியும் இவ்வழக்கை விசாரிக்கத் தவறிய கே.கே.நகர் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அந்த மனு வலியுறுத்தியது. இதனிடையே, சிறுவன் ரஞ்சனின் தந்தை மனோகரும் தன்னை இந்த வழக்கு விசாரணையில் இணைத்துக் கொள்ளுமாறு ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். இருமனுக்களும் விசாரணைக்கு ஏற்கப்பட்டு, அரசுத்தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
அந்தவழக்குவிசாரணையின்போது, ரஞ்சனின் தந்தை மனோகரின் சார்பாக ஆஜரான திமுகவின் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் ராஜ்யசபை எம்.பியுமான சண்முகசுந்தரம் ஆஜராகி வாதாடினார். அவர் தனது வாதத்தின் போது, காவல்துறை வழக்கை சரி வர விசாரணை செய்யவில்லை என்றும், இறந்து போன ரஞ்சனின் பெற்றோரைக்கூட விசாரிக்கவில்லை என்றும் கூறினார். ரஞ்சனின் தந்தையை விசாரிக்காமலேயே விசாரித்து விட்டதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. சம்பவம் நடந்து இத்தனை நாட்களாகியும், சிறுவனின் தந்தையைக் கூட விசாரிக்காமல் இந்த விசாரணை நடைபெறுவதிலிருந்தே எப்படிப்பட்ட விசாரணையை காவல்துறை நடத்தி வருகிறது என்பது தெரிகிறது என்று வாதிட்டார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி இக்பால் அப்போது கடும் எரிச்சலடைந்தார். என்னதான் விசாரிக்கிறீர்கள் என்று அரசு வழக்கறிஞரைப் பார்த்து தன் எரிச்சலைக் காண்பித்து விட்டு, விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு, கடந்த புதன் கிழமை அன்று மீண்டும் விசாரணைக்கு வந்த்து.வந்தபோது கே.கே.நகர் காவல் ஆய்வாளர் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.அந்த மனுவில் அவர் ஒரு வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்த பின்னர், எப்போது வேண்டுமானாலும் மேலும் சில பிரிவுகளைச் சேர்க்கவோ, பிரிவுகளை மாற்றவோ காவல்துறைக்கு உரிமை உண்டு. இறுதி விசாரணை முடிவடையாத நிலையில், சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளர் மீது துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மனுதாரர் கோருவதை ஏற்க இயலாது.
ஸியோன் மெட்ரிகுலேஷன் பள்ளி விவகாரத்தில் அந்தப் பள்ளியின் பேருந்தில் ஓட்டை இருந்த்து அனைவருக்கும் தெரியும். அதனால் அந்த வழக்கில் 304 (2) பிரிவின் கீழ் எப்ஐஆர் போடப்பட்டது என்று சொல்லி விட்டு, அதே பதில் மனுவில் அவர் குறிப்பிடுவது என்னவென்றால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் பத்மா சேஷாத்ரி பள்ளியில் கட்டிடம் கட்ட அனுமதி பெற்றது குறித்து விபரங்கள் கேட்கப்பட்டன. 28.08.2012 அன்று சிஎம்டிஏ அனுப்பிய கடித்த்தில், பள்ளி நிர்வாகம் 1989ம் ஆண்டு, தரைத்தளத்தோடு சேர்த்து மூன்று தளங்கள் கட்ட பள்ளி நிர்வாகம் அனுமதி கேட்டிருந்த்து.ஆனால் அவர்கள் கட்டிடத்திற்காக அனுப்பிய வரைபடத்தில் நீச்சல் குளம் குறித்து எதுவும் இல்லை. கட்டி முடித்த பின்பு நீச்சல் குளத்திற்கான பின்னேற்பு கேட்டு, பள்ளி நிர்வாகம் செய்த மனு, 29.03.2010 அன்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இது குறித்து பள்ளி நிர்வாகம் செய்த மேல் முறையீடு நிலுவையில் உள்ளது என்று குறிப்பிடுகிறார்.
இது வரை எல்லாம் சரிதான்.இதற்குப் பிறகு அந்த பதில் மனுவில், 17.09.2012 அன்று பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியின் பொது மேலாளர் சடகோபன் என்பவர் விசாரிக்கப்பட்டார்.அவர் தனது விசாரணையின் போது, 01.06.2011 நாளிட்ட சுற்ற்றிக்கை ஒன்றை அளித்தார். அந்த சுற்ற்றிக்கையில், Resolved to authorize Mrs.Sheela Rajendra, Trustee and Deputy Dean and Director and Correspondent of PSBB Group of Schools to sign and execute all documents such as agreements with various bodies rendering service or having or entering into contract with the Trust or documents for acquiring movable and immovable assets on behalf of the Trust, all documents for processing with Corporation / CMDA / Government Agencies. This is in addition to the authorization given for signing legal papers”
இது தவிரவும் 01.06.2012 அன்று பள்ளியின் இயக்குநர் ஷீலா ராஜேந்திராவுக்கும் அக்வா ஸ்போர்ட்ஸ் ஏஜென்ட்ஸ் என்ற நிறுவனத்துக்கும் இடையே, நீச்சல் குளத்தை பராமரிப்பது குறித்து ஒப்பந்தம் போட்டுள்ளது. பல்வேறு ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் இயக்குநர் ஷீலா ராஜேந்திராதான் பள்ளி நிர்வாகத்திற்கு பொறுப்பு என்பது தெரிய வந்தள்ளது.இதனால் பள்ளியின் தாளாளர் ராஜலட்சுமி பார்த்தசாரதி இவ்வழக்கில் சேர்க்கப்படவில்லை.இது வரை நடந்த புலனாய்வின் அடிப்படையில் இவ்வழக்கின் பிரிவு 304 (A) விலிருந்து, 304 (2) வாக மாற்றப்பட்டுள்ளது என்ற பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் வாதிட்ட ராதாகிருஷ்ணன், பவர் ஆப் அட்டார்னி விதிகளின் படி, ஒருவர் மற்றொருவருக்கு அதிகாரத்தை வழங்குவதால், அவ்வாறு வழங்கியவரின் பொறுப்பு இல்லாமல் போய் விடாது. பவர் ஆப் அட்டார்னி கொடுத்த காரணத்தாலேயே ராஜலட்சுமி பார்த்தசாரதிக்கு பொறுப்பில்லை என்று கூற முடியாது. மேலும், அரசுத் தரப்பில் கூறியுள்ள பவர் ஆப் அட்டார்னி ஆவணத்திலேயே to authorize Mrs.Sheela Rajendra, Trustee and Deputy Dean and Director and Correspondent of PSBB Group of Schools to sign and execute all documents என்றுதான் உள்ளது. இது ஆவணங்களில் கையெழுத்திடத்தானே ஒழிய, ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் ஷீலா ராஜேந்திராவுக்கு ராஜலட்சுமி பார்த்தசாரதி வழங்கி விட்டார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. இவ்வழக்கில் ராஜலட்சுமி பார்த்தசாரதியை குற்றவாளியாகச் சேர்த்தே ஆக வேண்டும் என்று வாதிட்டார்.
பள்ளி நிர்வாகத்தின் சார்பாக வாதிட்ட பி.எஸ்.ராமன், ஒரு 93 வயது முதியவரை கைது செய்ய வேண்டும் என்று கேட்பது நியாயமில்லை என்றார். அந்த 93 வயது முதியவரை கைது செய்ய வேண்டும் என்று யாருமே கேட்கவில்லையே.. அவரை குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்பது மட்டும்தானே கோரிக்கை… காவல்துறையே வேண்டாம் என்று விட்டால் கூட பி.எஸ்.ராமனே கைது செய்ய வேண்டும் என்று கூறிவிடுவார் போலிருக்கிறது.
இறந்து போன சிறுவன் ரஞ்சன் சார்பாக, மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் வாதாடினார்.
சண்முகசுந்தரம்
காவல்துறையினர் வழக்கின் பிரிவுகளை மாற்றியுள்ளனர். புலனாய்வு நடக்கும் விதம் எங்களுக்கு திருப்திகரமாக உள்ளது என்று கூறினார்.இதைக் கேட்ட தலைமை நீதிபதி எரிச்சலடைந்தார். பின்னர் எதற்காக இந்த மனுவை தாக்கல் செய்தீர்கள்… குழந்தையின் தந்தையை விசாரிக்கவில்லை என்று ஏன் கூறினீர்கள் … விசாரணை முழுமையாக முடிவடையும் வரை காத்திருக்க வேண்டியதுதானே என்று கேட்டார். கடந்த முறை இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது எங்களை விசாரிக்கவில்லை.இப்போது விசாரித்து விட்டனர்.இவ்வழக்கு நடந்து வரும் விதம் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது என்றார்.
உடனே தலைமை நீதிபதி, இவ்வழக்கு நடந்து வரும் விதம் உங்களுக்கு திருப்தி அளிக்கலாம்… ஆனால் எல்லாம் முறையாக நடக்கிறதா என்பது குறித்தே நாங்கள் கவலைப்படுகிறோம் என்றார்.இதையடுத்து இவ்வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இக்கட்டுரையின் இரண்டாவது பத்தியில் குறிப்பிட்டுள்ளபடி அதிர்ச்சி திமுகவின் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பேசியபோது வந்தது. இவ்வழக்கில் திருமதி ராஜலட்சுமி பார்த்தசாரதி குற்றவாளியாகச் சேர்க்கப்பட வேண்டும் என்பதில் மற்ற யாருக்கும் கவலை இருக்கிறதோ இல்லையோ, அக்குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோருக்கு இருக்க வேண்டுமா இல்லையா ? அனுதியே இல்லாமல் ஒரு நீச்சல் குளம்… அந்த நீச்சல் குளத்தில் போதுமான பயிற்சியாளர்கள் இல்லை. சிபிஎஸ்ஈ நிர்வாகமே நீச்சல் பயிற்சி கட்டாயம் இல்லை என்று சுற்ற்றிக்கை அனுப்பியும், நீச்சல் பயிற்சியை கட்டாயமாக்கி அதன் மூலம் வசூல் வேட்டை நடத்தும் ஒரு நிர்வாகம்.அப்படிப்பட்ட நிர்வாகத்தால் தங்கள் அன்புக் குழந்தையை பறிகொடுத்து நிற்கிறார்கள்.அந்த நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவரை காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் ஜெயல்லிதா உள்ளிட்டவர்கள் முயற்சி செய்கிறார்கள்.மோசடியாக விசாரணையை காவல்துறை நடத்துகிறது. இதில் முக்கியக் குற்றவாளியான ராஜலட்சுமி பார்த்தசாரதியை குற்றவாளியாகச் சேரக்க வேண்டுமா வேண்டாமா ? இறந்த சிறுவன் ரஞ்சனின் மரணத்திற்கு அந்த நீச்சல் குளத்தை கழுவுபவனா பொறுப்பு ? இந்த விவகாரத்தில் மற்ற எல்லோரையும் விட, சிறுவன் ரஞ்சனின் பெற்றோர் அல்லவா தீவிரமாக இருக்க வேண்டும் ? அந்த பெற்றோர் சார்பாக ஆஜராகும் திமுகவின் மூத்த வழக்கறிஞர், அதிமுக காவல்துறையின் மோசடியான விசாரணைக்கு சான்றிதழ் கொடுக்கும் அவலம் எங்காவது நடக்குமா ? அதிமுக அரசின் காவல்துறை சிறப்பாக விசாரணை நடத்துகிறது என்றால் திமுகவினர் மீது போடப்படும் வழக்குகளை எதிர்த்து திமுக போராட்டம் நடத்துவது என்… ?
சண்முக சுந்தரத்தின் வாதத்தைப் பார்த்து ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவேயில்லை. அதிகாரம் இருக்கும் துணிச்சலில் பார்ப்பனத் திமிரோடு வழக்கின் போக்கை மாற்றி, போலிக் குற்றவாளிகளை சிக்க வைத்து, தண்டனையிலிருந்து தப்பிக்க ஒரு 93 வயதுக் கிழவி செய்யும் மோசடிக்கு தங்கள் மகனைப் பறிகொடுத்த பெற்றோரே துணை போகும் துரோகத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அந்தப் பெற்றோர்கள், தங்கள் மகன் ரஞ்சனின் மரணத்தை மட்டும் வைத்து இந்த விவகாரத்தைப் பார்கக்கூடாது. இது போல பொறுப்பற்ற முறையில் லாபத்தை மட்டுமே நோக்கமாக வைத்து பள்ளி நடத்தும் அத்தனை நிர்வாகிகளுக்கும் ராஜலட்சுமி பார்த்தசாரதிக்கு கிடைக்கப் போகும் தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும். ஜெயலலிதாவிடம் ஔவையார் விருதை அந்தக் கிழவி தள்ளு வண்டியில் சென்று பூரிப்போடு வாங்குவது போலவே, நீதிமன்றத்துக்கும் தள்ளுவண்டியில் செல்ல வேண்டும்.தள்ளுவண்டி செல்லும் வசதி இருப்பது போன்ற நீதிமன்றத்தில் அந்த வழக்கை தரைத் தளத்திலேயே நடத்த சிறப்பு உத்தரவை பெற்றுத் தர நாங்கள் உதவுகிறோம்.
ரஞ்சன் மரணம் போன்ற மரணங்கள் நிகழாமல் தடுக்க, இந்த நீச்சல் குள மரணத்துக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கபட்டே தீர வேண்டும்.ராஜலட்சுமி பார்த்தசாரதி தலைமயிலான பார்ப்பன அதிகார வர்க்கம், இவ்வழக்கிலிருந்து தப்பிக்க அனைத்து உத்திகளையும் கையாளும்.ராஜலட்சுமி, இது குறித்து சோ விடம் பேசியிருக்க கூடும்.சோ கருணாநிதியிடம் பேசி திமுக குடும்பமான ரஞ்சனின் பெற்றோரிடம் இது குறித்துப் பேச வைத்திருக்கக்கூடும்.அந்த வகையிலேயே வழக்கறிஞர் சண்முக சுந்தரம், நீதிமன்றத்தில் அதிமுக காவல்துறைக்கு நற்சான்று வழங்கியிருக்கக்கூடும்.
ராஜலட்சுமி தன் பார்ப்பன செல்வாக்கால், ரஞ்சனின் பெற்றோரின் வாயை அடைக்கலாம்.அவர்கள் தங்கள் துக்கத்தை மறைத்துக் கொண்டு, தங்கள் மகனின் மரணத்துக்கு அந்த நீச்சல் குளத்தை கழுவுபவனே பொறுப்பு என்று கூட சொல்லலாம்.நாங்கள் இது போன்ற மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சுபவர்கள் அல்ல.எங்கள் கண் முன்னால், தன் மகனைப் பறிகொடுத்து கதறி அழுத அந்த பெற்றோர்களின் முகம் மட்டுமே நினைவில் உள்ளது.
அந்தப் பெற்றோர்களைப் போல வேறு எந்தப் பெற்றோரும் கதறக் கூடாது என்பதே எங்கள் நோக்கம்.ராஜலட்சுமி பார்த்தசாரதி மீது தனிப்பட்ட கோபம் எங்களுக்கும் கிடையாது. ஆனால், பொறுப்பற்ற முறையில் ஒரு பள்ளி நடத்தி, அதில் ஒரு நீச்சல் குளத்தை நடத்தி, ஒரு அற்புதமான குழந்தையை கொலை செய்து விட்டு, முதுமையையோ, சாதியையோ, செல்வாக்கையோ பயன்படுத்தி குற்றவாளி தப்பிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
காவல் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தபின், இந்த வழக்கின் விசாரணை எப்படி நடைபெறுகிறது என்பதைப் பொறுத்து, அந்த வழக்கில் அரசுக்கு உதவியாக எங்களை இணைத்துக் கொள்ளவும் தயங்க மாட்டோம்.
இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரி, ஷீலா ராஜேந்திராவும், ராஜலட்சுமியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி அக்பர் அலி, இவ்வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றும்படி தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்த முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போதாவது, சிறுவன் ரஞ்சனின் பெற்றோர், அந்த வழக்கில் மனுத்தாக்கல் செய்து, கிழவிக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட வேண்டும். ரஞ்சனின் பெற்றோர்களே… பார்ப்பன அதிகார மையத்திற்கு பயந்து அவ்வாறு செய்ய தவறுவீர்களேயானால் உங்கள் மகனின் ஆவி உங்களை மன்னிக்காது.நாளை பல ரஞ்சன்களின் மரணத்துக்கு நீங்களும் காரணமாக இருப்பீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.