செய்தி… துக்கையாண்டி, இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி முன்ஜாமீன் பெற்றார்…
இந்தச் செய்தியை ஒட்டி, துக்கையாண்டிக்காக இந்தப் பாடல் சமர்ப்பணம்..
{youtube}aCqMus86GZA{/youtube}
கற்க கற்க கள்ளும் கற்க
என்று சொன்னான் அவன்
கள்ளும் கற்ற கள்வர் எல்லாம்
மாட்டிக்கொள்ளும் அரண்
நிற்க நிற்க நீர் மேல் நிற்க
கற்றுக்கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றைப்போல
எங்கும் செல்வான் இவன்
பத்திரம் மற்றும் பட்டாவைத்தான் காதலித்தான்
என்றாலும் காக்கிச்சட்டையைத்தான் கைபிடித்தான்
ஜாமீன் மனுவை கையில் வைத்து
எங்கேயும் செல்கின்றான்
பேராசையும் பணத்தாசையும்
கைகோர்த்துக்கொள்ள
அகராதியோ அதை துக்கையாண்டி
என அர்த்தம் சொல்ல
நேர்மையோ.. விசுவாசமோ
இவன் செயலில் இல்லை
மேய்ப்பதில் பின் ஏய்ப்பதில்
இவன் திருட்டுப் பிள்ளை
துக்கையின் நேர்மையைக் கண்டு
ஏமாந்தவர்கள் பலர் உண்டு
துக்கை ஒரு திருடன் என்று
தெரிந்தது உலகம் இன்று
ஊரை அடித்து உலையில் போட்டால்
ஜெயிலும் களியும் நிஜம்தானே
கருணாநிதி நம்ப காமராஜ்
என சேர்ந்துக் கொள்ள
லேன்ட் ப்ரோக்கராய் இவன் மாறினான்
இவன் மனிதன் அல்ல
ஐபிஎஸ் இவன் படித்ததால்
அதிகாரி அல்ல
லஞ்சத்தை இவன் வாங்கினான்
மெல்ல மெல்ல
பண வேட்டைகள் வேட்டைகள் ஆட
இவன் கைகளின் விரல்கள் நீள
அத்தனை பேரையும் ஏய்க்க
கடைசியில் சவுக்கிடம் சிக்க
அய்யா சாமி விடு என்றாலும்
வசமாய் ஆப்பு வைத்தானே…
கற்க கற்க கள்ளும் கற்க
என்று சொன்னான் அவன்
கள்ளும் கற்ற கள்வர் எல்லாம்
மாட்டிக்கொள்ளும் அரன்
நிற்க நிற்க நீர் மேல் நிற்க
கற்றுக்கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றைப்போல
எங்கும் செல்வான் இவன்