பொதுத்துறை வங்கிகளுக்கு கிங்ஃபிஷர் விமான நிறுவனம் தர வேண்டிய கடன் பாக்கி மட்டும் 8000 கோடி. இந்த 8000 கோடியும், நமது வரிப்பணம்.
கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு விட்டதால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இன்று வேலையிழந்து தெருவில் நிற்கிறார்கள்.
கடனைத் திருப்பிச் செலுத்தமுடியாததால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் விதார்பாவில் தற்கொலை செய்து கொள்ளும் ஒரு நாட்டில், 8000 கோடி கடனைச் செலுத்தாத பொறுக்கிகளின் காலை நக்கிக் கொண்டிருக்கிறது அரசு.