சரத்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பினார் உதயக்குமார்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழுவின் தலைவர் சரத் குமார் நடத்தும் வாரப் பத்திரிக்கை மீடியா வாய்ஸ். இந்தப் பத்திரிக்கையில் “வேண்டும் கூடங்குளம்… நெருக்கம் தலைவர்கள்.. நொறுங்கும் உதயக்குமார்”என்ற தலைப்பில் ஒரு கட்டுரை 20.10.2012 தேதியிட்ட இதழில் வெளிவதிருந்தது. இந்தக் கட்டுரையில் உதயக்குமாரை மிரட்டும் வகையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளார். இளங்கோவன் தனது பேட்டியில் “ஏதோ பின்புலத்தோடு திட்டத்தை எதிர்த்துக் கொண்டிருக்கும்” உதயக்குமாரை ஜனநாயக முறையில் அடக்க முடியாது. நேதாஜி பாதையில் சென்றுதான் அடக்க முடியும். அடக்கியே தீர வேண்டும்” என்று பேசியுள்ளார். இவரைப்போலவே பேசியுள்ள தமிழருவி மணியன், உதயக்குமார் சந்தேகத்துக்குரியவர் என்று அவதூறான வகையில் பேசியுள்ளார்.
இவரைப் போலவே பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும், உதயக்குமார் ஒரு தேசத்துரோகி என்று பேசியுள்ளார். இது போன்ற அவதூறான செய்தி வெளியட்டதால், உதயக்குமாரை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் இக்கட்டுரையை வெளியிட்டதாக, சரத்குமார் மற்றும் அப்பத்திரிக்கையின் ஆசிரியர் ஏ.என்.சுந்தேரேசன், ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழருவி மணியன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீதும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் உதயக்குமார்.