மருத்துவர் ராமதாஸின் மகள் வயிற்றுப் பேரன் முகுந்தனின் திருமணம் அக்டோபர் 10 அன்று சென்னையில் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு வரதட்சிணையாக ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றும், போயஸ் தோட்டத்தில் சொகுசு பங்களா ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்ணின் தந்தை செல்லா, காங்கிரஸ் பிரமுகர் ராயபுரம் மனோவின் சகோதரர் என்பதும், சமீபத்தில் கைது சிபிஐயால் கைது செய்யப்பட்ட வருவாய்ப் புலனாய்வுத் துறை இயக்குநர் ராஜனின் நெருங்கிய நண்பர் என்பதும் கூடுதல் செய்தி… இந்தத் திருமணத்துக்கு அனைத்து ஜாதிக் கட்சித் தலைவர்களையும் நேரடியாக சென்று அழைத்த மருத்துவர் அய்யா, இவர்கள் அனைவரையும் வைத்து ஒரு கூட்டணி அமைத்து, இதன் மூலம் பாராளுமன்றத் தேர்தலில் தனது பேரம் செய்யும் பலத்தை அதிகரிக்க முயன்று வருகிறார் என்கிறது பா.ம.க வட்டாரங்கள். தர்மபுரி, அரக்கோணம், மற்றும் ஆரணி தொகுதிகளை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று ராமதாஸ் தீவிர முயற்சியில் உள்ளதாகத் தெரிகிறது. அப்படியா… ? ரோல்ஸ் ராய்ஸ் காரில் போய் சமூக நீதியைக் காப்பாற்றுவாரோ…