2014 பாராளுமன்றத் தேர்தலில் எப்படியாவது கரை சேர வேண்டும் என்று இப்போதே கணக்குப் போட ஆரம்பித்துள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள். சென்ற முறை நூலிழையில் வெற்றி பெற்றது போல இப்போது நடக்கக் கூடாது என்பதால், இம்முறை பாண்டிச்சேரி தொகுதியிலிருந்து போட்டியிடலாம் என்று ப.சிதம்பரம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதை முன்னிட்டு, பாண்டிச்சேரியில் புதிய வங்கிக் கிளைகள் திறக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தகவலை கேள்விப்பட்ட, நாராயணசாமிக்கு இப்போதே வயிற்றில் புளி கரைத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் வெறும் நாராயணசாமி நடுத்தெரு நாராயணசாமி ஆகி விடுவோமோ என்ற கலக்கத்தில் இருக்கிறாராமே.. அப்படியா ?