ஈமுக் கோழி மோசடி விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள அதன் இயக்குநர் குரு, அவர் தொந்தரவில்லாமல் தொழில் நடத்த பலருக்கு கப்பம் கட்டி வந்துள்ளார். காவல்துறையினர், யார் யாருக்குக் கப்பம் கட்டியுள்ளார் என்பதைத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், திமுக முன்னாள் அமைச்சர் என்கேகேகேபி ராஜாவுக்கு இரண்டு கோடி ரூபாய் கொடுத்த விஷயத்தை, காவல்துறையினரிடம் வாக்குமூலமாக கொடுத்துள்ளார். ராஜாவை இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்து, அவரை விரைவில் கைது செய்யத் திட்டமிட்டுள்ளது காவல்துறை.