தன் மகனை கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றுவதற்காக மு.க.அழகிரி அதிமுகவுக்கு தூது விட்டுள்ளார். கைது நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும், தன் குடும்பத்தை மேலும் சிக்கலில் ஆழ்த்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தகவலை அறிந்துதான் ஸ்டாலின் அழகிரியை நேராகச் சந்தித்து, அப்படி எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால், துரை தயாநிதியை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்று மதுரை காவல்துறை அதிகாரிகளை கடிந்து வரும் ஜெயலலிதா, காங்கிரஸில் உள்ள தனது தொடர்புகளின் மூலம், அழகிரிக்கும் நெருக்கடி கொடுத்து வருகிறார். துரை தயாநிதியின் கைது, திமுகவில் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ஜெயலலிதா நம்புகிறார்.