நில அபகரிப்பு வழக்கில் துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், துக்கையாண்டிக்கு புதுத் தலைவலி கிளம்பியிருக்கிறது. 24 ஆயிரம் சதுர அடியில் மூன்று நீச்சல் குளங்களோடு அபகரிக்கப்பட்ட நிலத்தில் பனையூரில் பிரம்மாண்டமான வீடு கட்டியுள்ள துக்கையாண்டி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை பூர்வாங்க விசாரணையை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.