இன்று சென்னையின் பிரதான சாலைகளில் ஒன்றான ருக்மணி லட்சுமிபதி சாலை, மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற கோரிக்கையோடு, சென்னையில் மறுமலர்ச்சி தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி மற்றும் பல்வறு தமிழ் தேசிய அமைப்புகள் தலைமைச் செயலக முற்றுகையிடும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அக்டோபர் 29 அன்று முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்த உடனேயே, காவல்துறை களத்தில் இறங்கியது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு இரவுகளில் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னையை நோக்கி வருகை தந்த ஏராளமானவர்களை காவல்துறை கைது செய்து, சட்டவிரோதமாக அடைத்து வைத்தது. நேற்று இரவு கிழக்குக் கடற்கரைச் சாலையில், போராட்டத்துக்காக வருகை தந்த ஏராளமான பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டு அந்த மக்கள் கைது செய்யப்பட்டார்கள். இன்று காலை சென்னை நகர் முழுக்க, பல்வேறு இடங்களில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். அரசின் இத்தனை தடைகளையும் மீறி இன்று ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அமைந்திருந்த ருக்மணி லட்சுமிபதி சாலை மக்கள் வெள்ளத்தில் நிறைந்தது. அந்தப் போராட்ட காட்சிகள்….
]
கண்ணீர் புகைக் குண்டோடு தயாராக இருக்கும் காவலர்
சன் டிவி செய்தியாளர் ராம செல்வராஜ்…
அய்யய்யோ…. இவ்ளோ கூட்டம் வந்துடுச்சே… என்ன பண்றது ?