பரமக்குடியில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவு தினம் மற்றும் பிறந்த தினம் அனுசரிக்கப்படும் குருபூஜையை ஒட்டி நடந்த வன்முறையில் இது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை நான்கு எனத் தெரிகிறது. மருத்துவமனையிலும் பலர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர்.
கடந்த ஆண்டு பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் நினைவு நாளை ஒட்டி நடந்த வன்முறையில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஆறு தலித்துகள் கொல்லப்பட்டனர்.
இம்முறை கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் காவல்துறை நடவடிக்கையால் கொல்லப்படவில்லை. தலித்துகளால் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு இமானுவேல் சேகரன் குரு பூஜையில் ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு நடந்த தேவர் குரு பூஜையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவரச் செய்யப்பட்டு அமைதியான முறையில் அவ்விழா நடந்தேறியது.
இம்முறை இமானுவேல் சேகரன் நினைவு நாளின்போது, வன்முறையை எதிர்ப்பார்த்து காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அப்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்கப்பட்ட நிலையில் தேவர் குரு பூஜையில் ஏற்பட்ட வன்முறை பல உயிர்களை பலி வாங்கியுள்ளது.
தேவர் குரு பூஜையில் கலந்து கொண்டு 13 பேரை ஏற்றிச் சென்று திரும்பிய வேன் ஒன்று தலித்துகள் அதிகம் குடியிருக்கும் பகுதிக்குள் தவறுதலாக நுழைந்துள்ளது. அந்த வாகனம் நுழையும் முன்பே, கிராம நிர்வாக அலுவலர், அவ்வழியே செல்ல வேண்டாம் என்று தடுத்துள்ளார். ஆனால், யாரோ ஒருவரை ஏற்றிக் கொள்ள வேண்டும் என்பதால், கிராம நிர்வாக அலுவலரின் எச்சரிக்கையையும் மீறி அந்த கிராமத்துக்குள் நுழைந்துள்ளனர். அடுத்த கிராமத்துக்குள் நுழைந்தபோது, அந்த கிராமத்தினர் உள்ளே செல்ல வேண்டாம் என்று தடுத்துள்ளனர். வேன் டிரைவர் அதையும் மீறி உள்ளே சென்றுள்ளார். மூன்றாவதாக ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது அந்த வேன் கல்வீசி தாக்கப்பட்டுள்ளது. வேனில் இருந்தவர்கள் உயிருக்குப் பயந்து தப்பி ஓடியுள்ளனர். வேனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வேன் டிரைவர் வேனோடு தப்பிக்க முயன்றபோது அங்கிருந்த கும்பல், அந்த வேன் டிரைவரை கல்லாலும், உருட்டுக்கட்டைகளாலும் தாக்கியதில் விருதுநகர் மாவட்டம் வேலாங்குடியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற டிரைவர் அந்த இடத்திலேயே இறந்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்த வீரமணி மற்றும் மாலைக்கண்ணன் என்ற இளைஞர்கள் இதே போல வழி தவறி, தலித்துகள் பெரும்பான்மையாக இருக்கும் பொன்னையாபுரம் என்ற கிராமத்துக்குள் இரு சக்கர வாகனத்தில் நுழைந்தபோது, அவர்கள் இருவரையும் வழி மறித்த கூட்டம், அவர்களையும் அடித்தே கொன்றிருக்கிறது.
அன்று இரவே, மதுரைக்கு அருகே தேவர் குரு பூஜைக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த வாகனம் ஒன்றை வழிமறித்த கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கியதில் பலர் படுகாயமடைந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக மறுநாள் நடந்த வன்முறையில், தலித்துகள் குடியிருக்கும் பகுதிக்குள் நுழைந்த 40 பேரைக் கொண்ட தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள், முதல் நாள் நடந்த சம்பவத்துக்கு பழி வாங்கும் வகையில் காட்டுக்குள் விறகு வெட்டிக் கொண்டிருந்த குலாளிக்குளம் பகுதியைச் சேர்ந்த ராமர், கருப்பன் ஆகியோரைத் தாக்கியுள்ளனர். அணைக்குளம் பகுதியில், இதே போல நடந்த தாக்குதலில் சரவணன், முத்துமாரி, பூமி, வடுகன் மற்றும் கருப்பையா ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
நடந்த இந்த சம்பவங்கள் மனசாட்சி உள்ளோர் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியது. இதில் இரு வேறு கருத்து இருக்கவே முடியாது. வழி தவறி வந்த ஒரு வேன் ட்ரைவரை கல்லாலும், கட்டையாலும் அடிப்பவர்களை எப்படி மனிதர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியும் ? இரு சக்கர வாகனத்தில் வழி தவறி வந்தவர்களை கல்லால் அடித்துக் கொல்பவர்களை மன்னிக்க முடியுமா ? வேனில் வந்தவர்களை கல்லால் அடித்து வழி மறித்து, அந்த வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றுபவர்களை மிருகங்கள் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல முடியும் ?
இந்தப் படுகொலைகளை கண்டிக்காமல் எப்படி இருக்க முடியும் ? இந்த வன்முறைச் சம்பவங்களை மார்க்சிஸ்ட் கட்சியும், மறுமலர்ச்சி திமுகவும் மட்டுமே கண்டித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பரமக்குடியில் காவல்துறையினரால் 6 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டபோது எழுந்த கண்டனக் குரல்கள் தற்போது நடந்துள்ள இந்த வன்முறைகளைக் கண்டிக்காமல் மவுனம் சாதிப்பது மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.. சாதி என்னவாக இருந்தாலும் பலியானது மனித உயிர்கள்தானே… ? இந்த வன்முறைகளை மற்ற எல்லோரையும் விட முதலில் கண்டித்திருக்க வேண்டியது தலித் கட்சிகளே… விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் புதிய தமிழகத்தின் தலைவர் இதை முழு மனதோடு கண்டித்திருக்க வேண்டும். கண்டிக்காமல் விட்டது மிக மிக வருந்தத்தக்கது. செனாய் நகர் 13வது தெருவில் குப்பை வாராமல் இருந்தால் கூட கருத்து சொல்லும் கருணாநிதி இவ்விவகாரத்தில் கனத்த மவுனத்தைக் கடைபிடிக்கிறார்.
அரசியல் அமைப்புக்களைத் தாண்டி, மற்ற மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் இந்த வன்முறையை முழு மனதோடு கண்டிக்காதது வருந்தத்தக்கது.
கடந்த ஆண்டு வன்முறைக்கும், இந்த ஆண்டு வன்முறைக்கும் வித்தாக இருந்தது, இமானுவேல் சேகரன் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் என்ற இரு தலைவர்களின் நினைவு நாள் விழாக்கள். இந்த இரு தலைவர்களின் நினைவு நாள், குரு பூஜை என்ற பெயரில் அனுசரிக்கப்படுகிறது. ஒரு தலைவரின் நினைவு நாள் நிகழ்ச்சி என்பது வழக்கமாக அவர் படத்துக்கு மாலை அணிவிப்பது, அவர் செயல்பாடுகளை நினைவு கூறுவது என்ற அளவில்தான் வழக்கமாக அமையும். ஆனால் இமானுவேல் மற்றும் முத்துராமலிங்கத்தின் நினைவு நாள் விழாக்கள் அனுசரிக்கப்படும் முறையை நேரில் சென்று பார்ப்பவர்களுக்கு சிரிப்புதான் வரும்.
பால்குடம் எடுப்பது, முளைப்பாரி கட்டுவது, காவடி எடுப்பது, மொட்டையடிப்பது, அலகு குத்துவது என்ற இந்த இரு சமூகத்தினர் செய்யும் காமெடிக்கு அளவே இல்லை. வருடந்தோறும் முதலில் வருவது இமானுவேல் சேகரன் நினைவு தினம் என்பதால் அவர் நினைவு தினத்துக்கு பரமக்குடி நகரையே மறைக்கும் அளவுக்கு ப்ளெக்ஸ் போர்டுகள் வைக்கப்படும். இமானுவேலை கமாண்டோ படத்தில் வரும் அர்னால்ட் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து ப்ளெக்ஸ் போர்டுகள் வைப்பார்கள். இந்த தடபுடலான ஏற்பாடுகளை தேவர் சமூகத்தினர் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பார்கள். தலித்துகள் 400 ப்ளெக்ஸ் போர்டுகள் வைத்தால், தேவர் குரு பூஜை சமயத்தில் குறைந்தது 401ஆவது வைக்க வேண்டும். தலித்துகள் 300 பால்குடங்கள் எடுத்தால், தேவர் குரு பூஜை சமயத்தில் 301ஆவது எடுக்க வேண்டும்.
இந்த இரண்டு விழாக்களும், இந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை விட, இரு சமூகங்களும் முண்டா தட்டுவதற்கே பயன்படுகிறது. பள்ளன் பெருசா… தேவன் பெருசா…. யார் ஆண்ட சாதி… யார் மன்னர் பரம்பரை… இதில்தான் இவர்களுக்குள் போட்டியே.. தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் ஆகிய இரண்டு விழாக்களையும் தங்கள் பலத்தை பறைசாற்றும் விழாக்களாக இரு சமூகங்களும் கருதுவதால், விழா நடக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே வாகனங்களை வாடகைக்கு அமர்த்துவது, இதற்காக நிதி வசூலிப்பது, ஆயிரக்கணக்கில் ஆட்களைத் திரட்டுவது என்று இரு சமூகங்களுமே முண்டா தட்டும் வேலைவில் இறங்குகின்றன.
பரமக்குடி உண்மை அறியும் குழுவோடு பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தெரிந்த ஒரு உண்மை, இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும், இவர்கள் நாகரீக உலகத்திற்கு வரப்போவதில்லை என்பதே. இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும், கடுமையான கொலை வெறியோடு இருக்கிறார்கள். இந்த ஆண்டு, இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் ஒரு கொலை நடந்தால், அடுத்த ஆண்டு தேவர் நினைவு நாளில் ஒரு பிணம் விழுந்தே ஆக வேண்டும் என்பதை சர்வ சாதாரணமாக விவாதிக்கிறார்கள். இதே போல தேவர் சமூகத்திலும், போன வருசம் நம்ப ஆளு ஒருத்தன வெட்டிட்டானுவ… இந்த வருசம் அவங்கள்ள ஒருத்தன போட்டே ஆகணும் என்று கருவிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சமூகம் பெரும்பான்மையாக உள்ள கிராமத்திற்குள், மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நுழையவே பயப்படுகிறார்கள். இந்த பயம் விழா நடக்கும் சமயங்களில் மட்டுமல்ல… விழா நடக்காத சமயங்களில் கூட பயப்படுகிறார்கள். ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மற்ற சமூகத்தினர் அதிகம் இருக்கும் ஊருக்குள் செல்வதைத் தவிர்க்கிறார்கள்.
இந்த இரு சமூகத்தினரின் கொலை வெறிக்கு யார் சிக்கினாலும் அவர்களைக் கொன்று பெருமை கொள்கிறார்கள். இப்படி அந்த சாதியில் யாராவது ஒருவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்ததே, 9 செப்டம்பர் 2011 அன்று நடந்த 16 வயதுச் சிறுவன் பழனிக்குமாரின் கொலை. நாடகம் பார்த்துக் கொண்டு திரும்பிய பழனிக்குமாரை, தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்துக்காக வெட்டிக் கொன்றனர் தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள். தேவர்கள்தான் இப்படி அரக்கத்தனமாக நடந்து கொள்கிறார்கள், தலித்துகள் யோக்கியமானவர்கள் என்று பொருள் இல்லை. இந்தக் கொலைக்குப் பழி வாங்க, அவர்கள் 12 வயதுச் சிறுவனை கொலை செய்யத் தயங்கமாட்டார்கள்.
அப்பகுதி மக்களின் மனப்பாங்கு, ஆப்கானிஸ்தானில் தவறு செய்தால் கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனையை வழங்கும் தாலிபான்களின் மனநிலைக்கு சற்றும் குறைந்ததல்ல.
சரி.. பரமக்குடி, மற்றும் அந்தப் பகுதியில் உள்ளவர்கள்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்தால், சமூக வளைத்தளங்களிலும், இந்த இரு சமூகத்தினரின் வன்மமும், வெறியும் அப்படியே தொடர்கிறது. முகநூலில் பதிவு செய்யும் பெயரிலேயே மள்ளர் என்றும், தேவேந்திரர் என்றும், தேவர் என்றும், முக்குலத்துச் சிங்கம் என்றும், பதிவு செய்கிறார்கள். அவ்வாறு பதிவு செய்தவர்களின் பக்கங்களில் சென்று பார்த்தால், எதிர் சமூகத்தை கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டி மகிழ்கிறார்கள். ஒரு சமூகத்தவர், மற்ற சமூகத்தை இழிவு படுத்தியோ, அல்லது அச்சமூகத்தின் தலைவரை இழிவு படுத்தியோ ஏதாவது எழுதினால், உடனே அவரின் நண்பர்களாக இருக்கும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதில் பின்னூட்டம் இடுவது, லைக் போடுவது, என்று பரமக்குடி வன்மம் சற்றும் குறையாமல் இணையத்தில் தொடர்வது கவலையளிக்கிறது. சாவுக்குப் பயந்தவன் இல்லடா என்ற முகநூல் பக்கத்தில் இவர்கள் ஏழு பேரைக் கொன்றால், பதிலுக்கு 700 பேரைக் கொல்ல வேண்டும் என்று விவாதிக்கிறார்கள். ஒரு தனியார் நிறுவனத்தின் இயக்குநராக இருக்கும் 58 வயது நபர் ஒருவர் இந்த வன்முறைக்குப் பின்னால், கிறித்துவ தேவாலயங்களும், மசூதிகளும் தலித்துகளை இயக்குகின்றன என்று கருத்து தெரிவிக்கிறார். ஆர்ச்சிட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கும் ஒருவர் “வேற ஒன்னும் பண்ண வேணாம் ப்ரென்ட்ஸ்.. இந்த பரமக்குடியில இருக்கற அத்தன எஸ்சிய மட்டும் கொன்னா போதும். அடுத்து ஒரு பய நம்ம கிட்ட வால ஆட்ட மாட்டான். ஏன்னா பரமக்குடில இருக்கற எஸ்.சிதான் ஓவரா ஆடுறானுங்க. எங்க ஊர் சைட் எஸ்.சி இருக்கற எடமே தெரியாம இருக்காங்க. பரமக்குடில எஸ்.சி ஆள விட்டது தப்பு”
இணையதளத்திலும் தொடரும் இந்த இரு சமூகத்தினருக்கிடைய உள்ள தீராத பகை, இந்த இரு சமூகத்தினரையும் என்றுமே திருத்த முடியாது என்றே எண்ண வைக்கிறது.
இந்தக் கொலை மற்றும் கொலை வெறிக்கெல்லாம் வடிகாலாக அமைவது இமானுவேல் சேகரன் மற்றும் தேவர் குரு பூஜைகளே. இந்த விழாக்கள் இல்லாவிட்டால் இந்த இரு சமூகத்தினரும், கட்டிப் பிடித்துக் கொண்டு சகோதரத்துவத்தோடு வாழ்வார்கள் என்று பொருள் இல்லை. இப்படியே தனித்தனி தீவாகத்தான் இருப்பார்கள். ஆனால், இந்த இரு விழாக்களும், இந்த இரு சமூகத்தினரையும் தவிர்த்து, மற்ற அனைத்து சமூகத்தினரையும் அச்சத்திற்குள்ளாக்குவதோடு மட்டுமல்ல, காவல்துறையின் பல நாட்கள் வேலையை அபகரித்துக் கொள்கிறது.
இந்த விழாக்கள் நடக்கும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் வந்தாலே காவல்துறை மற்றும் ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்கள் பதற்றமடைகின்றன. காவல்துறையினர், மாதக்கணக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் திட்டமிட வேண்டியதாக இருக்கிறது. இந்த விழாக்கள் நடக்கும் இரு தினங்களும், பரமக்குடி மற்றும் சுற்றுவட்டாரங்களில் போக்குவரத்து நிறுத்தப்படுகின்றன. கடைகள் அடைக்கப்படுகின்றன. மக்களின் வரிப்பணம் இந்த இரு விழாக்களை அசம்பாவித சம்பவங்கள் இல்லாமல் தடுத்து நிறுத்துவதிலேயே செலவிடப்படுகிறது.
இந்த இரண்டு விழாக்களையும் தடை செய்தால்தான் என்ன ? வானம் இடிந்து விழுந்து விடுமா ? அதிகபட்சம், இரண்டு சமூகத்தினரும் கொஞ்ச நாளைக்கு கூச்சல் போடுவார்கள். வேறு என்ன செய்வார்கள்… ?
1997க்கு முன்பு வரை, தமிழகத்தில் மாவட்டங்களின் பெயர்கள், தலைவர்களின் பெயரிலேயே அமைந்திருக்கும். செங்கல்பட்டு எம்.ஜி.ஆர் மாவட்டம், திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் என்றே அழைக்கப்படும். அதே போல, போக்குவரத்துக் கழகங்களும், தந்தை பெரியார் போக்குவரத்துக் கழகம், நேசமணி போக்குவரத்துக் கழகம், தீரன் சின்னமலை போக்குவரத்துக் கழகம் என்றே அழைக்கப்படும்.
1997ல், வீரன் சுந்தரலிங்கம் பெயரில் ஒரு போக்குவரத்துக் கழகம் அமைக்கவேண்டும் என்றும், திருவாரூர் மாவட்டத்தை ஏ.டி.பன்னீர் செல்வம் பெயரில் அமைக்க வேண்டும் என்றும், ஒரு பிரச்சினை உருவாகி, அது பெரியக்குளம் தேனி மாவட்டங்களில் வகுப்புக் கலவரத்தை உருவாக்கியது. தலித்துகளும், தேவர்களும் சராமாரியாக அடித்துக் கொண்டனர். இந்த பெயர் வைக்கும் படலம், தீராத பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த கருணாநிதி, ஒரே அரசாணையில், போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்த தலைவர்கள் பெயர்களை நீக்க உத்தரவிட்டார். அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்குப் பிறகு மாவட்டங்கள் ஊர்ப்பெயரிலும், போக்குவரத்துக் கழகங்கள் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
அதன் பிறகு, இந்தப் பெயரை வை, அந்தப் பெயரை வை என்று எந்தப் பிரச்சினையும் எழவில்லை. வானமும் இடிந்து கீழே விழுந்து விடவில்லை. கருணாநிதி இப்படி ஒரு சீர்திருத்தத்தைச் செய்தார் என்றால், ஜெயலலிதா, தமிழகத்தில் முக்குலத்தோரின் ஆதிக்கம் ஓங்கும் வகையிலான வேலையைச் செய்தார். 1991 ஜெயலலிதா ஆட்சி என்றே நினைவு. தமிழகத்தில் மூன்று சாதிகளாக இருந்த கள்ளர், மறவர், அகமுடையவர் ஆகிய மூன்று சாதியினரும் இனி முக்குலத்தோர் என்று அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார். அறிவித்ததோடு நிற்காமல், காலங் காலமாக போக்குவரத்து நெருக்கடி மிகுந்த அண்ணா சாலையில் தேவர் சிலையை அமைத்து, தன் உடன் பிறவா சகோதரி, சசிகலாவின் கோரிக்கையை நிறைவேற்றினார்.
அன்று முதல் ஜெயலலிதாவையும், ஜெயலலிதா அரசையும் தேவர் சாதியினருக்கான அரசாகவே பொதுமக்கள் பார்க்கிறார்கள். ஜெயலலிதாவின் தொடர்ந்த செயல்பாடுகளும், இதை ஊர்ஜிதப்படுத்துவதாகவே உள்ளது.
2011 இமானுவேல் சேகரனின் நினைவு நாளுக்கு முதல் நாள் ஒரு 15 வயதுச் சிறுவன் கொலை செய்யப்பட்டபோது, அந்தக் கொலைக்காக மிகவும் மனம் வருந்திய ஜெயலலிதா, அறிவித்த உதவித் தொகை வெறும் ஒரு லட்ச ரூபாய். உண்மை அறியும் குழுவோடு பரமக்குடி சென்றிருந்தபோது, அந்தச் சிறுவன் வீட்டுக்கு செல்ல முடிந்தது. அந்தக் குடும்பம், தினக்கூலி வேலைக்குச் செல்லும் ஏழைக் குடும்பம்.
அதே போல இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தன்று முதலில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட 3 பேர் இறந்தவுடன், ஜெயலலிதா அறிவித்த நிவாரணத் தொகை என்ன தெரியுமா ? ஒரு லட்ச ரூபாய். மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகே இந்த நிவாரணத் தொகை 5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
இந்த ஆண்டு பரமக்குடியில் நிகழ்ந்த வன்முறையில் இறந்தவர்களுக்கு ஜெயலலிதா தலா 5 லட்சம். பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாய், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கியதோடல்லாமல், இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கி உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா. இது வரவேற்கத்தக்கது என்றாலும், இதே சலுகையை ஜெயலலிதா, இறந்த தலித்துகளின் குடும்பத்துக்கும் வழங்கியிருக்க வேண்டுமா இல்லையா ?
நேற்றைய வன்முறையில் இறந்தவர்களின் உயிரை விட, கடந்த ஆண்டு வன்முறையில் இறந்தவர்களின் உயிர் எந்த அளவுக்கு தாழ்ந்து போனது… ? 15 வயது தலித் சிறுவனின் உயிர் ஒரு லட்சம்… ஒரு தேவர் சாதி மனிதனின் உயிர் 5 லட்சமா ? இறந்தவர்களுக்கான நிதியை ஜெயலலிதா ஜெயராம் சம்பாதித்து வைத்த சொத்திலிருந்தா கொடுக்கிறார்… ? மக்கள் வரிப்பணம்தானே.. ? பிறகு ஏன் பாரபட்சம் ?
ஒரு முதலமைச்சர் எல்லா சாதி மக்களையும் சமமாக பாவிக்க வேண்டாமா ? இது ஜெயலலிதா தேவர் சாதியினரின் ஆதரவாளர் என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்தவில்லையா ? அதிமுக தொடங்கிய காலத்திலிருந்தே தலித்துகள் அதிமுகவைத் தொடர்ந்து ஆதரித்து வந்திருக்கிறார்கள் என்பதை ஜெயலலிதா உணராமல் போனாரா… அல்லது, அவர்களுக்கு அதிமுகவை விட்டால் வேறு வழியே இல்லை என்ற இறுமாப்பா என்று தெரியவிலை.
ஆட்சியாளர்களின் இது போன்ற பாரபட்சமான நடவடிக்கைகளால்தான், சாதிக்கலவரங்கள் உருவாகின்றன. ஆட்சியாளர்கள் ஆதிக்க சாதியின் பக்கம் நிற்கிறார்கள் என்பதை உணர்ந்த தலித்துகள் அச்சத்தோடு வாழ்கிறார்கள். பரமக்குடியில் ஆறு பேர் இறந்ததற்கு காரணமான துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட ஒரு அதிகாரியைக் கூட பணியிட மாற்றம் கூட செய்யாமல் ஆதரித்து வரும் ஜெயலலிதாவை தேவர் சாதியின் பிரதிநிதியாகவே பார்க்க வேண்டியுள்ளது.
ஆட்சியாளர்கள் ஆதிக்க சாதியினரின் பக்கமே நிற்பதால்தான் மனித உரிமை அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் தலித்துகளின் பக்கம் நிற்கிறார்கள்.
தான் ஒரு சாதியினருக்கு மட்டுமான முதலமைச்சர் அல்ல… அனைத்து மக்களுக்குமான முதலமைச்சர் என்பதை ஜெயலலிதா நிரூபிக்க வேண்டிய நேரம் இது. சற்றும் யோசிக்காமல், இரண்டு குரு பூஜைகளையும் ஜெயலலிதா உடனடியாக தடை செய்ய வேண்டும். முளைப்பாரி கட்டி, பால்குடம் எடுக்கும் அறிவிலிகள் அதைத் தங்கள் வீட்டுக்குள்ளேயே செய்து கொள்ளட்டும். பொது இடத்திற்கு வந்து அனைவரின் நிம்மதியையும் கெடுக்க வேண்டாம். அரசியல் மாச்சர்யங்களை மறந்து ஜெயலலிதா கருணாநிதியின் நடவடிக்கைகளைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். கருணாநிதி 1997ல் எடுத்த நடவடிக்கை, பல சாதிக் கலவரங்களை தடுத்திருக்கிறது என்பதை ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும். வாக்கு வங்கியை மனதில் வைத்தோ, முக்குலத்தோரின் நெருக்கடிக்குப் பயந்தோ ஜெயலலிதா, இந்த கேலிக்கூத்தை தொடர அனுமதிப்பாரேயானால், ரத்தத்தில் வாக்குகளை அறுவடை செய்தவராகவே ஜெயலலிதா கருதப்படுவார்.
அய்யா சவுக்கை தயவு செய்து எங்களை தலித் என்று சொல்லாதீர் நாங்கள் தேவேந்திர்
பள்ள தேவ்டியா மகன் என்று அழைக்கவும்