அன்பான பத்திரிக்கையாளர்களே….
சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவங்களை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். பத்திரிக்கையாளர்களை தகாத முறையில் பேசிய விஜயகாந்த் தான் பேசியதற்கு இந்நாள் வரையில் வருத்தம் தெரிவிக்கவில்லை. பல முறை முதலமைச்சர்களாக இருந்த ஜெயலலிதாவும், கருணாநிதியுமே, பத்திரிக்கையாளர்களை இப்படி அவமரியாதையாகப் பேசி, அடிக்கக் கை ஓங்கியதில்லை. ஆனால், நேற்று அரசியல் கட்சித் தொடங்கி, திமுக எதிர்ப்பலை காரணமாக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜயகாந்த், பத்திரிக்கையாளர்களை இப்படி அவதூறாகப் பேசி, அதற்கு வருத்தம் தெரிவிக்கவும் மறுப்பது, கடும் கண்டனத்திற்குரியது.
நமது கண்டனத்தை பதிவு செய்வதற்கு, அன்புத் தோழர்கள், நாளை காலை 11 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் கட்சி அலுவலகம் முன் கூடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.