சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவை விட அதிகமாக சொத்து சேர்த்து விட்டார், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் என்று ட்விட்டரில் எழுதிய, பாண்டிச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் ரவி என்பவரை, கார்த்தி சிதம்பரம் ஈமெயிலில் அனுப்பிய புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளது பாண்டிச்சேரி காவல்துறை. விடியற்காலை 5 மணிக்கு வீட்டிலிருந்து கைது செய்யப்பட்ட அவரை, நீதிபதி சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார்.
இது தொடர்பாக நாடெங்கும் பெரும் கொந்தளிப்பு எழுந்தது. இது மிகப்பெரிய அதிகார துஷ்பிரயோகம் என்று விமர்சனங்கள் எழுந்தன.
கார்த்தி சிதம்பரத்தின் புகார் குறித்து கருத்துக் கூற, பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி மறுப்பு. இன்று பாண்டிச்சேரி முதலமைச்சரை சந்தித்து, கார்த்தி சிதம்பரத்தின் புகார் மீது மிக மிக விரைவாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ரங்கசாமியின் கருத்து கேட்பதற்காக தேசிய ஊடகம் ஒன்று பாண்டிச்சேரிக்கு சென்று முதல்வரை சந்தித்துள்ளது. கேமராவை அணையுங்கள் என்று அந்த நிருபரிடம் கெஞ்சியுள்ள ரங்கசாமி, இறுதி வரை கார்த்தி சிதம்பரத்தின் புகார் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.
செய்தியாளரிடம் இருந்து தப்பித்து, தலைமைச் செயலகம் சென்ற அவர், காவலர்களை விட்டு, அந்தச் செய்தியாளரை விரட்டி அடிக்கச் சொல்லியுள்ளார்…
ரங்கசாமி சார்…. நீங்கள் பாண்டிச்சேரி முதல்வராக இருப்பதற்கு பதிலாக, ஏன் கார்த்தி சிதம்பரத்தின் காரை தினந்தோறும் கழுவும் வேலைக்குப் போகக் கூடாது…. காரைக் கழுவி முடித்து விட்டு, கார்த்தியின் உள்ளாடைகளையெல்லாம் துவைத்துக் கொடுத்தீர்களென்றால், கார்த்தி இளவரசர் பெரிய மனது பண்ணி உங்களுக்கு சன்மானம் கொடுப்பார்…. சூதனமா பொழச்சுக்கங்க சார்…