சிபிஐ நடத்தும் ரெய்டுகளால் பலரது டவுசர்கள் கழற்றப் பட்டு வருகின்றன. அவ்வகையில் நேற்று கழற்றப் பட்ட முக்கியமான இரண்டு டவுசர்கள் யாருடையது தெரியுமா ?
முதல் டவுசர் குருமா ராஜ் மற்றும் இரண்டாவது டவுசர் போலிப் பாதிரி ஜகத் கஸ்பர்.
இந்தப் போலிப் பாதிரியின் முகத்திரையை சவுக்கு ஜுலை மாதமே கிழித்தது. அந்தப் பதிவு, சவுக்கு வாசகர்களுக்காக மீண்டும் தனியாக மறு பதிவு செய்யப் படுகிறது.
கடந்த மாதம், ஆ.ராசாவுக்கு ஆதரவாக நடைபெற்ற கருத்தரங்கத்தில் பேசிய போலிப் பாதிரி பேசியதை சற்றே நினைவு படுத்திப் பார்ப்போம்.
காவல்துறை அதிகாரிகளால் அழைத்து வரப்படும் காமராஜ்
‘இந்தப் போலிப் பாதிரி பேசும் போது ஆ.ராசா சமூக நீதிப் போராளி. சமூக நீதியைப் பற்றி ஐந்து மணி நேரம் பேசச் சொன்னாலும் பேசுவார் என்று கூறினார். ஒரு தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது என்பது மிக மிக பாராட்டத் தக்கது என்றார். ஆ.ராசாவை வேட்டை நாய்கள் போல ஊடகங்கள் வேட்டையாடுகின்றன. விபச்சாரிக்குக் கூட நியாயம் வேண்டும் என்றால் ஏசு பிரான். ஆனால் ராசாவின் தரப்பு நியாயத்தை கேட்காமலேயே அவரை சிலுவையில் அறைகிறார்கள் என்றார். பர்க்காதத், அர்நாப் கோஸ்வாமி, ராஜ்தீப் சர்தேசாய் போன்றவர்கள், அடுத்தவரின் நியாயத்தைக் கேட்காமல் தீர்ப்பு கூறும் பாசிஸ்டுகளாய் மாறி வருகிறார்கள் என்றார். நீரா ராடியா போல நூற்றுக் கணக்கான தரகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சொல்லும் நஷ்டத் தொகை ஒரு உத்தேசமான தொகையாகும். ஒரு பாட்டில் தண்ணீர் 12 ரூபாய் விற்கிறது. அந்த நிறுவனத்துக்கு பத்து லட்சம் லாபம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அரசாங்கமே தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்காமல் இருப்பதால் அரசுக்கு பத்து லட்ச ரூபாய் நஷ்டம் என்று சொல்ல முடியுமா ? அது போலத்தான் இதுவும் என்றார். (இவர் வெறும் பாதர் இல்லை. காட் ஃபாதர்) தொலைபேசி நிறுவனங்கள் மட்டும் ஸ்பெக்ட்ரம் உபயோகிக்கவில்லை. தொலைக்காட்சி நிறுவனங்களும் ஸ்பெக்ட்ரம் உபயோகிக்கின்றன. அவற்றை திருப்பித் தரத் தயாரா என்று கேட்டார்.
தப்ப முயற்சி செய்து பத்திரிக்கையாளர்களிடம் சிக்கிய கஸ்பர்.
இதை அடுத்து போட்டார் பாருங்கள் ஒரு போடு. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து வருவாயைத் தருமாம். முற்றான விற்பனை இல்லையாம் அது. ஆனால் 3ஜி ஸ்பெக்ட்ரம் முற்றான விற்பனையாம். அதிலிருந்து தொடர் வருமானம் வராதாம். பிறகு, ராசா பதவி ஏற்கும் போது செல்பேசி இணைப்புகள் 30 கோடியாக இருந்ததாம். ராசா பதவியை விட்டு இறங்கும் போது 70 கோடியாம். மேலும், ராசா தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. பிரதமர் தலைமையிலான தேசிய வளர்ச்சிக் குழுமம் எடுத்த முடிவைத்தான் அவர் செயல்படுத்தினார். ராசா தொலைபேசி நிறுவனங்கள் கூட்டுக் குழுவாக செயல்பட்டதை உடைத்தார். அதனால் பதவியை இழந்தார் என்றார். (சும்மா சொல்லக் கூடாது. வாங்குன காசுக்கு நல்லாவே குரைக்கிறீங்க பாதர்)
இப்படி புயல் போல முழங்கிய பாதிரியை நேற்று சிபிஐ அதிகாரிகள் 12 மணி நேரத்துக்கும் மேலாக, விசாரணையில் துளைத்து எடுத்தனர். பாதிரி பதட்டமில்லாமல் இருப்பது போல காட்டிக் கொண்டாலும், பதட்டத்தில் கைகளை மேசையில் தட்டியபடி இருந்தார். பாதிரியின் தமிழ் மையம் அலுவலகத்தில் இருந்த பணியாளர்களும் வெளியேற அனுமதிக்கப் படவில்லை. 12 மணி நேரம் சோதனை முடிந்து சிபிஐ அதிகாரிகள் வெளியேறியதும் பாதிரி அலுவலகத்தின் பணியாளர்கள் மட்டும் வெளியேறினர். வெளியே பத்திரிக்கையாளர்கள், புகைப்படக் காரர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தி அறிந்த பாதிரி, விளக்கை அணைத்து விட்டு இருட்டறையில் அமர்ந்திருந்தார். பாதிரியின் உதவியாளர்கள், வெளியே வந்து புகைப்படக் காரர்கள் போய் விட்டார்களா இல்லையா என்பதை பார்த்துக் கொண்டே இருந்தார்கள். இறுதியாக, 1 மணி நேரம் கழித்து, பாதிரி திருடன் போலவே அவசர அவசரமாக வெளியேறினார். பத்திரிக்கையாளர்கள் மடக்கி கேள்வி கேட்டதும், சிபிஐ அதிகாரிகள் ரொம்ப நல்லவர்கள் என்றார் (உங்ககிட்ட அவங்க சர்ட்டிபிக்கேட் கேட்டாங்களா ?) விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக தெரிவித்தார். (குடுக்கலன்னா, கைது செய்து ஒத்துழைப்பை வாங்கியிருப்பார்கள்.) இப்படி ஒரு மணி நேரம் ஒளிந்திருந்து திருடன் போல வெளியேறிய போலிப் பாதிரி இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தினார். ஏன் அவரை சிபிஐ ரெய்டு செய்தது என்று அவருக்குத் தெரியாதாம். கணக்கு வழக்குகள் எல்லாம் ஒழுங்காக இருக்கிறதாம். போலிப் பாதிரியிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் பிசினாரிப் பாதிரி, கொரியர் சர்வீசுக்குக் கூட பணம் பாக்கி வைத்திருக்கிறார். நேற்று சோதனை நடந்து கொண்டிருந்த போது, கொரியர் பையன் வந்தான். அவன் வந்த உடன், சார் கொரியருக்கு 2000 ரூபாய் பாக்கி என்று கத்தினான். இங்கே ரெய்டு நடக்குது போயிட்டு அப்புறம் வாப்பா என்று உள்ளிருந்து குரல் வந்தது. அப்போது அங்கிருந்த தொலைக்காட்சி கேமரா மேன், அந்த கொரியர் பையனிடம் பேட்டி எடுக்க முயன்றார். இது தெரிந்ததும், அவசர அவசரமாக ஷட்டரை திறந்து 2000 ரூபாய் பணம் கொடுத்தார்கள்.
இவ்ளோ துட்டு அடிச்கீங்களா பாதர்
இன்று நிருபர்களை சந்திக்கும் போது, கஸ்பர் சொன்னது, தமிழ் மையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்காக ஒரே ஒரு கோடி ரூபாய் மட்டும் வைத்திருக்கிறாராம். ஒரு கோடி ரூபாய் வைத்திருக்கும் நபர், கொரியர் பையனுக்கு பாக்கி வைத்திருக்கும் அவலத்தை பார்த்தீர்களா ?
கஸ்பர் அலுவலகத்துக்கு கீழே, கஸ்பர் ஆண்டுதோறும் நடத்தும் சென்னை மராத்தான் ஓட்டப் பந்தயத்துக்கான விளம்பரம் வைக்கப் பட்டிருந்தது. அதில் இருந்த வாசகமான RUN என்பது போலவே, கஸ்பர் ஓடியது சிறப்பான விஷயம்.
அடுத்தது நம்ப குருமாராஜ். இவரைப் பற்றி ஜுன் மாதம் எழுதிய பதிவையும் சவுக்கு தனியே மீள் பதிவு செய்யப் படுகிறது. ஒரு மனிதன் ஊழல் செய்து ஊரே அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், அந்த மனிதர் ஊழல் செய்யவில்லை, அவர் தலித் என்பதால் ஊடகங்கள் அவரை தாக்குகின்றன என்று அனைத்து நாளேடுகளிலும் விளம்பரம் கொடுத்து, ஒரு கருத்தரங்கத்தை முன்னின்று நடத்துகிறார் என்றால் இந்த குருமாராஜ் எப்படிப் பட்ட மனிதராக இருப்பார் ?
சிபிஐ அதிகாரிகளால் வங்கிக்கு அழைத்துச் செல்லப் படும் காமராஜ்
சிபிஐ அதிகாரிகள் காலை 7 மணிக்கே வந்து காமராஜ் வீட்டை சுற்றி வளைத்தனர். உள்ளே நுழைந்த அதிகாரிகள், வீட்டில் இருந்த காமராஜ் மற்றும் அவரது மனைவியின் செல்போன்களை அணைத்து தங்கள் பொறுப்பில் வைத்துக் கொண்டனர். காலை 9.30 மணி முதல் அனைத்து செய்தியாளர்களும், காமராஜ் வீட்டில் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.
மாலையில் 3.30 மணியளவில், காமராஜை அவரது ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள கரூர் வைஸ்யா வங்கிக் கிளைக்கு அழைத்துச் சென்ற சிபிஐ, அவரது லாக்கரை சோதனையிட்டுள்ளனர். சோதனையில் ஒரு பெரும் தொகை கைப்பற்றப் பட்டதாக உறுதி செய்யப் படாத தகவல்கள் கூறுகின்றன.
காமராஜ் அவரது மனைவி மற்றும் உறவினர்களின் 11 வங்கிக் கணக்குகளை முடக்கிய சிபிஐ அதிகாரிகள், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தி காமராஜை திருப்பி அனுப்பினர்.
காமராஜ் வீட்டிலிருந்து கைப்பற்றப் பட்ட ஆவணங்களின் ஒரு பகுதி
காமராஜுக்கு ஆதரவாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் அருண் என்பவர் வந்து சோதனை நடைபெறும் போது காமராஜுக்கு ஆதரவாக இருந்தார். வங்கிக்கும் சென்றார்.
வந்திருந்த பத்திரிக்கையாளர்களின் நக்கீரன் நிறுவனத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரைத் தவிர, ஒருவர் கூட, இந்த சோதனையை குறை கூறி பேசவில்லை. அனைவரும் வரவேற்றனர். மகிழ்ச்சியாக காணப்பட்டனர்.
பத்திரிக்கையாளர்கள் மத்தியில் உங்களுக்கு இதுதான் மரியாதை காமராஜ். புரிந்து கொள்ளுங்கள். உங்கள் தோளோடு தோள் நின்று, ஒன்றாக சரக்கடித்து, உயிருக்கு உயிரான உங்கள் தொழில் கூட்டாளி ஜாபர் சேட் தப்பித்து விட்டார் பார்த்தீர்களா ? உங்கள் சோதனைகள் இத்தோடு முடியவில்லை. மேலும் தொடரும். காத்திருங்கள்.
ஈழத் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கையில் அதை வைத்து காசு பார்த்தீர்களே…. காமராஜ்… கஸ்பர் போன்றதொரு கடைந்தெடுத்த அயோக்கியப் பேர்விழியை வைத்து மறக்க முடியுமா என்று தொடர் போட்டீர்களே… அடுக்குமா… தமிழா தமிழா பாண்டியன் என்ற நபரை இலங்கைத் தூதரகத்தில் காசு வாங்கி இலங்கைக்கு அனுப்பி அதை கவர் ஸ்டோரி செய்தீர்களே. நியாயமா காமராஜ்….. ஈழத் தமிழர்களின் அத்தனை சாபங்களும் உங்களை சுற்றிச் சுற்றி வரும். நீங்கள் எங்கும் ஓட முடியாது..
அடுத்ததாக, பெசன்ட் நகரிலேயே இருந்த ஸ்டேட் பாங்க் காலனியில் இருந்த அகிலன் ராமனாதன் என்பவரின் வீடு.
கல்வித் தந்தை அகிலன் ராமநாதன் வீடு
இந்த நபர் மத்திய அரசுப் பணியில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர். மத்தியப் பணியில் இருந்த போது, ஆ.ராசாவின் செயலாளராக இருந்தார். (ராசா வனம் மற்றும் சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்த போது) அப்போது ஒரு பெரிய அமவுண்ட்டை ஆட்டையை போட்டதாக தகவல். பிறகு ராசாவோடு கருத்து வேறுபாடாகி, விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு கல்வித் தந்தை ஜெகதரட்சகன் கல்லூரியை நிர்வகிக்கிறார்.
சிறிது நாளில், கல்வித் தந்தை ஆவது எவ்வளவு எளிது என்று கண்டுகொண்ட அகிலன், அவரே ஒரு கல்லூரியை தொடங்கி பின்னாளில் அதை நிகர்நிலை பல்கலைகழகமாகவும் மாற்றினார். இவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இதைத் தவிர சோதனை நடைபெற்ற இடங்கள்.
1) க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ்
2) ஈக்வாஸ் எஸ்டேட்ஸ்
3) கதிர்காமம் பிரைவேட் லிமிட்டெட்
4) சிவகாமம் ஏஜன்சீஸ்
5) கோவை ஷெல்டர்ஸ் அன்டு ப்ரமோட்டர்ஸ்
6) ஏஜிஎம் இன்வெஸ்ட்மென்ட்ஸ்
7) வெல்கம் இந்தியா
8) எக்சிம் வென்சர்ஸ்
9) ஜெனெக்ஸ்
10) சாலி தெர்மோ ப்ளாஸ்டிக்ஸ்
11) ஐயப்பா என்டர்பிரைசஸ்
12) ஜேஜி எக்ஸ்போர்ட்ஸ் (மகேஷ் ஜெயின்)
13) ஆண்டிமுத்து கலியபெருமாள்
14) ஆர்.ராமச்சந்திரன்
15) டாக்டர் ராமச்சந்திரன்
16) சின்ன கிருஷ்ணமூர்த்தி
17) அகரம் தெரு சின்ன கிருஷ்ணமூர்த்தி
18) டி.செல்வராஜு
19) சி.சத்யநாராயணன்
20) வளவன்
21) அகமது ஷகீர்
22) முகம்மது ஹசன்
23) மகேஷ் ஜெயின்
24) அலோக் ஜெயின்
இதில் மகேஷ் ஜெயின், அலோக் ஜெயின் ஆகிய இருவரும் ஹவாலா தரகர்கள்.
சிபிஐ சோதனைகளில் மிகத் தாமதமாக நடைபெற்றிருப்பதாக ஒரு தரப்பினர் குறை சொன்னாலும், ஹோம் வொர்க்கை சரியாக செய்து, ஒரே நேரத்தில் இத்தனை இடங்களில் சோதனை நடத்தியதன் மூலம், சிபிஐ இந்தியாவின் முன்னணி புலனாய்வு நிறுவனம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளதாகவே சவுக்கு உணர்கிறது.
சிபிஐ நிறுவனத்திற்கும் அதன் அதிகாரிகளுக்கும் சவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
இருப்பினும், சிபிஐ அதிகாரிகள் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று சொல்லத் தோன்றுகிறது. சிபிஐ கண்ணில் மண்ணைத் தூவிய ஜாபர் என்னென்ன செய்தார் என்ற விபரங்களை சவுக்கு விரைவில் வெளியிடும்.