கஸ்டம்ஸில் உதவி ஆணையராக உள்ள கதிர்வேல், கஸ்டம்ஸ் மதிப்பீட்டாளர் சஞ்சய் கக்கர், மதிப்பீட்டாளர் மணி, கஸ்டம்ஸ் ஆய்வாளர் குகன், மற்றும் சிலரை இன்று சிபிஐ கைது செய்தது. மெஜஸ்டிக் என்ற இறக்குமதி நிறுவனத்துக்குச் சொந்தமான லைசென்ஸை மோசடியாக பயன்படுத்தி, வெளிநாட்டிலிருந்து குளிர்சாதன இயந்திரங்களை மோசடியாக இறக்குமதி செய்ததற்காகவும், குளிர்சாதன இயந்திரங்களை உதிரி பாகங்கள் என்று பொய்க் கணக்கு காட்டி 50 லட்ச ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததற்காகவும் வழக்கு சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ, இவர்களில் முக்கிய குற்றவாளியான வீ.வீ க்ளியரிங் அன்ட் ஃபார்வார்டிங் என்ற நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ராதாகிருஷ்ணன் என்பவரை கைது செய்தது.. இந்த ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்தின் சகோதரர் சங்கரவடிவேலின் பினாமி என்றும், மு.க.அழகிரிக்கு நெருக்கமானவர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.