ராஜபாளையம் தபால் நிலையத்தில் தபால் அதிகாரியாக பணியில் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டதால், இவரின் தகுதிகாண் பருவத்தை திருப்திகரமாக இருந்ததாக உத்தரவிட, உதவி தபால் கண்காணிப்பாளர் அங்கண்ணன் என்பவர் பாலமுருகனிடம் 10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
இவர் கேட்ட லஞ்சத்தை அங்கண்ணன் சார்பாக முத்துகிருஷ்ணன் என்ற தபால் ஊழியர் கேட்டுப் பெறுகையில், ராஜபாளையம் ரயில் நிலையத்தில் சிபிஐ போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். கைது செய்ப்பட்ட முத்துக்கிருஷ்ணன் மற்றும் அங்கண்ணன்,ஆகிய இருவரும், நாளை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.