இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன், நிலை தடுமாறும் நீதி என்ற கட்டுரையைப் படித்து விடுங்கள்.
நம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
முதலில் தலைமை நீதிபதி. தலைமை நீதிபதி இக்பால், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1974ம் ஆண்டில் சட்டப் படிப்பை முடிக்கிறார். 1975ல் வழக்கறிஞராக பணியைத் தொடங்கி, பல்வேறு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பல்கலைகழகங்களின் வழக்கறிஞராகிறார். 1990ம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுகிறார். 1996ம் ஆண்டில் பாட்னா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி எலிப்பி தர்மாராவ்.
இவர் சவுக்கு வாசர்களுக்கு நன்றாகவே அறிமுகம் ஆனவர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இளங்களை படிப்பு முடித்ததும் ஆந்திரா பல்கலைகழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெறுகிறார். 1978ல் சட்டப்படிப்பு முடிக்கிறார். 1990ம் ஆண்டில் நீர்பாசனம், வீட்டு வசதி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கான அரசு வழக்கறிஞராகிறார். 1992ல் அரசு வழக்கறிஞராக உள்துறை, சினிமா, சட்டசபை, மதுவிலக்கு, கால்நடை பராமரிப்பு, பொது நிர்வாகம் போன்ற துறைகளுக்கான அரசு வழக்கறிஞராகிறார். 17.05.1999 அன்று ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகிறார்.
நீதிபதி சி.நாகப்பன்
சென்னை சட்டக்கல்லூரியில் பகுதி நேரப் பேராசிரியராக ஏழு ஆண்டுகள் பணியாற்றுகிறார். 1987ம் ஆண்டு நேரடி மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். 27.09.2000 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி பானுமதி
வழக்கறிஞராக 1981ம் ஆண்டு முதல் பணியாற்றி விட்டு, 1988ம் ஆண்டு நேரடி நியமனத்தில் மாவட்ட நீதிபதியாகிறார். 03.04.2003 அன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி சித்ரா வெங்கட்ராமன்
வரி தொடர்பான வழக்குகளில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற இவர், 10.12.2005 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி கே.என்.பாஷா
நீதிபதி கே.என்.பாஷாவின் தந்தை ஒரு மாவட்ட நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். 10.12.2005 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். இவரையும் சவுக்கு வாசகர்களுக்கு நன்கு தெரியும்.
நீதிபதி ஜனார்த்தன ராஜா
வரி தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர். சிறந்த கூடைப்பந்து வீரர். லயோலா கல்லூரி மற்றும் சென்னை சட்டக் கல்லூரி கூடைப்பந்து அணிகளின் கேப்டனாக இருந்துள்ளார். 10.12.2005 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி பால் வசந்தகுமார்.
தொழிலாளர் சட்டம், பணி தொடர்பான சட்டம் (Service Law) மற்றும் கல்வி தொடர்பான சட்டங்களை நன்கு பயின்றவர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வழக்குரைஞராக இருந்தவர். 10.12.2005 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி சுகுணா
தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகத்தின் ஜுனியராக இருந்தவர். சர்வீஸ் லா வில் நிபுணர். 10.12.2005 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி ஜெயச்சந்திரன்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசாமி கவுண்டரின் பேரன். கரூர் பாராளுமன்றத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்துசாமி கவுண்டரின் மகன். டெல்லி பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றவர். சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 16 ஆண்டுகள் பேராசிரியராக இருந்தவர். 10.12.2005 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். Justice M.Jaichandren has impeccable character and integrity என்று இவரே சென்னை உயர்நீதிமன்ற இணையதளத்தில் இவரது பக்கத்தில் போட்டுக் கொள்கிறார். (என்னத்த சொல்ல…)
நீதிபதி ராஜேஸ்வரன்.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் தந்தை சுப்ரமணியன் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. இவர் ராமலிங்கம் என்று சீனியரிடம் பணியாற்றினார். ராமலிங்கமும் உயர்நீதிமன்ற நீதிபதியாகி ஓய்வு பெற்றார். 10.12.2005 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி தனபாலன்.
இவரும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்வர். சர்வீஸ் லா வில் நிபுணத்துவம் பெற்றவர். சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தில் பகுதி நேர பேராசிரியராக பணியாற்றியவர். 10.12.2005 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
உயர்நீதிமன்ற நீதிபதியான பிறகு, வரலாற்றுச் சிறப்பு மிக்க பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளார் குறிப்பாக அரசியல் அமைப்புச் சட்டங்கள் 14, 15, 16 91 (1) (a) மற்றும் 19 (1) (g) ஆகிய பிரிவுகளின் கீழ் பல்வேறு தீர்ப்புகளை அளித்துள்ளார். இது தவிரவும், அறிவுசார் சொத்துரிமை, கம்பெனி லா, தேர்தல் வழக்குகள் போன்றவற்றில் அற்புதமான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இப்படியெல்லாம் அவரே சென்னை உயர்நீதிமன்றத்தின் தன்னுடைய இணைய பக்கத்தில் போட்டுக் கொண்டிருக்கிறார்.
நீதிபதி சுதாகர்
வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தைச் சேர்ந்தவர். அருகாமையிலுள்ள கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்ததற்கு பெயர் போன குடும்பம் இவரது குடும்பம். இவர் குடும்பத்துக்கு விவசாயத் தோட்டங்கள் உள்ளன. (இதுவும் அவரே போட்டுக்கிட்டது) இவர் தந்தை ராமலிங்கமும் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி. இவர் பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் ஸ்கவுட் அமைப்பில் இருந்திருக்கிறார்.
இவர் தாய் வழி தாத்தா அய்யாசாமி முதலியார் ஒரு பிரபலமான சிவில் இன்ஜினியர். அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் கூட. சென்னை ராயப்பேட்டை பைக்ராப்ட்ஸ் சாலையில் உள்ள இவர் தாத்தாவுக்கு சொந்தமான பிரம்மாண்டமான பங்களாவில் (palatial house) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உணவருந்தியுள்ளார்.
நீதிபதி சுதாகர், சமூக விஷயங்களில் மிகவும் அக்கறை உள்ளவர். குறிப்பாக, தோட்டக்கலை, சுற்றுச் சூழல் மற்றும் மரபுப் பாதுகாப்பு, சமூக விஷயங்கள், ஏழை மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகிய விஷயங்களில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். இது தவிரவும், அவருக்கு பயணம் செய்வது, இசை, கலை மற்றும் கலாச்சார விஷயங்களில் ஆர்வம் அதிகம். (இதுவும் அவரே போட்டுக்கிட்டது பாஸ்) 10.12.2005 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி தமிழ்வாணன்
1981ம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். மாவட்ட நீதிபதியாகி பின்னர் 10.12.2005 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்
நீதிபதி வினோத் கே.சர்மா
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். 31 வருடங்கள் பஞ்சாபில் வழக்கறிஞர் தொழில் செய்கிறார். 22.03.2006 அன்று நீதிபதியாக பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டு 27.10.2010 அன்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாறுதலில் வருகிறார்.
நீதிபதி கே.வெங்கட்ராமன்
1973ம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் தொடங்குகிறார். 31.07.2006 அன்று நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி ராமசுப்ரமணியம்
1983ம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் தொடங்குகிறார். 31.07.2006 அன்று நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி மணிக்குமார்.
இவர் நீதிபதி சுவாமிதுரையின் மகன். 1983ம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் தொடங்குகிறார். 31.07.2006 அன்று நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி ஏ.செல்வம்
1981ம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் தொடங்கி, 1986ம் ஆண்டு சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெறுகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தின் விஜிலென்ஸ் பதிவாளராக பணியாற்றினார். 31.07.2006 அன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி பி.ஆர்.சிவக்குமார்.
1980ம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் தொடங்குகிறார். ஈரோடு மாவட்ட சப் ஜட்ஜாக பணியாற்றுகிறார். 1997ல் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெறுகிறார். 18.09.2006 அன்று சென்னை அன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி ராஜசூர்யா
இந்திய சட்டம் இல்லாமல் ப்ரான்ஸ் நாட்டு சட்டமும் பயின்றுள்ளார். பாண்டிச்சேரி சட்டக் கல்லூரியின் பகுதிநேர விரிவுரையாளராக பணியாற்றினார். மாவட்ட நீதிபதியாகி பின்னர் 18.09.2006 அன்று சென்னை அன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி சுதந்திரம்
கிரிமினல் வழக்குகளில் வழக்குறைஞராக பணியாற்றினார். 22.03.2007 அன்று சென்னை அன்று சென்னை அன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி நாகமுத்து
இவர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1981ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார். 22.03.2007 அன்று சென்னை அன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி பழனிவேலு
இவர் திருநெல்வேலி புனித ஜான்ஸ் கல்லூரியில் படித்தவர். கல்லூரி நாட்களிலேயே கல்லூரிகளுக்கிடையே நடந்த தமிழ்க் கவிதைப் போட்டிகளில் முதல் பரிசு பெற்றுள்ளார். 1989ம் ஆண்டு துணை நீதிபதியாக நியமிக்கப்பட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நிர்வாகப் பதிவாளராக நியமிக்கப்படுகிறார். 22.03.2007 அன்று சென்னை அன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி கே.கே.சசிதரன்
மாஹே நீதிமன்றத்தில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றி விட்டு, 1992ம் ஆண்டு முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். பாண்டிச்சேரி அரசு வழக்கறிஞராக சிறிது காலம் பணியாற்றிய பின் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி வேணுகோபால்
1981ம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் தொடங்கி துணை நீதிபதியாக 1989ம் ஆண்டு தேர்ச்சி பெறுகிறார். 1998ல் கூடுதல் நீதிபதியாகி, 2000ம் ஆண்டில் மாவட்ட நீதிபதியாகிறார். நீதித்துறை பதிவாளராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய பின்னர் 12.11.2007 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகிறார்.
நீதிபதி சுப்பையா
உச்ச நீதிமன்ற நீதிபதி ரத்னவேல் பாண்டியனின் மகன். 1983ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்றினார். மத்திய அரசு மற்றும் மாநில அரசு வழக்கறிஞராக பணியாற்றியிருக்கிறார். 24.03.2008 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி சத்யநாராயணன்
இவர் தந்தை மாவட்ட நீதிபதியாக இருந்தவர். 1983ம் ஆண்டு முதல் வழக்கறிஞர் தொழில் செய்து வந்தார். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சட்ட ஆலோசகராக பணியாற்றியவர். Service Law என்ற பிரிவில் பல வழக்குகளைக் கையாண்டிருக்கிறார். பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளுக்காக வாதாடியிருக்கிறார். 24.03.2008 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன்
1976ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார். திருவாங்கூர் வங்கியின் வழக்கறிஞராக இருந்தவர். சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளைக் கையாளக் கூடியவர். 31.03.2009 அன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நீதிபதி ராஜேந்திரன்
திருச்சியில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றி விட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில், கிரிமினல், அரசியல் அமைப்புச் சட்டம் என்ற பல்வேறு பிரிவுகளில் வழக்காடியிருக்கிறார். திருச்சியின் அரசு குற்றவியல் வழக்குரைஞராக பணியாற்றியிருக்கிறார். 31.03.2009 அன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நீதிபதி ஹரிபரந்தாமன்
1980ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து பணியைத் தொடங்குகிறார். தொழிலாளர் நல வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர். 31.03.2009 அன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நீதிபதி சி.டி.செல்வம்.
திவான் ராவ் பகதூரின் பேரன். உதவி அரசு குற்றவியல் வழக்குரைஞராக இருந்து ஏ.ஏ.செல்வம் என்பவரின் மகன். கர்நாடகா வங்கி மற்றும் பேங்க் ஆப் இந்தியாவின் சட்ட அதிகாரியாக இருந்தவர். அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக இருந்து பின்னர் 31.03.2009 அன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நீதிபதி சி.எஸ்.கர்ணன்.
இவரைப் பற்றி சவுக்கு வாசர்கள் நன்றாகவே அறிவார்கள்.
1984ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து பணியைத் தொடங்குகிறார். சென்னை குடிநீர் வாரியத்தின் சட்ட ஆலோசகராக இருந்தவர். 31.03.2009 அன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நீதிபதி கிருபாகரன்
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிவில், மற்றும் வரி தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர். 31.03.2009 அன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்
1985ம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் தொடங்குகிறார். 1991 முதல் 1996 வரை அரசு வழக்கறிஞராக பணியாற்றுகிறார். டான்சி வழக்கறிஞர். 31.03.2009 அன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நீதிபதி டி.எஸ்.சிவஞானம்
அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுப்பையாவின் மகன். மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராக பணியாற்றினார். 31.03.2009 அன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நீதிபதி துரைசாமி
மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராக பணியாற்றியவர். 31.03.2009 அன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நீதிபதி ராஜா
1988ல் வழக்கறிஞராக பணியைத் தொடங்கி உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வழக்கறிஞராக இருந்தவர். 2008ல் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 31.03.2009 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நீதிபதி அருணா ஜெகதீசன்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். துணை நீதிபதியாக 1989ம் ஆண்டு நியமிக்கப்பட்டவர். சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் விழிப்புப்பணி பதிவாளராக நியமிக்கப்படுகிறார். 31.03.2009 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி அக்பர் அலி
இவர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தஞ்சை மாவட்டத்தில் சில காலம் வழக்கறிஞராக பணியாற்றி விட்டு, துணை நீதிபதியகா தேர்ந்தெடுக்கப்படுகிறார். புதுச்சேரி மாநில தலைமை நீதிபதியாக பணியாற்றுகிறார். 31.03.2009 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி மதிவாணன்
இவரைப் பற்றிய குறிப்புகள் இல்லை.
நீதிபதி ஆறுமுகசாமி
கோவை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியைத் தொடங்குகிறார். 1986ல் துணை நீதிபதியாக நியமிக்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளராக நியமிக்கப்படுகிறார். 17.02.2010 அன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி வாசுகி
இவரைப் பற்றியும் குறிப்புகள் இல்லை. (மக்கள் விரோத நீதிமன்றங்கள்)
நீதிபதி ரவிச்சந்திர பாபு
1984ம் ஆண்டு வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கியவர். பல உயர்நிதிமன்ற வழக்கறிஞர்களை உருவாக்கிய மூத்த வழக்கறிஞர் காந்தியின் அலுவலகத்தில் ஜுனியராக பணியாற்றியவர். கஸ்டம்ஸ் துறையின் வழக்கறிஞராக பணியாற்றியவர். 20.12.2011 அன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதி விமலா.
பத்தே நாட்களில் ஒரு கொலை வழக்கில் தீர்ப்பளித்த பெருமைக்குரியவர். திருச்சி நீதிமன்ற வளாகத்தை சுத்தமாக வைத்திருந்ததாக சிவிக் எக்சனோராவின் விருது பெற்றவர். மாநில நீதித்துறை அகாடமியின் முதல் பெண் இயக்குநர். அந்த அகாடமியில் கணிணி வழிப் பயிற்சியை அறிமுகப்படுத்தியவர். அரசு பெண்கள் விடுதியில் உள்ள குறைகளைச் சீர் செய்வதை தனது தலையாய பணியாகக் கருதி அது குறித்து விசாரித்து உயர்நீதிமன்றத்துக்கு அறிக்கை அளித்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் தலைமை நீதிபதி அதை ஒரு பொதுநல வழக்காக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விரிவான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.
This is hailed as a seminal contribution to the sensitization of an issue that would reform, rehabilitate and reintegrate a considerable portion of women folk, which hitherto unnoticed by the policy makers, social welfare organizations and also by the Judiciary itself.
உயர்நீதிமன்ற பதிவாளராக 16.02.2010 அன்று பதவியேற்ற பிறகு மிகச் சிறப்பாக பணியாற்றி சென்னை உயர்நீதின்றத்தின் 150வது ஆண்டு விழா ஏற்பாடுகளை தலைமை நீதிபதியின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக கவனித்தார். மாவட்ட நீதிபதியாக அவரின் 12 ஆண்டு கால பணி, நீதி பரிபாலனம் மற்றும் நிர்வாகம் ஆகிய இரண்டு துறைகளின் சமமான அனுபவத்தை கொண்டிருக்கிறது. அவருடைய 16 ஆண்டுகால வழக்கறிஞர் பணி எப்படிப்பட்ட சூழலையும் கையாளும் திறனை அவருக்கு வழங்கியிருக்கிறது. 20.12.2011 அன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதிபதிகள் தேவதாஸ், கருப்பையா, விஜயராகவன் ஆகியோரைப் பற்றியும் குறிப்புகள் இல்லை.
இந்தப் பட்டியலில் ஒருவர் பெயர் இல்லை. அவர் யாரென்று பின்னால் பார்ப்போம்.
சரி… நீதிபதிகள் பற்றிய அறிமுகம் போதும். இந்த அறிமுகங்களை வைத்துப் பார்க்கும்போது, இந்த நீதிபதிகள் அனைவரும் கற்றறிந்த சான்றோர், அறிவார்ந்த அறிஞர்கள், சட்ட நுணுக்கங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள், இவர்களுக்குத் தெரியாத சட்டமே இல்லை… இவர்களுக்குத் தெரியாத சட்டம் என்றால் அதை சட்டமன்றமோ, பாராளுமன்றமோ இனிமேல்தான் உருவாக்க வேண்டும் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
சரி… இந்த கற்றறிந்த சான்றோர்கள் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா ? தங்களுக்கு வேண்டியவர்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் 55 பணியிடங்களை பரிந்துரை செய்து நியமித்திருக்கிறார்கள். தபேதார், அலுவலக உதவியாளர் மற்றும் வாட்ச்மேன் ஆகிய பணியிடங்களை நியமித்திருக்கிறார்கள். கடந்த முறை கட்டுரை எழுதியபோது முழுமையான பட்டியல் கிடைக்கவில்லை. 30 பெயர்களை மட்டுமே வெளியிட முடிந்தது. மொத்தமாக உள்ள 55 பெயர்களும் இதோ…
1) ஆர், சண்முகம், பளமானேர், ஆந்திரா
2) முகம்மது நவாப், ராஞ்சி, பீகார்
3) சஞ்சய் குமார், முங்கேர், பீகார்
4) எம்.மஞ்சுளா, மதுரை
5) சி.தரங்கராமன், திருவள்ளுர்
6) ஏ.பூபதி, மதுரை
7) ஏ.ரேவதி, மதுரை
8) எஸ்.குமார், கோவில்பட்டி
9) வி.காளமேகம், மதுரை
10) ஏ.கார்த்திகேயன், மதுரை
11) கே.செல்வி, குறிஞ்சிப்பாடி
12) பி.சாமி, ராஜபாளையம்
13) ஆர்.சக்திவேல், கடலூர்
14) வினாயகமூர்த்தி, கோவிலம்பாக்கம்
15) பி.உதயன், விழுப்புரம்
16) பி.சிவக்குமார், பார்த்திபனூர்
17) ஏ.காயத்ரி, சைதாப்பேட்டை
18) ஜி.மகேந்திரன், சென்னை.28
19) சி.சுகுமார், சென்னை 28
20) ஜே.ஜெயந்தி, சைதாப்பேட்டை
21) டி.துர்காதேவி, சென்னை 28
22) எலிப்பி ரவிக்குமார், சென்னை 28
23) செந்தில்குமார், கீழ்ப்பாக்கம்
24) ராஜ்குமார், அயனாவரம்
25) எஸ்.ஜெயமணி, தண்டையார்ப்பேட்டை
26) எம்.கேத்ரபாலன், சென்னை 28
27) பி.சுமத்ரா, சென்னை 15
28) எச்.ஷைனி, சென்னை 58
29) ஆர்.சரவணன், திருவான்மியூர்
30) அஷோக் அந்தோணி, பெருங்குடி
31) ஜி.சதீஷ்குமார், பூந்தமல்லி
32) எஸ்.லதா, சென்னை 28
33) ஆர்.முப்பிடதி, சென்னை 28
34) சையது பரூக், சென்னை 2
35) எஸ்.பிரபு, அண்ணா நகர், சென்னை 40
36) சி.ராஜேஷ், சூளை, சென்னை 112
37) ஆர்.ராமு, திருவான்மியூர், சென்னை 41
38) சி.சங்கீதா, சென்னை 70
39) பி.வேல்முருகன், சென்னை 28
40) ஜி.சீனிவாசன், கொளத்தூர், சென்னை.99
41) ஜே.கவிதா, சென்னை 15
42) ஜெகன்னாதன், மைலாப்பூர், சென்னை
43) எஸ்.சதீஷ், சென்னை 28
44) ஜி.சக்திவேல், சென்னை 47
45) எஸ்.பரமேஸ்வரி, தரமணி, சென்னை
46) சி.அருள்ஜோதி, கீழ்ப்பாக்கம், சென்னை
47) சந்திரசேகர், ராயபுரம், சென்னை 13
48) தேவ ஆசீர்வாதம், வியாசர்பாடி, சென்னை 39
49) ஆர்.அஷோக் குமார், வியாசர்பாடி, சென்னை 39
50) மோகன்பாபு, சென்னை 91
51) ஒய்.அந்தோணி, அயனாவரம், சென்னை 23
52) எஸ்.சரவணன், வீரவனல்லூர்
53) ராஜ்குமார், மதுரை
54) என்.ரமேஷ், ஈரோடு
55) ஆர்.பாலச்சந்தர், பாண்டிச்சேரி
இந்தப் பதவிகள் அத்தனைக்குமான நியமனங்கள் எப்படி நடந்திருக்கிறது தெரியுமா ? அத்தனை நீதிபதிகளும் ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டு நபர்களை தெரிவு செய்திருக்கிறார்கள். மூத்த நீதிபதியாக இருந்தால் அவருக்கு இரண்டு. இளைய நீதிபதியாக இருந்தால் அவருக்கு ஒன்றே ஒன்று. இந்தப் பட்டியலில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் அசல் முகவரியைக் கூடக் கொடுக்காமல், நீதிபதிகளின் வீட்டு முகவரியையை (சென்னை.28) கொடுத்திருக்கிறார்கள்.
சொத்துக்குவிக்காத புரட்சித் தலைவி அம்மா அவர்களோடு நீதிமான் இக்பால்
தலைமை நீதிபதிக்கு மட்டும் மூன்று. அவர் “தலைமை” நீதிபதி அல்லவா ? பட்டியலின் தொடக்கத்தில் பீகாரைச் சேர்ந்த இருவர் இருக்கிறார்கள் அல்லவா ? அவர்கள் தலைமை நீதிபதியின் பரிந்துரை. தலைமை நீதிபதி பரிந்துரைத்த மூவரும் தபேதாராக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தபேதார் என்றால் சிவப்பு தொப்பி போட்டுக் கொண்டு சூ… சூ… என்று கத்திக் கொண்டு வருவார்களே… அவர்கள்தான். அவர்களின் பணி நீதிபதி நடக்கையில் சூ… சூ… என்று கத்தி முடித்ததும், நீதிமன்றப் பணிகளை பராமரிப்பது. (Court Maintenance) இதற்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டுமா இல்லையா ? நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்ட இருவருக்கு தமிழ் சுத்தமாகத் தெரியாது. ஒரு வேளை சூ…. சூ…. என்று கத்துவதற்கு தமிழ் மொழி எதற்கு என்று நினைத்திருப்பாரோ…. நமக்குத் தெரியாது. அவர் தலைமை நீதிபதி…. அவருக்குத் தெரியாத சட்டம் இல்லை. இந்தத் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், இன்னும் ஒரு வாரத்துக்குள், உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதியாக நியமனம் செய்யப்பட இருக்கிறார். உச்ச நீதிமன்றத்திலும் அவருக்கு இது போல நியமனம் செய்ய ஒதுக்கீடு வழங்குவார்களா என்று தெரியவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து, மாறுதலில் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகச் சென்றவர் டி.முருகேசன். அவர்தான் இந்த நியமனங்களுக்கெல்லாம் சூத்ரதாரி. பணி நியமனக் குழு என்று உயர்நீதிமன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டு நீதிபதிகள் கொண்ட குழு ஒன்று உண்டு. (Appointments Committee). அந்த குழுவில் இவர் ஒரு உறுப்பினர். மற்றொரு உறுப்பினர், நீதிபதி எலிப்பி தர்மாராவ்.
இந்த 55 நியமனங்களும் கடந்த ஜுலை மாதமே இறுதி செய்யப்பட்டு விட்டன. இதனால், சமீபத்தில் ஓய்வு பெற்றாரே நீதிபதி ஜோதிமணி. அவரும் தன் பங்குக்கு இரண்டு பேரை பரிந்துரை செய்திருக்கிறார். இந்த நீதிபதி ஜோதிமணிதான், கூடங்குளம் அணு உலை மிக மிக பாதுகாப்பானது…. அதில் விபத்து நடக்க வாய்ப்பே இல்லை என்று அற்புதமான ஒரு தீர்ப்பை வழங்கியவர். பணி நியமனங்களை விதிகளைப் புறந்தள்ளி விட்டு பரிந்துரை செய்த நீதிபதிக்கு, அணு உலையில் விபத்து நடக்குமா நடக்காதா என்பது முன் கூட்டியே தெரியாதா என்ன ? அவருக்கும் தெரியாத சட்டம் இல்லை.
நாட்டில் எல்லா இடங்களிலும் ஊழல் புரையோடிப்போய் உள்ளது. ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் போலி என்கவுன்டர்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மக்களின் நலனைப் பார்க்காமல், பன்னாட்டு நிறுவனங்களிடம் தங்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பட்ட ஒரு அவலச் சூழலில் மக்களை நேசிக்கும் சமூக ஆர்வலர்கள் நம்பியிருப்பது நீதிமன்றங்களை மட்டுமே. இந்த நீதிமன்றங்களிலேயே இப்படிப்பட்ட சட்டவிரோதமான பணி நியமனங்கள் நடந்தால்…. ?
தற்போது வெளியிடப்பட்ட பட்டியலில் ஒரு ஆபத்தான அம்சம் இருக்கிறது. வழக்கமாக எல்லா இடங்களிலும் நேர்மையான அதிகாரிகள் ஓரிருவராவது இருப்பார்கள். காவல்துறையை எடுத்துக் கொண்டால், இன்னும் சில நல்ல, மனசாட்சி உள்ள அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஐஏஎஸிலும் சில நல்ல அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களே தொடர்ந்து போராடுவதற்கு நம்பிக்கை ஊட்டுகிறார்கள். ஆனால்…. சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அத்தனை நீதிபதிகளும், இந்த சட்டவிரோத நியமனத்துக்கு பரிந்துரை செய்திருக்கிறார்கள் என்றால் எப்படிப்பட்ட ஒரு மோசமான சூழலில் நீதிமன்றம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள சில மிக மிக சிறந்த நீதிபதிகளும் இப்படிப்பட்ட பரிந்துரையைச் செய்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது கண் முன்னே தாய் மரணிக்கும் உணர்வு ஏற்படுகிறது. இவர்களா இப்படி….. இவர்கள் இப்படிச் செய்யலாமா என்ற அதிர்ச்சியை அடக்க முடியவில்லை. ஆனால் யதார்த்தம் என்ற ஒன்று இருக்கிறதே…
இப்படி சட்டவிரோதமாக பணி நியமனத்திற்காக பரிந்துரைகளைச் செய்த அந்த நல்ல நீதிபதிகள் சில விளக்கங்களைத் தரலாம். எல்லோரும் பரிந்துரைக்கையில் நான் மட்டும் எப்படி பரிந்துரைக்காமல் இருப்பது…. எல்லோரும் செய்தார்கள் அதனால் நானும் செய்தேன்… நான் பரிந்துரைக்காமல் இருந்திருந்தால், தலைமை நீதிபதி கோபித்துக் கொள்வார் என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லக் கூடும்.
ஆனால் இவை எதுவுமே ஏற்புடையது அல்ல. நான் யாரையும் பரிந்துரைக்க மாட்டேன் என்று ஒரு நீதிபதி சொல்வாரேயானால், அவரை யாரும் எதுவும் செய்ய முடியாது. அதிகபட்சம் தலைமை நீதிபதியோ அல்லது சில மூத்த நீதிபதிகளோ கோபித்துக் கொள்வார்கள். கோபித்துக் கொள்ளட்டுமே… அதனால் என்ன ? கழுத்தையா சீவி விடுவார்கள்… ? உயிரா போய் விடும்… ? சந்திரமதியை கொலைக்களத்தில் பலி கொடுத்தாலும், பொய் சொல்ல மாட்டேன் என்ற அரிச்சந்திரனின் உறுதி இந்த நீதிபதிகளிடம் இருந்திருக்க வேண்டும். அதைத்தான் இவர்களிடம் இச்சமூகம் எதிர்ப்பார்க்கிறது.
ஆனால் மிகவும் பலவீனமானவர்களாக, தாங்கள் செய்யும் தவறு குறித்து எவ்விதமான பிரக்ஞையையும் இல்லாமல் இருக்கிறார்கள் இந்த நீதிபதிகள். இந்த நீதிபதிகளிடம் ஒரு வழக்குக்காக வாதாடிப் பாருங்களேன்… உச்ச நீதிமன்றம் இப்படிச் சொல்லியிருக்கிறதே… நான் என்ன செய்ய முடியும் ? உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது என்பார். தனி நீதிபதி விசாரித்தால், ஏற்கனவே ஒரு டிவிஷன் பென்ச் இந்த விஷயத்தில் இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறதே… அதை மீறி நான் எப்படித் தீர்ப்பெழுத முடியும் என்பார். இதையெல்லாம் கேட்கும்போது, உயர்நீதிமன்றங்களுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இப்படி மரியாதை கொடுக்கிறார்களே…. சட்டத்தை இப்படி மதிக்கிறார்களே என்று வியப்பாகவும், மதிப்பாகவும் இருக்கும். இப்படி வியாக்கியானம் பேசும் நீதிபதிகள், பணி நியமன விஷயத்தில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை வசதியாக மறந்து விட்டார்கள் என்பதுதான் வேதனையான விஷயம். எதற்கெடுத்தாலும் உச்ச நீதிமன்றத்தை மேற்கோள் காட்டி வழக்குகளைத் தள்ளுபடி செய்யும் இந்த நீதிபதிகள், அரசுப் பணி நியமனங்கள் எப்படிச் செய்ய வேண்டும், அப்படி செய்யாவிட்டால் அது எப்படித் தவறாகும், சட்டவிரோதமாகும் என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவாக வரையறுத்துள்ளது என்பதை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்பது தெரியவில்லை.
Secretary, State of Karnataka and others Vs Umadevi and others என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம், அரசுப் பணி குறித்து சிறப்பான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
Public employment in a sovereign socialist secular democratic republic, has to be as set down by the Constitution and the laws made thereunder. Our constitutional scheme envisages employment by the Government and its instrumentalities on the basis of a procedure established in that behalf. Equality of opportunity is the hallmark, and the Constitution has provided also for affirmative action to ensure that unequals are not treated equals. Thus, any public employment has to be in terms of the constitutional scheme.
சமதர்ம, மக்களாட்சிக் குடியரசு நாட்டில் பொது வேலைவாய்ப்பு (அரசுப் பணி) என்பது அரசியல் அமைப்புச் சட்டமும், அதையொட்டி உருவாக்கப்பட்ட சட்டங்களும் வரையறுத்துள்ளவாறு அமைய வேண்டும். நமது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் வேலை வழங்குவதற்கான வடிவமைப்பை உருவாக்கியிருக்கிறது. அனைவருக்கும் சமவாய்ப்பு என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, சமமில்லாதவர்கள், சமமாக நடத்தப்படாமல் அவர்களை ஊக்குவிக்க சிறப்பு ஏற்பாடுகளுக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட வடிவமைப்பில் உள்ளது.
But, sometimes this process is not adhered to and the Constitutional scheme of public employment is by-passed. The Union, the States, their departments and instrumentalities have resorted to irregular appointments, especially in the lower rungs of the service, without reference to the duty to ensure a proper appointment procedure through the Public Service Commission or otherwise as per the rules adopted and to permit these irregular appointees or those appointed on contract or on daily wages, to continue year after year, thus, keeping out those who are qualified to apply for the post concerned and depriving them of an opportunity to compete for the post. It has also led to persons who get employed, without the following of a regular procedure or even through the backdoor or on daily wages, approaching Courts, seeking directions to make them permanent in their posts and to prevent regular recruitment to the concerned posts.
ஆனால் சில சமயங்களில் அரசியல் அமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள விதிகள் பின்பற்றப்படாமல், இந்த விதிமுறைகளை வளைக்கும் வேலையும் நடைபெறுகிறது. மத்திய அரசு, மாநில அரசு, அந்த அரசுகளின் துறைகள் விதிமுறைகளை மதிக்காமலும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நியமனம் செய்யாமலும், சட்டவிரோதமாக பலரை பணியில் நியமிக்கிறார்கள். குறிப்பாக, அரசுப் பணியில் கீழ் மட்டத்தில் இது போன்ற நியமனங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு சட்டவிரோதமாகவும், தற்காலிகமாகவும் நியமனம் செய்யப்படுபவர்கள், தகுதிவாய்ந்த நபர்களின் வேலை வாய்ப்பு பெறுவதை தட்டிப் பறித்து, ஆண்டுதோறும் பணி நீட்டிப்பு பெற்று வருகிறார்கள். இது போன்ற நியமனங்கள், இப்படி சட்டவிரோதமாக பணியில் சேருபவர்கள் நீதிமன்றத்தை அணுகி, தங்களின் தற்காலிக பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், நேரடி நியமனத்தை தடுக்க வேண்டும் என்று கோருவதற்கு வழி வகுக்கிறது.
This Court has also on occasions issued directions which could not be said to be consistent with the Constitutional scheme of public employment. Such directions are issued presumably on the basis of equitable considerations or individualization of justice. The question arises, equity to whom? Equity for the handful of people who have approached the Court with a claim, or equity for the teeming millions of this country seeking employment and seeking a fair opportunity for competing for employment ? When one side of the coin is considered, the other side of the coin, has also to be considered and the way open to any court of law or justice, is to adhere to the law as laid down by the Constitution and not to make directions, which at times, even if do not run counter to the Constitutional scheme, certainly tend to water down the Constitutional requirements.
இந்த நீதிமன்றமே சில தருணங்களில் அரசியல் அமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள வடிவமைப்பிற்கு எதிராக சில தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது. அந்தத் தீர்ப்புகள் சில தனி நபர்களுக்காகவும், சம வாய்ப்பு கருதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் தற்போது பரிசீலனை செய்ய வேண்டியது, சம வாய்ப்பு யாருக்கு ? நீதிமன்றத்தை நாடும் ஒரு சிலருக்கா ? அல்லது வேலை வேண்டி காத்ததிருக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கா ? ஒரு நாணயத்தின் ஒரு பக்கம் பரிசீலிக்கப்படுகையில், அந்த நாணயத்தின் மறுபக்கமும் பரிசீலிக்கப்பட வேண்டும். இப்படியான ஒரு சூழலில் நீதிமன்றத்துக்கு இருக்கும் ஒரே வழி அரசியல் அமைப்புச் சட்டம் வடிவமைத்துள்ளதற்கு ஏற்றபடி தீர்ப்பு வழங்குவதே. அதற்கு மாறாக வழங்கப்படும் தீர்ப்பு அரசியல் அமைப்புச் சட்ட வடிவமைப்புக்கு எதிரானதாக இல்லாவிடினும், அதை வலுவிழக்கச் செய்யும்.
The power of a State as an employer is more limited than that of a private employer inasmuch as it is subjected to constitutional limitations and cannot be exercised arbitrarily (See Basu’s Shorter Constitution of India). Article 309 of the Constitution gives the Government the power to frame rules for the purpose of laying down the conditions of service and recruitment of persons to be appointed to public services and posts in connection with the affairs of the Union or any of the States.
வேலை வாய்ப்பு வழங்குவதில் ஒரு தனியார் நிறுவனத்தை ஒப்பிடுகையில், ஒரு அரசுக்கு அதிகாரங்கள் குறைவே. ஏனெனில் அரசுத் துறைகள், அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறாமல் வேலை வாய்ப்பு வழங்க வேண்டியதோடல்லாமல், பாரபட்சமில்லாமலும் வழங்கப்பட வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 309 வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பாகவும், பணி விதிகள் இன்னபிற விஷயங்கள் தொடர்பாக விதிகளை வகுக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் வழங்குகிறது.
That Article contemplates the drawing up of a procedure and rules to regulate the recruitment and regulate the service conditions of appointees appointed to public posts. It is well acknowledged that because of this, the entire process of recruitment for services is controlled by detailed procedure which specify the necessary qualifications, the mode of appointment etc. If rules have been made under Article 309 of the Constitution, then the Government can make appointments only in accordance with the rules.
இந்தப் பிரிவு அரசு வேலை வாய்ப்பு குறித்த விதிமுறைகள், அரசுப் பணியாளர்களின் பணி தொடர்பான விதிகள், தேர்ந்தெடுப்பதற்கான முறைகள், விதிகள் போன்றவற்றை உருவாக்க வழிவகை செய்கிறது.
The State is meant to be a model employer. The Employment Exchanges (Compulsory Notification of Vacancies) Act, 1959 was enacted to ensure equal opportunity for employment seekers. Though this Act may not oblige an employer to employ only those persons who have been sponsored by employment exchanges, it places an obligation on the employer to notify the vacancies that may arise in the various departments and for filling up of those vacancies, based on a procedure.
அரசு வேலை வாய்ப்பு வழங்குவதில் ஒரு முன்மாதிரி நிறுவனம். 1959ம் ஆண்டு வேலை வாய்ப்பகங்கள் (கட்டாயமாக காலியிடங்களை அறிவிக்கும்) சட்டம் வேலை வாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பை உருவாக்கவே தோற்றுவிக்கப்பட்டது. வேலை வாய்பகங்கள் மூலமாக மட்டுமே அரசுத் துறையில் வேலைகள் வழங்கப்பட வேண்டும் என்று இந்தச் சட்டம் கட்டாயப்படுத்தவில்லை என்றாலும், அந்தந்தத் துறையில் ஏற்படும் காலியிடங்களை வெளிப்படையாக அறிவித்து, அந்த காலியிடங்களை விதிமுறைகளின்படி நிரப்புவதற்கு வழிவகை செய்கிறது.
இந்தத் தீர்ப்பு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் அமைப்புச் சட்ட அமர்வு வழங்கிய தீர்ப்பு.
Union Public Service Commission Vs. Girish Jayanti Lal Vaghela & Others என்ற மற்றொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அரசு ஊழியர், அரசுப் பணி என்றால் என்ன என்பதை அற்புதமாக எடுத்துரைத்துள்ளது.
Article 16 which finds place in Part III of the Constitution relating to fundamental rights provides that there shall be equality of opportunity for all citizens in matters relating to employment or appointment to any office under the State. The main object of Article 16 is to create a constitutional right to equality of opportunity and employment in public offices.
The words “employment” or “appointment” cover not merely the initial appointment but also other attributes of service like promotion and age of superannuation etc. The appointment to any post under the State can only be made after a proper advertisement has been made inviting applications from eligible candidates and holding of selection by a body of experts or a specially constituted committee whose members are fair and impartial through a written examination or interview or some other rational criteria for judging the inter se merit of candidates who have applied in response to the advertisement made. A regular appointment to a post under the State or Union cannot be made without issuing advertisement in the prescribed manner which may in some cases include inviting applications from the employment exchange where eligible candidates get their names registered. Any regular appointment made on a post under the State or Union without issuing advertisement inviting applications from eligible candidates and without holding a proper selection where all eligible candidates get a fair chance to compete would violate the guarantee enshrined under Article 16 of the Constitution
அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவில் வரும் பிரிவு 16 அரசு மற்றும் அரசுத் துறைகளின் பணி நியமனங்களில் அனைத்து குடிமகனுக்கும் சம வாய்ப்பை அடிப்படை உரிமையாக்குகிறது. அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 16ன் நோக்கமே, அரசு வேலைகளில் அனைவருக்கும் சம உரிமையை அடிப்படை உரிமையாக வழங்க வேண்டும் என்பதே. “வேலை” “நியமனம்” போன்ற வார்த்தைகள் தொடக்கத்தில் ஏற்படும் நியமனம் குறித்து மட்டுமல்ல. அதன் தொடர்ச்சியாக வரும் பதவி உயர்வு, பணி மூப்பு போன்ற அத்தனையையும் சேர்த்துதான். அரசுத் துறையில் எந்த வேலையாக இருந்தாலும் வெளிப்படையாக விளம்பரம் செய்து, நேர்முகத் தேர்வு நடத்த பாரபட்சமற்ற, நேர்மையான நிபுணர்கள் கொண்ட ஒரு சிறப்பு குழுவை அமைத்து, எழுத்துத் தேர்வு நடத்தியோ, நேர்முகத் தேர்வு நடத்தியோ, தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்யப்பட வேண்டும். மத்திய அரசிலோ, மாநில அரசிலோ இவ்வாறு விளம்பரம் செய்து, தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பம் பெற்று அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்காமல் நியாயமான முறையில் தேர்வு செய்யாமலோ, ஒரு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டால், அது அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 16 வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானதாகும்.
இதுவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. 2006ம் ஆண்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள் இந்தியாவில் உள்ள அத்தனை குடிமகனையும் கட்டுப்படுத்தும். சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் உட்பட.
இந்தத் தீர்ப்புள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தெரியாமல் போனதெப்படி ? அதுவும் சட்டத்தைக் கரைத்துக் குடித்த மேதைகளாயிற்றே… இவர்களுக்கு எப்படி இந்தத் தீர்ப்புகள் தெரியாமல் போனது ?
இந்த நியமனங்களை எதிர்த்து இரண்டு பொதுநல வழக்குகள், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல் வழக்கு தாக்கல் செய்து நான்கு நாட்களாகின்றது. இது வரை அந்த வழக்குக்கு ரிட் மனு எண் வழங்காமல் கட்டி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால்… பொதுவாக ஒரு வழக்கில் உள்ள விவகாரங்களில் ஒரு நீதிபதி சம்பந்தப்பட்டிருந்தால் அந்த வழக்கை அவர் விசாரிக்க மாட்டார். சில நிறுவனங்கள் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வருகையில், அந்த நிறுவனத்தின் பங்குகளை எனது மனைவியோ, மகனோ, மகளோ வாங்கியிருக்கிறார்… அதனால் நான் இவ்வழக்கை விசாரிக்க மாட்டேன் என்று நீதிபதிகள் அந்த வழக்கிலிருந்து விடுவித்துக் கொள்வது வழக்கம். இந்த வழக்கில் அத்தனை நீதிபதிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களே… எப்படி விசாரிப்பார்கள்….
அடடே…. ஆச்சர்யக்குறி… !!!!!!
அதற்காக இந்த வழக்குகளுக்கு ரிட் மனு எண் கொடுக்காமலே அப்படியே வைத்து விட முடியுமா ? அதுவும் முடியாது. பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று.
இந்த முறைகேடு மட்டுமல்ல தோழர்களே…. சென்னை உயர்நீதிமன்றத்தில், பதவி உயர்வு, பணியிட மாற்றம் என்று ஊழியர்களின் கதையைக் கேட்டால் வயிறு எரியும். அத்தனை அநியாயங்கள் நடைபெற்று வருகின்றன.
நீதித்துறையில் பணியாற்றும் ஊழியர்களில் சட்டப்படிப்பு படித்தவர்கள் மட்டுமே, துணைப் பதிவாளர் போன்ற பதவி உயர்வுக்கு தகுதியாக முடியும். தற்போது மாலை நேர சட்டப்படிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. சட்டப் படிப்பு படிக்க வேண்டும் என்றால் முழு நேர சட்டப்படிப்பு படித்தால் மட்டுமே முடியும். நீதிமன்றத்தில் முழு நேர ஊழியர்களாக இருப்பவர்கள் எப்படி சட்டப்படிப்பு படிக்க முடியும் ? முடியாதல்லவா ? ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் 73 பேர் இது போல சட்டப்படிப்பு படித்திருக்கிறார்கள். அதுவும், தமிழகத்தில் அல்ல… ஆந்திரா மற்றும் பெங்களுரில் சட்டப்படிப்பு படித்து முடித்ததாக சான்றிதழ் சமர்ப்பித்து, தங்களுக்கு பதவி உயர்வு வேண்டும் என்று வேறு கேட்டிருக்கிறார்கள். இது வரை அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. ஆனால், தலைமை நீதிபதி இக்பால் உச்ச நீதிமன்றத்துக்கு சென்ற அடுத்த நாளே இந்த 73 பேருக்கும் பதவி உயர்வு வழங்கப் பட இருப்பதாக கூறப்படுகிறது…
இந்த நீதிபதிளுக்கு அய்யன் வள்ளுவனைத்தான் மேற்கோள் காட்ட வேண்டியிருக்கிறது.
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி
என்கிறார் வள்ளுவர்.
முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.
ஆங்கில மொழிபெயர்ப்பு
To stand, like balance-rod that level hangs and rightly weighs,
With calm unbiased equity of soul, is sages’ praise.
இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு அடுத்த வாரம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நீதிபதி எம்.ஒய்.இக்பாலுக்காக. உச்ச நீதிமன்றம் சென்ற பிறகு, அங்கேயும் பீகார் மாநிலத்தவர்களை சட்டவிரோதமாக நியமிக்க வேண்டாம் என்ற வேண்டுகோளோடு.
மேலே கூறிய நீதிபதிகள் பட்டியலில் இல்லாத ஒரே ஒரு நீதிபதி யார் தெரியுமா ? நீதிபதி கே.சந்துரு. நீதிமன்றத்தில் அனைத்து நீதிபதிகளையும் மை லார்ட் – தேவனே என்று அழைப்பது வழக்கம். அப்படி தேவனே என்று அழைப்பதற்கு பொருத்தமானவர் நீதிபதி சந்துரு மட்டுமே. ஆனால், விசித்திரமாக, இந்த நீதிபதி சந்துரு மட்டுமே, தன்னை யாரும் மை லார்ட் என்று அழைக்கக் கூடாது என்று பார்கவுன்சில் ஆப் இந்தியாவின் தீர்மானத்தை தனது நீதிமன்ற அறையிலேயே அனைவரும் பார்க்கும் வண்ணம் வைத்திருப்பார். எப்படிப்பட்ட விசித்திரம் பார்த்தீர்களா ?
இப்போது சொல்லுங்கள்…. நீதி நிலைகுலைந்து விட்டதுதானே… ?