தலைப்பைப் பார்த்ததும், ஜெயலலிதாவும், சசிகலாவும் பேசிக்கொள்கிறார்கள் என்று நினைத்து விடாதீர்கள். அவர்கள் அதிமுக அடிமைகளைப் பற்றி இப்படித்தான் பேசிக்கொள்வார்கள் என்றாலும், இந்தக் கட்டுரை அவர்களைப் பற்றியது அல்ல.
இந்தக் கட்டுரை, தமிழகத்தில் உள்ள உயர்நீதிமன்றம் தவிர்த்த கீழமை நீதிபதிகளைப் பற்றியது. அந்த நீதிபதிகள், தங்கள் கீழே பணியாற்றும் ஊழியர்களைப் பற்றி இப்படித்தான் பேசிக்கொள்வார்கள்.
ஒரு அரசு ஊழியன், அரசுப் பணியில் சேரும்போது முதலில் செய்ய வேண்டிய காரியம், தனது முதுகெலும்பை கழற்றி வைப்பது. முதுகெலும்பை கழற்றி வைத்தால் மட்டும் சிறந்த அரசு ஊழியராகி விட முடியாது. அரசுப் பணியில் சேர்ந்த நாள் முதல், உணவில் உப்பைக் குறைத்து கொண்டு, உயர் அதிகாரி காறி முகத்தில் துப்பினால் அமைதியாகப் போய் வெளியே யாரிடமும் சொல்லாமல் இருந்தால் நீங்கள் அரசு ஊழியர். அதிகாரி முகத்தில் துப்பியதும், வெளியே வந்து, “அய்யா என் மூஞ்சில துப்பிட்டார். அய்யா துப்பறதுக்கு நானும் என் மூஞ்சியும் எவ்வளவு கொடுத்து வச்சுருக்கணும்” என்று சொல்வீர்களேயானால், நீங்கள் சிறந்த அரசு ஊழியர். அந்த வருடத்தின் சிறந்த அரசு ஊழியராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதோடு, பணி ஓய்வு பெறும்வரை, எவ்வித தண்டனையுமின்றி, பிரிவு உபச்சார விழாவோடு ஓய்வு பெறத் தகுதியானவர் நீங்கள்.
பெரும்பாலான அரசு அலுவலகங்களில் இந்த நிலைதான். அரசுப் பணியில் சேர்ந்த உடனேயே அந்த ஊழியர்களுக்கு அந்த அரசு வேலை, ஆக்சிஜன் போல மாறி விடுகிறது. ஆக்சிஜன் நின்று விட்டால் உயிர் வாழ முடியுமா ? அப்படித்தான் அரசு ஊழியர்கள் மாறி விடுகிறார்கள். உயர் அதிகாரி, ஏதாவது ஒரு காரணத்துக்காக மெமோ கொடுத்தால், ஆக்சிஜன் குறையும்போது ஏற்படும் மூச்சுத் திணறல் அரசு ஊழியர்களுக்கு ஏற்படுகிறது. அந்த மூச்சுத் திறனை சரி செய்வதற்காக, உடனே அதிகாரியின் காலில் விழுந்து ஆக்சிஜன் ஏற்றிக் கொள்வார்கள்.
பெரும்பாலான அரசு அலுவலகங்களில் இந்த நிலை என்றால், நீதிமன்றங்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் பென்ஹர் படத்தில் வரும் அடிமைகளைப் போலவே நடத்தப்படுவார்கள். அடிமைகள் பேச முடியுமா ? அடிமைகளுக்கு உரிமை உண்டா ? அடிமைகளுக்கு மான ரோஷம் உண்டா ? அது போலத்தான் நடத்தப்படுவார்கள் நீதிமன்ற ஊழியர்கள்.
கீழமை நீதிமன்றங்களில் உள்ள முன்சீப், (Munsiff) துணை நீதிபதி (Sub-Judge), நீதிமன்ற நடுவர் (Judicial Magistrate), தலைமை நீதிமன்ற நடுவர் (Chief Judicial Magistrate), அமர்வு நீதிபதி (Sessions Judge) மாவட்ட நீதிபதி (District Judge) ஆகிய அனைவர் வீட்டிலும் பணியாற்றுவதற்கு, மசால்ச்சி (சமையலுக்கு உதவுபவர்), அலுவலக உதவியாளர் என்று ஆட்கள் நியமிக்கப்படுவார்கள். வீட்டில் சமையல் வேலையைச் செய்ய மசால்ச்சி பதவிக்கு நியமிக்கப்பட்டவர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றாலும், பெரும்பாலான மாவட்டங்களில் அலுவலக உதவியாளர்களே பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
இந்த நீதிபதிகளைப் பணியில் சேர்ந்தது முதலாகவே “கோர்ட்டார்” “சமூகம்” “மை லார்ட்” “யுவர் ஆனர்” “லார்ட்ஷிப்” என்றெல்லாம் அழைப்பதால், இவர்களுக்கு தங்கள் மனதில், நாம் உண்மையிலேயே கடவுள்கள் என்ற எண்ணம் வந்து விடுகிறது. இதனால், நம்மை யாரும் எதுவுமே செய்ய முடியாது என்ற இறுமாப்பில் நடந்து கொள்கின்றனர். அதுவும், ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் தங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதால், நாம் உண்மையிலேயே கடவுள்தான் என்றே நினைத்து செயல்படுகிறார்கள்.
ஒரு பதவியின் பெயரே “அலுவலக உதவியாளர்” என்று இருக்கையில், அவரை வீட்டு வேலைக்கு எப்படி பயன்படுத்த முடியும் ? ஆனால், இந்த நீதி தேவன்கள் மனசாட்சியே இல்லாமல் இந்த அலுவலக உதவியாளர்களை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தி வருகிறார்கள்.
வீட்டு வேலை என்றதும் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவது, இதர வேலைகள் என்று நினைத்து விடாதீர்கள். நீதிபதி வீட்டில் நாய் இருந்தால், அதை வாக்கிங் அழைத்துச் செல்வது, அந்த நாயை குளிப்பாட்டுவது, மாடு இருந்தால், சாணி அள்ளுவது, சட்டி கழுவுவது, சின்ன குழந்தைகள் ஆயி இருந்தால், அதற்கு கழுவி விடுவது, தோட்டத்தை பெருக்குவது, வீட்டை பெருக்குவது, துடைப்பது, துணி துவைப்பது, அயர்ன் செய்வது, சில நீதிபதிகளுக்கு இரவு நேரம் ஆனால், சரக்கு ஊற்றிக் கொடுப்பது, சரக்கடிக்கையில் சூடாக ஆம்லேட் ஆப் பாயில் உள்ளிட்டவற்றை தயார் செய்வது, பெண் நீதிபதிகளாக இருந்தால், அவர்களின் கணவன்மார்களுக்கு பணி விடை செய்வது, ஆகிய பணிகள் அனைத்தும், “அலுவலக உதவியாளர்” பதவிக்கு உண்டான பணியில் அடங்கும்.
இதை செய்ய மறுக்கும் அடிமை ”அலுவலக உதவியாளர்” ஏதாவது பேசினால், உடனே சஸ்பெண்ட் உத்தரவுதான். சஸ்பெண்ட் உத்தரவை வாங்கியதும் அந்த அடிமை நீதிமானின் காலில் விழுந்தால் பிழைக்கலாம். காலில் விழா விட்டால் அதோ கதிதான். தமிழக அரசின் மற்ற துறைகளில் இது போல பணி இடை நீக்கம் செய்யப்பட்டால் நீதிமன்றத்தை அணுகலாம். நீதிபதிகள் பல நேரங்களில் அநியாயமாக செய்யப்படும் பணி நீக்கத்தை தடை செய்கிறார்கள். ஆனால் நீதித்துறையில் பணியாற்றும் அடிமைகளுக்கு இந்த உரிமையும் கிடைக்காது. மாவட்ட நீதிபதி பணி இடை நீக்கம் செய்தால் உயர்நீதிமன்றத்தில்தானே வழக்கு தொடுக்க வேண்டும் ? உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த அடிமை அலுவலக உதவியாளர்களுக்கு உதவி செய்வார்களா என்ன ? அவர்கள் வீட்டிலும் அடிமைகளை மேய்த்துக் கொண்டிருப்பார்கள் அல்லவா ? கீழமை நீதிபதிகளுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா ? கீழமை நீதிபதிகள், அரசு ஊழியர்களை அடிமைகளாக வைத்திருக்கிறார்கள். உயர்நீதிமன்ற நீதிபதிகள், அடிமைகளை அரசு ஊழியர்களாக மாற்றி, அடிமைகளுக்கு சிறப்புத் தகுதியை உருவாக்குகிறார்கள். அப்படி சமீபத்தில் 55 அடிமைகள் அரசு ஊழியர்களாக்கப்பட்டது தொடர்பான கட்டுரை நிலை குலைந்த நீதி.
இப்படி ஒரு அடிமையைப் பற்றிய கட்டுரைதான் இது. வள்ளியூர் நீதிமன்ற நடுவர் (Judicial Magistrate, Valliyoor) நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார் வேல்முருகன் என்பவர். வள்ளியூர் நீதிமன்ற நடுவராக இருப்பவர் கிறிஸ்டல் பபிதா என்ற குந்தாணி. இவரை குந்தாணி என்று சொல்வது சரியா என்பதை கட்டுரையின் இறுதியில் முடிவு செய்யலாம்.
நீதித்துறை நடுவர் கிறிஸ்டல் பபிதா
19.11.2012 அன்று இவரது வீட்டில் வேலை செய்யும் மசால்ச்சி விடுமுறையில் சென்று விட்டார். அவர் விடுமுறையில் சென்றதும், வேல்முருகனை வீட்டில் சென்று சமையல் செய்யுமாறு உத்தரவிடுகிறார் இந்தக் குந்தாணி. வேல்முருகன், அவர்கள் ஊரின் குலதெய்வத்திற்கு சாமியாடும் வழக்கம் உள்ளவர். சாமியாடுவதால் அசைவம் சாப்பிட மாட்டார்.
சமையல் செய்ய வேண்டும் என்றதும், வேல் முருகன் குந்தாணி வீட்டுக்குச் செல்கிறார். வீட்டில் இரண்டு கிலோ மீன் வாங்கி வைத்திருக்கிறார்கள். இரண்டு வகை மீன். அசைவமே சாப்பிடாத வேல்முருகன் எப்படி அசைவம் சமைக்க முடியும் ? குந்தாணியிடம், “அம்மா எனக்குச் சமையல் தெரியாது. நான் அசைவம் சாப்பிடும் வழக்கம் இல்லை” என்று கூறுகிறார். அந்தக் குந்தாணியோ, “உங்களுக்குத் தெரிந்ததை சமையுங்கள்…“ என்று சொல்லி விட்டு, நீதிமன்றத்தில் நீதி பரிபாலனம் செய்யச் சென்று விடுகிறார்.
மீனை எப்படிக் கழுவுவது என்று கூடத் தெரியாமல் வேல்முருகன் முழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கையில், அந்த நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக இருக்கும் மற்றொரு அடிமை திருமலைவேலு உதவிக்கு வருகிறார். அவர் ஒரு வகை மீனை கழுவி சுத்தம் செய்து விட்டு, மற்றொரு வகை மீனை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார். இதற்குள் சுத்தம் செய்யப்பட்ட மீனை குழம்பு வைக்கும் வேலையில் ஈடுபடுகிறார் வேல்முருகன்.
நீதிமன்றப் பணிக்கு ஆட்கள் குறைவாக இருந்ததால், குந்தாணி மீனை சுத்தம் செய்து கொண்டிருந்த திருமலை வேலுவை நீதிமன்றத்துக்கு அழைக்கிறார். குந்தாணியின் வீடும், நீதிமன்றமும் 20 அடி தூரத்தில் இருக்கிறது. திருமலைவேலு, பாதி கழுவி மீனை அப்படியே வைத்து விட்டு, நீதிமன்றம் சென்று விடுகிறார்.
மதியம் 2 மணிக்கு பசியோடு வருகிறார் குந்தாணி. வந்து என்ன சமையல் செய்துள்ளாய் என்று வேல்முருகனிடம் கேட்கிறார். அம்மா, ஒரு வகை மீனை குழம்பு வைத்து விட்டேன். இன்னொரு வகை மீனை பாதி கழுவிக் கொண்டிருந்த திருமலைவேலு, தாங்கள் அழைத்ததாக நீதிமன்றம் சென்று விட்டார். அதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த மீன் அப்படியே இருக்கிறது என்கிறார்.
வந்ததே கோபம் குந்தாணிக்கு…. காலை 10 மணிக்கு வாங்கிய மீனை அப்படியே சமைக்காமல் வைத்திருக்கிறாயே என்ன மனுஷன் நீ… கொஞ்சமாவது அறிவு இருக்கா… ஃப்ரிஜ்ல வைக்கணும்னு கூடவா தெரியாது… அறிவுகெட்ட முண்டம்… உன்னையெல்லாம் வெச்சு வேலை வாங்கணும்னு எனக்கு தலையெழுத்து… என்று தாறுமாறாக கத்துகிறார். கத்தி விட்டு வெளியே போகச் சொல்கிறார். வேல்முருகனும் வந்து விடுகிறார்.
மறுநாள் காலை பத்து மணிக்கே, வேல்முருகனுக்கு மெமோ. “இந்நீதிமன்ற மசால்ச்சி விடுப்பில் சென்றதால், மசால்ச்சி பணிப் பொறுப்பை செய்ய அலுவலக உதவியாளராகிய உம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. மசால்ச்சி பணியில் ஒரு பகுதியான நீதிபதி வீட்டில் சமையல் செய்ய ஒப்படைக்கப்பட்டது. பகல் 2.25 மணிக்கு காலையில் வாங்கி வைத்த மீனை ஏன் சமையல் செய்யவில்லை என நீதிபதி அவர்கள் கூறியபோது என் ஒருவரால் மட்டும் சமையல் செய்ய இயலாது என்று எதிர்த்து நீதிபதியிடம் கூறியுள்ளீர்கள். இது உம்முடைய கீழ்படியாமையை காட்டுகிறது.” என்று கூறி, மூன்று தினங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மெமோ கொடுத்துள்ளார்.
மறுநாள் மீண்டும் வீட்டில் சமையல் செய்யுமாறு அனுப்பப்படுகிறார் வேல்முருகன். காலையிலயே குந்தாணி என்ன சமைக்க வேண்டும் என்று மெனுவை சொல்லி விடுகிறார். ரசம், பீன்ஸ் பொறியல், முருங்கைக் கீரை மற்றும் ஒரு கிலோ மீன் வருவல் என்று மெனுவை சொல்லி விடுகிறார்.
ஏற்கனவே மீனை சரியாக கழுவாமல் வாங்கிக் கட்டிக் கொண்ட அனுபவம் உள்ள வேல்முருகன், இந்த முறை, நீதிமன்றத்தில் உள்ள இன்னொரு அடிமை கம் அலுவலக உதவியாளர் கிங்ஸ்டனை உதவிக்கு அழைக்கிறார். இந்த முறை மீன் வாங்கி வரும் இடத்திலேயே தலை எடுத்து சுத்தம் செய்யப்பட்டே வாங்கி வரப்பட்டிருக்கிறது. இருவரும் சேர்ந்து மீனை நன்றாக சுத்தம் செய்கிறார்கள். மீனை சுத்தம் செய்து விட்டு, நன்றாக மசாலா தடவி ஊறவைத்து, குந்தாணிக்குப் பிடித்தது போல சுவையாக வறுத்து வைக்கிறார் வேல்முருகன். மொத்தம் 40 துண்டுகள் மீன் உள்ளன. குந்தாணியின் தந்தை வீட்டில் இருக்கிறார். வேல்முருகனின் சுவையான மீன் வருவலின் வாசனை கண்டு, குந்தாணியின் தந்தை 10 துண்டுகள் மீனை எடுத்து சாப்பிடுகிறார்.
மதியம் 2 மணிக்கு குந்தாணி வருகிறார். என்ன சமையல் செய்தாய் காட்டு என்கிறார். வேல்முருகன் மீன் வருவலைக் காட்டியதும், இப்படியா சமைப்பது… அப்படியே செதிலோடு சமைத்திருக்கிறாயே… என்று கத்துகிறார். அப்போது அருகில் இருந்த கிங்ஸ்டன் என்ற அடிமை, “அம்மா… இது செதில் இல்லம்மா… இந்த மீன் சாளை மீனும்மா… அது தோல்மா.. செதிலே இதில இருக்காது” என்கிறார்…
உடனே ஆத்திரமடைந்த குந்தாணி… “நீ உன் ஸ்டாஃப்புக்குத்தானே சப்போர்ட் பண்ணுவ….“ என்று கத்தி விட்டு, அந்த மீன் சட்டியை அப்படியே எடுத்துக் கொண்டு நீதிமன்றத்தில் நீதிபதி அறைக்குச் செல்கிறார்… நீதிமன்றத்தில் உள்ள அத்தனை ஊழியர்களையும் அழைக்கிறார். “பாருங்க இவன் எப்படி மீனை வருத்து வெச்சுருக்கான்னு… அப்படியே செதிலோட வருத்து வெச்சுருக்கான் பாருங்க“ என்று மீனை எடுத்துக் காட்டுகிறார். அந்த நீதிமன்றத்தின் ஹெட் க்ளர்க் வேல்முருகேசன். அவர் அந்த மீனைப் பார்த்து விட்டு, “அம்மா… இது சாளை மீன்… இதில் செதில் இருக்காது…“ என்கிறார்… “நீங்க எல்லாரும் உங்க ஸ்டாஃப்புக்குத்தானே சப்போர்ட் பண்ணுவீங்க… இது செதில்தான்… எனக்குத் தெரியும்.. எனக்கு வெஷத்தை வெச்சு கொல்லப்பாக்குறான்… எனக்கு செதிலோட சமைச்சு வெச்சதும் ஒண்ணுதான்… வெஷத்தை வெக்கறதும் ஒண்ணுதான்… அய்யோ… இவனை நம்பி என் புள்ளைங்களையெல்லாம் ஸ்கூலுக்கு அனுப்பறேனே…“ என்று ஆத்திரத்தில் கத்துகிறார் குந்தாணி.
வேல்முருகனைப் பார்த்து, “ஏய்.. நீ வெளியே போ… உள்ள வந்த உன்ன தொலைச்சுப் புடுவேன்“ என்கிறார். ஹெட் கிளர்க்கைப் பார்த்து, குந்தாணி, “இந்த நாயி என் கண்ணுலயே படக் கூடாது… கோர்ட் கேம்பஸ்குள்ளயே நொழையக் கூடாது.. அவனுக்கு உடனே சஸ்பென்ஷன் ஆர்டர் ரெடி பண்ணுங்க“ என்கிறார். வேல் முருகன் வெளியே சென்று வாசலிலேயே நிற்கிறார். ஒரு மணி நேரம் கழித்து ஹெட் க்ளர்கிடம் போன் செய்து கேட்கிறார். இல்லப்பா நீ போ என்று கூறுகிறார் ஹெட் கிளர்க். சார் நான் அட்டென்டன்சிஸ் கையெழுத்துப் போட்டிருக்கிறேன்… நான் எப்படிப் போக முடியும் என்று கேட்கிறார்.. நான் என்னப்பா பண்றது… வெயிட் பண்ணு என்கிறார். இரவு ஒன்பது மணி வரை, நீதிமன்றம் எதிரில் இருக்கும் டீக்கடையிலேயே காத்திருக்கிறார் வேல்முருகன். ஆனால் எந்தத் தகவலும் வராததால், ஹெட் கிளர்க்கை போனில் தொடர்பு கொள்கிறார். அவர் எந்த உத்தரவும் வரவில்லை. நாளை நீதிமன்றத்துக்கு வா… பார்க்கலாம் என்கிறார்.
ஏற்கனவே கொடுத்த மெமோவுக்கு விளக்கத்தோடு நீதிமன்றம் செல்கிறார் வேல்முருகன். தனது விளக்கத்தில் வேல்முருகன் “குறிப்பாணையில் கண்ட 19.11.2012 அன்று மசால்ச்சி பணிப்பொறுப்பு என்னிடம் அலுவலக ரீதியாக ஒப்படைக்கப்படவில்லை. வாய்மொழியாக சொல்லப்பட்டது. உத்தரவின்படி மீன் குழம்பு சமையல் செய்தேன். சமையல் செய்யும் பழக்கம் இல்லாததால், ஒரு வகை மீன் குழம்பு வைத்து முடித்து விட்டு, இன்னொரு வகை மீனை கழுவி சுத்தம் செய்ய தாமதம் ஆகி விட்டது. மேலும் தாங்கள் தற்காலிகமாக தங்கியிருந்த ADM குடியிருப்பில் இருந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புக்கு அன்றுதான் மாற்றம் செய்து இருந்ததால், சமையல் செய்யும் சாமான் மற்றும் மளிகைப் பொருட்களைத் தேடிக் கண்டுபிடிக்க மிகவும் காலதாமதமாகி விட்டது. தாமதம் வேண்டுமென்றோ, விருப்பப்பட்டோ செய்யப்படவில்லை. தற்செயலாக நடந்த தாமதம்தான். தாமதத்திற்கு மன்னித்துக் கொள்ளவும். இது மாதிரியான தாமதங்கள் இனி வரும் காலங்களில் நடைபெறாது என்று உறுதி கூறுகிறேன்.” என்று வேல்முருகன் விளக்கம் எழுதிக் கொடுக்கிறார்.
விளக்கத்தோடு நீதிமன்றம் சென்றால், ஹெட் கிளர்க், அம்மா உங்களை நீதிமன்றத்துக்குள்ள விடக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. நீ வெளியில வெயிட் பண்ணு என்கிறார். சார் எனக்கு பணி இடை நீக்க உத்தரவு வழங்கப்படவில்லை. எப்படி வேலைக்கு வராமல் இருக்க முடியும் என்று கேட்கிறார். எனக்குத் தெரியாது காத்திருங்கள் என்கிறார் ஹெட் கிளர்க்.
வேல்முருகன் தினமும் நீதிமன்றம் எதிரில் உள்ள டீக்கடையிலேயே அமர்ந்திருக்கிறார். ஆனால் எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை. இறுதியாக ஏழு நாட்கள் கழித்து பணி இடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு வேல்முருகனுக்கு வழங்கப்படுகிறது.
பணி இடைநீக்க உத்தவு கிடைத்ததும், வேல் முருகன் என்ன செய்வதென்று புரியாமல், வள்ளியூர் வழக்கறிஞர் சங்கத் தலைவரை சந்திக்கிறார். தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறார். வழக்கறிஞர் சங்கத் தலைவர் உட்பட 25 பேர் குந்தாணியை சந்திக்கிறார்கள். அவர்களிடம் குந்தாணி, “இந்த ஸ்டாஃப் அத்தனை பேரும் திமிரு புடிச்சவனுங்க… இவனுங்ககிட்ட வேலை வாங்க முடியாது. இது அட்மினிஸ்ட்ரேஷன் சம்பந்தப்பட்ட விஷயம் (எது மீன் கொழம்பு வைக்கறதா… ?) நீங்க இதுல தலையிடாதீங்க… வேல்முருகன் என்ன உங்களுக்கு சொந்தக்காரரா… ? நான் உங்க எல்லாருக்கும் ஆர்டர்ஸ் (சாதகமான தீர்ப்புகள்) தந்துக்கிட்டுதானே இருக்கேன்.. ஏதாவது மேட்டரை டிஸ்மிஸ் பண்றேனா….. உங்களுக்கு எதுனா பிரச்சினைனா சொல்லுங்க… இந்த விஷயத்துலையெல்லாம் தலையிடாதீங்க…”
வெளியே வந்த வழக்கறிஞர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா ? நீதிமன்ற ஊழியரை அநியாயமாக இடைநீக்கம் செய்த நீதிபதிக்கு எதிராக நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் செய்திருப்பார்கள் என்று நினைத்தீர்களென்றால், நீங்கள் முட்டாள்கள். வழக்கறிஞர்களுக்கு சாதகமாக தீர்ப்பு தரும் நீதிபதியை ஒரு முட்டாள் வக்கீல் கூட பகைத்துக் கொள்ளமாட்டான். அதுவும் ஒரு அடிமைக்காக நீதிபதியை யாராவது பகைத்துக் கொள்வார்களா… ? சாதகமாக தீர்ப்புக் கொடுக்கும் நீதிபதி இருந்தால், கிளையன்டுகளிடம், வசூலை பின்னி எடுக்கலாம் அல்லவா ? நீதிபதிகள் முன்னாள் வழக்கறிஞர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். வழக்கறிஞர்கள் வெளியே வந்து, “அம்மாக்கு கொஞ்சம் கூட உன் மேல கோவம் கொறையலப்பா…. எங்களால எதுவும் செய்ய முடியாதுப்பா“ என்று கைவிரித்து விடுகிறார்கள்.
வேல்முருகன், உடனடியாக அடிமைகள் சங்கத்தில் (நீதித்துறை ஊழியர்கள் சங்கம்) சென்று முறையிடுகிறார். அடிமைகள் சங்கப் பிரதிநிதிகள், தலைமை நீதிமன்ற நடுவர் (Chief Judicial Magistrate) சாருஹாசினி என்பவரிடம் சென்று முறையிடுகிறார்கள். அவர் உடனே கவனிப்பதாக வாக்களித்து, குந்தாணியிடம் பேசுகிறார். “மேடம்… அவன் ரொம்ப திமிர் பிடிச்சவன் மேடம்… அவனையெல்லாம் சஸ்பெண்ட் பண்ணாத்தான் அடங்குவான்.. நீங்க இதில தலையிடாதீங்க மேடம்“ என்று கூறிவிடுகிறார் குந்தாணி. குந்தாணி இப்படிக் கூறியதும், நீதிபதி சாருஹாசினி, தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று அடிமைகள் சங்கப் பிரதிநிதிகளிடம் கூறி விடுகிறார்.
தங்கள் முயற்சியில் சற்றும் சளைக்காத அடிமைகள் சங்கப்பிரதிநிதிகள், திருநெல்வேலி மாவட்ட நீதிபதியிடம் சென்று முறையிடுகிறார்கள். அவர் உடனடியாக தலைமை நீதிமன்ற நடுவரிடம் பேசுகிறார். தலைமை நீதிமன்ற நடுவர் சாருஹாசினி, தான் ஏற்கனவே பேசி விட்டதாகவும், குந்தாணி முடியவே முடியாத என்று மறுத்ததையும் தெரிவிக்கிறார்.
அதற்கு அடுத்த வாரத்தில் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில், நீதிமன்ற நடுவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்திற்குச் சென்ற குந்தாணியைப் பார்த்ததுமே, மாவட்ட நீதிபதி ராஜசேகர், குந்தாணியைப் பார்த்து, “ஏம்மா… மீன் கொழம்பு வைக்கலன்னா சஸ்பென்ட் பண்ணுவியாம்மா….” என்று கேட்கிறார். குந்தாணி “அய்யா… உடனே ரத்து பண்ணிட்றேன்யா…“ என்று கூறி விட்டு, கடந்த வியாழனன்று, வேல்முருகனின் பணி இடை நீக்கத்தை ரத்து செய்து உத்தரவிடுகிறார்.
இந்தக் குந்தாணி சென்ற இடமெல்லாம் ஏதாவது ஒரு ஏழரையை இழுத்து விடாமல் ஓய மாட்டார் என்கிறார்கள். இதற்கு முன் இந்த குந்தாணி செங்கோட்டை நீதிமன்றத்தில் வேலை பார்த்தார். அப்போது வழக்கறிஞர்களோடு தகராறு செய்ததால், வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மாற்றப்பட்டார்.
தற்போது பணியாற்றும் வள்ளியூர் நீதிமன்றத்துக்கு வந்ததும், வழக்கறிஞர்களைப் பகைத்தால் பின்னி விடுவார்கள் என்பதை உணர்ந்ததும், வழக்கறிஞர்களுக்கு சாதகமாக தீர்ப்பை வாரி வழங்கி, தனது சாடிச உணர்வை தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் காண்பித்து வருகிறார் இந்தக் குந்தாணி.
தற்போது பணி இடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்நதிருக்கும் வேல் முருகன், வள்ளியூர் நீதிமன்றத்தில் குந்தாணியால் பணி இடை நீக்கம் செய்யப்படும் நான்காவது ஊழியர்.
ரங்கம்மாள் என்ற உதவியாளர் – பென்ச் க்ளர்க், பதிவேடுகளை சரியாக பராமரிக்கவில்லை என்று இரண்டு முறை பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இவரின் மருமகன், இந்தக் குந்தாணியைப் போலவே ஒரு நீதிமன்ற நடுவராக இருந்தும், ரங்கம்மாள் தற்பொழுதும் பணி இடைநீக்கத்தில் இருக்கிறார்.
நெல்சம் சாம்ராஜ் என்ற இளநிலை உதவியாளர். இவர் செய்த குற்றம், உடல் நிலை சரியில்லாததால் மருத்துவ விடுப்பில் சென்றது.
மூன்றாவதாக குந்தாணியின் கோபத்துக்கு பலியானவர், வள்ளியூர் நீதிமன்றத்தின் வாட்ச்மேன். இவர் செய்த குற்றம் மிகப் பெரிய குற்றம். ஒரு நாள் இரவு 11.30 மணிக்கு குந்தாணி தன் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார். அப்போது அந்த வாட்ச்மேன் சட்டையில்லாமல் அமர்ந்திருக்கிறார். இரவு 11.30 மணிக்கு நீதிபதி வருகையில் சட்டை இல்லாமல் அமர்ந்திருந்ததற்காக அவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த காரணங்களுக்காக, வள்ளியூர் மாவட்ட நீதிபதி கிறிஸ்டல் பபிதா குந்தாணி என்று அழைக்கப்படுகிறாரா என்றால் இல்லை. இவரால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட யாரையுமே சஸ்பெண்ட் செய்ய நீதிமன்ற நடுவருக்கு அதிகாரம் இல்லை. இவர் சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவுகள் எதுவுமே செல்லாது. தமிழ்நாடு அடிப்படை பணியாளர்கள் விதிகளின் படி (Tamil Nadu Basic Service Rules), நீதித்துறையைப் பொறுத்தவரை, அலுவலக உதவியாளர், வாட்ச்மேன் உள்ளிட்ட அத்தனை பணியாளர்களையும் சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் படைத்தவர், மாவட்ட நீதித்துறை நடுவர். அதாவது தலைமை நீதித்துறை நடுவர் (Chief Judicial Magistrate) ஒரு மாவட்டத்துக்கு ஒரு தலைமை நீதித்துறை நடுவர்தான் இருப்பார்கள். ஆனால், கிறிஸ்டல் பபிதாவைப் போல பல நீதித்துறை நடுவர்கள் இருப்பார்கள். திருநெல்வேலி மாவட்டத்தையே எடுத்துக் கொண்டால், திருநெல்வேலி, தென்காசி, வள்ளியூர், அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், செங்கோட்டை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, சிவகிரி என்று ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு நீதிமன்ற நடுவர் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர்தான் கிறிஸ்டல் பபிதா என்ற குந்தாணி. இந்த அத்தனை வட்டங்களில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றும் அலுவல உதவியாளர் வரையிலான பதவியில் உள்ளவர்களை பணி இடைநீக்கம் செய்யும் அதிகாரம், தலைமை நீதித்துறை நடுவரிடம் மட்டுமே இருக்கிறது. அலுவலக உதவியாளரையே தலைமை நீதித்துறை நடுவர்தான் சஸ்பென்ட் செய்ய முடியும் என்றால், இளநிலை உதவியாளர், உதவியாளர் போன்ற பணியிடங்களில் உள்ளவர்களை, மாவட்ட நீதிபதி (Principal District Judge) மட்டுமே சஸ்பெண்ட் செய்ய முடியும். தனக்கு ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்பது கூட தெரியாமல், புத்தகக் கண்காட்சியில் நோட்டீஸ் விநியோகிப்பவனைப் போல சஸ்பென்ஷன் உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருக்கும் இந்த வள்ளியூர் மாவட்ட நீதித்துறை நடுவர் கிறிஸ்டல் பபிதா, குந்தாணியா இல்லையா… நீங்களே கூறுங்கள்… அடிப்படை சட்டமே தெரியாத இவரைப் போன்றவர்களிடம்தான் நமது நீதித்துறை சிக்கியிருக்கிறது. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் உதயக்குமாருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தது, இதே குந்தாணிதான்.
அன்பார்ந்த தோழர்களே… வேல்முருகனுக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது. தமிழகத்தில் உள்ள அத்தனை நீதிமன்றங்களிலும், அலுவலக உதவியாளர்களாக உள்ளவர்கள் யாரையும், நீதித்துறை நடுவர்களோ, நீதிபதிகளோ, வீட்டு வேலைக்கு பயன்படுத்தக் கூடாது என்று அத்தனை நீதிபதிகளுக்கும் உத்தரவிடுமாறு, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், சென்னனை உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து வெகு விரைவில், பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது என்பதையும், சவுக்கு மகிழ்ச்சியோடு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறது.
குறிப்பு : சில தோழர்கள் குந்தாணி என்ற சொல் குறித்து சந்தேகங்கள் எழுப்பியுள்ளனர்.
கிராமப்புரங்களில், அறிவில்லாத பெண் என்ற பொருளில் இந்தச் சொல் புழக்கத்தில் உள்ளது.
அதே பொருளில்தான் இக்கட்டுரையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Kundhani dha
Neenga sangi thaana
Stupid woman…
அடச்சீ ,