ஜாபர் சேட்டுக்கு இன்று பிறந்த நாள். எதிரியாக இருந்தாலும், பொய் வழக்கு போட்டு, சவுக்கை சிறைக்கு அனுப்பியிருந்தாலும், ஜாபருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லும் பக்குவம் சவுக்குக்கு உண்டு.
தினமும் ஜாபர் சேட், சவுக்கை கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டிருந்தாலும், சவுக்கு பார்த்தீர்களா ஜாபர், உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்கிறது ?
இந்த பிறந்த நாளிலாவது நீங்கள் ஒழுங்காக இருப்பீர்கள் என்று பார்த்தால், இன்று கூட ஆணவமாகவே நீங்கள் பேசியிருக்கிறீர்கள் ஜாபர்.
ஜிஆர்டி டெம்பிள் பே வில் 3 காட்டேஜுகள் புக் செய்யப் பட்டு இன்று உங்கள் குடும்பமும், ஆண்டெனா தலையர் என்று அன்போடு அழைக்கப் படும் சங்கர் ஜிவாலும், உங்களின் பினாமி ஜெய்சங்கரும் குடும்பத்தோடு இன்பச் சுற்றுலா சென்றது நல்ல விஷயம் தான் ஜாபர். ஆனால் இந்த இன்பச் சுற்றுலாவுக்குக் கூட உங்கள் சொந்தக் காசை செலவு செய்ய மாட்டீர்களா ?
பிறந்த நாளில் கூட ?
மாதம் ஒரு லட்ச ரூபாய் மக்கள் வரிப் பணத்திலிருந்து சம்பளம் வாங்குகிறீர்களே ஜாபர். ரகசிய நிதியிலிருந்து லட்சக் கணக்கான ரூபாய்களை ஆட்டையைப் போடுகிறீர்களே…. டெம்பிள் பேயில் காட்டேஜ் அதிக பட்சம் 15 ஆயிரம் இருக்குமா ?
சரக்காவது உங்கள் காசில் வாங்கினீர்களா அதுவும் ஜெய்சங்கர் பணம் தானா ? ஏனென்றால், சங்கர் ஜிவால் பத்து ரவுண்டுகள் அடிப்பாராமே ?
ஜெய்சங்கர் உங்களுக்காக செய்துள்ள முதலீடுகளைப் பற்றி சவுக்கு விசாரித்து வருகிறது ஜாபர். ஆ.ராசா வீட்டில் ரெய்டு நடக்கும் போது, ரெய்டு பற்றி முன் கூட்டியே தகவல் அறிந்த நீங்கள் ஜெய்சங்கரை ராசாவோடு இருக்குமாறு அனுப்பி வைத்தது, சென்னையில் ரெய்டு நடக்க இருக்கிறது என்பதை அறிந்து, அதிர்ந்து போய் கோபப் பட்டதும், சிபிஐ அதிகாரிகளின் தொலைபேசியையே ஒட்டுக் கேட்கும் அளவுக்கு உங்களுக்கு துணிச்சல் வளர்ந்திருப்பதும் சவுக்குக்கு தெரியும் ஜாபர்.
சவுக்கைப் போலவே, சிபிஐயும், உங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
ஆணவத்தோடு திரியும் உங்கள் நாட்கள் எண்ணப் படுகிறது ஜாபர். சவுக்கின் எச்சரிக்கைகளை மதிக்காமல், ஆணவத்தோடு திரிந்த நீங்கள், உங்கள் அழிவு நேரத்தில் சவுக்கை நினைத்துப் பார்ப்பீர்கள்.
அது வரை இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.