ஹைதராபாத்தில் நடந்த ஒரு ஒலிநாடா வெளியீட்டு விழாவில் குஷ்பு கலந்து கொண்ட போது, அவர் உடுத்தியிருந்த புடவையில் இந்துக் கடவுளர்கள் படம் இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சர்ச்சையை எழுப்பியவர்கள், இந்து மக்கள் கட்சியினர். இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நடிகை குஷ்பு கடவுள்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார். ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து பங்கேற்று உள்ளார். அவரது சேலை பார்டரில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர், யோகங்களின் தலைவர் கிருஷ்ணர், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை போதித்த ராமர் போன்ற இந்து கடவுள் படங்கள் உள்ளன. அதை மார்பில் போர்த்திக் கொண்டு விழாவில் பங்கேற்று உள்ளார். இது இந்துக் கடவுள்களை அவமதிப்பது ஆகும். இந்த குற்றத்தை அவர் தெரியாமல் செய்து இருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தெரிந்தே செய்து இருந்தால் குஷ்புக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.”
இந்து மக்கள் கட்சி, சந்து மக்கள் கட்சி போன்ற கட்சிகள் நடத்தும் இது போன்ற போராட்டங்களையெல்லாம், குஷ்பு செய்தது போலவே உதாசீனப்படுத்த வேண்டும். இவர்களெல்லாம், வேலை இல்லாத வெட்டிப்பயல்கள் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. விலை மகளிரிடம் சென்று, அங்கே இருக்கும் சாமி படத்தின் மீது வேட்டியைப் போர்த்தி விட்டு, வேட்டியைப் போர்த்தியதால் சாமிக்குக் கண் தெரியாது என்று கூறும் பொறுக்கிகள் இவர்கள். இந்து மக்கள் கட்சிப் பிரமுகர் என்று கூறி விட்டு, இந்து மதத்தை அவமதித்து விட்டதாக அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு, சில போராட்டங்களை நடத்தும் ஒரு பிரமுகர், சென்னை நகரில் உள்ள பிரபலமான மது விடுதிகளுக்கும், பப்புகளுக்கும் தன் மகள் வயதுடைய பெண்களை அழைத்துச் சென்று நடனமாடுபவர். இது போல இந்தப் பொறுக்கிகளின் மறுபக்கத்தை ஆராய்ந்தால் ஆபாசமும், அறுவெறுப்புமே மிஞ்சும். சினிமாவில் எப்போது கடவுளைப் பற்றி ஏதாவது பேசுவார்கள், சர்ச்சையைக் கிளப்பி சினிமாத் தயாரிப்பாளர்களிடம் பணத்தைப் பிடுங்கலாம் என்று அலைவதைத் தவிர இந்தக் கூட்டத்திற்கு வேறு வேலையே இல்லை. இந்தப் பொறுக்கிகளைப் பற்றிப் பேசி, நமது நேரத்தை வீணாக்க வேண்டாம்.
நாம் இப்போது பேசப்போவது, சித்திரகுப்தன் என்ற புனைப்பெயரில் ஒளிந்திருக்கும் ஒரு பொறுக்கியைப் பற்றி. திராவிடக் கட்சிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும், திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் நாளேடுகள் முரசொலி மற்றும் நமது எம்.ஜி.ஆர். இந்த இரண்டு கட்சிகளுமே நவீன “சரோஜா தேவிகள்” என்று அழைக்கும் அளவுக்கு இரண்டு நாளேடுகளிலும் ஒருவரை ஒருவர் மாறி மாறி வீசிக்கொள்ளும் வசவுகளுக்கு பஞ்சமே இருக்காது. நமது எம்.ஜி.ஆரில் சித்திரகுப்தன் என்றால், முரசொலியில் சிலந்தி என்ற பெயரில் ஒரு பொறுக்கி இருக்கிறார்.
சனிக்கிழமை அன்று வெளியான நமது எம்.ஜி.ஆரில் குஷ்பு புடவை குறித்து சித்திரகுப்தன் என்ற பெயரில் வெளியான கவிதை.
தீயசக்தியின் திடீர் வாரிசு.
முப்புரம் பொருளுக்கும்
முதல்வனான
ராமபிரானின்
திருவுருவம்
மு.க.வின்
குலக்கொழுந்து
குஷ்புவின் முந்தானையில்…
இன்னொரு
பெண்ணை
சிந்தையாலும்
தொடேன் எனும்
ஏகபத்தினி
விரதன்
ராமனின்
அழகுருவம்
எண்ணற்ற
பிரபுக்களை
ஏய்த்திட்ட
பெண்ணினத்து
அவலம்
குஷ்புவின்
சேலையில்
என்றால்…..
எப்படித்தான்
பொறுப்பார்கள்
இராம பக்தர்கள் !
கருட பகவானை விட
வேகம்
கொண்டவன்
ஹயக்கிரீவரினும்
அறிவும்
ஆற்றலும்
படைத்தவன்
சனி
பகவானாலும்
வளைக்க
முடியாத
சர்வ வல்லமை
கொண்டவன்
நைட்டிக
பிரம்மச்சாரி
அஞ்சலை
மைந்தன்
அனுமனின்
அழகு முகம்
அடங்காப்பிடாரி
குஷ்புவின்
புடவைத்
தலைப்பில்
என்றால்….
எப்படித்தான்
பொறுப்பார்கன்
அனும பக்தர்கள் !
பாஞ்சாலி
சேலை கேட்க,
பார்த்தனவன்
கீதை கேட்க
உலகத்தையும்
சுட்டு விரல் கொண்டு
சுழற்றுகிற
கிருஷ்ண
பரமாத்மா
அச்சமும்
நாணமும்
மடமும்
பயிர்ப்பும்
அறவே துறந்த
மானங்கெட்ட
குஷ்புவின்
மாராப்பில் என்றால்….
அய்யகோ
எப்படிப்
பொறுக்கும்
ஆன்மீக
அடியவர்
நெஞ்சம் !
கற்புக்கு
புது விளக்கம்
சொன்ன
கழிசடையின்
புடவை
முந்தானையில்
கடவுளின்
திருவுருவங்கள்
என்றால்
கைகூப்பி
வணங்கும்
இதயங்கள்
கண்ணீர் சிந்தாதோ !
இந்துக்கள் என்றால்
திருடர்கள் !
கலாம் என்றால்
கலகம்
ராமன் எந்த
பொறியியல்
கல்லூரியில்
படித்தார் ?
கன்னியா
ஸ்திரிகளெல்லாம்
கண்ணியம் காப்பவர்களா ?
நெற்றியில்
இருக்கும்
குங்குமம் என்ன
வழிகின்ற
ரத்தமா ?
என்றெல்லாம்
இறை நம்பிக்கை
கொண்டோரை
இம்சிக்கும்
நோக்கத்தால்
நாராச
நடைகொண்டு
நாலாந்தரமாய்
விளித்த
கண்ணக்கோல்
கருணாவின்
எண்ணத்தையே
கற்புநெறி
நங்கையும்
மாராப்பு
சேலை மூலம்
ஊருக்கே
போதிக்கிறாரோ.. !
கற்புக்கு
எதிராக…
கடவுளர்க்கு
எதிராக…
கருணாவின்
வழியிலேயே
பிரச்சார
பீரங்கி குஷ்பூவும்
பித்தலாட்டம்
புரிகிறாரே !
வில்லன் கருணா
வழியிலேயே
வில்லங்கம்
பிரிந்து
விளம்பரம்
தேடுகிறாரே !
உடுப்பி கிருஷ்ணன்
கோவிலுக்கு
ராசாத்தி !
வழக்கறுத்தீஸ்வரர்
கோவிலுக்கு
ராசாத்தி !
அங்காளம்மன்
ஆலயத்தில் தயாளு !
ஆலயங்கள்
யாவிலும்
மருமகள் துர்கா….
என்றே கருணாநிதி
குடும்பமெல்லாம்
கடவுளைக்
கைகூப்பி
அலையும்போது
கருணாநிதி
வழியில்
குஷ்பு மட்டுமே
என்றால்…
தீயசக்தியின்
திடீர் வாரிசே
குலக்கொழுந்து
குஷ்புதானோ !
சித்திரகுப்தன்.
பிறப்பால், தாழ்த்தப்பட்டவன் என்றும், இழி சாதி என்றும் வகுத்து வைத்து, அதை அத்தனை பேரும் கடைபிடிக்க வலியுறுத்தும் இந்து மதத்தையும், அதன் கடவுள்களையும் செருப்பால் அடிக்க வேண்டும். குஷ்பு புடவையில் கடவுளர் படங்களை வைத்து மரியாதை செய்திருக்கிறார்.
ராமனைப் பற்றி, தந்தை பெரியார் 1935ல் இவ்வாறு எழுதுகிறார்.
“1) ராமன் தாடகையைக் கொன்று யாகம் நடத்திக்கொடுத்தான்.
2) சூர்ப்பநகையின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி தம்பிக்கு உத்தரவு கொடுத்தான்.
3) வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்குப் பட்டங் கட்டினான்.
4) ராவணனைக் கொன்று விபீஷணனுக்குப் பட்டங் கட்டினான்.
5) ஐந்து மாத கர்ப்பத்தோடு தன் பெண்ஜாதியான சீதையை விபசாரப் பட்டம் கட்டி தனியே காட்டில் கொண்டுபோய் விட்டுவந்தான்.
இந்த ஐந்து அரும்பெருங் காரியங்களைச் செய்திருக்கிறான் ராமன். இந்தக் காரியங்களிலிருந்து ராமனிடத்தில் தெய்வத்தன்மையோ, நீதியோ, அறிவுடைமையோ, மனுஷ்யத் தன்மையோ ஏதாவது இருக்கிறதாகச் சொல்ல முடியுமா?
ராமாயண சீதையானவள் உலகப்பெண்களுக்கு ஓர் உதாரணமாய் கற்பிக்கப்பட்டவள்; அவளுடைய பதிபக்தி மிக்க விசேஷமாய் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அவளது பிறப்பைப்பற்றி அறிய அறிவுக்கு ஒத்ததான ஆதாரம் ஒன்றும் இல்லை. மற்றபடி ராமனுக்கு மனைவியானாள் என்பதும், ராமனுடன் காட்டுக்கு வந்துவிட்டாள் என்பதும், ராவணன் தூக்கிக் கொண்டு போய் எவ்வளவு முயற்சித்தும் அவள் இணங்கவில்லை என்பதுமாகிய காரியங்கள் தான் சீதையின் பெருமைக்குக் காரணமாகும்.
அப்படிப்பட்ட சீதையின் கற்பு, கொண்ட கணவனால் – தெய்வத் தன்மை கொண்ட ராமனால் சீதையுடன் சதாசர்வ காலமும் பழகி அவளது குணா குணங்களை நன்றாய் அறிந்த ராமனால் ஒரு தடவை அல்லாமல் பலதடவை சந்தேகிக்கும்படி ஏற்பட்டுவிட்டது. சீதை நெருப்பில் இறங்கி வந்துகூட ராமனுக்கு அவள் மீதில் உள்ள சந்தேகம் தீராமல் போய்விட்டது. கடைசியாக கதையின் முடிவானது சீதை 5 மாத கர்ப்பத்துடன் தனியே காட்டிற்குக் கொண்டுபோய் விடப்பட்டாள் என்று முடிந்தது.
இந்தக் காரியம் எப்படி மன்னிக்கப்படக் கூடியது என்பது விளங்க வில்லை. “உலக மெப்புதலைக்காக செய்யப்பட்டது” என்றாலும் இந்தச் சம்பவத்தால் மக்களுக்கு என்ன நீதி, படிப்பினை ஏற்பட்டது என்பது நமக்கு விளங்கவில்லை. இதைப்பார்க்கின்றபோது, அதாவது தனது மனைவியை 5 மாத கர்ப்பத்துடன் துஷ்ட ஜந்துக்கள் வாழும் கானகத்தில் கொண்டுபோய் தனியே விட்டுவரும்படி செய்தவன், தாடகையைக் கொன்றதும், சூர்ப்ப நகையின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி செய்ததும் ஒரு ஆச்சரியமென்று சொல்லமுடியாது. ஆகவே ராமன் ஆண்கள் விஷயத்தில் நடந்து கொண்ட மாதிரிக்கு வாலி, ராவணன் வதையும், சுக்கிரீவன் விபீஷண நேசமும், ராமன் பெண்கள் விஷயத்தில் நடந்துகொண்ட மாதிரிக்கு தாடகை வதம், சூர்ப்பனகை பங்கம், சீதை காட்டுக்கு அனுப்பப்பட்டதும் முதலியவை தக்கதொரு அத்தாட்சியாகும்.”
இப்படிப்பட்ட ராமனுக்கு என்ன மரியாதை வேண்டியிருக்கிறது ? நியாயமாக, கால் செருப்பில் ராமன் படத்தைப் போடுவதுதான் பொருத்தம். அதனால்தான், பெரியார் கடவுளர் சிலைகளை செருப்பால் அடித்தார்.
திடீரென்று இந்துக் கடவுள்களுக்காக வக்காலத்து வாங்கி, குஷ்புவை தரக்குறைவாக விமர்சித்திருக்கும் அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேட்டில் வந்திருக்கும் அந்த மூன்றாந்தரக் கவிதை, வன்மையாக கண்டிக்கத்தக்கது. குஷ்வுபோடு நமக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவரை இது போல விமர்சிப்பதை ஏற்கவும் இயலாது, மன்னிக்கவும் இயலாது.
குஷ்புவைப் பற்றி இன்று தரக்குறைவாக விமர்சிக்கும், அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடு, குஷ்பு திமுகவில் சேர்வதற்கு முன், ஜெயா டிவியின் ஜாக்பாட் நிகழ்ச்சிக்காக இதே குஷ்புவை தாங்கு தாங்கென்று தாங்கினார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. அந்த ஜாக்பாட் நிகழ்ச்சியை பெண்கள் அதிகம் விரும்பிப் பார்ப்பார்கள். ஜெயா டிவியில் டிஆர்பி ரேட்டிங் உள்ள ஒரே நிகழ்ச்சி ஜாக்பாட் மட்டும்தான். குஷ்பு இந்தியா டுடேவில் கற்பு குறித்த சர்ச்சைக்குரிய கட்டுரை எழுதிய பிறகும், ஜாக்பாட் நிகழ்ச்சி நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
நேற்று வரை குஷ்புவை வைத்து வியாபாரம் செய்து லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்த அதே அதிமுகதான் இன்று குஷ்புவை தரம்தாழ்ந்து விமர்சிக்கிறது. குஷ்புவை விமர்சிப்பது போலவே, ஜெயலலிதாவைப் பற்றி விமர்சிக்கவும் ஏராளமான விவகாரங்கள் இருக்கின்றன. தனது தனிப்பட்ட வாழ்வு குறித்து எந்த விதமான செய்திகளும் வெளி வந்து விடக் கூடாது என்பதில் ஜெயலலிதா மிகக் கவனமாக இருக்கிறார். அப்படி வெளி வரக்கூடாது என்று ஜெயலலிதா அஞ்சுவதிலிருந்தே, அவரது வாழ்க்கையில் மறைக்கப்பட வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன என்பது தெரியும். 2011 மார்ச் மாதம் அவுட்லுக் இதழில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை எழுத்தாளர் வாசந்தி எழுத இருப்பதாக, அப்புத்தகத்திலிருந்து ஒரு சில அத்தியாயங்கள் மட்டும் வெளியாயின.
அந்த இதழ் வந்த ஒரே வாரத்தில், அப்புத்தகத்தை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றார் ஜெயலலிதா. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது கூட, வேறு யாரும் அனுமதிக்கப்படாமல், அது “இன் கேமரா” ப்ரொசீடிங்ஸாக நடந்தது. தன் கணவனோடு வாழ்ந்து வந்த பெண்ணை, அவள் கணவனிடமிருந்து பிரித்து, தன்னோடு வைத்துக் கொண்டிருப்பவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவைப் பற்றி சித்திரகுப்தனைப் போல ஆயிரம் கவிதைகள் விஷயங்கள் உள்ளன. ஆனால், அதையெல்லாம் யாரும் பேசாமல், எழுதாமல் இருப்பதன் காரணம், நாகரீகம் கருதியே.
திமுகவை விமர்சிப்பதற்கு விஷயங்களா இல்லை ? ஆயிரம் விஷயங்கள் உள்ளனவே… அதையெல்லாம் விட்டு விட்டு, பெண் உடுத்தியிருக்கும் புடவையை ஆராய்ந்து, அதைப் பற்றி ஒரு முழுப்பக்கத்திற்கு கவிதை வெளியிடும் அளவுக்கு அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடு தரம் தாழ்ந்துள்ளது. ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, இப்படிப்பட்ட மஞ்சள் எழுத்துக்களை ஜெயலலிதா எப்படி அனுமதிக்கிறார் என்பது தெரியவில்லை. இல்லை அவரும் இது போன்ற மஞ்சள் எழுத்துக்களை படித்து ரசிக்கிறாரா என்பதும் தெரியவில்லை.
எழுத்தாளர்களும், பெண்ணியவாதிகளும் ஏன் இது குறித்தெல்லாம் வாய் திறக்க வில்லை என்பது வியப்பாக இருக்கிறது. சமூக வலைத்தளங்கள், சித்திரகுப்தன் போன்ற பொறுக்கிகளையும், இந்தப் பொறுக்கிகளை போஷாக்காக வளர்த்து வரும் ஜெயலலிதாக்களையும் கண்டிக்கத்தான் இருக்கிறது. இது போன்ற ஆபாச எழுத்துக்களைத் தாங்கிவரும், நமது எம்.ஜி.ஆர் போன்ற நாளேடுகளைக் கண்டிப்பது ஒவ்வொருவரின் கடமை.
ஜெ. என்ற உருவம் உயிருடன் அதுவும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில் எழுதிய கட்டுரை. மிகவும் வியப்புக்குரியது.