இருவர் படம் பார்த்திருப்பீர்கள்.
அந்தப் படம் எதைப் பற்றியது என்ன கதை என்பதைப் பற்றி இதன் விக்கீபீடியா பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அந்தப் படத்தில் “உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும், மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே” என்ற ஒரு கவிதைப் பாடல் வரும். இந்தப் பாடால் எந்த இடத்தில் எந்த சூழலில் வருகிறது என்பது உங்களுக்குப் புரிந்தால் சரி. அல்லது, அடுத்த முறை தொலைக்காட்சியில் இப்படம் காட்டப் படும் போது பாருங்கள். அந்தப் பாடல் வரிகள் இதோ…..
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்
எணணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி
பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே
எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை
அச்சம் களைந்தேன் என் ஆசையினை நீ அணிந்தாய்
ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணிந்தாய்
கண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே…
இப்போது நீரா ராடியா உரையாடல்கள் வெளியாகி, சந்தி சிரிக்கிறது இரண்டு மாதங்களாய். கருணாநிதி, நேற்று செய்தியாளர்களைப் பார்த்து பேசிய விதம் பற்றி தனியே ஒரு பதிவு எழுதப் படும் என்றாலும், எப்படிப் பட்ட ஒரு விரக்தியின் உச்சத்தில் அவர் இருக்கிறார் என்பது நன்றாக புரிந்தது.
இதே கவிதையை இப்போது கருணாநிதி பாடினால் எப்படிப் பாடுவார் என்பதை பாருங்களேன்…..
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே…
ஒரு நூறு கோடிதான் முதல்வராய் நான் சேர்த்தேன்
ஒரு லட்சம் கோடியை உன் மகள் சேர்த்தாளடி
வோல்டாசில் சில கோடி
வெஸ்ட் கேட்டில் பல கோடி
மொத்த தமிழகத்தில் சேர்த்தீர்கள் பல்லாயிரம் கோடி
கூச்ச நாச்சம் பார்க்காமல்
எல்லா இடங்களிலும் முதலீடு லட்சம் கோடி
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
எது நியாயம் எது பாவம் இருவருக்கும் (தாய் மகள்) தோன்றவில்லை
நம் பணமா மக்கள் பணமா அதைப் பற்றி அறியவில்லை
யார் தொடங்க ? யார் முடிக்க ? இருவருக்கும் தெரியவில்லை
அச்சம் களைந்து ராடியாவை நீ அணைத்தாய்
ஆசைப் பட்டு ராடியாவை மகள் அணைத்தாள்
இருவரையும் சேர்த்து சிபிஐ அன்னை அணைக்கிறாள்
நிரந்தர முதல்வர் ஆசை கனவாக மறைந்ததனால்
விசாரணையில் (சிபிஐ) அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
நீரால் அமையும் உலகென்றான் அய்யன் வள்ளுவன்
தாய்க்கும் சேய்க்கும், நீராவால் அமைகிறது உலகம்
கட்டிய கணவன் கைகொடுக்க மாட்டான் என
பம்பாய் பதுமையிடம் புகலிடம் தேடினாய்.
பதுமையிடம் நீ பேச பதுமை உனை கேட்க
இருவர் பேசுவதையும் இன்று ஊரே கேட்குதடி…
தமிழினத்தின் தலைவன் என்று தரணியென்னை புகழுதடி..
நீ ஆங்கிலத்தில் பேசியதை கேட்டு காறி உமிழுதடி…
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே