“நாடுகள் விளையாட்டின் மூலம் தேசியத்தை வளர்த்து எடுக்கின்றது. விளையாட்டு ஒரு நாட்டின் பரப்புரைக்கான முக்கிய கருவியாகப் பயன்படுகின்றது”.
– மாட்டின் வினோகர் – “போட்டிக்கு அப்பால்: விளையாட்டும் அரசியலும்”
(More Than a Game: Sports and Politics by Martin Barry Vinokur)
அரசியலும் விளையாட்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை என்ற எண்ணத்தில் ஈழப் இனபடுகொலைக்கு நீதி தேடும் நம்மில் பலர் சிறிலங்கா அணி கிரிக்கெட் விளையாடினால் என்ன என்று கேட்க்கிறார்கள். இன்னும் சிலர் இன்றைய தமிழக அரசியலின் பலவீன நிலமையை தமக்கு சாதகமாக பயன் படுத்திக்கொண்டு, தமது சுய நலங்களுக்கும், புகழுக்காகவும் விளையாட்டையும் அரசியலையும் பிரித்துப்பாக்க வேண்டும் என்ற கருத்தை வலுப்படுத்தமுயல்கின்றனர்.
உண்மையில், அரசியலும் விளையாட்டும் இன்றைய உலகில் பின்னிப் பிணைந்திருப்பதனை நாம் உணர்ந்தால் சிறிலங்கா கிரிக்கெட் அணியை நாம் ஆதரிப்பதன் ஆபத்தையும் சிறிலங்கா இனவாத அரசு விளையாட்டு என்ற போர்வையில் தமது பிரச்சாரத்துக்காக பின்னும் சதி வலைகளையும் உணர்வோம்.
இன்றைய வர்த்தகமயப்படுத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் அரசியலே முதன்மைப்படுகிறது. அரசியலுக்காக விளையாட்டும் பயன் படுத்தப்படுகிறது.
உலக வரலாற்றில் அரசியலும் விளையாட்டும் இணைந்து செயற்பட்ட சந்தர்ப்பங்கள் அநேகம்.
தென்னாப்பிரிக்க இனவாத அரசியலை ஒழிப்பதற்கு அந்நாட்டின் விளையாட்டுப் புறக்கணிப்பு மிகவும் துணைபோனது அண்மையில் உலகில் மிகவும் பிரபல்யமாக நடந்தேறிய ஒரு விடயம்.இங்கு அரசியலும் விளையாட்டும் கலந்து ஒரு நன்மையான முடிவை தந்தமையானது, விளையாட்டும் அரசியலும் பிரிந்திருக்க வேண்டும் என்ற விவாதத்தை வலுவற்றதாகச் செய்துள்ளது.
தென்னாப்பிரிக்க நாட்டின் இனவாத அரசியலுக்கு எதிரான புறக்கணிப்பு பல அரங்குகளில் நடைபெற்றது. மொன்றியோல் நகரில் 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஒலிம்பிக் போட்டியை 22 ஆப்பிரிக்க நாடுகள் புறக்கணிப்புச் செய்தன.
அங்கு ஒலிம்பிக்கில் தென்னாப்பிரிக்காவோடு விளையாட்டுப் போட்டிகள் நடத்திய நியூசிலாந்து நாடும் பங்கு பற்றியதனையே ஆப்பிரிக்க நாடுகள் எதிர்த்தன. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவோடு ஏனைய நாடுகள் விளையாட்டுத் தொடர்புகளை வைத்திருப்பதில்லை என்று 1977 இல் கிலெனீகல் என்ற இடத்தில் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. http://en.wikipedia.org/wiki/Gleneagles_Agreement The Gleneagles Agreement was unanimously approved by the Commonwealth of Nations at a meeting at Gleneagles, Auchterarder, Scotland. In 1977, Commonwealth Presidents and Prime Ministers agreed, as part of their support for the international campaign against apartheid, to discourage contact and competition between their sportsmen and sporting organizations, teams or individuals from South Africa.
இது போல் வேறு பல அரசியல் காரணங்களுக்காக விளையாட்டுத் தொடர்பை வெவ்வேறு நாடுகளும் துண்டித்துக்கொண்ட சந்தர்ப்பங்கள் பல உள்ளன.
தைவானை ஒலிம்பிக்கில் ஒரு நாடாக அங்கீகரித்ததற்கு எதிராக மாவோ 1956யில் ஒலிம்பிக்கை வெறும் விளையாட்டு என்று விட்டுவிடாமல் சீனா புறக்கணிப்பதாக அறிவித்தார். அடுத்த 25 வருடம் அதே காரணத்திற்க்காக சீனா ஒலிம்பிக்கை புறக்கணித்தது.
அதே 1956ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் ஹங்கேரி படையெடுப்பை கண்டித்து ஒலிம்பிக்கை நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன் போன்ற நாடுகள் புறக்கணித்தது.
1980 ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக்கை ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்ததை கண்டித்து அமெரிக்கா உள்ளிட்ட 62 நாடுகள் புறக்கணித்தது. அதற்கு பழிக்கு பழியாக 1984 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய ஒலிம்பிக்கை சோவியத் யூனியன் உள்ளிட்ட 16 நாடுகள் புறக்கணித்தது.
1988 ஆம் சியோலில் நடந்த ஒலிம்பிக்கை தென்கொரியாவோடு சேர்ந்து நடத்த அனுமதிக்காததை கண்டித்து வடகொரியா புறக்கணித்தது. அத்தோடு சேர்ந்து கியூபாவும் எதியோபியாவும் புறக்கணித்தது.
ஈராக் நாடு 1990 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கு கொள்வதனை ஆசிய ஒலிம்பிக் குழு தடை செய்தது. ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தனை எதிர்த்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விளையாட்டா இல்லை அரசியலா?
இப்படி பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். தென்னாப்பிரிக்காவின் இனவாதமற்ற விளையாட்டுக் குழுவின் தலைவரான ஜோ இபிரகிம் விளையாட்டுப் புறக்கணிப்புக்கூடாக எப்படி அரசியலை மாற்றலாம் என்பதனை பின்வருமாறு கூறுகிறார்,
“விளையாட்டுப் புறக்கணிப்பு ஒரு நாட்டை அது பாராமுகமாக இருக்கும் அதனுடைய அரசியல் விடயங்களில் மாற்றங்கள் செய்ய செய்வதற்கு மிகவும் உதவக்கூடியது ஒன்று. உலகில் பல இடங்களில் இப்படியான புறக்கணிப்பு நியாயமானதாக இருக்கும்”.
இது, உலக அரங்கில் விளையாட்டும் அரசியலும் எவ்வாறு பிணைந்திருக்கின்றது என்பதனையும் அது எவ்வளவு முக்கியதான ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றது என்பதனையும் காட்டுகிறது.
ஓய்வு பெற்ற பல இலங்கை விளையாடுவீரர்கள் அரசியலி ஈடுபடுவதையும், சிறிலங்கா அரசியல் நலனுக்காக உலக நாடுகளுக்கு சுற்று பயணங்களை மேற்கொள்வதையும் கவனிக்கவேண்டும்.
மேல் நாடுகளில் விளையாட்டு இன்று மிகவும் முக்கிய ஒரு இடத்தை பிடித்துள்ளது. ஆகையால் இது ஒரு அரசியல் கருவியாக உபயோகிக்கப்படும் சந்தர்ப்பங்களும் மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் விளையாட்டு பிரேயோகிக்கப்படும் விதங்களை மேல்நாட்டவர் அங்கும் அரசியலும் விளையாட்டும் பிணைந்துள்ளது என்ற அதே கண்ணோட்டத்தோடுதான் பார்ப்பார்கள்.
இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டு இன்று எடுத்துள்ள முக்கியத்துவத்தை இந்தப் பின்னணியில் ஆராந்து பார்க்கலாம். முக்கியமாக சிறிலங்காவின் கிரிக்கெட் அணி நம் நாட்டில் விளையாடுவதை எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதனை மேல்நாட்டவர் அவதானிக்கும் போது அவர்கள் நம்மை தவறாக மதிப்பிடக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன.
இதன் மூலம் மேல் நாட்டவர், நாம் இந்த அணிக்கு கொடுக்கும் ஆதரவை எப்படி நோக்குவார்கள் என்பதனையும், சிங்களவர் எப்படி கிரிக்கட் மூலம் இனப்படுகொலையை மறைக்கலாம் என்று சிந்திக்கிறார்கள் என்பது பற்றியும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இன்று சிறிலங்காவின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான அழுத்தம் உலக அளவில் எழுந்து வருகிறது, இதற்காக பல புலம் பெயர் அமைப்புகள் போராடி வருகின்றன. இந்த காலகட்டத்தில் புலம் பெயர் தமிழர்களை பலவீனப்படுத்துவதற்காகவே சிறிலங்கா அரசு விளையாட்டு என்ற பெயரில் தனது பிரச்சாரத்தை செய்ய முயல்கின்றது.
அற்ப இலாபங்களுக்காக முல்லிவாய்க்காலில் வரலாறான 50,000 தமிழரின் கல்லறை காயமுன் எம் இனத்தை அழிக்கின்ற எதிரிக்கு பலம் சேர்க்கும் முயற்சிகளில் நாம் ஈடுபடலாமா?
IPL 20-20 – ல் பாகிஸ்தான் அணியின் நிலை
2013 ஜனவரியில் இந்திய எல்லையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிராக இந்தியா ஆக்கி லீக்கில் விளையாடி வந்த 9 பாகிஸ்தான் வீரர்கள் 15.01.2013 அன்று திருப்பி அனுப்பப்பட்டனர். http://in.reuters.com/article/2013/01/15/hockey-indian-league-pakistan-idINDEE90E0AI20130115
2013 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் மகளிர் அணி மும்பையில் விளையாட வேண்டிய ஆட்டம் சிவசேனாவின் எதிர்ப்பு காரணமாக 3 போட்டிகளும் ஒரிசா மாநிலம் கட்டாக்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. http://www.indianexpress.com/news/fearing-protest-pakistan-women-cricket-teams-and-matches-shifted-to-cuttack/1061363
2009-ம் ஆண்டு முதல் IPL 20-20 கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தான் வீரர்களில் ஒருவர் கூட விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. இதற்கு காரணம் பாகிஸ்தான் விளையாடினால் IPL கிரிக்கெட்டில் மக்களின் எதிர்ப்பும் இலாபமும் குறையும் என்ற காரணத்தினால் எந்த ஒரு அணியும் பாகிஸ்தான் வீர்ர்களை ஏலம் எடுக்க விரும்பாத்தால் பாகிஸ்தான் வீர்ர்களை ஏலத்தில் விடவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. http://www.hindustantimes.com/Cricket/CricketNews/No-Pakistani-players-in-IPL-auction/Article1-1004479.aspx
ஒரு சில ராணுவ வீரர்கள் இறந்ததற்கே பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிற்குள் விளையாட அனுமதி வழங்கப்படுவதில்லை 500-க்கும் மேற்பட்ட தமிழக இந்திய மீனவர்களை கொன்று குவித்த இலங்கை வீரர்கள் இந்தியாவில் விளையாடுவது வெட்கக்கேடு.
தமிழக அரசு
2013 ஜீலையில் இருபதாவது ஆசிய தடகள விளையாட்டு போட்டியில் சிங்கள வீர்ர்கள் கலந்து கொள்கிறார்கள் அது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் என்பதற்காக தமிழக முதல்வர் தடை செய்துள்ளார். மேலும் இனப்படுகொலை செய்து கொண்டிருக்கின்ற இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தமிழ சட்டமன்றத்தின் தீர்மானத்தையும் வலியுறுத்தியுள்ளார். http://www.tn.gov.in/seithi_veliyeedu/pr21Feb13/pr210213_54.pdf
ஆனால்
IPL 2013 கிரிக்கெட் சீசனில் (ஏப்ரல் 3 முதல் மே 26 வரை) தமிழ்நாட்டை சார்ந்தவர்களான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலங்கை வீரர்கள் யுவன் குலசேகரா ரூ.50 லட்சத்துக்கும் அகிலா தனஞ்ஜெயா ரூ.10 லட்சத்துக்கும். கலாநிதி மாறனின் சன் டிவி தனது ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக குமாரா சங்ககாரா, திசாரா பெரிரா ஆகியோருக்கு தலா ரூ.3.5 கோடிக்கு சம்பளம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது என்பது தமிழக மக்களுக்கு துரோகம் இழைப்பதாகும்.
IPL 2013 கிரிக்கெட் சீசனில் நாம் என்ன செய்ய போகிறோம்?
நம் சகோரிகளை பாலியல் வண்புணர்ச்சி செய்து மார்பகங்களை அறுத்தவர்களுடன் கிரிக்கெட் விளையாட போகின்றோமா?
நம் சகோதர்களை நிர்வாணப்படுத்தி கொன்று இனத்தை அழிப்பவர்களுடன் கொக்க கோலாவும் பெப்சியும் குடிக்க போகின்றோமா?
நாளை ஈழ சகோதிரிகளை IPL 20-20 ல் அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடுவார்கள் என்று ராஜபக்ச அனுப்பி வைப்பான். அதை நாம் சோனியா, ராகுல் காந்தியுடன் ரசிக்க போவேமா?
இல்லை விளையாட்டு என்று சொல்லி சிங்களவனை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் எம்மை ஏமாற்றபவர்களை இனியும் அனுமதிக்க போகிறோமா?
IPL 2013 கிரிக்கெட் சீசனில் விளையாடும் இலங்கை வீர்ர்களின் பட்டியல்
அணி |
பெயர் |
சம்பளம் |
சென்னை சூப்பர் கிங்ஸ் |
யுவன் குலசேகரா அகிலா தனஞ்ஜெயா |
ரூ.50 லட்சம் ரூ.10 லட்சம். |
ஹைதராபாத் சன்ரைசர்ஸ் |
குமாரா சங்ககாரா திசாரா பெரிரா |
3.5 கோடி 3.35 கோடி |
டெல்லி டேர்டெவில்ஸ்
|
மகிலா ஜெயவர்த்தனா ஜீவன் மெண்டிஸ் |
7 கோடி 25 லட்சம் |
கோல்கட்டா நைட்ரைடர்ஸ |
சசிந்திரா சேனநாயக |
3.12 கோடி |
மும்பை இந்தியன்ஸ் |
லசிந்தா மலிங்கா |
|
பூனா வாரியர்ஸ் இந்தியா |
ஏஞ்சலா மாத்தீயூஸ் அஜந்தா மெண்டிஸ் |
4.75 கோடி 3.6 கோடி |
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் |
முத்தையா முரளிதரன் திலகரத்தினா தில்சன் |
1.1 கோடி 3.2 கோடி |
ராஜஸ்தான் ராயல்ஸ் |
குசால் பெரிரா |
ரூ.10 லட்சம். |
சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறக்கூடிய போட்டிகள்
ஏப்ரல் 6 சென்னை எதிர் மும்பை,
ஏப்ரல் 13 சென்னை எதிர் பெங்களூர்
ஏப்ரல் 15 சென்னை எதிர் பூனா
ஏப்ரல் 22 சென்னை எதிர் ராஜஸ்தான்
ஏப்ரல் 25 சென்னை எதிர் ஹைதிராபாத் சன்ரைசர்ஸ்
ஏப்ரல் 28 சென்னை எதிர் கோல்கத்தா
மே 2 சென்னை எதிர் பஞ்சாப்
மே 5 சென்னை எதிர் டெல்லி
மே 19 சென்னை எதிர் பெங்களூர்
விளையாட்டு என்று சொல்லி எம்மை ஏமாற்றும் எவனையும் தாய் தமிழ் நாட்டில் அனுமதியோம். சிங்களவனை வைத்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு இடம் இல்லை. இனியும் இவர்களை வைத்து விளையாடினால் தமிழ் நாட்டை விட்டு விரட்டுவோம்.
நன்றி
யாழ் இணையம்
பாக்கியராசன் சே
வழக்கறிஞர் கலையரசன் கோவை