குட்டி ஆடு தப்பிவந்தால்
குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிகிட்டா
கொறவனுக்குச் சொந்தம்!
தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம் !
என்றார் பட்டுக்கோடை கல்யாண சுந்தரம்.
என்ன அழகான வரிகள் !!! தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம். அப்படிப்பட்ட தட்டுக்கெட்ட மனிதர்களைப் பற்றிய கட்டுரைதான் இது. மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இந்த ஆசைகளே துன்பத்துக்கு காரணம் என்றார் புத்தர். ஆனால், அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார் ஒரு போலிச் சாமியார். தன்னை முற்றும் கடந்து மோனநிலையை அடைந்தவர் என்று அழைத்துக் கொள்ளும் ஒரு நபரே ஹெலிகாப்டரில் பறந்து கொண்டு, சொகுசு பங்களாவில் குடியிருக்கையில், ஒரு சக்தி வாய்ந்த ஊடகத்தின் செய்திப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் என்னவெல்லாம் செய்வார் ?
பாலியல் உணர்வு இல்லாத உயிரினமே இல்லை. அந்த உணர்வு இல்லையென்றால் உலகம் இயங்காது. அந்த உணர்வுதான் உயிரியல் பெருக்கத்தால் மனிதன் உட்பட உலகில் இத்தனை உயிரினங்கள் தோன்றக் காரணமாக இருந்து வருகிறது. சிந்திக்கும் திறன் காரணமாக மனிதன் மற்ற உயிரினங்களைப் போல அல்லாமல், பாலியல் உணர்வை புரிந்து உணர்ந்து அனுபவிக்கிறான். மற்ற உயிரினங்கள், உயிர்ப்பெருக்கத்துக்காக, அனிச்சையாக ஈடுபடும் செயலை மனிதன் அனுபவித்துச் செய்கிறான்.
மனிதனின் வாழ்வில், கோபம், பசி, தூக்கம், போலத்தான் பாலியல் உணர்வும் ஒரு பகுதி. பசி தூக்கம், கோபம் போன்றவை இருக்க வேண்டிய அளவில் இருத்தல், மனிதனை மனிதனாக வைத்திருக்கிறது. இவற்றில் எது அளவு மீறினாலும், அதன் தன்மைக்கு ஏற்ப அவன் தடம் பிறழ்கிறான்.
வாசுதேவ் ராஜா. (பெயரிலேயே சிறப்பு இருக்கிறது பாருங்கள். இரண்டு அயோக்கியர்களின் பெயரை தன் பெயரில் வைத்திருக்கிறார். ஜக்கி வாசுதேவ் + ஆண்டிமுத்து ராஜா) சன் டிவி ராஜா என்று பிரபலமாக அழைக்கப்படுபவர். ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாறுதல், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் தொழிலதிபர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து தருதல், அரசியலில் தனக்கு நெருக்கமானவர்களுக்கு பிடிக்காத எதிரிகளை அழித்து ஒழித்தல், தனியார் நிறுவனங்களுக்கு இடையே உள்ள போட்டிகளைப் பயன்படுத்தி ஒரு நிறுவனத்துக்கு ஆதரவாக மற்ற நிறுவனத்துக்கு எதிராக செய்தி வெளியிட்டு அந்நிறுவனத்தை அழித்தல் போன்ற வேலைகளோடு சன் நியுஸ் நிறுவனத்தில் தலைமை செய்தி ஆசிரியராகவும் இருந்து வருகிறார். இந்த வேலைகளெல்லாம் இவரது பகுதி நேர வேலை. முழு நேர வேலை பேண்டில் ஜிப் போடாமல் மார்கழி மாதத்து நாயைப் போல அலைவது.
சில தலித் இளைஞர்கள், ஜீன்ஸ் பேன்ட் அணிந்து, கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு, பெண்களை சீரழிப்பதையே முழு நேர தொழிலாகச் செய்து வருகிறார்கள் என்று குற்றம் சாட்டினாரே மருத்துவர் அய்யா, அந்த மருத்துவர் அய்யாவின் அதே சாதியைச் சேர்ந்தவர்தான் இந்த வாசுதேவ் ராஜா. அப்பாவிப் பெண்களைச் சீரழிப்பவர்கள் எந்த குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் சொந்தமில்லை என்பதை மருத்துவர் அய்யா இப்போதாவது உணர வேண்டும்.
காட்டுமன்னார்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. எட்டாவது வரை படித்துள்ளார். தொடக்க காலத்தில் ராமதாஸின் எடுபிடியாக வேலை பார்த்து வந்தார். பிறகு அவரிடமிருந்து பிரிந்து முரசொலி மாறனிடம் எடுபிடி வேலை பார்க்கிறார். அப்படி வேலை பார்த்துக் கொண்டே பத்திரிக்கை உலகில் நுழைகிறார். சிறிது நாட்கள் முரசொலியின் இணைப்பாக வெளிவந்து கொண்டிருந்த புதையல் என்ற இணைப்பு இதழில் பணியாற்றினார். சிறிது காலம் தமிழன் என்ற பத்திரிக்கையிலும், திருநாவுக்கரசு நடத்திய பொன்மனம் என்ற பத்திரிக்கையிலும் பணியாற்றினார். தினப்புரட்சி இதழிலும் சில காலம் பணியாற்றியிருக்கிறார். இவர் மாமனார் சண்முகநாதன் தினத்தந்தியில் செய்தியாசிரியராக பணியாற்றியிருக்கிறார்.
சன் டிவி தொடங்கப்பட்டதும் 1996 வாக்கில் முரசொலி மாறனின் பரிந்துரையில் சன் டிவியில் நுழைகிறார். அதற்கு முன்பு முரசொலி அலுவலகத்தில் வேலை பார்க்கும்போதே பேண்டில் ஜிப் போட மாட்டார்… சன் டிவிக்கு வந்ததும் கேட்க வேண்டுமா… ஏறக்குறைய பேண்டே போட வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.
கேபிள் தொலைக்காட்சியின் தொடக்கத்திலேயே உருவான சன் டிவியின் செய்திகளுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருந்தது. ஏனெனில், தூர்தர்ஷனில் செய்திகளை தொடர்ந்து வாசித்தால் தினமணியை படிப்பதுபோன்ற உணர்வு ஏற்படும். சன் டிவி, தினத்தந்தி வடிவில் செய்திகளை அளித்தால் பெரும் வரவேற்பு இருந்தது. மேலும், அப்போதைய ஜெயலலிதா ஆட்சி போன்றதொரு மோசமான ஆட்சியை பார்க்கவே முடியாது. அவ்வளவு அக்கிரமங்கள் அநியாயங்கள். இந்த அநியாயங்கள் குறித்த செய்திகளை தூர்தர்ஷனில் சற்றும் பார்க்க முடியாது. அதில் அரசு செய்திக் குறிப்புகளும், அரசு விழாக்கள் குறித்த செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கும். அந்த நேரத்தில்தான் சன் செய்திகள் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடக்க காலத்திலேயே சன் டிவியில் சேர்ந்த ராஜா, கலாநிதி மாறனோடு ஏற்பட்ட நெருக்கத்தாலும், அவரது திறமையினாலும் தனக்கென ஒரு வலுவான இடத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் சன் செய்திகள் என்றால் அது ராஜாதான் என்ற நிலையை உருவாக்கினார். சன் டிவியில் மேலே உயர உயர, ராஜாவுக்குள் ஒளிந்திருந்த வக்ர புத்தி வெளிவரத் தொடங்கியது. தூர்தர்ஷனில் நீண்ட காலம் செய்தி வாசிப்பாளர்களாக இருந்து சன் டிவிக்கு வந்தவர்கள், பணியில் மூத்த நிர்மலா பெரியசாமி போன்றவர்களை அவதூறான சொற்களைப் பயன்படுத்தி ஏசுவது, தான் கலாநிதி மாறனோடு நெருக்கம் என்பதால், தன்னை யாருமே அசைக்க முடியாது என்ற இறுமாப்பில் சகட்டு மேனிக்கு அனைவரையும் அவதூறாகப் பேசத்தொடங்கினார். ராஜாவுக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையாலும், உளவியல் சிக்கல்களாலும், ராஜாவின் ஏச்சுக்களுக்கு பெரும்பாலும் ஆளாவது திறமையானவர்களே. திறமையானவர்களை அவர்களின் தன்னம்பிக்கையை குலைக்கும் வகையில் திட்டி அவமானப் படுத்துவதில் ராஜாவுக்கு ஒரு அலாதி இன்பம். வளர்ந்து வரும் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றுவதில் உள்ள பெருமையை மனதில் வைத்தும், இந்த வேலையை விட்டால் வேறு எங்கே போவது என்ற எதிர்காலக் கவலைகள் காரணமாகவும் ஏறக்குறைய அனைவருமே ராஜாவின் அடாவடிகளை கண்டும் காணாமலும் பொறுத்துப் போனார்கள்.
கலாநிதி மாறன் ராஜாவுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பதற்கான காரணம், சன் செய்திகளின் தரத்தை சிறப்பாக வைத்திருப்பதில் ராஜா செலுத்திய கவனமே. கலாநிதி மாறனுக்கு சன் டிவி திமுக சார்பு சேனல் என்ற பெயர் வந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை உண்டு. அந்த அக்கறையின் காரணமாகவே, ஜெயலலிதாவின் அறிக்கைகள் ஓரளவு நியாயமாக இடம் பெற வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். இதற்கு ஏற்றார்ப்போல ராஜா செய்திகளைத் தயாரித்துத் தரவும், கலாநிதி மாறன் ராஜாவுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்தார். ஜெயலலிதா குறித்த செய்திகள் சன் டிவியில் இடம் பெறுவது, கருணாநிதிக்கு கண்ணில் மிளகாய்ப்பொடியைத் தூவியது போன்ற எரிச்சலை ஏற்படுத்தும். டிவியில் செய்தியைப் பார்க்கும் கருணாநிதி, ராஜாவை அழைத்து திட்டிய வார்த்தைகளை கோடிட்டுக் கூட காட்ட இயலாது. அப்படி கழுவிக் கழுவி ஊற்றுவார். 2002 ஜனவரியில் கருணாநிதி நேரடியாக முரசொலி மாறனை அழைத்து ராஜாவை பணியிலிருந்து நீக்குமாறு கூறுகிறார். முரசொலி மாறனும் கலாநிதி மாறனிடம் வலியுறுத்தவும், வேறு வழியின்றி ஜனவரி 2002ல், ராஜா பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார்.
பணி இடைநீக்கத்தையடுத்து, மீண்டும் வேலை கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற குழப்பத்தில், அப்போது விஜய் டிவியில் செய்திகளைத் தயாரித்துக் கொண்டிருந்த ஜெனிஃபர் அருளிடம் வேலை கேட்டு அணுகுகிறார் ராஜா. ராஜா வெளியில் வேலை தேடும் விவகாரம் தெரிந்ததும் கலாநிதி உடனடியாக ராஜாவை வேலையில் சேரச் சொல்கிறார். அதற்குப் பிறகு, கருணாநிதி எப்போது ராஜா விவகாரத்தை எடுத்தாலும், ராஜாவை பணியிலிருந்து நீக்கியாயிற்று என்று கருணாநிதியை திருப்திப் படுத்தும் வகையில் போலியாக பணி நீக்க உத்தரவைத் தயாரித்து வழங்கிய கதையெல்லாம் நடந்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் ராஜாவை யாருமே அசைக்க முடியாது என்ற நிலை உருவானது. தனிக்காட்டு ராஜாவாக தன் ராஜாங்கத்தை நடத்தினார் ராஜா. தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களை இழிவாகப் பேசுவது, அவமானப்படுத்துவது போன்ற குணங்களை விட ராஜாவிடம் இருந்த மிக மோசமான குணம் பெண்கணை வேட்டையாடுவது. வரம்பு மீறிய பெண் மோகம் உள்ளவர் ராஜா. ராஜா விருப்பப்பட்டு தன்னோடு இணங்கும் பெண்களிடம் உறவு கொள்வதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்க முடியாது. ராஜாவும் பல பெண்களும் நட்பாக இருப்பதால் நமக்கு அறச்சிக்கல், முறச்சிக்கல், மலச்சிக்கல் போன்ற எந்தச் சிக்கல்களும் இல்லை. ஆனால், தனக்கு இணங்காத பெண்களை வதைப்பதை அனுமதிக்க இயலாது. ஆனால் ராஜா அதைத்தான் செய்து வந்தார். ராஜாவால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியல் மிக மிக நீளமானது.
மூன்று வருடங்களுக்கு முன் சன் நியூஸ் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண் ஒருவர், ராஜாவின் அயோக்கியத்தனத்தைப் பற்றி கலாநிதி மாறனிடமே புகார் தெரிவிக்கிறார். அந்தத் தகவலை அறிந்த ராஜா, அலுவலகத்தில் பணியாற்றிய பெரும்பாலான பெண்களை அழைத்து, “சார் ரொம்ப நல்லவர்.. அப்படியெல்லாம் மோசமா நடந்துக்க மாட்டார்” என்று கலாநிதி மாறனிடம் சொல்ல வைத்து தப்பிக்கிறார்.
மற்றொரு பெண் ராஜாவின் சில்மிஷங்களுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். அவர் பணிகளில் எப்போதும் குறை கண்டுபிடித்த ராஜா அவரை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ, அவ்வளவு அவமானப்படுத்தினார். பின்னாளில் சன் டிவியிலிருந்து வெளியேறிய அவர், இணையதளத்தில் ஒரு கட்டுரை எழுதி தன் கோபத்தைத் தீர்த்துக் கொண்டார்.
மனைவியோடு ராஜா
பல ஆண்டுகளுக்கு முன்னால் சன் டிவியில் பணியாற்றிய பெண் ஒருவர், ராஜா தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார் என்று அலுவலகத்தில் அனைவர் முன்னிலையிலும் கத்தினார். சில நாட்களில் அவர் வேலை நீக்கம் செய்யப்பட்டார்.
சன் டிவியில் செய்தியாளராக பணியாற்றிய பெண் ஒருவர் ராஜாவின் மகளை விட இரண்டு வயது குறைந்தவர். ராஜா விரித்த வலையில் விருப்பத்தோடு விழுந்தார் அந்தப்பெண். ராஜாவும் அந்தப் பெண்ணும் பப்புகள், டிஸ்கோத்தேக்கள், கிழக்குக் கடற்கரைச் சாலை என்று பல்வேறு இடங்களில் பட்டாம்பூச்சிகளாகச் சுற்றினார்கள். ராஜாவின் கண்பார்வை பட்டதால் அந்தப் பெண்ணுக்கு செய்தி வாசிக்கவும், ஒரு சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது. தன்னோடு இணக்கமாக இருந்த அந்தப் பெண்ணுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கி மற்ற பெண்களுக்கும் மறைமுகமாக ஒரு செய்தியை உணர்த்தினார் ராஜா.
மற்றொரு செய்தி வாசிப்பாளர் புதிதாக பணியில் சேர்ந்தார். ராஜா வலை விரிப்பதற்கு முன்பாக அவர் ராஜாவுக்கு வலை விரித்து அந்த வலை ஊட்டி வரை விரிவடைந்தது. அந்த வலை உருவாக்கிய பின்னல், அந்த செய்தி வாசிப்பாளரை, சன் டிவியிலேயே மிகப் பிரபலமான செய்தியாளராக உருவாக்கியது.
மற்றாரு செய்தி வாசிப்பாளருக்கு இதே போல ராஜா வலை விரிக்க, அவர் அந்த வலையை கிழித்தெறிந்தார். கிழித்தெறிந்ததன் விளைவு, அகிலாவுக்கு நேர்ந்தது போன்ற கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்தார். அவரும் தொடர்ந்து காலை ஷிப்டில் போடப்பட்டு வதைக்கப்பட்டார். இறுதியில் தோல்வியைத் தழுவி வேலையை ராஜினாமா செய்து வெளியேறினார். இன்று சென்னையின் பிரபல பண்பலை வானொலியில் தயாரிப்பாளராக உள்ளார்.
இன்று மற்றொரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக உள்ள ஒரு பெண்ணிடம் ராஜா நேர்முகத் தேர்வின்போதே தன் வேலையைத் தொடங்கியுள்ளார். பயந்து போய் சன்டிவியை விட்டு வெளியேறியவர், அதன் பிறகு அந்தப் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
மற்றொரு பெண்மணி சன் டிவியிலேயே டிடிபி ஆபரேட்டராக பணியாற்றுகிறார். ராஜாவின் அ ணுக்கங்களுக்கு இணக்கமானதால் டிடிபி ஆபரேட்டராக இருந்தவரை செய்தித் தயாரிப்பாளராக்கினார் ராஜா. செய்திகளைத் தயாரிப்பதில் பல்வேறு குளறுபடிகளைச் செய்வதில் அவர் பிரசித்தி பெற்றவர். சாதாரண தவறுகளைச் செய்பவர்களையும், செய்யாதவர்களையும் வறுத்து எடுக்கும் ராஜா, அவரை மட்டும் செல்லமாக கடிந்து கொள்வார். ராஜாவோடு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி அவர் மற்ற ஊழியர்களை மிரட்டும் அளவுக்கு வளர்ந்தார். இதெல்லாம் ராஜாவுக்கு தெரிந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்.
தற்பொது 2ஜி பணத்தில் உருவான தொலைக்காட்சியில் பணியாற்றும் மற்றொரு பெண் வெளிப்படையாகவே சன்டிவியில் பணியாற்றியபோது ராஜா தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார் என்று குற்றம் சாட்டினார். ஆனால் அதை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சன் டிவியில் பணியாற்றுகிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யக் கூடத்தெரியாத அவரை, தன்னோடு இணங்கிப் போனதால் செய்தியில் முக்கியப் பொறுப்பு கொடுத்து வைத்துள்ளார் ராஜா. இந்த இணக்கத்தைப் பயன்படுத்தி மற்ற ஊழியர்களை வாய்க்கு வந்தபடி பேசுவது இந்த பெண்மணியின் சிறப்பம்சம்.
மிக மிக அழகான தோற்றம் கொண்ட பெண் ஒருவர், ஏராளமான சம்பளம் தரும் தனியார் நிறுவன வேலையை செய்தி வாசிப்பாளராக ஆக வேண்டும் என்பதற்காகவே ராஜினாமா செய்து விட்டு சன் டிவியில் சேர்ந்தார். சுமாரான அழகோடு இருக்கும் பெண்களையே ஒரு வழி பார்க்கும் ராஜா, அழகான பெண்ணை விடுவாரா என்ன… ? ராஜாவின் நெருக்கடிகளை பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்தப் பெண், வேறு வழியின்றி வேலையை ராஜினாமா செய்து விட்டு ஓடினார்.
மற்றொரு பெண் எப்படியாவது செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்பதற்காக ராஜாவுக்கு இணங்கினார். செய்தி வாசிப்பாளரான பின்னால் ராஜா கொடுத்த தொல்லைகளை அந்தப் பெண் மறுக்கிறார். இதனால் எரிச்சலடைந்த ராஜா, அவர் வேலையை காலி செய்கிறார். தற்போது இந்தப் பெண் ஒரு பிரபல பண்பலை வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றுகிறார்.
தனது ஆசைக்கு இணங்காத பெண்கள் அறிவிப்பாளர்களாகவோ, செய்தியாளர்களாகவோ பணியாற்றவே முடியாது என்ற அறிவிக்கப்படாத ஒரு சூழலை ராஜா உருவாக்குகிறார். ஆனால் ராஜாவின் இரைகளை அவர் தெளிவாகத் தேர்ந்தெடுக்கிறார். யாருக்கு பெரிய பின்புலம் இல்லையோ… யார் சன் டிவியின் மாத ஊதியத்தை நம்பி இருக்கிறார்களோ, யாருக்கு பெரிய செய்தி வாசிப்பாளராக ஆகி, தமிழகம் முழுக்க பிரபலமாக வேண்டும் என்ற பலவீனம் இருக்கிறதோ அது போன்ற நபர்களை கவனமாகத் தேர்ந்தெடுக்கிறார். அதிகார மையங்கள் யாருக்கு வெகு தூரமாக இருக்கிறதோ, பின்புலமாக யாருக்கு ஒருவருமே இல்லையோ அது போன்ற நபர்களைத் தேர்ந்தெடுக்கிறார். உதாரணத்துக்கு டி.ஆர்.பாலுவின் மகள், ராஜாவிடம் வேலை பார்த்தார். ராஜா அவரிடம் மரியாதையாக நடந்து கொள்வார். பாலுவின் மகள் டிஆர்பி. மணிமேகலையிடம் ராஜா ஏதாவது வாலாட்டியி ருந்தாரென்றால், தள்ளிச்சேரி ராஜுத் தேவர் பாலு ராஜாவை மும்பைக்கு அழைத்துச் சென்று கட்டாயப் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து, ராஜா ராஜக்கா ஆகியிருப்பார்.
ராஜாவின் அட்டூழியங்களை பொறுத்துக் கொண்டும், புலம்பிக் கொண்டும் தப்பித் தவறி, பெண்கள் அந்த இடத்தில் தொடர்வதற்குக் காரணம், அடுத்த எங்கே செல்வது என்ற கேள்வியும், சன் டிவியில் வேலை செய்தால் ஒரு மரியாதையாச்சே என்பது போன்ற நடைமுறைக் காரணங்களுக்காகவே. சன் டிவியில் செய்தி வாசிப்பதால் கிடைக்கும் புகழ் பெண்களை ஈர்க்கிறது என்பதும் ஒரு முக்கியமான உண்மை. புதிய தலைமுறை செய்திச் சேனலில் வரவு, யாருக்கு நன்மையாக இருந்ததோ இல்லையோ ராஜாவுக்கு பெரிய நன்மையாக முடிந்தது. அது வரை சன் டிவியில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த பல பெண்கள் மற்றும் ஆண்களை, அனுப்பி விட்டு, புதிய தலைமுறை சேனலில் உள்ளது போல இளம் செய்தி வாசிப்பாளர்களையும், செய்தியாளர்களையும் தேர்ந்தெடுக்கலாம் என்று கலாநிதி மாறனிடம் சொன்னபோது அவர் ராஜாவின் முடிவில் உள்நோக்கம் இருக்கிறது என்று கருதினாரா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் மறுப்பு சொல்லவில்லை. புதிது புதிதாக பெண்களை, குறிப்பாக இளம்பெண்களை வேலைக்காக அழைப்பது, அவர்கள் எப்படி என்பதை நேர்முகத் தேர்விலேயே பதம் பார்ப்பது, வேலைக்குச் சேர்ந்தவுடன் அவர்களிடம் தன் வேலையைக் காட்டுவது என்று ராஜாவின் ராஜாங்கம் விரிவாகிக்கொண்டேதான் போனது. அப்படி ராஜா தன் காம வெறியாட்டங்களைத் தொடர்வதற்கு தளபதியாக சென்று சேர்ந்தவர்தான் வெற்றி வேந்தன்.
காதலித்துப் பார்.. காவல்துறை வரும்
வெற்றி வேந்தன், இவர் ஒரு தஞ்சாவூர் தவில். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு செல்லும் வழியில் உள்ள காட்டுக்குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். பெரிய அளவுக்கு ஊடகம் குறித்த அறிவோ பரிச்சயமோ இல்லாதவர். திருச்சியில் உள்ள பொன்னையா ராமஜெயம் கல்லூரியில் படித்தவர். படித்து முடித்தபின், இருப்பதிலேயே எளிதான வேலை பத்திரிக்கையாளர் வேலை என்று யாரோ இவரிடம் சொன்னார்களா என்று தெரியவில்லை, திருச்சியில் ஏ.எம்.என்.டிவி, கரண் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் பணியாற்றி விட்டு சன் டிவியில் சேர்கிறார். கரண் டிவி, ஏஎம்என் டிவிக்களில் பணியாற்றிபோதே, வெற்றி வேந்தன் பேன்டில் ஜிப்பை கழற்றி விட்டார். அங்கேயே இவர் மீது பெண்களிடம் தேவையின்றி வழிவார் என்ற புகார்கள் உண்டு.
வெற்றி வேந்தன் சன் டிவியில் நுழைவதற்கு முன்னதாக ராஜாவின் கைத்தடி, மாமா போன்ற பல்வேறு பதவிகளை வகித்தவர், இருதாரப் புகார் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்ட ராஜராஜன். இந்த ராஜராஜன் ராஜாவின் சுமைதாங்கியாக செயல்பட்டார். சன் டிவியில் இரு பலம் வாய்ந்த நபர்களாக இருந்தவர்கள் ஈவேரா மற்றும் ராஜராஜன். ராஜராஜனின் முக்கிய பணி ராஜா ஏற்படுத்தும் சேதங்களை சரி செய்வது. ராஜா யாரையாவது கடுமையாக திட்டி, அவர்கள் கோபமடைந்து புகார் கொடுக்கவோ, அல்லது வேலையை விட்டு நிற்கவோ முடிவெடுத்தால் அவர்களிடம் சென்று, “சார் அப்படித்தான் கோபப்படுவார்.. ஆனால் எதையும் மனசுல வச்சுக்க மாட்டார். நீங்க இதையெல்லாம் பெருசுபடுத்தாதீங்க” என்று பேசி சமாதானப்படுத்துவது ராஜராஜனின் வேலை. ராஜராஜன் இன்று பணியில் இருந்திருந்தால், ராஜாவுக்கு இந்த நிலை வந்திருக்காது என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.
ராஜராஜன் மற்றும் ஈவேரா இடையயே கடும் பனிப்போர் நிலவுகிறது. ராஜராஜன், ராஜாவின் தீவிர ஆதரளாவரானதால், ஈவேராவுக்கும் ராஜாவுக்கும் ஆகாது. ராஜா ஈவேராவை எப்படிக் காலி செய்வது என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தார். இந்நிலையில் சன்டிவியில் சேர்ந்த வெற்றிவேந்தன், ராஜராஜனின் அணியில் சேர்கிறார். ராஜராஜனுக்கு டீ வாங்கித் தருவது, அவர் வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் வாங்கித் தருவது, சிற்றுண்டி வாங்கித் தருவது போன்ற முக்கியப் ஊடகப் பணிகளை செய்து வந்தவர்தான் வெற்றிவேந்தன்.
நடிகர் பிரசாந்த் கிரகலட்சுமி என்ற பெண்ணைத் திருமணம் செய்ததில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து பலருக்கு நினைவிருக்கும். கிரகலட்சுமி ஏற்கனவே தனக்கு நடந்த திருமணம் குறித்து மறைத்து செய்த திருமணத்தால் ஏற்பட்ட சிக்கல் பிரசாந்ததை வாட்டியது. அப்போது பிரசாந்த் தரப்பு நியாயத்தையும், கிரகலட்சுமிக்கு திருமணம் ஆன விவகாரத்தையும் ஊடகங்கள் வெளிக் கொணர்ந்தன. அதில் ஒரு ஊடகம் சன் டிவி. சன் டிவியின் செய்தியாளர் ஈவேரா அந்த விவகாரத்தில் பிரசாந்த் தரப்பு நியாயத்தை வெளியிட்டார்.
இதனால் பிரசாந்த் தனது ஜாய் ஆலூக்காஸ் நகைக்கடை திறப்பு விழாவின்போது தனக்கு உதவி செய்த பத்திரிக்கையாளர்களை அழைத்தார். அந்த விழாவுக்கு ஈவேரா சென்றபோது, அந்த விழா குறித்து செய்தி வெளியிடலாம் என்று வெற்றி வேந்தனை கேமரா யூனிட்டாடு வரச் சொல்கிறார். ஜட்டி வேந்தனும், மன்னிக்கவும் வெற்றி வேந்தனும் அவ்வாறே செய்கிறார். செய்து விட்டு வெற்றி வேந்தன், இந்த விஷயத்தை ராஜா காதில் போட்டு விடுகிறார். இதை வைத்து ஈவேராவை காலி செய்யலாம் என்று முடிவெடுத்த ராஜா, கலாநிதி மாறனிடம், ஈவேரா பிரசாந்திடம் 10 லட்ச ரூபாய் வாங்கி விட்டார் என்று வெல்டிங் செய்கிறார். இதனால் ஈவேராவுக்கு வேலை பறிபோகும் அளவுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. ஆனால் அரசியல் செய்வதில் ஈவேரா யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதால், பெரிய அளவில் சிக்கல் ஏற்படவில்லை. இந்த இடத்தில் குறிப்பிட வேண்டிய விஷயம்…. நடிகர் பிரசாந்த மற்றும் அவர் தந்தை தியாகராஜனைப் போல கப்பிகளைப் பார்க்கவே முடியாது. கப்பிகள் என்றால் உலக கப்பிகள். நமது பாக்கெட்டில் உள்ள பணத்தை எப்படி எடுப்பது என்று அப்பனும் மகனும் திட்டம் போடுவார்களே தவிர, அவர்கள் கொடுக்க மாட்டார்கள்.
இந்த விவகாரம் முடிந்தாலும், ராஜராஜன் மற்றும் ஈவேரா இடையேயான பனிப்போர் தினந்தோறும் வளர்ந்து வந்தது. இந்த நிலையில் ராஜராஜன் மீது ஒரு அவரது இரண்டாவது மனைவி புகார் தருகிறார். இந்தப் புகாரைக் காரணமாக வைத்து ராஜராஜனை காலி செய்கிறார் ஈவேரா. இதையடுத்து ராஜராஜன் இடத்துக்கு – நம்பர் 2 – ஜட்டி வேந்தன் வருகிறார். ஒரு சாதாரண நபராக சன் டிவிக்குள் நுழைந்து ராஜராஜனுக்கு எடுபிடி வேலைகளைச் செய்து வந்த ஜட்டி வேந்தனை ராஜாவிடம் அறிமுகம் செய்து வைத்ததே ராஜராஜன்தான் என்பது காலத்தின் கோலங்களில் ஒன்று.
அது வரை செய்தி வாசிப்பாளர்களுக்கு நேரம் ஒதுக்கும் பணியைச் செய்து வந்த காளமேகம் என்பவரை ஓரங்கட்டி விட்டு அவர் இடத்துக்கு ஜட்டி வேந்தன் வருகிறார். காளமேகத்துக்கு பெண்ணாசை கிடையாது. ஆனால் பொன்னாசை உண்டு. செய்தி வாசிப்பாளர்களுக்கு நேரம் ஒதுக்குவதற்கு பணம் வாங்கினார் என்ற புகார் அவர் மீது இருந்து வந்தது. அதனால் அவரைத் தூக்கி விட்டு ஜட்டி வேந்தனை அந்த இடத்தில் நியமிக்கிறார்கள். சும்மாவே புரட்டாசி மாதத்து நாய் போல அலையும் ஜட்டி வேந்தனுக்கு அனைத்து செய்தி வாசிப்பாளர்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு வேலையைக் கொடுத்தால் என்ன ஆகும் ? அதுதான் நடந்தது.
ராஜாவிடம் பயப்படும் அளவுக்கு ஜட்டிவேந்தனிடம் செய்தி வாசிப்பாளர்கள் பயப்படுவது இல்லை. அவன் ஒரு சாதாரண அல்லக்கைதானே என்று. ஆனால் ராஜாவுக்கு முழு நேர மாமாவாக ஜட்டி வேந்தன் பொறுப்பேற்றுக் கொண்டதும், அவரது அதிகாரம் தூள் பறக்கிறது. பெண்கள் ஆடை மாற்றும் நேரத்தில் கதவைத் தட்டாமல் மேக்கப் ரூமுக்குள் நுழைவது, ஜட்டி வேந்தனுக்கு பிடித்த பொழுதுபோக்கு. ஜட்டி வேந்தன் தன் லீலைகளை மேக்கப் ரூமுக்குள் நடத்துவதற்கு காரணம், அந்த இடத்தில் மட்டும் தான் சிசிடிவி கேமரா இல்லை.
ராஜாவுக்கு முழுநேர மாமா வேலை செய்ய ஜட்டிவேந்தன் நியமிக்கப்பட்டதையடுத்து, ஜட்டிவேந்தனின் மிரட்டல்களும் உருட்டல்களுக்கும் அளவே இல்லாமல் போகிறது. அப்படி அகிலா என்ற பெண்ணுக்கு ஜட்டி வேந்தனும் ராஜாவும் கொடுத்த தொல்லைகளை சிறுகதை வடிவில் சவுக்கு தளத்தில் பார்திருப்பீர்கள்.
கிருத்திகா
அந்தக் கதையில் வரும் கிருத்திகா என்ற பெண்மணி ஒரு திரைப்பட எடிட்டர். ஏதோ ஒரு ஆர்வத்தில் சன் டிவியில் வேலைக்குச் சேர்ந்து வெற்றி வேந்தனின் இடத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கலாநிதி மாறனுக்கு பணத்தை சேமித்துத் தருவதில் அப்படி என்னதான் ஆர்வமோ தெரியவில்லை. முழு நேர செய்தியாளர்களுக்குப் பதிலாக பகுதி நேர செய்தியாளர்களைப் போடலாம், எப்படி செலவைக் குறைக்கலாம் என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பார். வெற்றி வேந்தன் மற்றும் ராஜாவின் அயோக்கியத்தனங்கள் இவருக்குத் தெரியாமல் நடந்திருக்கும் என்பதை நம்புவதற்கில்லை. தன்னுடைய பிழைப்புக்காக இளம்பெண்கள் சீரழிக்கப்படுவதை வேடிக்கைப் பார்ப்பதோடு, அதற்கு உடந்தையாகவும் இருக்கும் கிருத்திகா போன்றவர்களே பெண்ணினத்தின் பெரிய எதிரிகள். குறைந்தபட்சம் நான் இந்த அயோக்கியத்தனத்துக்கு துணை போக மாட்டேன் என்று கிருத்திகா வெளியேறியிருக்க முடியும். இந்த வேலையை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்தும் அளவுக்கான மோசமான பொருளாதாரச் சூழலில் கிருத்திகா இல்லை.
சவுக்கில் வெளியான அந்தக் கதை, கதை அகிலாவினுடைய கதை மட்டுமே. இது போல ஓராயிரம் கதைகள் சன் டிவி என் மாபெரும் சாம்ராஜ்யத்தினுள் நடந்து வருகிறது.
அகிலா புகார் கொடுத்ததும், காவல்துறை ஆணையர் ஜார்ஜ், பொறுமையாக அகிலாவின் புகாரைப் பொறுமையாகப் படித்துப் பார்த்து, விபரங்களைக் கேட்டறிந்தார். அகிலாவின் புகார்களில் உள்ள உண்மைத் தன்மைகளை விசாரித்தறிந்தார். விசாரித்தறிந்ததும், அந்தப் புகார்களை அடையாறு துணை ஆணையர் சுதாகருக்கு அனுப்புகிறார். பெண் குறித்த புகார் என்பதால், ஒரு பெண் துணை ஆணையர் விசாரித்தால் பொறுத்தமாக இருக்கும் என்பதால், மைலாப்பூர் துணை ஆணையர் லட்சுமியிடம் இந்தப் புகார் அனுப்பப்படுகிறது.
இதற்குள் புகார் தொடர்பான தகவல் ராஜவை அடைகிறது. உடனே, தனது தொண்டர் அடிப்பொடிகளான ராம.செல்வராஜ், தினகரனின் பிட்டு சுரேஷ் மற்றும் இதரர்களை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்புகிறார் ராஜா. அவர்கள் அவர்களுக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரிகளிடம் விசாரித்து, இரண்டு நாட்கள் விசாரித்த பிறகு, புகாரை மூடி விடுவார்கள் என்று ராஜாவுக்கு வாக்களிக்கின்றனர். ராஜா நம்மதான் ராஜாவாயிற்றே என்று நிம்மதியாக இருக்கிறார். இருந்தாலும் கவனமாக இருக்கலாம் என்று அவரது காலை நடைபயிற்சி நண்பரான இணை ஆணையர் ரவிக்குமாரிடம் இத்தகவலை சொல்லுகிறார். ரவிக்குமார் நான் விசாரிக்கிறேன் என்று கூறுகிறார்.
ஆணையர் ஜார்ஜ், லட்சுமியிடம் இந்தப் புகார் குறித்து வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்று தெரிவித்ததையடுத்து, இந்த ஆபரேஷன் மிக மிக ரகசியமாக வைக்கப்படுகிறது. மாலை 4 மணியளவில் ராஜாவை காவல்துறையினர் அழைக்கிறார்கள். அவர் வழக்கம் போல நான் பிசியாக இருக்கிறேன் என்று சொல்லவும், அப்படியானால் காவல்துறை அதிகாரிகளோடு நாங்கள் அங்கே வருகிறோம் என்று சொல்லுகிறார்கள். சரி ஒரு மணி நேரத்தில் வருகிறேன் என்று ராஜா சொல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவே ராஜாவின் அலுவலக வாசலில் காவல்துறையினர் ராஜா வெளியேறுகிறாரா என்று கண்காணித்தபடி இருக்கிறார்கள்.
ரவிக்குமார் ஐபிஎஸ்
ஒரு பைக்கில் கிளம்பி, மைலாப்பூர் துணை ஆணையர் அலுவலகம் செல்கிறார் ராஜா. அவரைப் பின்தொடர்ந்து பைக்கில் 5 காவல்துறையினர் வந்தது ராஜாவுக்குத் தெரியாது. ராஜா வந்ததும் அவர் செல்போனை வாங்கி அணைத்து வைத்து விட்டு ராஜாவிடம் விசாரணையைத் தொடர்கிறார்கள். அப்போது இணை ஆணையர் ரவிக்குமாரிடமிருந்து துணை ஆணையர் லட்சுமிக்கு ஒரு அழைப்பு வருகிறது. “சன் டிவி எடிட்டர் ராஜா மேல ஏதோ கம்ப்ளெயின்ட் வந்துருக்காம். என்ன மேட்டர் அது” என்றதும், “சார் கமிஷனர் விசாரிக்கச் சொல்லியிருக்கார்” என்றிருக்கிறார் லட்சுமி. ”சரி அவரைக் கூப்பிட்டீங்கன்னா என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு ஒரு ஸ்டேட்மென்ட் போட்டுட்டு அனுப்பிடுங்க. ரொம்ப நேரம் அவரை ஸ்டேஷன்ல டீடெயின் பண்ணாதீங்க. ரொம்ப முக்கியமான ஆளு. நான் கமிஷனர்கிட்ட பேசிக்கறேன்” என்று அவர் பேசும்போது லட்சுமி எதிரில் ராஜா அமர்ந்திருக்கிறார். அதன் பிறகு, கடகடவென்று நடவடிக்கை எடுத்து, தேவையான ஆவணங்களைத் தயார் செய்து, காவல் நிலைய வாசலில் காத்திருந்த சன் டிவியின் தொண்டர் அடிப்பொடிகளுக்குத் தெரியாமல், ரகசியமாக பின் வழியாக ராஜாவை அழைத்துச் சென்று நீதிபதியின் வீட்டில் ஆஜர் படுத்தினர் காவல்துறையினர்.
ராம செல்வராஜ்
இதில் ஒரு நகைச்சுவையான விஷயம் என்னவென்றால், இந்த விவகாரத்தை பெரிதாகாமல் நான் முடித்துத் தருகிறேன் என்று ஒரு மூன்று காவல்துறை அதிகாரிகள், ராம.செல்வராஜிடம் ஒரு கனத்த தொகையை கறந்திருக்கிறார்கள். ராஜா கைதானதும் அவர்களிடம் சார் என்ன சார் இது என்று கேட்டதற்கு, கமிஷனர் ஆர்டர் பாஸ் நாங்க ஒண்ணும் பண்ண முடியாத என்று கைவிரித்திருக்கின்றனர். பணத்தை திருப்பியா கேட்க முடியும்… அய்யோ பாவம்.
வேளச்சேரியில் உள்ள நீதிபதியின் வீட்டுக்கு ராஜாவை அழைத்துச் சென்றதும் அங்கே குழுமியிருந்த புகைப்படக்கலைஞர்கள் மற்றும் வீடியோ பதிவாளர்களை சன் டிவியின் ராம.செல்வராஜ், தினகரனின் பிட்டு சுரேஷ், சன் செய்தியாளர் கருப்பசாமி, போன்றவர்கள் கார்களை குறுக்கில் நிறுத்தி மறித்து படமெடுக்க விடாமல் தடுத்துள்ளனர். குறிப்பாக புதிய தலைமுறை புகைப்படக் கலைஞரை கையை வைத்து தடுத்துள்ளனர்.
சன் டிவியின் செய்தியாளர்களுக்கும், சன் டிவி நிர்வாகத்துக்கும் ஒரு கேள்வி. ஒரு காமவெறி பிடித்த அயோக்கியனைக் கைது செய்து காவல்துறையினர் கொண்டு செல்கையில் படமெடுக்கக் கூடாது என்று தடுக்கும் நீங்கள், நித்யானந்தாவின் ஜட்டிக்குள் கேமராவை வைத்து படமெடுத்து, அதை குடும்பத்தோடு செய்தி பார்க்கும் மெயின் புல்லட்டினில் வெளியிட்டது என்ன ஊடக தர்மம் ?
நித்யானந்தா விவகாரத்தை எடுத்துக் கொண்டால், அதில் சம்பந்தப்பட்ட ரஞ்சிதாவோ, நித்யானந்தாவோ யாரிடமாவது புகார் கொடுத்தார்களா… ? பிரம்மச்சர்யம் போதித்த நித்யானந்தா பக்தர்களை ஏமாற்றி விட்டார் என்றால், அதை பக்தர்கள்தானே கேள்வி கேட்க வேண்டும் ? செய்தி வெளியிடுவது எங்களின் கடமை என்றால், ராஜாவை படமெடுப்பதும்தானே செய்தியாளர்களின் கடமைதானே ? அதை மட்டும் ஏன் எடுக்கக் கூடாது என்று தடுக்கிறீர்கள் ?
ராஜாவின் கைது குறித்து, மாலைமுரசு மற்றும் திருச்சி தினமலர் தவிர வேறு எந்த நாளிதழ்களும் செய்தி வெளியிடவில்லை. ராஜாவுக்கும் மவுன்ட்ரோடு தினமலருக்கும் ஏற்கனவே பெரிய தகராறு இருந்த நிலையிலும், தினமலர் ராஜா கைது குறித்து செய்தி வெளியிடவில்லை. தினமலர் செய்தி வெளியிடாமல் இருந்ததன் பின்னணியில் இருந்து செயல்பட்டவர் நக்கீரன் காமராஜ். காமராஜ் சொல்லி, நக்கீரன் கோபால் தினமலர் நிர்வாகத்திடம் பேசி, ஒரு சிங்கிள் காலம் செய்தி கூட வெளிவராமல் பார்த்துக் கொண்டார்.
இந்த காமராஜ் போன்ற நபர்களுக்கெல்லாம் ஒரு நினைப்பு என்ன தெரியுமா ? அவர்களெல்லாம் திராவிட இயக்கத்தின் வாரிசுகள். திராவிட இயக்க அரசியலை தூக்கிப் பிடிப்பவர்கள். அவர்களுக்கெதிராக வரும் புகார்கள் அனைத்தும் பார்ப்பனர்களின் சதி. யாருக்காவது காலையில் கக்கூஸ் சரியாகப் போகவில்லையென்றால் கூட, பார்ப்பன சதி என்று குஞ்சாமணி போலவே பேசுவதில் காமராஜ் போன்ற திராவிட இயக்க ஊடகவியலாளர்களுக்கு வழக்கம். 2ஜி பணத்தை பார்ப்பனனா வாங்கிப் பதுக்கச் சொன்னான் ? பார்ப்பனனா சட்டவிரோதமாக வீட்டு வசதி வாரியத்தில் வீட்டு மனை பெறச் சொன்னான் ? பார்ப்பனனா அய்ந்திரம் கட்டுமான நிறுவனத்தைத் தொடங்கச் சொன்னான். பத்திரிக்கையாளர் என்ற பெயரில் ப்ரோக்கர் தொழில் செய்து வரும் காமராஜ் போன்றவர்கள், தங்களை திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொண்டு தாங்கள் செய்யும் அயோக்கியத்தனங்களுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தரங்கெட்ட அயோக்கியனைப் பற்றி செய்தி வெளியிடக்கூடாது என்று முயற்சி எடுக்கும் காமராஜ் தனது நக்கீரன் பத்திரிக்கையில் எத்தனை பொய் செய்திகளை வெளியிட்டிருக்கிறார் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வாரமிருமுறை இதழ்களில் தமிழக அரசியல் மற்றும் குமுதம் ரிப்போர்டரைத் தவிர எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. நக்கீரனை விடுங்கள்… அதைப் பற்றிப் பேசுவதே நேர விரயம். ஆனால் ஜுனியர் விகடன் ?
செப்டம்பர் 2009 ஜுனியர் விகடன் இதழில் காஞ்சிபுரம் கோயிலில் அர்ச்சகராக இருந்த தேவநாதன் என்பவர் பல பெண்களோடு உறவு கொண்டு, அதை வீடியோ எடுத்து வைத்தது வெளியானதை கவர் ஸ்டோரியாக வெளியிடடிருந்தது. தேவநாதன் தங்களை கொடுமை செய்தார் என்றோ, மிரட்டினார் என்றோ யாருமே புகார் கொடுக்காத நிலையில் அப்படி ஒரு கவர் ஸ்டோரியை வெளியிட்டிருந்தது ஜுனியர் விகடன். ஆனால், ராஜா போன்ற, பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த ஒரு அயோக்கியனை காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்த விவகாரத்தைப் பற்றி ஒரு வரிச் செய்தி கூட இல்லை. மிக மிக நல்ல பத்திரிக்கையாளர்கள் விகடனில் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டிலும் பெண் பிள்ளைகள் இருப்பார்கள். அந்தப் பிள்ளைகள் வேலைக்குச் செல்லும் இடத்தில் யாராவது ஒரு பொறுக்கி இப்படி நடந்து கொண்டால் என்ன கோபம் வருமோ அதே கோபத்தோடு இந்தச் செய்தியை வெளியிட்டிருக்க வேண்டும். ராஜாவைப் போன்ற அயோக்கியர்களை அம்பலப்படுத்த வேண்டியது ஊடகங்களின் கடமை. ஜுனியர் விகடன் இது குறித்து செய்தி வெளியிடாதது குறித்து மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது.
இதே போல புதிய தலைமுறை தொலைக்காட்சியும், அனைத்து காட்சிகளும் கையில் இருந்தும் செய்தி வெளியிடாதது ஏன் என்றே புரியவில்லை.
இந்தப் புகார் மற்றும் வழக்குக்குப் பின்னால், புகாரளித்த அகிலாவைப் பற்றிய மோசமான வதந்திகள், சன் குழுவினரால் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. இந்த வதந்திகளைப் பரப்புவதில் முன்னிற்பவர்கள் பெண்கள் என்பது வேதனையான விஷயம். இப்படிப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அகிலாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய மகளிர் அமைப்புகளும், பெண் பத்திரிக்கையாளர்களும், முகநூலில் நிலைச்செய்தி இடுவதையும், திரைப்படங்களில் பெண்கள் மோசமாக சித்தரிக்கப்படுவது குறித்த மயிர்பிளக்கும் விவாதங்களில் ஈடுபட்டுள்ளார்கள். குறைந்தபட்சம் இதைக் கண்டித்தும், அகிலாவுக்கு ஆதரவாகவும் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட நடத்தவில்லை.
1997ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்திலும், பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், ஒரு குழு அமைக்க வேண்டும். இது விசாகா கமிட்டி என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் விகடன் குழுமத்தைத் தவிர வேறு எந்த ஊடகத்திலும் இப்படி ஒரு கமிட்டி செயல்படுவதாகத் தெரியவில்லை. இந்த கமிட்டியை செயல்படுத்தவதற்காகவாவது, இந்தப் பெண் போராளிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பார்த்தால், இப்படி வக்கணையாக பேசும் நபர்கள் (சவுக்கைத்தான்) ஏன் செய்யக்கூடாது என்ற எதிர்கேள்வி கேட்கிறார்கள். இந்த பெண் போராளிகள் இது வரை, புகார் கொடுத்த அகிலாவைக் கூட சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில்தான் தன்னந்தனியாக அகிலா போராடிக் கொண்டிருக்கிறார். இன்று (திங்கட்கிழமை) பணியில் சேர்ந்த அவருக்கு ஏற்கனவே 12 மணிச் செய்திகளை வாசிக்க வேண்டும் என்று இருந்த ஷெட்யூல் திருத்தப்பட்டு சரயூ என்ற மற்றொரு பெண் வாசிக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. மாலை அகிலா வாசிக்க வேண்டிய வணிகச் செய்திகள் மகாலட்சுமி என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி அகிலாவை முடக்கவும், அவர் புகாரை வாபஸ் பெற வைக்கவும் பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, சன் செய்தியாளர் ராம.செல்வராஜ் உதவி ஆணையர், துணை ஆணையர் போன்றோரைச் சந்தித்து, ராஜாவின் ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு வருகிறார்.
அன்பான கலாநிதி மாறன் அவர்களே…. உங்களுக்கு அன்பரசி என்று ஒரு தங்கை இருக்கிறார். உங்களுக்கு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அகிலா போன்ற பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை எப்படி உங்களால் பொறுத்துக் கொள்ள முடிகிறது ? ராஜாவின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் உங்கள் காதுகளுக்கு வந்திருக்காது என்பதை ஏற்பதற்கில்லை. அப்படித் தெரிந்திருந்தும் ராஜா போன்ற நபர்களை அனுமதித்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு எப்படிப்பட்ட லாப வெறி இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
ராஜா போன்ற நபர்களை தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலின் தமிழக பிரதிநிதியாக பரிந்துரை செய்து நியமித்திருப்பதிலேயே ராஜாவுக்கு நீங்கள் அளிக்கும் அங்கீகாரமும், மரியாதையும் என்னவென்று புரிகிறது.
நீங்கள் இது நாள் வரை செய்த தவறுகளுக்கு பிராயசித்தமாக, அந்தப் பெண் அகிலாவின் வேலைக்கான பாதுகாப்பை நீங்கள் வழங்க வேண்டும். இந்நாள் வரை பணி இடைநீக்கம் செய்யப்படாமல் உள்ள ராஜாவையும், வெற்றிச் செல்வனையும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். ராஜா போன்ற நபர்களை பணியில் தொடர அனுமதிப்பது உங்களுக்கு தொடர்ந்து ஏற்படும் அவமானம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடனடியாக சன் குழும நிறுவனங்கள் அனைத்திலும் விசாகா கமிட்டி அமைக்க உத்தரவிடுங்கள். பெண்கள் உங்களை வாழ்த்துவார்கள்.
துணை ஆணையர் லட்சுமி ஐபிஎஸ்
அகிலாவின் புகார் மீது சிறப்பாக நடவடிக்கை எடுத்த காவல்துறை ஆணையர் ஜார்ஜ் அவர்களுக்கும், துணை ஆணையர் லட்சுமி அவர்களுக்கும் சவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இவர்கள் எல்லோரையும் விட, துணிச்சலாக ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்துக்கு எதிராக புகார் கொடுத்த அகிலாவுக்கே அனைத்து வாழ்த்துக்களும் உரியது. நீங்களும் வாழ்த்துங்கள் தோழர்களே….