இப்படி யாரையும் சபிப்பது வருத்தத்திற்குரிய விஷயம். அதிலும் சம்பந்தப்பட்ட நபரின் பிறந்தநாள் அன்று சபித்தால் ? இவர் திருந்த மாட்டார், மனம் வருந்தமாட்டார் என்று நினைக்கும் ஒரு நபரை மட்டுமே இப்படிச் சபிக்க முடியும். அப்படி சபிக்கப்பட உள்ள நபர் யார் தெரியுமா ? சன் டிவிதான். 13 ஏப்ரல் 2013ம் ஆண்டோடு சன் டிவி தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. சாதாரணமாக, ஒரு ஊழல் அரசியல்வாதியின் மகனாகப் பிறந்த கேடி சகோதரர்கள் இன்று ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டியமைத்திருக்கிறார்கள். இவர்களின் சாம்ராஜ்யம் அத்தனையும், தமிழனின் உழைப்பில், தமிழனின் வியர்வையில், தமிழனின் பணத்தில் விளைந்தது.
இன்று மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கும் கேடி சகோதரர்களின் சன் குழுமத்தின் உறுப்பினர்கள் யார் தெரியுமா ?
மல்லிகா மாறன் (கேடிகளைப் பெற்ற மகராசி)
கலாநிதி மாறன்
தயாநிதி மாறன்
அன்புக்கரசி மாறன் (கேடிகளின் தங்கை)
காவேரி கலாநிதி (பெரிய கேடியின் மனைவி)
காவ்யா கலாநிதி (மகள்)
நீனா பெல்லியப்பா (கலாநிதியின் மாமனார்)
செரினா பெல்லியப்பா (கலாநிதியின் மாமியார்)
இவர்கள்தான் இன்று தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஊடக மாஃபியாவாக வளர்ந்து நிற்கும் சன் குழுமத்தின் உரிமையாளர்கள்.
இந்த சன் குழுத்தின் தொடக்க கால வரலாற்றை சவுக்கு தளத்தில் கேடி சரித்திரம் என்ற கட்டுரையில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தக் கேடிகளின் வரலாறே பொய், புரட்டு, வஞ்சகம், சூது இன்னபிற.
தமிழர்களின் ரத்தத்தை உறிஞ்சி கோடிக்கணக்கான பணத்துக்கு அதிபதிகளாக இருக்கும் கேடி சகோதரர்களுக்கு சொந்தமாக இருக்கும் நிறுவனங்கள் என்னென்ன தெரியுமா ?
வேலூர் முரசு ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
கோவை முரசு ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
கே.எஸ் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
கல் பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி, ஆர்எம்அர் ரமேஷ்
சேலம் முரசு ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
கல் கேபிள்ஸ் ப்ரைவெட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன், கே.சண்முகம்
சன் அகாடமி ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் உதயநிதி, கலாநிதி மாறன், எஸ்.செல்வம், கே.சண்முகம்
ஜெமினி டிவி ப்ரைவெட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன், ஏ.மனோகர் ப்ரசாத், பி.கிரண், காவேரி கலாநிதி
கல் கம்யூனிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டேட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
கல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (மெட்றாஸ்) ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன், எஸ்.செல்வம் மற்றும் காவேரி கலாநிதி
கேபிகே பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
குங்குமம் நிதியகம் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி மற்றும் எஸ்.செல்வம்
உதயா டிவி ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி மற்றும் எஸ்.செல்வம்
குங்குமம் பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி மற்றும் எஸ்.செல்வம்
நெட்வொர்க் கேபிள் சொல்யூஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் மற்றும் கே.சண்முகம்
சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் மற்றும் எஸ்.செல்வம்
சன் டைரெக்ட் டிவி ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
டிஎம்எஸ் என்டர்டெய்ன்மென்ட் ப்ரைவேட் லிமிடெட்
இயக்குநர்கள் ப்ரியா தயாநிதி மற்றும் முகம்மது இஷ்ரத்
எச்.எஃப்.ஓ என்டர்டெய்ன்மென்ட் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் ப்ரியா தயாநிதி மற்றும் முகம்மது இஷ்ரத்
டிகே என்டர்ப்ரைசஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் மற்றும் ப்ரியா தயாநிதி
சன் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட்
ட்ரஸ்டிகள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
எஸ் & எஸ் டெக்ஸ்டைல்ஸ்
செல்வி செல்வம், காவேரி கலாநிதி, ப்ரியா தயாநிதி
எம்எம்எஃப் ட்ரஸ்ட்
ட்ரஸ்டீஸ் கலாநிதி மாறன் மற்றும் மல்லிகா மாறன்
கல் ரேடியோஸ்
இயக்குநர்கள் கலாநிதி மாறன்
சவுத் ஏஷியா எப்.எம்.
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
இந்தப் பட்டியல் 2006 அன்று உள்ளபடி. இதற்குப் பிறகு மேலும் பல நிறுவனங்களைத் தொடங்கியிருக்கிறார்கள் கேடி சகோதரர்கள். கடைசியாக அவர்கள் தொடங்கிய தொழில் நிறுவனம்தான் ஸ்பைஸ் –ஜெட் விமான சேவை.
கேடி சகோதரர்களின் தொடக்க காலம் முதல், இன்றைய வளர்ச்சி வரை, திமுக என்ற மாபெரும் கட்சியின் நிதியும், அதிகார பலமும் பின்புலத்தில் இருந்து இயக்குகிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. திமுகவால் வளர்ந்து இன்று தீட்டிய மரத்திலேயே பதம் பார்க்கிறார்கள் கேடிகள் என்பது வேறு விஷயம்.
ஆ.ராசாவை ஆறே மாதங்களில் கைது செய்த சிபிஐ, கேடி சகோதரர்கள் விஷயத்தில் இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் செயலற்று இருக்கிறது என்பது, கேடி சகோதரர்கள் எத்தனை பெரிய தீய சக்தியாக வளர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. தொலைபேசி இணைப்பைத் திருடி கோடிக்கணக்கில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கு என்பது வெளிநாட்டில் ஆதாரங்களைத் தேட வேண்டிய வழக்கு அல்ல. பத்தே நாட்களில் புலன் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கூடிய அளவுக்கு எளிதான வழக்கு. இந்த வழக்கிலும் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதும் கேடிகளின் செல்வாக்குக்கு ஒரு சான்று.
இந்த கேடி சகோதரர்களுக்கு அம்பானிகள் போலவும், ரத்தன் டாடா போலவும், ஆதித்ய பிர்லா போலவும், பஜாஜ் போலவும், பெரும் பணக்காரர்கள் வரிசையில் வர வேண்டும் என்ற தணியாத கனவு உண்டு. இந்தக் கனவின் ஒரு பகுதியே சொந்தமாக ஐபிஎல் அணி.
சொந்தமாக ஐபிஎல் அணி வாங்க நினைப்பதில் தவறில்லை…. ஆனால், இலங்கையின் தமிழினப்படுகொலை காரணமாக தமிழகமே சிங்களனுக்கு எதிராக கொதித்தெழுந்து எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் சிங்களனை தங்கள் அணியின் கேப்டனாக வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்ட இனத்துரோகிகள் என்பதை அடையாளம் காணுங்கள்.
தங்களது ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தை இலங்கைக்கு நடத்தி தொடர்ந்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறார்கள். பாலச்சந்திரன் புகைப்படம் வெளியாகி, தமிழகம் கொதிநிலையை எட்டியபோதும் கூட, இவர்கள் குறைந்தபட்சம் தங்கள் அணியில் உள்ள சிங்கள வீரர்களை நீக்குகிறோம் என்று அறிவிக்கவில்லை.
தமிழனின் வியர்வையிலும், தமிழனின் உழைப்பிலும், தமிழனின் பணத்தை உறிஞ்சிய இவர்கள், தமிழினத்துக்கே விரோதிகளாக தொடர்ந்து இருந்து வருகிறார்கள். இவர்கள்தான் தமிழினத்தின் உண்மையான எதிரிகள். எந்த திமுகவின் பலத்தில் வளர்ந்து எந்த திமுகவின் பலத்தில் இயங்கி வருகிறார்களோ, அந்த திமுகவே தீவிர சிங்கள எதிர்ப்பில் இறங்கியுள்ள நிலையில், வெளிப்படையாக சிங்களனோடு உறவாடி, சிங்களனோடு கொஞ்சி குலாவி, சிங்களனோடு தொழில் செய்து வரும் இவர்கள் தமிழின விரோதிகளா இல்லையா… இவர்களின் சன் டிவி பிறந்தநாளன்று இவர்களை சபிக்காமல் என்ன செய்வது ?’
கேடி சகோதரர்களை முழுமையான தீவிரத்தோடு எதிர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. இந்தக் கடமையை ஆற்ற வேண்டிய பெரும் பொறுப்பு மாணவ சமுதாயத்திடம் உள்ளது.
அன்பார்ந்த மாணவர்களே. கடந்த ஒரு மாத காலமாக, தமிழகத்தை ஏறக்குறைய புரட்டிப் போட்டு விட்டீர்கள். பாலச்சந்திரனின் கொலைக்கான ஆதாரங்கள் வெளியானதும் நீங்கள் தொடங்கிய போராட்டம் தமிழகத்தையே பற்றி எரியச் செய்தது. அரசியல் கட்சிகள் நடுநடுங்கின. மத்திய அரசு அதிர்ச்சியோடு வேடிக்கை பார்த்தது. அரசியல் கட்சிகள் எப்படி இந்த மாணவர்களை தாஜா செய்வது என்று ஆருடம் பார்த்தன. தமிழினத்தின் ப்ரூட்டஸ் டெசோவின் மார்க்கெட் போய் விட்டதே என்று கவலைப்பட்டார். சிறிது காலம் தலைமறைவாக இருந்த போலிப்பாதிரி மீண்டும் ஈழ விவகாரத்தை கையில் எடுக்கும் சூழல் உருவானது. தமிழின ப்ரூட்டஸின் அன்புத் தளபதி திருமாவளவன் கூட, முதலில் போராட்டத்தைத் தொடங்கிய லயோலா கல்லூரி மாணவர்களைச் சந்தித்துப் பேசினார்.
இந்தப் போராட்டத்தின் மிகப்பெரிய திருப்பமாக, எட்டி உதைத்தால் கூட வெளியேற மாட்டேன் என்று பிடிவாதமாக ஒட்டிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார் கருணா. மாணவர்களின் போராட்டங்களுக்கு மக்களிடையே இருந்த தீவிர ஆதரவை நன்கு உணர்ந்த ஜெயலலிதா, மாணவர்களின் போராட்டத்துக்கு முழு ஆதரவு வழங்கினார். தொடக்கத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு தவறான முடிவை எடுத்த ஜெயலலிதா, சுதாரித்துக் கொண்டு, மாணவர் போராட்டத்துக்கு மறைமுக ஆதரவ அளித்தார்.
ஐக்கிய நாடுகள் அவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்திய அரசு நிலைபாடு எடுக்க வேண்டும் என்ற ஒற்றை முழக்கத்தோடு சில மாணவர்கள் போராடினர். அமெரிக்கத் தீர்மானமே ஒரு கண் துடைப்பு என்ற ரீதியில் சில மாணவர்கள் போராடினர். ஆனால் இந்த இரு தரப்பையும், சிங்கள எதிர்ப்பு என்ற ஒற்றை நூல் இணைத்தே வைத்திருந்தது. மாணவர்களின் போராட்டம் ஐநா தீர்மானத்துக்குப் பிறகும், தனி ஈழம் கோரி ஜெயலலிதா எடுத்து வந்த தீர்மானத்துக்குப் பிறகும் சற்றே தளர்ச்சியைச் சந்தித்திருக்கிறது.
ஐக்கிய நாடுகள் அவைத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்க வைக்க நிர்பந்தித்தது மாணவர்களின் போராட்டம் மட்டுமே என்றால் அது மிகையல்ல. அது நீர்த்துப் போன தீர்மானமாக இருந்தாலும், இலங்கையை மடியில் போட்டுக் கொஞ்சிக் கொண்டிருக்கும் மத்திய அரசு அப்படி ஒரு நிலைபாட்டை எடுக்க வைத்ததில் மாணவர்களின் பங்கு மகத்தானது.
தமிழினத்தைக் கருவறுத்த சிங்களனோடு கூட்டு சேர்ந்து, அதில் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்துக்கு எதிராக போராட வேண்டிய கடமை இன்னும் இருக்கிறது. மாணவர்களின் எழுச்சிக்குப் பிறகு, ஐபிஎல் என்ற கேளிக்கை விளையாட்டில் சிங்களனோடு கூட்டு சேர்ந்து, சிங்கள வீரர்களை தங்கள் அணியில் சேர்ந்து லாபம் சம்பாதிக்கத் துடிக்கும் துரோகிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பு சம்பிரதாயமாக தொடங்கி அடங்கி விட்டது. உண்மையில் மாணவர்கள் தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டியது, இந்த கோடரிக் காம்புகளுக்கு எதிராகவே.
இந்தக் கோடரிக் காம்புகளில் முதன்மையான காம்பு தமிழகத்தைப் பீடித்திருக்கும் தீய சக்திகளான கேடி சகோதரர்கள். தமிழனின் உழைப்பில் விளைந்த பணத்தை சம்பாதித்து, தமிழ்நாட்டில் தொழில் நடத்தி, தமிழனின் பணத்தில் தொடர்ந்து திளைத்துக் கொண்டிருக்கும் கலாநிதி மற்றும் தயாநிதி ஆகிய கேடி சகோதரர்கள் ஒழிக்கப்பட வேண்டிய தீயசக்திகள்.
மாணவர்கள் சிங்கள எதிர்ப்போடு சேர்த்து செய்ய வேண்டியது, துரோகிகளை அம்பலப்படுத்தி ஒழிக்க வேண்டியதும் ஆகும். அன்பான மாணவச் செல்வங்கள் தங்கள் சக்தியை சன் குழுமத்துக்கு எதிராக திருப்ப வேண்டும் என்று சவுக்கு அன்போடு கேட்டுக் கொள்கிறது. தமிழின விரோதிகளைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
எங்கெங்கெல்லாம் எஸ்சிவி கேபிள் இணைப்பு இருக்கிறதோ, அந்த இடங்களின் கேபிள் ஆபரேட்டர்களை வேறு ஆபரேட்டர்களுக்கு மாற்றச் சொல்லுங்கள்.
எங்கெல்லாம் சன் டிடிஎச் இணைப்பு இருக்கிறதோ அங்கே வேறு இணைப்புக்கு மாற்றச் சொல்லி வேண்டுகோள் வையுங்கள்.
யாரெல்லாம் தினகரன் வாங்குகிறார்களோ, அவர்களை வேறு செய்தித்தாள் வாங்கச் செய்யுங்கள்.
தமிழ் முரசு வாங்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்யுங்கள்.
சன் டிவி பார்க்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்யுங்கள்.
சூரியன் எப்எம் கேட்காதீர்கள் என்று பரப்புரை செய்யுங்கள்.
தயாநிதி மாறன் எந்தத் தொகுதியின் போட்டியிட்டாலும், அந்தத் தொகுதியில் கூட்டமாகச் சென்று தயாநிதிக்கு எதிராக பிரச்சாரம் செய்யுங்கள். தயாநிதியைத் தோற்கடிப்பதையே உங்கள் ஒரே லட்சியமாகக் கொள்ளுங்கள்.
தமிழின விரோதிகள் கேடி சகோதரர்கள் மீதான உங்கள் எதிர்ப்பைத் தீவிரப்படுத்துங்கள். கேடி சகோதரர்களுக்கு நீங்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு, தமிழினத்துக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவை.