மன்மத ராஜாவைக் கண்டித்தும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக புகார் கொடுத்த அகிலாவையே பணி நீக்கம் செய்து அவரது மன உறுதியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சன் டிவி நிர்வாகத்தைக் கண்டித்து வரும் 17 ஏப்ரல் 2013 அன்று சன் டிவி அலுவலகம் முன்பாக மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
ஆர்ப்பாட்டம் நடத்தும் தோழர்களிடம் சவுக்கு ஒரே ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறது. உங்களது வழக்கமான கோரிக்கையோடு, ஏற்கனவே இது தொடர்பாக சன் டிவி முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து விட்டு, பின்னர் அறிவிக்கப்படாத காரணங்களுக்காக அந்த ஆர்ப்பாட்டத்தை வாபஸ் வாங்கிய சிபிஎம்மின் பெண்கள் அமைப்பான ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் அந்த ஆர்ப்பாட்டம் வாபஸ் பெறப்பட்டதற்கு, பரிமேழழகர் போல விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் உமாநாத் வாசுகி ஆகியோரை சிறப்பான முறையில் கழுவி ஊற்ற வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை.