வள்ளியூர் நீதிமன்ற நடுவர் க்றிஸ்டல் பபிதா என்பவர், தன் வீட்டில் சரிவர மீன் குழம்பு வைக்கவில்லை என்ற காரணத்தால், நீதிமன்றத்தின் அலுவலக உதவியாளர் வேல்முருகன் என்பவரை பணி இடைநீக்கம் செய்தார். இது குறித்து சவுக்கில் நமக்கு வாய்த்த அடிமைகள் என்ற கட்டுரையில் விரிவாக எழுதப்பட்டிருந்தது.
இந்த கிறிஸ்டல் பபிதாவை வள்ளியூரிலிருந்து உசிலம்பட்டிக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார் என்பதை சவுக்கு மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறது.