பெண்ணை ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவு செய்து நடுத்தெருவில் தூக்கியெறிந்த டெல்லி சம்பவம் போன்ற வெளிப்படையாக நடக்கும் கொடுமைகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. மக்கள் தெருக்களில் திரண்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக நியாயம் கேட்கிறார்கள். ஆனால் பளபளக்கும் கட்டிடங்களுக்குள் ஏசி அலுவலகங்களுக்குள் தம் கீழ் பணிபுரியும் பெண்களை மிரட்டிப் பணியவைத்து தினம் தினம் அவர்களை பாலியல் வல்லுறவுகளுக்கு ஆட்படுத்தி துண்புறுத்தும் காமவெறியர்கள் மிடுக்காகத் திரிந்துகொண்டுதானிருக்கிறார்கள்.
இவர்களுக்கு மத்தியில் தன்னை பாலியல் இச்சைக்குப் பணியவைக்க பல்வேறு பணியிடர்பாடுகளைக் கொடுத்த சன் டி.வி.யின் தலைமை அதிகாரியான ராஜா, அவருடைய வலைவிரிப்புக்கு பிரொக்கராக செயல்பட்ட வெற்றிவேந்தனை ஆகியோரை தைரியமாக எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறார் அதே தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளரான அகிலா என்ற பெண்.
ராஜாவின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத அகிலா காவல் நிலையத்தில் புகார் செய்தார். ராஜாவோ கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்திருந்திருந்தாலும் சன் டி.வி. நிர்வாகம் பணி இடைநீக்கம் மட்டும் செய்துவிட்டு நாடகமாடிக் கொண்டிருக்கின்றது.
சன் டிவி ’இமேஜிக்கு’ களங்கத்தை விளைவித்த அகிலாவிற்கு எதிராக அங்கு வேலை செய்பவர்களிடம் பொய்ப் புகார்களைப் பெற்று அகிலாவை பணியிடை நீக்கம் செய்திருக்கிறது சன் டிவி நிர்வாகம்.
இத்தகைய நுணுக்கமான பாலியல் வன்முறையை எதிர்த்துப் போராடுவது மிகவும் அரிதான ஒன்று. வெளியெ சொன்னால் தனக்குத்தான் அவமானம் என்றென்னி முடங்கிக் கொள்கின்றனர். ஆனால் அகிலாவோ கிரிமினல் வழக்கு, பெண்கள் ஆனையம், சன் டிவியின் உள்விசாரணைக்கு மனு என பல வழிகளில் தனது போரட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இது அகிலா-ராஜா என்ற இருவருக்குமான தனிப்பட்ட பிரச்னை இல்லை. நமது அனைவருக்குமான பிரச்னையென்று பார்க்க வேண்டுமெனவும், பெண்கள் தங்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக போராடுவதை ஆதரிப்பதன் மூலமும், களத்திலும் இரங்கி போராடும் துணிவை ஏற்ப்படுத்தவும் எமது அமைப்பு சன் டிவி அலுவலகம் முன்பு 17.4.2013 அன்று மாலை 4.30 மணிக்கு ஆர்ப்பட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்களும், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களும் மற்றும் பொது மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.