தேவேந்தர் பால் சிங் புல்லார். கடந்த வாரம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைப் போல மிகவும் பிற்போக்கான கண்டிக்கத்தக்க தீர்ப்பு இந்திய வரலாற்றில் அளிக்கப்பட்டது இல்லை. 60 ஆண்டுகாலமாக பல்வேறு தீர்ப்புகளின் மூலம், இந்திய நீதித்துறை உருவாக்கிய மரபையும், மனித உரிமை விழுமியங்களையும் ஒரே தீர்ப்பில் குழி தோண்டிப் புதைத்திருக்கின்றனர் நீதிபதிகள் சிங்வி மற்றும் முக்கோபாத்யாய் ஆகியோர் மிக மிக பிற்போக்கான தீர்ப்பு மட்டுமல்லாது இத்தீர்ப்பு இந்தியாவை உலக நாடுகளின் பார்வையில் ஒரு கொடுங்கோல் நாடாக மாற்றும் தன்மை படைத்தது.
மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் ஒரு கைதி, நீண்ட நாட்களாக மரணக் கொட்டடியில் இருப்பது அவருக்கு தாளாத மன உளைச்சலையும், கொடுமையையும் ஏற்படுத்தும் என்பதை பல்வேறு தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த நீண்ட கால தாமதத்தையே அடிப்படையாகக் கொண்டு, ஒருவரின் மரண தண்டனையை வாழ்நாள் சிறையாக மாற்றலாம் என்ற மரபை / நியதியை மாற்றி, தீவிரவாதம் என்ற ஒரே வாதத்தின் அடிப்படையில் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் கூட ஒருவரைத் தூக்கிலிடலாம் என்ற புதிய நியதியை உருவாக்கியிருக்கிறது உச்சநீதிமன்றத்தின் புல்லார் வழக்குத் தீர்ப்பு. மரண தண்டனை விதிக்கப்படும் வழக்குகளில் கடைபிடிக்கப்படும் “அரிதிலும் அரிதான வழக்கு” என்ற நியதிக்குள்ளாகவே ஒரு புதிய பிரிவை ஏற்படுத்தியிருக்கின்றனர் நீதிபதிகள். அதாவது அரிதிலும் அரிதான வழக்குக்குள்ளாகவே தீவிரவாதம் என்ற புதிய பிரிவை ஏற்படுத்தியிருக்கின்றனர்.
திரிவேனி பேன் மற்றும் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம், மரணக்கொட்டடியில் மரணத்தின் நிழலில் காத்திருப்பதைப் போன்ற ஒரு கொடுமை இருக்க முடியாது.
1983ம் ஆண்டு வழங்கப்பட்ட டி.வி.வைத்தீஸ்வரன் மற்றும் எடிகா அன்னம்மா ஆகிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் இரண்டு மற்றும் இரண்டரை ஆண்டுகள் தாமதத்தைக் காரணம் காட்டி, மரண தண்டனைகளை வாழ்நாள் தண்டனைகளாக மாற்றியிருக்கிறது. இந்த வழக்குகளைப் போலவே பல்வேறு வழக்குகளில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டு தாமதங்களையே மரண தண்டனையை ரத்து செய்வதற்கான அடிப்படையாகக் கொண்டு ரத்து செய்திருக்கிறது உச்சநீதிமன்றம். இத்தனை ஆண்டுகளாக, நீண்ட தாமதம், மரண தண்டனையை ரத்து செய்வதற்கான முக்கிய முகாந்திரமாக இருந்து வருகிறது.
திரிவேனி பேன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்திருந்தது.
As between funeral fire and mental worry, it is the latter which is more devastating, for, funeral fire bums only the dead body while the mental worry burns the living One. This mental torment may become acute when the judicial verdict is finally set against the accused. Earlier to it, there was every reason for him to hope for acquittal. That hope is extinguished after the final verdict. If, therefore, there is inordinate delay in execution, the condemned pris- oner is entitled to come to the court requesting to examine whether, it is just and fair to allow the sentence of death to be executed.
உடலை எரிக்கும் தீ, மன உளைச்சல் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டால் மன உளைச்சலே மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடியது. சிதையின் தீ இறந்த உடலைத்தான் சுடுகிறது ஆனால், மன உளைச்சல் உயிரோடு உள்ள மனிதனை சுடுகிறது. இறுதியாக மரண தண்டனை உறுதி செய்யப்படுகையில் இந்த வேதனை மிக அதிகமாகிறது. எப்படியாவது விடுதலை செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையோடு இருந்தவனின் நம்பிக்கையை அந்த இறுதித் தீர்ப்பு சிதைக்கிறது. இதன் காரணமாகவே, மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில், மிக நீண்ட தாமதம் இருந்தால், என் மீதான மரண தண்டனையை நிறைவேற்றுவது எப்படி நியாயமாகும் என்ற கேள்வியோடு நீதிமன்றத்தை அணுக அக்கைதிக்கு உரிமை உள்ளது.
இந்த நியதியே உச்சநீதிமன்றம் இத்தனை ஆண்டுகளாக வழங்கி வந்த மரண தண்டனை தொடர்பான வழக்குகளுக்கான தீர்ப்பை வழிநடத்தி வந்தது. ஆனால் சிங்வி மற்றும் முக்கோப்பாத்யாயின் தீர்ப்பு, இந்தியாவை 50 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுள்ளது.
தேவேந்தர் சிங் புல்லார் ஒரு பொறியியல் பட்டதாரி. இந்தியாவிடமிருந்து விடுதலை என்ற ஒற்றை முழக்கத்தோடு பஞ்சாப் பற்றியெறிந்த நேரத்தில் புல்லாரும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறார். 1993ல் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த மணீந்தர்ஜித் சிங் பிட்டா மீதான கொலை முயற்சி வழக்கில் புல்லார் சேர்க்கப்படுகிறார்.
பஞ்சாபில் தீவிரவாதம் தலைத் தூக்கியிருந்தபோது புல்லாரின் தந்தை மர்மமான முறையில் காணாமல் போகிறார். அவரது உடல் கூட கிடைக்கவில்லை. இந்த பின்புலத்தில்தான் புல்லார் தீவிரவாதத்தில் இறங்குகிறார். பஞ்சாபில் தீவிரவாதத்தைப் பற்றியும், பஞ்சாப் காவல்துறையின் அணுகுமுறை பற்றியும் விரிவாக புரிந்து கொள்ள மாச்சிஸ் என்ற திரைப்படத்தைப் பாருங்கள். டிசம்பர் 1994ல் ஜெர்மனிக்கு தப்பியோடிய புல்லார் அங்கே அடைக்கலம் கோருகிறார். ஆனால் ஜெர்மானிய அரசு அவருக்கு அடைக்கலம் தராமல் அவரைத் திருப்பி அனுப்புகிறது. புல்லார் இந்தியா திருப்பி அனுப்பபப் பட்ட பிறகு, புல்லாரைத் திருப்பிய அனுப்பியது தவறு என்று ஜெர்மானிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத் தக்கது.
புல்லாருக்கு எதிராக சாட்சி சொல்லிய 133 சாட்சிகளில் ஒருவர் கூட புல்லாரை அடையாளம் காட்டவில்லை. பல சாட்சிகள் தாங்கள் பார்த்த நபர் இவர் அல்ல என்று சாட்சியம் கூறியிருக்கிறார்கள். ஆனால், கொடுமையான தடா சட்டத்தின் கீழ் புல்லார் மீது வழக்கு தொடுக்கப்பட்டதால், காவல்துறையினர் முன் அளித்த வாக்குமூலங்களை நீதிமன்றம் அப்படியே ஏற்றுக் கொண்டது. புல்லார் தானாக முன்வந்து வாக்குமூலம் அளித்தார் என்று டெல்லி காவல்துறை கூறியது. தடா சட்டத்தின்படி, ஒரு குற்றவாளியின் வாக்குமூலம் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டு, அதன் பின்னர் அந்த கைதி நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டு, அவர் அளித்த வாக்குமூலம் உண்மையானதுதானா என்று நீதிபதியால் உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால் நீதிபதியிடம் ஒப்புதல் வாக்குமூலம் அனுப்பப்படும் முன்பே புல்லார் நீதிபதியிடம் நிறுத்தப்பட்டார். அந்த நீதிபதி ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பளித்த நவனீதகிருஷ்ணன் போன்ற ஒரு அரசுக் கைப்பாவை. ஒப்புதல் வாக்குமூலம் அளித்தீர்களா என்று ஒப்புக்கு கேட்டு விட்டு, புல்லாரை திருப்பி அனுப்புகிறார். திருப்பி அனுப்பப் பட்ட புல்லார், வேறு வழக்குகளில் விசாரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பஞ்சாப் போலீசிடம் ஒப்படைக்கப்படுகிறார். பஞ்சாப் போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட புல்லார் இரண்டு மாதங்கள் பஞ்சாப் போலீஸ் கட்டுப்பாட்டில் கடுமையான சித்திரவதைக்கு ஆளாகிறார்.
பஞ்சாப் போலீஸின் கட்டுப்பாட்டிலிருந்து வெளிவந்த முதல் நாளே, புல்லார் தான் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் மிரட்டி வாங்கப்பட்டது, அந்த வாக்குமூலத்தை தான் அளிக்கவில்லை என்று நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதுகிறார். பஞ்சாப் போலீசிலிருந்து வெளிவந்த புல்லாரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புகிறார்கள். மருத்துவரின் அறிக்கையில் புல்லார் கையொப்பமிட வேண்டும். ஆனால் புல்லார் அந்த மருத்துவ அறிக்கையில் கை ரேகை வைத்திருக்கிறார். இதுவே பஞ்சாப் போலீசின் கட்டுப்பாட்டில் புல்லார் எந்த அளவுக்கு சித்திரவதை செய்யப்பட்டார் என்பதற்கு சிறந்த உதாரணம். இந்தப் பின்னணியில்தான் புல்லாருக்கு டெல்லி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இதன் பின்னர் புல்லார் குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனு ஆறு ஆண்டுகளுக்குப் பின்னால் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து புல்லார் தொடர்ந்த வழக்கிலேயே உச்சநீதிமன்றம் சமீபத்தில் இப்படி ஒரு தீர்ப்பை அளித்துள்ளது.
மற்ற வழக்குகளை விட புல்லார் வழக்கு வித்தியாசமானது. புல்லாரின் மேல் முறையீட்டை உச்சநீதிமன்றத்தில் எம்.பி.ஷா, அரிஜித் பசாயத் மற்றும் அகர்வால் ஆகிய நீதிபதிகள் விசாரிக்கின்றனர்.
நீதிபதிகள் அரிஜித் பசாயத் மற்றும் அகர்வால் ஆகிய இருவரும், புல்லார் குற்றவாளியே என்று உறுதிசெய்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கின்றனர். ஆனால் எம்.பி.ஷா இந்தத் தீர்ப்புகளில் இருந்து வேறுபடுகிறார். இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறார்.
இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரியான பேடி, புல்லார் என்று தேடப்படும் தீவிரவாதி ஜெர்மனியிலிருந்து நாடுகடத்தப் பட இருப்பதாக தகவல் அறிந்து விமான நிலையத்துக்கு சென்று பார்க்கிறார். அப்போது அங்கே புல்லாரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து வைத்திருப்பதைப் பார்த்து அவரைக் கைது செய்கின்றனர்.
புல்லார் தானாக முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க முன்வருகிறார். தடா சட்ட விதிமுறைகளின்படி, எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள ஒருவர் ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் போலா என்ற துணை ஆணையர் புல்லாரின் வாக்குமூலத்தை பதிவு செய்கிறார்.
புல்லாரின் ஒப்புதல் வாக்குமூலம் ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. அந்த வாக்குமூலம் ஃப்ளாப்பியிலோ ஹார்ட் டிஸ்கிலோ சேமிக்கப்படவில்லை. புல்லார் தொடர்ச்சியாக ஆறு மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். அந்த ஆறு மணி நேரத்தில் புல்லாருக்கு தண்ணீரோ, உணவோ வழங்கப்படவில்லை.
நீதிமன்ற விசாரணையின்போது, புல்லார் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதியதை மறுத்துள்ளார். தன்னிடம் வெற்றுத்தாள்களில் கையெழுத்து பெறப்பட்டதாக கூறியுள்ளார். நீதிபதி முன் நிறுத்தப்பட்டபோது, ஆம் என்பதைத் தவிர வேறு ஏதாவது சொன்னால், பஞ்சாப் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு, என்கவுன்டரில் கொல்லப்படுவேன் என்று மிரட்டப்பட்டதாக புல்லார் தெரிவித்துள்ளார். பஞ்சாப் போலீசில் ஒப்படைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கழித்து திரும்ப சிறைக்கு வந்ததாகவும், வந்த முதல் நாளே தன்னுடைய ஒப்புதல் வாக்குமூலத்தை மறுதலித்து நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியதாக புல்லார் தெரிவித்துள்ளார்.
விசாரணை அதிகாரி பேடி தனது சாட்சியத்தில் விமான நிலையத்தில் புல்லார் கைது செய்யப்பட்டபோது அவர் சயனைட் விழுங்க முயற்சித்ததாகவும், அவர் அதைத் தடுத்து புல்லாரை கைது செய்தததாகவும் கூறியுள்ளார். ஆனால் புல்லார், லூப்தான்சா விமான சேவை அதிகாரிகளால், விமான நிலைய காவல் நிலைய ஆய்வாளர் தேஜ் சிங் மற்றும் உதவி ஆய்வாளர் சேவரியா குஜுர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவர்களின் சாட்சியத்தில் சயனைட் பற்றி ஒரு வார்த்தையும் கூறப்படவில்லை. அப்படியே சயனைட் விழுங்க முயற்சித்ததை உண்மை என்று எடுத்துக் கொண்டாலும் கூட, அந்த சயனைட் கைப்பற்றப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.
புல்லார் ஜெய்ப்பூர், பெங்களுர் போன்ற இடங்களில் தங்க வீடு எடுத்தார் என்று ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த வீடுகளின் பக்கத்தில் இருந்தவர்கள் யாரும் புல்லார் அங்கே தங்கியிருந்தார் என்று கூறவில்லை. வெறுமனே வீட்டின் எண்களையும் முகவரிகளையும் எழுதிக் கொள்வது எளிது. ஏனென்றால் அவர்கள் இவ்வழக்கை இரண்டு ஆண்டுகளாக விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.
குண்டு வைக்கப் பயன்படுத்தப்பட்ட காரை விற்றதாகக் கூறும் ஹர்சரண் சிங், அந்தக் காரை புல்லாருக்கு விற்றேன் என்று கூறவில்லை. இதைப் போலவே மோட்டார் பம்ப் விற்றதாகக் கூறிய சாட்சி, காசியாபாத்தில் வீடு வாடகைக்கு விட்ட சாட்சி ஆகியோர், புல்லாரை அடையாளம் காட்டவில்லை.
புல்லாரின் வாக்குமூலத்தில் சொல்லப்பட்ட பல விபரங்கள் சரிபார்க்கப்படவில்லை. அல்லது தவறாக இருக்கின்றன. புல்லாரின் ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ள மற்ற நபர்கள் கைது செய்யப்படவும் இல்லை, தண்டிக்கப்படவும் இல்லை.
இப்படிப்பட்ட முன்னுக்குப் பின் முரணான ஒப்புதல் வாக்குமூலம் என்று அழைக்கப்படும் ஒன்றை அடிப்படையாக வைத்து, ஒரு நபரை தண்டிக்க இயலாது. மேலும் இது போன்ற ஆதாரங்களை வைத்து மரண தண்டனை விதிக்க இயலாது. ஆகையால் புல்லாரை விடுதலை செய்கிறேன் என்று உத்தரவிட்டார் நீதிபதி எம்.பி.ஷா.
ஆனால் மூன்று நீதிபதிகளில் மற்ற இரு நீதிபதிகளான அகர்வால் மற்றும் அரிஜித் பசாயத் புல்லாருக்கு மரண தண்டனை விதித்தனர். மரண தண்டனை விதித்தாலும் அவர்கள் தங்கள் தீர்ப்பில், மற்றொரு நீதிபதியான எம்.பி.ஷா இந்த வழக்கில் புல்லாரை விடுதலை செய்திருக்கிறார். அவரது தீர்ப்புக்கு என்ன பொருள் என்ற கேள்வி எழுகிறது. புல்லார் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432, 433, 433-A, மற்றும் அரசியல் அமைப்புச் சட்டம் 161 அல்லது 72ன் கீழ் விண்ணப்பிக்கையில் இத்தீர்ப்பு பரிசீலிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது புல்லாரின் கருணை மனு பரிசீலிக்கப்படுகையில், நீதிபதி எம்.பி.ஷாவின் தீர்ப்பு பரிசீலிக்கப்பட வேண்டும் என்பது இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பு. இது கருத்து அல்ல. தீர்ப்பு. இத்தீர்ப்பை குடியரசுத் தலைவர் நிச்சயமாக பின்பற்றியிருக்க வேண்டும். ஆனால், நீதிபதி எம்.பி.ஷாவின் தீர்ப்பை புல்லாரின் கருணை மனுவைப் பரிசீலித்து பரிந்துரை அனுப்பிய உள்துறை அமைச்சகமும் பார்க்கவில்லை, கருணை மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவரும் பார்க்கவில்லை.
இந்த ஒரே காரணத்துக்காகவே புல்லாரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த வாதம் உச்சநீதிமன்றத்தின் முன்பாக எடுத்து வைக்கப்படவில்லை. புல்லாரின் வழக்கில் பல்வேறு தீர்ப்புகளை அலசி ஆராயும், நீதிபதிகள் சிங்வி மற்றும் முக்கோப்பாத்யாய் முன்பாக இந்த வாதங்கள் வைக்கப்படவில்லை என்றாலும் கூட, அவர்கள் நீதிபதி எம்.பி.ஷா மற்றும் இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பை ஆராய்ந்து, புல்லாரின் மரண தண்டனையை ரத்து செய்திருக்க வேண்டும்.
மாறாக பிற்போக்குத்தனமான ஒரு தீர்ப்பை அளித்து, நீண்ட தாமதம் மரண தண்டனையை குறைப்பதற்கு ஒரு காரணமல்ல என்று கூறியிருக்கிறார்கள்.
சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் சார்பாக புல்லார் வழக்கில் தீர்ப்பு வழங்கிய மறுநாளே குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் 750 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்ட கருணை மனு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அஜ்மல் கசாப், அப்சல் குரு போன்றவர்களை சட்டபூர்வமாக தூக்கிலிட்டது மத்திய அரசு. இதுபோல சட்டபூர்வமாகவே புல்லார் மற்றும் மரணக் கொட்டடிகளில் உள்ள கைதிகளை நாம் காப்பாற்றுவோம். கருணை மனு நிலுவையில் இருக்கையில், மரண தண்டனையை எதிர் நோக்கியுள்ள கைதிகளை தூக்கிலிட முடியாது. பஞ்சாப் அரசு சார்பில் புல்லாரின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி கருணை மனு அனுப்பப் பட்டுள்ளது. நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு ஒரு கருணை மனு அனுப்பியுள்ளார். பஞ்சாப் மாநில மக்கள் தொடர்ந்து கருணை மனு அனுப்பி வருகின்றனர். தமிழகத்திலிருந்து சிறைக் கைதிகள் உரிமை மையம் மற்றும், வழக்கறிஞர்கள் சார்பில் கருணை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
புல்லார் மரண தண்டனையை ரத்து செய் என்ற கோரிக்கையோடு, இடிந்தகரை தோழர்கள் மிகச் சிறப்பான ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். எத்தனை கருணை மனுக்களை அனுப்ப முடியுமோ அத்தனை கருணை மனுக்களை தனித்தனியாக அனுப்பவேண்டும் என்று இடிந்தகரை தோழர்களுக்கு சவுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
அதே போல சவுக்கு வாசகர்கள், அவர்கள் உள்நாட்டிலிருந்தாலும் சரி, வெளிநாட்டிலிருந்தாலும் சரி, கீழே உள்ள கருணை மனுவை, தனித்தனியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று சவுக்கு அன்போடு கோரிக்கை வைக்கிறது. நீங்களும் அனுப்புங்கள். நகலெடுத்து உங்கள் நண்பர்கள் உறவினர்களை அனுப்ப வையுங்கள்.
புல்லருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு, மூன்று தமிழர்களை மனதில் வைத்து வழங்கப்பட்டதாக இருக்கலாம். சோனியாவின் பழிவாங்கும் உணர்ச்சியையும், கடந்த கால நடவடிக்கையையும் மனதில் வைத்துப் பார்க்கையில், இந்தக் கருத்து தவறாக இருக்க வாய்ப்பில்லை.
புல்லரைக் காப்பாற்றுவோம் தோழர்களே… இன்று புல்லர் நாளை முருகன் சாந்தன் மற்றும் பேரறிவாளன் என்பதை மறந்து விட வேண்டாம்….
To
His Excellency the President of India, Rashtrapati Bhavan , New Delhi
Honoured Sir,
Sub: Submission of a petition under Article 72 of the Constitution for commutation of the death sentence awarded to Devender Pal Singh Bhullar in respect of whom Writ Petition (Criminal) D No 16039 of 2011, Writ Petition (Criminal) 146 of 2011 and Writ Petition (Criminal) No.86 of 2011 challenging the rejection of his mercy plea by the President of India were dismissed by the Supreme Court of India on 12.04.2013.
<><><>
May I submit the following for your benevolent consideration.
At the outset, I submit that I am an advocate having a standing of more than 12 years at the Tamil Nadu Bar. I am the Director of the Prisoners Rights Forum, Chennai which is a registered public trust (Regn. No.4319/2008). The objects of the trust are to create law awareness among the prisoners and to help them enforce their human rights, constitutional rights and legal rights. I have filed a number of Public Interest Litigations concerning violation of human rights and constitutional rights of the poor and downtrodden in the Madras High
Court. I have also filed a few public interest litigations regarding fake encounter killings happening in Tamil Nadu. Many public interest litigations concerning prison torture and police atrocities are taken serious note of by the Madras High Court and the Madras High Court has passed several orders upholding constitutional values.
I make this application for commutation of death sentence awarded to Devender Pal Singh Bhullar which was confirmed by the Supreme Court in Devender Pal Singh Vs State of NCT of Delhi and another : (2002) 5 SCC 234. Now that the Supreme Court has vide its judgment dated 12.04.2013 held that the President of India is right in rejecting the mercy petition of Devender Pal Singh Bhullar, I make this application under Article 72 of the Constitution on his behalf.
As the Hon’ble President of India is aware, a three Judge Bench of the Supreme Court comprising the Hon’ble Mr.Justice M.B.Shah, the Hon’ble Mr.Justice B.N.Agrawal, and the Hon’ble Mr.Justice Arijit Pasayat decided Criminal Appeal No. 993 of 2001 filed by the said Devender Pal Singh and death reference case (Crl.) No.2 of 2001 on 22 March 2002. The Hon’ble Mr.Justice M.B.Shah has in paragraphs 24, 25 and 26 of the judgment held as follows :
” 24. In this view of the matter, when rest of the accused who are named in the confessional statement are not convicted or tried, this would not be a fit case for convicting the appellant solely on the basis of so-called confessional statement recorded by the police officer.
25. Finally, such type of confessional statement as recorded by the investigating officer cannot be the basis for awarding death sentence.
26. In the result, Criminal Appeal No.993 of 2001 filed by the accused is allowed and the impugned judgment and order passed by the Designated Court convicting the appellant is set aside. The accused is acquitted for the offences for which he is charged and he is directed to be released forthwith if not required in any other case.”
The judgment of the Hon’ble Mr.Justice M.B.Shah is a minority judgment. The majority comprising the Hon’ble Mr.Justice B.N.Agrawal and the Hon’ble Mr.Justice Arijit Pasayat confirmed the death sentence awarded to Devender Pal Singh Bhullar. While confirming the death sentence, the Hon’ble Mr.Justice Arijit Pasayat has in paragraphs 59 and 60 of the judgment held as follows :
“59. … …. … Any compassion for such persons would frustrate the purpose of enactment of TADA, and would amount to misplaced and unwarranted sympathy. Death sentence is the most appropriate sentence in the case at hand, and learned Trial Judge has rightly awarded it.
60. However, a question arises as to the effect of Brother Shah, J. holding the accused innocent, while deciding the question of sentence.”
After observing thus, the Supreme Court has categorically held in paragraphs 60 and 61 of the judgment that if any motion is made in terms of Sections 432, 433 and 433-A of the Code and / or Article 72 or Article 161 of the Constitution as the case may be, the same may be appropriately dealt with.
In other words, the Supreme Court has held that while considering the mercy petitions made by the death convicts either under Article 72 of the Constitution or under Article 161 of the Constitution, the President and the Governor are required to apply their mind to the minority judgment of a Judge pronouncing the death convict innocent. In the case of Devender Pal Singh Bhullar, a Judge of the Hon’ble Supreme Court of India who is a member of three Judge Bench deciding his criminal appeal has held for the elaborate reasons given by him in the judgment that Devender Pal Singh Bhullar is innocent and that he deserves to be acquitted immediately. In paragraph 61 of the judgment of the Supreme Court in Devender Pal Singh’s case (supra), the Supreme Court has reiterated its stand to the effect that the principle contained in paragraph 60 of the judgment would be applicable to the case of Devender Pal Singh while deciding his mercy petitions either under Article 72 or Article 161 of the Constitution or in terms of Section 432, 433 and 433A of the Criminal Procedure Code.
It may be noted that the Hon’ble President of India has failed to apply her mind to the judgment of the Hon’ble Mr.Justice M.B.Shah (which is a minority judgment) holding Devender Pal Singh Bhullar innocent. The Hon’ble President of India while rejecting the mercy petition of Devender Pal Singh Bhullar has not considered the observations of the Supreme Court in paragraphs 60 and 61 of the Judgment (majority judgment) which are to the effect that such consideration is a must while deciding the mercy petitions of death convicts, more specifically the mercy petition of Devender Pal Singh Bhullar.
As the Hon’ble President of India is aware, there is no bar to consideration of a fresh mercy petition made under Article 72 of the Constitution either by the concerned person or by any one genuinely interested in protecting the constitutional rights of such a person. This mercy petition made on behalf of Devender Pal Singh Bhullar may be considered afresh in the light of the judgment of the Hon’ble Mr.Justice M.B.Shah (Devender PaL Singh Vs. State of NCT of Delhi and another : (2002) 5 SCC 234) holding Devender Pal Singh Bhullar innocent, and the Hon’ble President of India may be pleased to commute his death sentence.
Sincerely
அன்பார்ந்த தோழர்களே…. அப்சல் குரு இந்தியாவில் தூக்கிலிடப்பட்ட கடைசி மனிதனாக இருக்க வேண்டும். இனி ஒருவரையும் தூக்கிலிடக்கூடாது என்பதில் தீர்மானமாக இருப்போம்.