இரண்டாம் பாகத்தை படிப்பதற்கு முன்னால், குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு தொழில் அதிபர் சாதிக் பாட்சா அளித்த பேட்டியை படித்து விடுங்கள். பிறகு இரண்டாம் பாகத்தை தொடர்வோம்.
சரி, தைரியமாக பேசி விட்டோம். என்ன ஆனாலும் பார்த்து விடுவோம் என்று நினைத்துக் கொண்டு சிறையில் இருந்த செந்திலலைப் பார்க்க செந்திலின் தாய் பஞ்சவர்ணமும், இரண்டு மூத்
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசாவின் வீட்டையும், அலுவலகத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனையிட்டார்கள். அதே அளவுக்கு ராசாவின் ‘மனசாட்சியான’ அவரது நண்பர் சாதிக்பாட்சா நடத்திய கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் அலுவலகம் மற்றும் அவரது வீடுகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து பெரம்பலூரில் எம்.ஆர்.எஃப். கம்பெனிக்கு விவசாயிகளை மிரட்டி குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி அதிக விலைக்கு விற்றதாக சாதிக்பாட்சா மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், நீண்ட முயற்சிக்குப் பின்பு, சாதிக்பாட்சாவை நேரில் சந்தித்து சில கேள்விகளை முன்-வைத்தோம்.
உங்களுக்கும் ராசாவுக்கும் அறிமுகம் எப்போது?
‘‘இரண்டு பேரும் பெரம்பலூரைச் சேர்ந்தவர்கள். என் மாமா தி.மு.க. நகரச் செயலாளராக இருந்தபோது எங்களிடையே ஏற்பட்ட அறிமுகம் இன்றுவரை நட்பாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.’’
ஆரம்ப காலகட்டத்தில் நீங்கள் என்ன தொழில் செய்து வந்தீர்கள்?
‘‘என் வீட்டை சி.பி.ஐ. ரெய்டு செய்தபோது என்னுடைய ஆரம்ப கால வாழ்க்கை பற்றி ‘ரிப்போர்ட்டரில்’ தெளிவாக எழுதி-யுள்ளீர்கள்.’’
கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் எப்போது? எவ்வளவு முதலீட்டில் தொடங்கப்பட்டது?
‘‘2004_ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னை வரும்போதே செல்வ செழிப்-போடுதான் வந்தேன்.’’
இந்த நிறுவனம் உங்களுக்கு மட்டும் சொந்தமானதா? முன்னாள் அமைச்சர் ராசாவும் பங்குதாரரா?
‘‘ராசாவுக்கு இதில் எந்த பங்கும் கிடையாது. நானும் என் வேறு சில நண்பர்களும் முதலீடு செய்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம்.’’
இந்த நிறுவனத்தில் ராசாவின் மனைவி பரமேஸ்வரி இணை மேலாண்மை இயக்குனர் பதவியில் இருந்து விலகியது ஏன்?
‘‘நண்பரின் மனைவி என்ற அடிப்படையில் ‘லீகல் அட்வைசராக’ இருந்தார். அவரது சொந்த காரணங்களுக்காக அவர் கடந்த 2008_ம் ஆண்டிலேயே பதவியில் இருந்து விலகிக் கொண்டார். அதன் பின்பு அவருக்கும் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.’’
ராசாவின் மனைவி பதவி விலகிய பின்பு தான் அவருடைய அண்ணன் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டாரா?
‘‘அப்படியில்லை. நிறுவனத்தின் ஆரம்பத்தில் இருந்தே அவர் இயக்குனராக உள்ளார்.’’
அவர் எவ்வளவு முதலீடு செய்துள்ளார்?
‘‘மீண்டும், மீண்டும் தெளிவு-படுத்துகிறேன். ராசாவுக்கோ, அவரது உறவினர்களுக்கோ, கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கோ எந்தப் பங்கும் இல்லை. ராசாவின் அண்ணன் இதில் கௌரவ இயக்குனர் தான். சம்பளம் கூட கிடையாது.’’
அப்படியென்றால் ‘ஸ்பெக்ட்ரம்’ விவகாரத்துடன் தொடர்புபடுத்தி உங்கள் அலுவலகத்தை சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது ஏன்?
‘‘ராசாவின் அண்ணன் இதில் இயக்குனராக இருக்கிறார் என்ற ஒரே காரணம் மட்டும்தான்.’’
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை தொடர்பாக புதிய கம்பெனிகள் ‘பினாமி’ பெயரில் ஆரம்பித்ததை நீங்கள்தான் கவனித்து வந்தீர்களாமே?
‘‘அப்படியேதுமில்லை.’’
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் பெற்ற கறுப்புப் பணம் உங்கள் நிறுவனம் மூலம் வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறதே?
‘‘கடந்த 2007_ம் ஆண்டு தகவல் தொடர்புத் துறை அமைச்சராக ராசா பொறுப்பேற்றுக் கொண்டார். 2007_க்குப் பிறகு ‘ரியல் எஸ்டேட் பிசினஸ்’ டவுனாகி-விட்டது. அதன்பிறகு, வேறு எங்கேயும் நாங்கள் இடம் வாங்கவில்லை. எங்களுடைய வருமானவரி கணக்கையும், ஆவணங்களையும் சரிபார்த்தால் இருப்பு தெரியும்.’’
சென்னை துறைமுகம் _ மதுரவாயல் இடை-யேயான பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்திற்கு, ஒரு பிரபலமான வெளிநாட்டு நிறுவனத்துக்கு வேறு ஒரு பெயரில் அந்த டெண்டரை நீங்கள் எடுத்துக் கொடுத்து முறைகேடு செய்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?
‘‘ரியல் எஸ்டேட்டைத் தவிர எந்த ஒரு ‘காண்டி-ராக்ட்’ வேலையும் நான் எடுத்ததில்லை.’’
பெரம்பலூரில் எம்.ஆர்.எஃப். நிறுவனத்துக்கு ஏழை விவசாயிகளை மிரட்டி அடிமாட்டு ரேட்டுக்கு நிலம் வாங்கி, அதிக விலைக்கு விற்றதாக குற்றச் சாட்டு உள்ளதே?
‘‘நாங்கள் யாரையும் மிரட்டி வாங்கவில்லை. அன்றைய மார்க்கெட் விலைக்கே ஏக்கருக்கு 50 ஆயிரத்தில் இருந்து பத்து லட்சம் வரை நிலங்களை விலைக்கு வாங்கினோம். இன்று மார்க்கெட் விலை உயர்ந்து இருப்பதால், இப்படி ஒரு பிரச்னை எழுந்துள்ளது. எம்.ஆர்.எஃப். கம்பெனிக்கு ஒரு ஏக்கர் நிலத்தை 4 லட்சத்து 35 ஆயிரத்திற்கு தான் விற்பனை செய்துள்ளோம். இதற்கான ஆவணங்கள் உள்ளது.’’
அரசின் திட்டங்கள் அந்த ஊருக்கு வருவதை அறிந்து அதற்கேற்ப நிலங்களை வாங்கிக் குவித்தீர்களாமே?
‘‘அப்படிப் பார்த்தால் எம்.ஆர்.எஃப். நிறுவனத்தைச் சுற்றி எங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் கூட இல்லையே?’’
அப்படியென்றால் பொது-மக்கள் உங்கள் நிறுவனம் மீது பிரச்னை கிளப்ப என்ன காரணம்?
‘‘நிலம் விற்பனை செய்து மூன்று வருடங்களாகிறது. யாரு-டைய தூண்டுதலின் பேரிலோதான் இப்படி நடந்து கொள்கிறார்கள். நாங்கள் மிரட்டியிருந்தால், அன்றைக்கே, மீடியாக்களிடமோ அல்லது முதல்வரின் கவனத்திற்கோ, போலீஸ் ஸ்டேஷனிலோ புகார் கொடுத்திருக்கலாமே…’’
தூண்டிவிடுபவர்கள் யார் என்று பெயரைச் சொல்லலாமே?
‘‘தூண்டி விடுபவர்கள் யார் என்று தெரியும். ஆனால் பெயரைச் சொல்ல மாட்டேன்.’’
உங்கள் தொழில் போட்டியாளரா? ராசாவுக்கு எதிரானவரா?
‘‘ராசாவின் அரசியல் வாழ்க்கையை களங்கப்படுத்த வேண்டும் என்று கட்சியில் உள்ள ஒரு சிலர் அவருக்கு எதிராகத் தூண்டிவிடுகிறார்கள்.’’
உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள் ராசாவின் பினாமியா?
‘‘சத்தியமாக இல்லை.’’
‘ஒரு லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம் ஒரே வருடத்தில் 7 கோடி லாபம் ஈட்டியதாக’ நீங்கள் கணக்குக் காட்டியதாகக் கூறப்படுகிறதே?
‘‘இது முற்றிலும் தவறான செய்தி. ‘இக்வாஸ்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் 2005_06 வரவு_செலவு கணக்குகளை ஆடிட்டிங் செய்தபோது, லாபத்தொகையை ‘ஆயிரத்தில் எழுதவும்’ என்று எழுதப்பட்ட இடத்தில், தவறுதலாக ‘எண்ணால்’ எழுதிவிட்டோம். மீடியாக்கள் இதனை தவறாகப் புரிந்துகொண்டு இப்படி செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.’’
படிச்சவன் சூதும் வாதும் பண்ணா அய்யோன்னு போவான். பாகம் 2
சரி, தைரியமாக பேசி விட்டோம். என்ன ஆனாலும் பார்த்து விடுவோம் என்று நினைத்துக் கொண்டு சிறையில் இருந்த செந்திலலைப் பார்க்க செந்திலின் தாய் பஞ்சவர்ணமும், இரண்டு மூத்த சகோதரிகளும் சிறைக்கு வருகிறார்கள்.
செந்திலின் தாய், “அய்யா… அந்தக் காட்டக் குடுத்துடுய்யா…
செந்தில்
அந்தப் படுபாவிப் பயலுங்க வீட்டுக்கு வந்து என்னையும், உங்க அக்காளுங்களையும் ஜெயிலுக்கு அனுப்பிடுவோம்னு சொல்றாங்கைய்யா….“ என்று கதறுகிறார். தாயை சிறைக்கு அனுப்பப் போகிறார்கள் என்ற நினைவே செந்திலுக்கு நடுக்கத்தை கொடுக்கிறது. உடனடியாக தனது தாயிடமும், அக்காள்களிடமும் காட்டைக் கொடுக்க தயார் என்று தகவல் தெரிவிக்கிறார்.
சாதிக்கின் கையாளாக செயல்பட்ட பாபு என்ற வழக்கறிஞர், செந்திலை சிறையில் இருந்து வெளியில் எடுப்பதாக உறுதி கூறுகிறார். அதன் படியே இரண்டு நாள் கழித்து, சிறை சென்ற 13வது நாள், சாதிக்கின் உத்தரவுப் படி செந்தில் பிணையில் வெளி வருகிறார். செந்தில் வெளியே வருவதற்கு மாலை 6.30 ஆகிறது. வெளியே வந்த செந்தில் எங்கே மனம் மாறி விடுவாரோ என்பதற்காக தினமும் பாடாலூர் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை வேறு. திருச்சி சிறையின் வெளியே காத்திருந்த தொழில் அதிபர்கள் செந்தில் முருகனும், செல்வராஜும், செந்திலை கையோடு அழைத்துச் சென்று நேராக செட்டிக்குளம் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே அவர்கள் செல்லும் போது இரவு மணி 8.30. பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப் பட்ட செந்தில், பதிவு செய்ய என்ன இவ்வளவு அவசரம், நாளை காலை செய்யக் கூடாதா என்று எதிர்க்கிறார்.
உடனடியாக அங்கே இருந்த செந்திலின் அக்காள் கணவரிடம் சென்ற தொழில் அதிபர் செல்வராஜ், “என்ன உன் மருமகன் அடம் பிடிக்கிறான், நீயும் ஜெயிலுக்குப் போக வேண்டுமா ” என்று கேட்கிறார். செந்திலின் மாமா செந்திலிடம் “காட்டக் குடுக்கறதுன்னு ஆயிடிச்சி, அதக் காலையிலக் குடுத்தா என்ன, இப்பக் குடுத்தா என்ன, கையெழுத்துப் போடுப்பா“ என்று கூறுகிறார்.
செந்தில் கையொப்பம் இடச் சம்மதிக்க, இரவு 9.30 மணிக்கு பத்திரப் பதிவு நடைபெறுகிறது. அந்த ஆவணம் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளது. ஒரு ஏக்கருக்கு 3.5 லட்சம் தருவதாக செந்திலிடம் வாக்குறுதி அளிக்கப் பட்ட படி பணமும் வழங்கப் படவில்லை. எழுத்துக் கூட்டி மட்டுமே படிக்கத் தெரிந்த செந்தில் ஆங்கிலத்தில் இருந்த அந்த ஆவணத்தில் என்ன உள்ளது என்று கேட்டதற்கும் சரியான பதில் இல்லை. கையொப்பம் இட்டு விட்டு, வீட்டுக்கு திரும்பினார் செந்தில். மறுநாள் செந்திலை பெரம்பலூர் கனரா வங்கிக்கு வரச் சொல்லி ஏக்கருக்கு 3.5 லட்சம் தருகின்றனர். கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு தான் செந்திலுக்கு, ஒரு ஏக்கர் 15 முதல் 18 லட்சத்துக்கு எம்ஆர்எப் நிறுவனத்திற்கு விற்கப் பட்டது என்று தகவல் தெரிகிறது. இது செந்திலின் கதை. இந்த வழக்கும் முன்பு சொன்ன மற்றொரு பொய் வழக்கும் படித்த சூதுக்காரர் ப்ரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் படியே நடந்துள்ளது.
புகைப்படம் எடுக்கும் போது விரட்டும் எம்ஆர்எப் ஆலையின் செக்யூரிட்டி
கட்டுமானம் நடக்கும் எம்ஆர்எப் ஆலை
செந்தில் போல எதிர்ப்பு எதையும் தெரிவிக்காமல் செந்தில் சிறை சென்றதை பார்த்ததும் எதிர்ப்பின்றி தனது 11 ஏக்கர் நிலத்தை விற்றவர் துரைராஜ் என்பவர். அரசு நில ஆக்ரமிப்பு செய்கையில் ஆக்ரமிப்பு செய்யப் படும் நிலங்கள் விவசாயம் செய்ய லாயக்கற்ற மானாவாரி நிலங்கள் என்றே கூறியது. ஆனால் இந்த நிலங்கள் அனைத்தும் விளைச்சலை வாரித் தரக் கூடியன.
துரைராஜ்
இந்த துரைராஜின் 11 ஏக்கர் நிலத்தில் இரண்டு கிணறுகளும், போர் மோட்டார்களும் இருந்தன. 260 எலுமிச்சை செடிகள் இருந்தன. 25 தென்னை மரங்களும் இருந்தன. இந்த 260 எலுமிச்சை செடிகளில் இருந்து தினமும் இரண்டு மூட்டை எலுமிச்சைகளை திருச்சியில் உள்ள ஓட்டலுக்கு தினமும் விற்று வந்ததாக தெரிவிக்கிறார் துரைராஜ். இவருக்கு ஏக்கருக்கு வழங்கப் பட்ட தொகை 3 லட்சம். இந்த 11 ஏக்கருக்கும் ஒரு ஏக்கருக்கு எம்ஆர்எப் நிறுவனம் க்ரீன் ஹவுஸ் ப்ரோமேமாட்டர்ஸ்க்கு வழங்கிய தொகை 18 லட்சம்.
அடுத்த கதை முத்துசாமி என்ற 55 வயது முதியவருடையது. சவுக்கு அவரை சென்று அவரின் வயலில் சந்தித்த போது பூச்சி மருந்து தெளித்துக் கொண்டிருந்தார்.
தன் மகளுடன் முத்துசாமி
இந்த முத்துசாமியிடம் அவர் நிலத்தை கேட்டது படித்த சூதுக்காரர் அனில் மேஷராமின் உத்தரவுப் படி வருவாய் கோட்டாட்சியர் சாமிதாஸ் என்பவரும், வருவாய் ஆய்வாளர் மகேஸ்வரன் என்பவரும் உங்கள் நிலம் எம்ஆர்எப் நிறுவனத்துக்காக வேண்டும் என்று கூறுகின்றனர். இதற்காக கோட்டாட்சியர் சாமிதாஸ் முத்துசாமியிடம் 50,000 முன் பணம் தருகிறார். முதலில் எம்ஆர்எப் நிறுவனம் திட்டமிட்டிருந்த வரைபடத்தின் படி தேவைப்பட்ட முத்துசாமியின் நிலம், இரண்டாவது முறை தேவைப்படவில்லை. அதனால் உனது நிலம் தேவைப்படவில்லை, நாங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடு என்று செல்வராஜ் முத்துசாமியிடம் கூறுகிறார். தேவைப்படாத முத்துசாமியின் நிலம், எம்ஆர்எப் பேக்டிரியின் காம்பவுண்ட் அருகே உள்ளதால், இனி எப்படி அந்த இடத்தில் விவசாயம் செய்ய முடியும் என்று நினைத்த முத்துசாமி, “நிலம் வேண்டும் என்றுதான் என்னிடம் அட்வான்ஸ் கொடுத்தீர்கள், திடீரென்று நிலம் வேண்டாம் என்றால் நான் என்ன செய்வது என்று கூறி, வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார்.
வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய மூன்றாவது நாள், முத்துசாமி அவர் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, பத்து பேரை அழைத்துக் கொண்டு வயலுக்கு வந்த செல்வராஜ், முத்துசாமியை மிரட்டி, அடித்துப் போட்டு விட்டு சென்று விடுகிறார். முத்துசாமி வயலில் தனியாக பேச்சு மூச்சின்றி கிடக்கிறார். விஷயம் அறிந்த முத்துசாமியின் மனைவியும் மகளும் அலறி அடித்துக் கொண்டு வயலுக்கு ஓடுகின்றனர்.
முத்துசாமியின் மனைவியை சவுக்கு சந்தித்த போது, “வயசான ஆளுன்னு கூட பாக்காம பேச்சு மூச்சுல்லாம அடிச்சுப் போட்டுட்டாங்கய்யா “ என்று கண்ணீரோடு கூறினார்.
முத்துசாமியின் மனைவி
இந்த முத்துசாமி ஒரு கிளைச் செய்தியையும் சொன்னார். எம்ஆர்எப் நிறுவனத்துக்கு என்று 3 ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடமிருந்து பெற்ற தொழில் அதிபர் செல்வராஜ், அந்த 3 ஏக்கர் நிலத்தையும் எம்ஆர்எப் தொழிற்சாலை கட்டும் தொழிலாளர்களை தங்க வைப்பதற்காக 2 லட்சம் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு மாதம் 50,0000 வாடகைக்கு விட்டிருப்பதாகவும் சொன்னார்.
அடுத்த கதை இன்னும் மோசமானது. சந்திரசேகரன் என்பவர் சவுதி அரேபியாவில் பணி புரிந்து கொண்டிருந்தார். அவரது மனைவி ரோஜா என்பவரை நிலம் வேண்டும் என்று செல்வராஜும் செந்தில் குமாரும் மிரட்டுகிறார்கள். ரோஜா, தனது கணவர் சவுதி அரேபியாவில் இருக்கும் விபரத்தையும், நிலம் அவர் பெயரில் இருப்பதால் தன்னால் விற்க முடியாது என்பதையும் கூறுகிறார். திடீரென்று ஒரு நாள் ரோஜாவை கலெக்டர் அனில் மேஷராம் அழைப்பதாக கூறுகிறார்கள்.
எம்ஆர்எப் அபகரித்த தனது நிலத்தை அடையாளம் காட்டும் சந்திரகாசன்
அங்கே சென்ற ரோஜா அனில் மேஷராமை சந்திக்கிறார். அனில் மேஷராம், உடனடியாக நிலத்தை விற்குமாறும், உடனடியாக விற்றால் குறைந்த அளவு தொகையாவது கிடைக்கும் என்றும் விற்காமல் அரசாங்கம் எடுத்துக் கொண்டால் பத்து பைசா கிடைக்காது என்றும் கூறுகிறார். ரோஜா தனது கணவர் வெளிநாட்டில் இருக்கிறார் என்ற விபரத்தை கூறியதும், அனில் மேஷராம், வெறும் பேப்பரில் கையெழுத்துப் போட்டு விட்டு செல்லுமாறும், மற்றவற்றை அவர் பார்த்துக் கொள்வதாகவும் கூறுகிறார். (ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் தோற்று விடுவார்) அவ்வாறே வெள்ளைத் தாளில் கையெழுத்து விட்டு சென்று விடுகிறார் ரோஜா.
வெள்ளைத் தாளில் கையெழுத்துப் பெற்று அனில் மேஷராம் பதிவு செய்தத உருவாக்கப் பட்ட ஆவணம்
பிறகு அவர் கணவர் சவுதியிலிருந்து திரும்பியவுடன், விஷயத்தை கூறுகிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அந்த கையெழுத்திட்ட நகலை பெற்றால், அதில் ரோஜா நிலத்தை விற்பதற்கு முழுமையாக சம்மதிப்பதாகவும், கணவர் சார்பாக தான் சம்மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தின் கீழே, “என் முன்பாக என்று “ அனில் மேஷராம் கையெழுத்திட்டுள்ளார். சவுதியிலிருந்து திரும்பிய ரோஜாவின் கணவர் சந்திரஹாசன், நிலத்துக்காக கொடுக்கப் பட்ட பணத்தை வாங்க மறுக்கிறார். எனக்கு என் நிலம் மீண்டும் வேண்டும் என்று முடிவெடுக்கிறார். ஆனால் சந்திரகாசனின் ஏமாற்றத்திற்காக, பணத்தை வாங்காமலும், பத்திரப் பதிவு ஏதும் செய்யாமலும், இவருடைய நிலத்தையும் சேர்த்து எம்ஆர்எப் நிறுவனம் காம்பவுண்ட் சுவர் எழுப்பியுள்ளது.
தன்னை க்ரீன் ஹவுஸ் ப்ரோமாட்டர்ஸ் மேலாளராக அழைத்துக் கொண்டு தொழில் அதிபர் செல்வராஜ் எழுதிய கடிதம்
ஆண்டிமுத்து மகனின் சொந்த மாவட்டத்திலேயே இது போல நடைபெற்றிருந்ததால் மக்களுக்கு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க எந்த தைரியமும் வரவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் தரப்பு கருத்தை அறிவதற்கு, சவுக்கு படித்த சூதுக்காரர்கள் அனில் மேஷராம் மற்றும் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோரை தொடர்பு கொண்ட போது, தொலைபேசி அழைப்பை ஏற்க மறுத்து விட்டனர்.
தமிழக மக்கள் உரிமைக் கழகம், இந்த விஷயத்தை கையில் எடுத்து, பாதிக்கப் பட்ட மக்களின் சார்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளது என்ற செய்தியையும் சவுக்கு உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.
நக்சலைட்டுகளின் தேவையை சவுக்கு இப்போதுதான் உணர்கிறது. சிங்கூரில் டாடா விவசாயிகளின் நிலத்தை அபரித்து ஆலை கட்டி முடிக்கும் தருவாயிலும், அம்மக்கள் டாடாவை விரட்டி அடித்ததையும், எம்ஆர்எப் ஆலை தைரியமாக கட்டுமானப் பணிகளை நடத்திக் கொண்டிருப்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நக்சலைட்டுகள் பெரம்பலூரில் இருந்தால் இது நடந்திருக்குமா ?